கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்-6
கார்த்திக் என்ற பெயரை கேட்டதுமே அதீத எரிச்சலில் பிஸ்கட் பாக்கெட்டை கீழே வைத்தான் ஶ்ரீ. அவன் கோவத்தில் கருவிக் கொண்டு இருப்பதை சரணும் அருளும் வாயை பிளந்துக் கொண்டு பார்த்தார்கள். இருவருக்குமே மெய்யாகவே ஶ்ரீ மற்றும் ருத்ரா இடையே ஏதோ ஒன்று ஓடுகிறது என புரிந்தது.
“என்ன?” என தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பவர்களை பார்த்து எரிச்சல் குறையாமல் கேட்டான் ஶ்ரீ.
சரண் ஒன்றும் இல்லை என்பது போல் தலை அசைக்க, அருள், “சீனியர் பிஸ்கட்” என ஶ்ரீயுடையதை கேட்டான்.
“இந்தா தின்னு தொலை..” என இருந்த கடுப்பில் குடுத்து விட்டான் ஶ்ரீ. அவ்வளவு தான் கார்த்திக் அழைத்து விட்டாள் இவள் கிளம்பி விடுவாள் என்ற கடுப்பு அவனுக்கு. அங்கு கார்த்திக் ருத்ராவை பரிசு பொருட்கள் வாங்க அழைத்தான்.
“காலேஜ் வெளிய போய் வாங்கனுமா?” என கேள்வியாக கேட்டாள் ருத்ரா.
“பின்ன காலேஜ் உள்ளையா விப்பாங்க.. நம்ம தான் போய் சொன்ன லிஸ்ட் படி வாங்கணும்” என கார்த்திக் கூற யோசித்தாள் ருத்ரா. அவளுக்கு போகும் எண்ணம் இல்லை. மனதில் பல்வேறு காரணங்கள், பழைய நிகழ்வுகள் என வந்து போக தயங்கினாள் ருத்ரா. அவ்வளவு பெரிய பிரச்சனையினால் தானே தாமதமாய் கல்லூரியில் சேர்ந்தாள். மீண்டும் ஏதாவது பிரச்சனையில் சிக்கிக் கொள்ள அவளுக்கு மனம் இல்லை. அதனால் இதனை ஏதாவது சொல்லி தவிர்க்க நினைத்தாள். ஜூலியை பார்த்ததும் அவளுக்கு யோசனை வந்தது.
“கார்த்திக் எனக்கு கொஞ்சம் தல வலி நீ ஜூலி கூட போய்ட்டு வாயேன்” என அவள் கூறி முடிக்க ஜூலிக்கு குடித்து கொண்டு இருந்த ஜுஸ் புரை ஏறியது. ஶ்ரீக்கு முகம் முழுவதும் மகிழ்வாய் இருந்தது. அவள் அவனுடன் போகவில்லை என்று தெரிந்ததும் மனதின் உள்ளே குத்தாட்டம் போட்டான் ஶ்ரீ.
“சீனியர்க்கு வழியுது டா” என சரண் காதில் முணுமுணுத்தான் அருள்.
ருத்ரா கூறியதை கேட்டு சற்று தயங்கினான் கார்த்திக். அவளை வற்புறுத்த முடியாது என்பதனால் சரி என ஒப்புக் கொண்டு அழைப்பை துண்டித்தான்.
“ஹே.. எங்க போனும் எதுக்கு போனும்? சொல்லாம கொள்ளாம நான் வருவேன்னு சொல்லிட்ட..” என அழைப்பை ருத்ரா வைத்ததுமே பொங்கினாள் ஜூலி.
“சாரி ஜூலி. அது பிரைஸ் குடுக்க டிஃபன் பாக்ஸ் வாங்கனுமாம் அதுக்கு கூப்ட்டான்.. நீ போய்ட்டு வாயேன் பிளீஸ்..”
“அதான் நீ போ ஜூலி நீ வாலன்டீயர்ஸ்ல இருக்கில.. போ போய் புரோஜனமா வேலைய பாரு” என அவளை துரத்தி விடுவதில் இருந்தான் ஶ்ரீ. அதில் கடுப்பானவள், “மவனே இருக்கு டி உனக்கு என்னையவே துரத்தி விட பாக்குறியா? எப்படி இவ கூட தனியா இருக்க விடறேன்னு மட்டும் பாரு” என கருவியவள், “ருத்ரா நீயும் கூட கம்பெனிக்கு வாயேன்.. கார்த்திக் கூட போனா போர் அடிக்கும்” என்று ருத்ரா கையை பிடித்தாள் ஜூலி.
அதில் ஶ்ரீ அவளை அதிர்வுடன் பார்க்க அவனுக்கு பலிப்பு காட்டினாள். பாதகத்தி அவளின் வேலையை சரியாக பார்க்கிறாள் என்று நினைத்தான்.
“சாரி ஜூலி அவன் கிட்ட வரலைன்னு சொல்லிட்டு நீ வந்ததும் வரேன்னு சொன்னா தப்பா எடுத்துப்பான்” என தயங்கினாள்.
“ஆமா.. சரி நீ வெயில்ல இங்கேயே இருக்காத ஸ்டூடண்ட் கார்னர்ல உக்காந்துக்க..” என கூறியவாறு ஶ்ரீயை பார்த்து முறைத்து விட்டே சென்றாள். ஶ்ரீக்கு தான் ருத்ரா சென்று விடுவாளோ என்று இருந்தது.
“நீ எப்போ லஞ்ச் ப்ரேக் விடுவ?” என ருத்ரா கேட்க NCC மாணவர்கள் அனைவரும் ஒன்று போல் அவள் பக்கம் திரும்பினார்கள். அவர்கள் அனைவரும் அதற்காக தானே காத்து இருக்கிறார்கள். ஶ்ரீ விட மாட்டானா என்று இருந்தது. அனைவரும் எதிர்பார்ப்பு உடன் ஶ்ரீயை பார்த்தார்கள்.
“இப்போ தானே ஜுஸ் பிஸ்கெட்ன்னு சாப்ட்டாங்க.. சோ ரெண்டு மணிக்கு விடுவேன்” என கை கடிகாரத்தை பார்த்து கூறினான் ஶ்ரீ. அதில் அனைவர் முகமும் வாடியது. ருத்ராவிற்கு லேசாக சிரிப்பு வந்தது.
“சரி நான் உனக்காக வெயிட் பண்றேன்..” என்று கூறி ஓரமாக அமர்ந்து கொண்டாள். அவ்வளவு தான் ஶ்ரீ சிறகில்லாமல் வானத்தில் பறந்தான். தனக்காய் அவள் சாப்பிட காத்திருக்கிறேன் என்று கூறியதில் புது தெம்பு பெற உடனே அனைவரையும் லைன்யில் நிற்க கட்டளையிட்டான். அனைவரும் சிட்டாய் வந்து நின்றார்கள்.
இப்பொழுது சற்று தெம்பு இருக்க மிகவும் நேர்த்தியாக செய்தார்கள். ருத்ரா அவர்களையே விழி இமைக்காது பார்த்துக் கொண்டு இருந்தாள். ஶ்ரீ கம்பீரமாய் அனைவருக்கும் முன்னே செல்வதை பார்க்க ரசனையாக இருந்தது. ஒரு சுற்று வந்து நிற்க ஶ்ரீ அவர்கள் சிலர் செய்த தவறுகளை சரி செய்து மீண்டும் வழிநடத்தினான். ருத்ரா ஓரமாய் அமர்ந்து இருக்க வெயில் கண்ணை கூசியது. கண்களுக்கு மேலே கையை வைத்துக் கொண்டு அவர்களை பார்த்துக் கொண்டு இருந்தாள். ஶ்ரீ அவள் முன் எந்த தவறும் செய்யக் கூடாது என்ற நினைப்பில் செய்துக் கொண்டு இருந்தான்.
“Samandar” என கணீர் குரலில் கூறிட அனைவரும் நின்ற இடத்திலேயே மார்ச் பாஸ்ட் செய்தார்கள். ஶ்ரீ நேராக ருத்ரா பக்கம் வந்து அவன் தொப்பியை அவள் தலையில் போட்டு விட்டு, “நிழல் பக்கமா போய் உக்காரு” என்றவன் அவள் பதிலை எதிர் பார்க்காமல் குழு பக்கம் சென்றான். அங்கு இருந்த அனைவருக்கும் ஆச்சரியம்.
“என்ன டா சீனியர் பயங்கரமான ஆளா இருக்கான்.. தில்லு தான்..” என சரண் பக்கம் முணுமுணுத்தான் அருள்.
“யாருக்காவது பணிஷ்மென்ட் வேணுமா?” என சத்தமாய் கேட்ட ஶ்ரீ அவர்களை முறைத்தான். அதில் இருவரும் கப்சிப் என்று வாயை மூடினார்கள். ருத்ரா லேசான சிரிப்புடன் அமர்ந்துக் கொண்டாள். அவனின் இந்த சிறு செயல் அவள் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. நட்புக்குள் இவை எல்லாம் சகஜம் என்று விட்டாள். ஆனால் அவனோ அவள் மீது உள்ள தனி அக்கரையில் செய்தான் என யார் இவளுக்கு புரிய வைப்பார்?
அங்கு ஜூலி கார்த்திக்கை தேடி சென்றாள். அவன் மரத்தடியில் நிற்பதை பார்த்ததும் அவள் மனதில் பல எண்ணங்கள் ஓடியது.
“எந்த கடைக்கு போக போறோம்?” என்று கேட்டபடியே அவனிடம் சென்றாள்.
“பக்கத்துல தான்.. சீக்கிரம் வா” என்றவன் முன்னே விரு விருவென்று நடந்தான். ஜூலிக்கு தான் சங்கட்டம் ஆனது. பொதுவாய் ஶ்ரீயும் ராஜெஷும் அவளை விட்டு வேகமாய் நடந்ததே இல்லை. அவளிடம் வம்பு வளர்தபடியே வருவார்கள். கார்த்திக் சும்மா பேச்சு குடுத்துக் கொண்டே நடக்கலாமே என நினைத்தாள்.
“எதுக்கு இவன் இவ்வளோ வேகமா முன்னாடி போறான்? கூட வந்தா என்னவாம்.. ஒரு வேளை ருத்ரா வராம நம்ம வந்தோம்ன்னு கோவமா?” என நினைக்கையிலே ஜூலிக்கு மனம் கசந்தது. தன்னை அவன் ஒதுக்குகிறான் என்று நினைத்தவள் கடினப்பட்டு மனதை திசை திருப்பி அவன் பின்னே நடந்தாள். சற்று தொலைவில் கடை இருப்பதனால் இருவரும் பேசிக் கொள்ளாமல் நடந்தார்கள். ஜூலிக்கு ஏன் வந்தோம் என்று இருந்தது.
நேரம் கடக்க மணி ஒன்றரை ஆகி இருந்தது. ருத்ரா எவ்வளவு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேடிக்கை பார்பாள்? அவளுக்கு அயர்வாக இருக்க பசியும் எடுத்தது. நேரத்தை பார்க்க இன்னும் அரைமணி நேரம் இருந்தது. மனதில் சினுங்கியவள் மீண்டும் மார்ச் பாஸ்ட் பார்க்க ஆரம்பித்தாள். ஶ்ரீ பயிற்சியில் இருந்தாலும் அவனின் கவனம் ருத்ரா மீது அடிக்கடி திரும்பியது. நேரத்தை அவள் பார்ப்பதை வைத்தே அவள் பசியை கண்டுக் கொண்டான் ஶ்ரீ.
“Ruk” என சத்தமாய் கட்டளையிட அனைவரும் ஒன்றாய் காலை தரையில் ஓங்கி அடித்தார்கள்.
“Aram se” என மீண்டும் கட்டளையிட அனைவரும் அதிர்ச்சியில் நின்றார்கள். அதற்குள்ளவா அவர்களின் இரக்கமற்ற சீனியர் அவர்களை விடுவிக்கிறான் என்று இருந்தது.
“எல்லாரும் லஞ்ச் சாப்பிட போங்க.. ரெண்டறைக்கு இங்க வந்தே ஆகனும்.. இல்லன்னா தலை கீழா நிக்க வைப்பேன்.” என கட்டளையாக கூற அனைவரும் ஆச்சரியம் கலந்த பயத்துடன் தலையை அசைத்தார்கள். சரணும் அருளும் நகராமல் அப்படியே நின்றார்கள். அவர்களை கண்டுக் கொள்ளாமல் ஶ்ரீ ருத்ரா பக்கம் சென்றான்.
“என்ன டா அரமணி நேரம் முன்னவே ப்ரேக் விட்டான்.. சரி இல்லையே” என ஆராய்ந்து அருள்.
“மூடிக்கிட்டு கொட்டிக்க வா.. நீ யோசிச்சி முடிக்குறதுக்கு முன்னவே ப்ரேக் முடிய போகுது..” என அவன் தலையை தட்டினான் சரண்.
ஶ்ரீ வருவதை பார்த்து கேள்வியாக பார்த்தாள் ருத்ரா.
“என்ன அதுக்குள்ள வந்துட்ட? இரண்டு மணிக்கு தானே லஞ்ச்?”
“எனக்கு பசிக்குது காலைல இருந்து எல்லாரும் பிராக்டீஸ் பண்றோம் ரெஸ்ட் யாருக்கும் இல்ல.. அதான்” என சமாளித்தான். சம்மதமாய் தலை அசைத்த ருத்ரா அவளின் சாப்பாட்டை எடுத்தாள்.
“நீ என்ன சாப்பாடு?” என ஶ்ரீ டப்பாவை பார்த்து கேட்டாள்.
“தெரியல அம்மா தான் கட்டுனாங்க.. லெமன் சாதமா இருக்கும்”
“ஓ.. நான் வெண்டைக்காய் வத்த குழம்பு தொட்டுக்க கத்திரிக்கா வறுவல் உனக்கு பிடிக்குமா?” என ஆர்வமாய் கேட்க, “எனக்கு புடிக்கும் அக்கா..” என்று கூறியபடியே அங்கு வந்தான் அருள். அவன் பின்னே சரணும் வந்தான். இருவரையும் பார்த்து ருத்ரா புன்னகைக்க ஶ்ரீ எரிச்சல் ஆனான்.
“நீங்க இங்க என்ன பண்றீங்க? சாப்பிட போல?” கடுப்பாக முறைத்தபடியே கேட்டான். அவளுடன் இப்பொழுதாவது தனியாக உண்ணலாம் என நினைத்தான். எங்கு இருந்து தான் தனக்கென்று வருவார்கள் என நொந்துக் கொண்டான் ஶ்ரீ.
“ஹீஹீ.. ருத்ரா அக்கா கூட சாப்பிட வந்தோம்” என அருள் கூற ஶ்ரீக்கு அவனை தலை கீழே தொங்க விட வேண்டும் என்பது போல் இருந்தது.
“ம்ம்.. ஒன்னா சாப்பிட்டா நல்லா தான் இருக்கும்.. ஶ்ரீ இவங்க எங்க ஏரியா ஹாஸ்டல்ல தான் தங்கி இருக்காங்க” என்று ருத்ரா கூற ஶ்ரீ அவள் இருக்கும் இடம் தெரிந்த மகிழ்வில் அவர்கள் இருவரையும் பார்த்து கோரமாய் சிரித்தான். அவளை சந்திக்க இவர்களை சாக்காய் பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைத்தவன், “வாங்களேன் நம்ம சாப்டுட்டே பேசுவோம்” என புன்னகை உடன் கூறினான். அதில் இருவருக்கு ஏதோ தவறாக பட்டது.
“ஆத்தி நம்ம சிக்கிட்டோம் போலையே.. என்ன செய்ய காத்து இருக்கானா” என புலம்பினான் சரண்.
அங்கு கடையில் ஒரு டிஃபன் பாக்ஸ்யை எடுக்க
எக்கிய ஜூலி அனைத்தையும் தள்ளி விட ஒட்டு மொத்த கடையும் அவர்களை திரும்பி பார்த்தது.
ஸ்ரீ ருத்ராவை சந்திக்க பலியிடுங்க தானா வந்து சிக்கிடுச்சுங்க 😂😂
😂😂 thanks ka😍