Loading

தென் தமிழகம், கடற்கரை மாவட்டம் உப்பு காற்றால் பரவியுள்ள கிராமம். சாதி வெறியில் ஊறி போன இடம். பழகும் மக்களின் குணத்தை விட வசிக்கும் இடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனித மிருகங்கள் பலர் வாழும் நரகம். 

 

ஆலமரத்தின் அடியில் இரு குடும்ப பிரச்சினையை ஊரின் பிரச்சினையாக மாற்றி வாதாடி நீதி வழங்கப்பட்டது. 

 

அவர்களின் நீதி ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி. 

சுமத்தப்பட்ட பழி யாராலும் எதிர்த்து கேட்க முடியாதது. 

கொடுக்கப்பட்ட ஆதாரம் பொய்யானலும் அழிக்க முடியாதது. 

சொல்லப்பட்ட சாட்சி காட்சி பிழையானாலும் மாற்ற முடியாதது…. 

 

மொத்தத்தில் ஒரு குடும்பத்தால் சிறு குருவி கூடே கலந்து போனது. வினை விதைத்தவன் வினையை தான் அறுப்பான் என்று மறந்து போயினர். வலிக்க வலிக்க இன்று அடித்ததை பத்து மடங்கு அதிகமாக பெற போகிறார்கள். காலத்தின் முன் யாராலும் தப்பிக்க முடியாது. 

 

இவர்களின் தவறை வலிக்க வலிக்க புரிய வைக்க ஒருவர் வர போகிறார். 

 

இருபது வருடங்கள் பிறகு…… 

 

டெல்லி, நாட்டின் தலை நகரம். பல லட்சக்கணக்கான மக்களை தன்னுள் அடங்கியிருக்கும் சிறிய நகரம். 

 

ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் இண்டர் காலேஜ் கல்ச்சுரல்ஸ் நடக்க, கலந்து கொண்டது என்னவோ பல கல்லூரிகள்.  ஆனால் போட்டு என்பது இரு கல்லூரிக்கு மட்டுமே. 

 

ஒரு புள்ளியில் முன்னிலை பின்னிலையில் இருக்க கடைசி போட்டியாக பாட்டு போட்டி. 

 

முதல் கல்லூரியின் மாணவன் கிஷோர் தன் குரலால் அனைவரையும் கட்டி போட்டு இருக்க,  அடுத்த கல்லூரியின் சார்பாக பாட இருப்பது தொகுப்பாளினி சொல்லுவதற்கு முன்னே, 

 

யஷ்!!! யஷ்!!! யஷ்!!!  என்று அந்த அரங்கமே அதிரும் வண்ணம் மாணவ மாணவிகளின் சத்தம் இரவின் அமைதியில் கழித்துக் கொண்டு இருக்க,

 

மேடையில், தன் முன்னே ஆர்ப்பரிக்கும் கூட்டத்தையும் கண்டு கையில் மைக்கோடு கண்களை அழுத்த மூடி திறந்தவள் தன் குரலால் அரங்கையே அடுத்த சில மணி துளிகளுக்கு கட்டி போட்டு இருந்தாள். 

 

அந்த காந்த குரலில் மயங்காதவர் யாரும் இருக்க மாட்டார். கடைசியாக பாட்டு போட்டியில் மட்டுமே அல்ல தன் வெற்றியால் கல்லூரிக்கே ஒவர்ஆல் டிராஃபி வாங்கி கொடுத்து இருந்தாள் யஷ்வினி. 

 

“யஷ்….  யூ ஆர் அமேசிங்…. இன்றைக்கு நம்ம காலேஜ் டிராஃபி வாங்க உன்னுடைய சிங்கிங் முக்கியமான காரணம். எல்லாரும் பார்ட்டியில் ஹாப்பியா இருக்காங்க. நீ மட்டும் ஏன் என் கிட்ட கூட சொல்லாமல் வீட்டிற்கு வந்துட்ட” என்று தன் தோழியிடம் கேட்டான் ரோகித் படேல். 

 

“மூட் ஆஃப் ராகி… இன்றைக்கு என்னால் பாட முடியும்னு கூட நான் நினைக்கலை… ஆனால்” என்று சொல்லும் போதே இடையில் ரோகித், 

 

“வெயிட் மச்சி… எப்படியும் நீ ஒரு சோக கதையை சொல்ல போற நான் போய் அதுக்கு கரெக்டான ஐட்டத்தை ரெடி  பண்ணிட்டு வரேன்” என்று உள்ளே செல்ல, பால்கனியில் இருந்த படியே டெல்லியின் குளுமையை அனுபவித்தாள். 

 

கையில் சரக்கோடு வரும் நண்பனை பார்த்து “அட குடிகார நாயே அப்ப நீ என்னை சமாதானம் பண்ண வரலை… குடிக்க காரணம் தேடி வந்திருக்க” என்று முறைக்க, 

 

“விடு மச்சி… புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்துனு பழமொழியே இருக்கு” என அசடு வழியே இளித்து கொண்டு சொல்ல, 

 

“பழமொழியா….  உனக்கு தமிழ் சொல்லி கொடுத்து பெரிய தப்பை பண்ணிட்டேன். சரி சரி எனக்கும் ஒரு க்ளாஸ் தா இரண்டு பேரும் சேர்ந்து ஆத்தலாம்” என்று சிரித்து கொண்டே சொல்ல

 

“இது தான் நல்ல நண்பிக்கு அழகு… எப்பவும் உன் முகத்தில் இந்த சிரிப்பு இருக்கனும். அதுக்காக இந்த ரோகித் எதுவும் செய்வான்” என்று அழுத்தமான குரலில் சொல்ல, 

 

“அது தான் தெரியுமே” என்று சொன்னவளின் கண்களில் சொல்ல முடியாத வலிகள் பல தேங்கி கிடந்தது. 

 

சூரிய ஒளியில் கண்கள் கூச முதலில் விழித்தது ரோகித் தான். பால்கனியிலே இரவு இருவரும் தூங்கி விட்டது புரிய, 

‘இந்த யஷ் பொண்ணா அடக்க ஒடுக்கமா என்னை பார்த்துப்பானு என் வீட்டில் நம்பறாங்க  பாரு, இந்த நிலைமையை பார்த்தா என்ன சொல்லுவாங்களோ…. குடிகாரி குடிகாரி… மொட குடிக்காரன் கூட இப்படி புலம்பி தள்ள மாட்டான். இவ கிட்ட மாட்டிட்டு ராத்திரி என் தூக்கம் போனது தான் மிச்சம்’

 

“அரே பகவான்….. யஷ் வேக் அப்…  இன்றைக்கு ப்ராஜெக்ட் விசயமா அந்த கம்பெனிக்கு போகனும். லேட்டா போன நல்லா இருக்காது டி” என

 

தூக்க கலக்கத்தில் “கவலைப்படாதீங்க சார்… இந்த ராக்கெட் மட்டும் கரெக்டா போய்டா நம்ம வேற லெவலுக்கு போய்டலாம்” என

 

“பைத்தியம்… இன்னும் நேத்து அடிச்ச போதை இறங்கலையா… கிளம்புடி கடுப்பை கிளப்பிட்டு” என

 

இருவரும் அரக்க பரக்க கிளம்பும் நேரத்தில் நாம் இருவரை பற்றி பார்க்கலாம். 

 

 

யஷ்வினி ரோகித் இருவரும் பொறியியல் இறதி ஆண்டு மாணவர்கள். யஷ்வினிக்கு ரோகித் மட்டுமே நெருங்கிய நண்பர். மூன்று வருட நட்பு. அவளின் கடந்த காலம் துளி கூட தெரியாது. ஆனால் சொல்ல முடியாத கவலை சோகம் இருப்பது மட்டும் தெரிந்தது. சொந்த ஊர் சென்னை என்பது தெரியும் பெற்றவர்கள் பெயர் தெரியாது. உடன் பிறப்பு ஒரு தம்பி இருப்பது தெரியும் ஆனால் என்ன செய்கிறான் என்று தெரியாது. 

 

ஆனால் ரோகித்தின் மொத்த விவரமும் யஷ்வினி தன் விரல் நுனியில் வைத்திருப்பாள். புரியாத புதிர் தான் இருவரது நட்பும். 

 

இரண்டாம் வருடத்தில் கல்லூரி ஹாஸ்டல் பிடிக்காமல் இருவரும் கல்லூரிக்கு அருகாமையில் இரண்டு படுக்கையறை கொண்ட ஃப்ளாடில் தங்கியுள்ளனர். 

 

***

 

டெல்லியின் முக்கிய நகரங்களில் ஒன்றான துவாரக்கா போலீஸ் நிலையத்தில்,  ஒரு கான்ஸ்டபிள்  “சார்…. நான்கு நாள் முன்ன மிஸ்ஸிங் கேஸ் ஃபைல் பண்ணவங்க வந்து இருக்காங்க” என

 

 

“இது வேற இருக்கிற தொல்லை பத்தாதுனு.. வயசு கோளாறில் எவனையாவது காதலிக்க வேண்டியது பின்ன ஒடு போக வேண்டியது… பிஸியா இருக்கேன்னு சொல்லுயா” என்று அலட்சியமாக சொல்ல, 

 

அதன்படி அந்த பெற்றோர்களிடம் சொல்ல,  அவர்களோ தங்களின் இழிவு நிலையை அறிந்து மனம் நொந்து சென்றனர். 

 

***

 

இருசக்கர வாகனத்தில் கடும் போக்குவரத்து மத்தியில் யஷ்வினி வியர்வை வழிய வண்டியை ஒட்டிக்கொண்டு  “மாடு மாதிரி வளர்ந்து இருக்க… வண்டி ஒட்ட சொன்ன மட்டும் பயந்து சாக வேண்டியது… ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீ வண்டியை என்பதுல ஒட்டுவ பாரு”  என

 

“அது தான் என் கடைசி நாளா இருக்கும் டி கொலைக்காரி…  நம்ம வேற  ப்ராஜெக்ட் பண்ணலாமா டி…. இது கொஞ்சம் ஓல்ட் டெக்னாலஜியா இருக்கு. அதான் எந்த கம்பெனியும் நம்ம ப்ராஜெக்டை அப்செட் பண்ண யோசிக்கிறாங்க.  நம்ம  பேச்மேட் எல்லாரும் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க நாம் தான் இன்னும் கம்பெனி கூட செலக்ட் பண்ணல…. தப்பு தப்பு நம்ம ப்ராஜெக்டை யாரும் செலக்ட் பண்ணல” என்று கவலையாக சொல்ல

 

“நம்ம வாழ்க்கையில் எதாவது ஒரு விசயம் நடந்து இருக்கும். அதோட தாக்கம் நம்ம மனசில் ரொம்ப ஆழமா பதிந்து போயிருக்கும். அது நடக்கும் போது நம்மால அழ தான் முடிந்து இருக்கும். ஆனால் மனசில அப்படி ஒன்னு நடந்து இருக்க கூடாதுனு புலம்பி பாதி பைத்தியமாக கதறிட்டு இருக்கும்” என தன் மனம் போன போக்கில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டியவளின் கவனம் சாலையில் இல்லை. 

 

“ஹரே பாப்ரே….. போதும் நிறுத்து தாயே…. ஒரு கேள்வி கேட்டா எப்பவும் புரியாத மாதிரியே பேச வேண்டியது. ஏய்…. ராங் சைடில் திரும்புற யஷ்!!! யஷ்…. லாரி டி… ” என்று கத்த அப்போது தான் கனவில் இருந்து விழித்தவள் எதிரே அதிவேகமாக வரும் சரக்கு லாரியை கண்டு வண்டியை ஒரமாக திருப்ப முயன்றாள். ஆனால், 

 

“டொம்”

 

***

 

‘தாய் மண்ணை விட்டு ரொம்ப தூரம் வந்துட்டேன். இந்த ஊரில் சொந்தம் கொண்டாட யாருமே இல்லை. இருந்தும் சுவாசிக்கிற காற்றும் துடிக்கிற இதயமும் பக்கத்தில் எனக்கு வேண்டியவங்க இருக்கிறதா உணர்த்துதே!!! வாழ்க்கையில் நிறைய பேல் நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்து இருக்காங்க. இந்த டெல்லி எனக்கு என்ன சொல்லி தர காத்திருக்குதோ?’ என்று மனத்தில் சொல்லிக் கொண்டே டெல்லி மண்ணில் கால் வைத்தான் உதய வெற்றி. 

 

 

காலம் தர காத்திருப்பது யாதோ??? 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்