Loading

கெட்டி‌மேளம்‌ முழங்க ஐயர் மந்திரம்‌ஓத அனைவரும் அச்சதை போட தயார் நிலையில் இருந்தனர்…

ஆனால் தாலி கட்ட வேண்டியவனோ தாலி கையில் வைத்து வெறித்து கொண்டிருந்தான் ….யாரும் எதிர்பார்கா நொடியில் தாலி அக்னியில்‌வீசி விட்டு என்னால இந்த கல்யாணத்த பண்ணிக்க முடியாது என்றான் அழுத்தமாக….

குழப்ப நிலையில் மணமகள் நிமிர்ந்து பார்த்தாள்… அனைவரும் அவர்களுக்குள் சலசலத்து கொண்டிருக்க…

என்ன பண்ணிட்டு இருக்க விஷ்வா ..உன்ன கேட்டு தான முடிவு பண்ணோம்…

என்ன கேட்டிங்களா அவன் கூர்மையாக தந்தையை பார்க்க..

அவர் தடுமாற்றத்துடன் அது அது வந்து நீயும் அமைதியா தான‌ இருந்த  இப்ப வந்து என்னால் முடியாது ன்னு சொன்னா என்ன அர்த்தம் …என அவனின்‌ தந்தை உச்சத்தில் கத்தி கொண்டிருக்க   

பட்டென்று முடியாது  ன்னு அர்த்தம் பா என்றான்…..விஷ்வா… விஷ்வாமித்திரன் 

  இதை அனைத்து வெறித்த விழிகளுடன் பார்த்து கொண்டிருந்தாள் 

அவளால் எதுவும்‌ செய்ய முடியாது ….அவளுக்காக பேச‌ அங்கு யாரும் இல்லை…

  விஷ்வாவின் குடும்பம் மொத்தமாக அவனிடம் கெஞ்சினர் அவன் யாரு பேச்சையும் காதில் வாங்கும் நிலையில் இல்லை….

        பட்டென்று ரூம் கதவை அடைத்துக் கொண்டாள்…. அனைவரும் அவளை நோக்கி செல்ல விஷ்வா அசையாமல் நின்றான்….

  முழுதாக ஐந்து நிமிடங்கள் தன்னை நிலைப்படுத்தி கொண்டாள்… பின் அலங்காரங்களை கலைத்து விட்டு அவளின் நார்மல் உடையில் வெளியே வர அனைவரும் அவளையே பார்த்து இருந்தனர்…..அவள் என்ன சொல்ல போகிறாள் என்று

அவளோ நேராக தாத்தாவிடம் சென்றவள் நகையை கொடுத்து விட்டு வரேன் தாத்தா என்று கிளம்பினாள்….

அவளை தடுக்க கூட‌முடியாமல் வயதானவர் மெளனமாய் அழுதார்….

விறுவிறுவென்று மண்டபத்தை விட்டு வெளியேறினாள்….கண்களோ இப்பவோ அப்பவோ என நீரை இறைக்க தயாராக இருந்தது …முயன்று தன்னை கட்டு படுத்தியவள் தன் வீட்டை நோக்கி நடந்தாள் மிதுவர்ஷினி….

   இவர்கள் மீண்டும் இணைவார்களா….

  

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment