Loading

டீஸர் : 1

“தம்பி.. அக்காவ எந்த சூழ்நிலையையும் கை விடமாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு பார்க்கலாம்..” என்று அவள் தன் வலது கையை நீட்ட, அவளுக்கும் மேலே வானளாவ வளர்ந்திருந்த அவனோ.. கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல்..

“அக்கா ப்ராமிஸ்.. போதுமாக்கா..” என்றான் சிரித்துகொண்டே  சத்தமாக.

“டேய்.. டேய்.. ஷ்.. ஷ்.. ஏண்டா கத்தற? அந்த ருத்ர பிரதாபன் வந்துடப் போறேன்டா..

நீயே என்ன காட்டிக் கொடுத்துருவ போலிருக்கே..” என்று அவள் கோபமாகக் கூற, அந்த அப்பாவியோ..

“அக்கா.. என்னக்கா இப்படி சொல்லிட்ட? நான் போய் உன்ன காட்டிக் கொடுப்பனா?” என்று சிணுங்கலுடன் கேட்டான்.

“உன் உயரமே போதும்டா என்ன காட்டிக் கொடுக்க.. நாம எங்க இருக்கோம்னு தெரியும்ல? அந்த ருத்ர பிரதாபனோட ரூம்ல.. இப்படி சாவகாசமா நாம நின்னு பேசறத அவன் பார்த்தா.. ரெண்டு பேருக்குமே சங்கு தாண்டி.. 

அதனால இப்போ நீ என்ன பண்ணற? அக்காவ அப்படியே ஃபாலோ பண்ற..” என்றபடி கீழே மண்டியிட்டு அவள் தவழ்ந்து செல்ல, அந்த இளைஞனோ..

‘கர்மம்டா..’ என்றபடி தலையில் அடித்துக் கொண்டு அவளைப் பின்தொடர்ந்தான்!

ஊர்ந்து சென்று அங்கிருந்த ஒரு மேசையை மெல்லத் திறக்க.. அதே வேளையில்.. அதன் கதவு திறக்கும் ஓசையுடன், அந்த அறையின் கதவு திறக்கும் ஓசையும் சேர்ந்து கேட்க, அங்கு வந்தான் அவன்!

அவளுடைய உயரத்திற்கு புதிதாக வந்தவனும் வான் தொட்டே நிற்க.. அவனைப் பார்த்ததும் தொண்டைக்குழி வறண்டுவிட்டது அவளுக்கு.

‘அய்யயோ.. அந்த ருத்ர பிரதாபன் வந்துட்டானா?’ என்று முகமெல்லாம் வியர்த்து வழிந்தபடி மெல்ல மிடறு விழுங்கி கொண்டே அந்த அப்பாவி தம்பியைத் திரும்பி பார்த்தால்.. அந்த அப்பாவியோ, புதியவனைப் பார்த்தபடியே மேலே எழுந்து நின்றான்.

அந்த அப்பாவி, அவனை விடவும், சற்று உயரமாக இருக்க.. ‘சரி அந்த ருத்ர பிரதாபான விட இந்தத் தம்பி கொஞ்சம் ஹைட்டா இருக்கான்.. இவன வச்சு இங்கிருந்து தப்பிச்சுட வேண்டியது தான்..’ என்று எண்ணமிட்டபடியே.. மெல்லத் தந்தியடித்த தன் வாயைக் கட்டுப்படுத்திக் கொண்டு..

“தம்பி..” என்று அவள் பாவமாகக் கூற, அவனோ.. இவளைக் கை பிடித்து மேலே எழுப்பிவிட்டான்.

அவள் மேலே எழுந்தவுடன்.. அந்தப் புதியவனோ.. சட்டென தரையில் மண்டியிட்டு அமர்ந்து, நெஞ்சோடு கை வைத்து.. தலையையும் குனிந்து கொண்டபடி..

“உடனே இங்க வர சொல்லி மெசேஜ் வந்துச்சு பாஸ்..” என்று பணிவுடன் கூற.. பெண்ணனவளின் மூளைக்கோ அப்பொழுது தான் உண்மை உறைத்தது!

‘அய்யயோ.. இவன் தான் அப்போ ருத்ர பிரதாபனா? இவன்கிட்டயேவா ஹெல்ப் கேட்டு இவன் ரூம்ல இருக்கறதெல்லாம் அடிக்க வந்தோம்?’ என்று பயத்தில் நடுங்கியபடியே அவள் திரும்பிப் பார்க்க.. அந்த ருத்ர ப்ராதபனின் விழிகளில் இருந்தது என்ன?!

அவளால், அவனது முக பாவனையில் இருந்து எதையும் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும்.. அந்தக் கண்களை பார்த்ததுமே உள்ளுக்குள் குளிர் பரவ.. அவன் பிடியில் இருக்கும் தன் கையை மெல்ல உருவ முயன்றாள்!

ஆனால்..  அவனது உடும்புப் பிடியில் இருந்த கரமோ, இவள் பக்கம் வருவதாய் தான் இல்லை!

இவளது திகைத்த முகத்தைப் பார்த்தது பார்த்தபடி நின்றிருந்த ருத்ரனோ, சட்டென அவளது கையைத் தன் புறமாய் இழுக்க.. அந்த விசையில் பொத்தென அவன் மார் மீதே போய் விழுந்தாள் பெண்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
15
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments