கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்-16
நாட்கள் மிகவும் வேகமாய் கரைந்துக் கொண்டே இருக்க ஐவரும் அவர்களின் மூன்றாவது செமஸ்டரில் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். இது தான் அவர்களுக்கு கடைசி செமஸ்டர். நான்காவது செமஸ்டரில் கம்பனி ஒன்றில் சேர்ந்து ப்ராஜெக்ட் செய்து மதிப்பெண்களை வாங்கிக் கொள்ள வேண்டும். மூன்றாவது செமஸ்டரிலும் அவர்களுக்கு மினி ப்ராஜெக்ட் என்ற ஒன்று இருக்கிறது. அதில் தான் ஐவரும் மிகவும் தீவிரமாய் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். யுகன் அன்றைய தினத்திற்கு பின் அவனின் காதலையோ வருத்தத்தையோ ருத்ராவிடம் வெளிகாட்டிடவே இல்லை. அதனை அறியாத ருத்ரா ஸ்ரீ மற்றும் ஜூலி உடன் ஒன்றாக சுற்றிக் கொண்டு இருந்தாள். ஸ்ரீயும் ருத்ராவும் காதலை சொல்லிக் கொள்ளாமலே நாட்களை கடத்தினார்கள். இருவருக்குமே வெளியே எப்படி சொல்வது என்ற தயக்கம் இருந்தது. இருந்தும் இந்த தயக்கம் கூட அழகாய் இருக்கிறதே என்று சொல்லிக் கொள்ளாமல் கண்ணாம்பூச்சி ஆடினார்கள். ஸ்டுடென்ட் கார்னரில் வட்டமாய் அமர்ந்து நாளை நடக்க இருக்கும் வைவாவிற்காக தயாராகிக் கொண்டு இருந்தார்கள். அந்த நேரம் அங்கு வந்த சரண், “ஸ்ரீ அண்ணா உங்களை ncc சார் உடனே வர சொன்னாரு” என்று கூறிட உடனே வேகமாய் அங்கு விரைந்தான். பரீட்சை நேரத்தில் அவர் அனாவசியமாய் அழைக்க மாட்டார் என அறிந்தவனுக்கு அவர் அழைத்ததற்கான காரணம் புரியவில்லை. Ncc ஆபிஸ் ரூம் உள்ளே ஸ்ரீ செல்ல அவனை புன்னகை உடன் வரவேற்றார் பேராசிரியர்.
“சார் எதுக்கு கூப்ட்டிங்க?”
“நல்ல விஷயம் தான் ஸ்ரீ.. பாதர் உனக்கு ncc செர்டிபிகேட் குடுத்து கூடவே நீ ஆர்மி அகடமில சேர நீ தான் டாப் ஸ்டுடென்ட்ன்னு லெட்டர் குடுத்து இருக்காரு.” என கூற அதிர்ச்சி விலகாமல் பார்த்தான் ஸ்ரீ. அவனால் நம்பவே முடியவில்லை. தாம் படித்து முடித்ததும் ncc சர்டிபிகேட் இல்லாமல் தான் மிலிடரி அக்கடமியில் சேர வேண்டும் என்று நினைத்து இருந்தவனுக்கு இப்பொழுது கிடைத்த செய்தி அவனுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
“பாதர் என் கிட்ட பேசுனாரு.. இனிமேல் உன்ன எந்த விசயத்தையும் அவசர பட்டு செய்ய வேணாம்ன்னு சொல்ல சொன்னாரு.. உன் டிபார்ட்மென்ட்ல நான் பேசுறேன் ஸ்ரீ… நீ எவ்ளோ சீக்கிரம் பைனல் செமஸ்டர் ப்ராஜெக்ட் முடிக்குறியோ உனக்கு நல்லது.. நான் மத்த பார்மலிடிஸ் பாத்துக்குறேன்.. மிலிடரி அக்கடமில சேருரதுக்கான ட்ரைனிங்யும் நீ சைடு பை சைடு பாரு..” என அறிவுரை வழங்கிட மகிழ்ச்சி உடனே வேகமாய் தலை அசைத்தான் ஸ்ரீ. சர்டிபிகேட்டையும் லெட்டரையும் வாங்கிக் கொண்டு வெளியே வந்தவன் துள்ளி குதித்து சந்தோசத்துடன் மற்றவர்கள் பக்கம் ஓடினான். இந்த செய்தியை கேட்ட அனைவருக்குமே பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.
“அப்போ ப்ராஜெக்ட் முடிச்ச கையோட அக்கடமிக்கு போய்டுவ.. அப்படி தானே” மகிழ்வுடன் கார்த்திக் கேட்க, புன்னகை உடன் சம்மதமாய் தலை அசைத்த ஸ்ரீயின் விழிகள் ருத்ராவை பார்த்துக் கொண்டு இருந்தது. இருவரும் கண்களாலே கதை பேசிக் கொண்டார்கள். நாளை வைவா முடிந்ததும் அவர்களுக்கு பேர்வல் பார்ட்டி இருப்பதனால் நாளை தயாராக ருத்ராவும் ஜூலியும் சீக்கிரமே கிளம்ப வேண்டும் என்று கிளம்பினார்கள். அதில் ராஜேஷும் கார்த்திக்கும் தான் அவர்களை வம்பிழுத்துக் கொண்டு இருந்தார்கள். ருத்ராவும் ஜூலியும் முன்னே நடக்க ஸ்ரீ ஜூலி பையை பிடித்து இழுத்து அவளை பின்னே அனுப்பியவன் ருத்ரா உடன் நடந்தான். அதில் லேசாய் சிரித்தாள் ருத்ரா.
“ருத்ரா, நாளக்கி என்ன கலர் சாரி கட்ட போற?”
“மெரூன் வித் சாண்டில்” என ருத்ரா கூற இப்பொழுதே அதில் அவள் எப்படி இருப்பாள் என்று கற்பனையாக நினைத்து பார்க்க ஆரம்பித்தான் ஸ்ரீ. சட்டென்று ஏதோ யோசனை வந்தவனாக, “ஓகே பாய் ருத்ரா நாளக்கி பாப்போம்.. எனக்கு ஒரு வேல இருக்கு” என்று கூறி ஜூலி உடன் பேசிக் கொண்டு இருந்த கார்த்திக்கை இழுத்துக் கொண்டு எதிர் பக்கத்தில் நடந்தான்.
“டேய் டேய்.. நான் இன்னும் அவ கிட்ட பேசி முடிக்கல டா..” என கார்த்திக் கத்த அதனை காதில் வாங்காமல் கடைவீதி பக்கம் அவனை அழைத்து சென்றான்.
“டேய் ஏன் டா உயிரை வாங்குற என்னனு சொல்லி தொலை”
“ருத்ரா நாளக்கி சாண்டில் கலர்ல சாரி கட்ட போறா என் கிட்ட அந்த கலர்ல ஷர்ட் இல்ல.. அதான் எடுக்க போறோம்” என ரோட்டை பார்த்து நடந்தபடியே ஸ்ரீ கூறிட, “எந்த சாண்டில் கலர்ன்னு கேட்டியா? அதுலயே நெறையா ஷேட் இருக்கு” என கார்த்திக் கேட்க அப்படியே நின்றான். சாண்டில் என்றால் சந்தன நிறம் என்று அவன் பொதுப்படையாக நினைத்து வந்து விட்டான். அவன் நிற்பதிலே அவனுக்கு தெரியாது என்று அறிந்த கார்த்தி, “ஆனா எனக்கு தெரியுமே.. என் கிட்ட அவ சாரி பிக் அனுப்புனா” என மிதப்பாக கூறினான். அதில் ஸ்ரீக்கு பொறாமை பொங்கியது. “உனக்கு எதுக்கு அனுப்புனா?”
“நான் அவ பிரண்டு டா.. அதுவும் இல்லாம நான் தான் அன்னிக்கு அவ செலக்ட் பண்ண ஹெல்ப் பண்ணேன்” என்று சொல்ல ஸ்ரீக்கு இன்னும் புசு புசுவென்று இருந்தது.
“டேய் உடனே மூஞ்சிய தூக்கி வச்சிக்காத.. அவ என் கிட்டயும் ஜூலி கிட்டயும் அனுப்பி எது நல்லா இருக்குன்னு கேட்டு தான் வாங்குனா.. உன் கிட்ட ஏன் அனுப்புலன்னு உனக்கே புரியும்ன்னு நினைக்குறேன்.. இல்ல அதையும் நான் சொல்லனுமா டா மட சாம்ப்ராணி” கடுப்பில் கேட்டான் கார்த்திக்.
“சரி சரி எந்த கலர்ன்னு சரியா எடுத்து குடு” என வீம்பாக ஸ்ரீ கூற நக்கலாய் சிரித்த கார்த்திக், “அப்போ செலவாகுமே” என்றவன் அருகே இருக்கும் பிரியாணி கடையை பார்க்க மூக்கில் புகை விட்டுக் கொண்டே அவனை அங்கு அழைத்து சென்றான்.
கடை கடையாக ஏறி இறங்கிய பின்பு தான் ருத்ரா புடவைக்கு எதுவாய் இருக்கும் சந்தன நிறத்தில் ஸ்ரீக்கு சட்டை கிடைத்தது. இரவு ஒன்பது மணிக்கு தான் அயர்ந்து போய் வீடு திரும்பினான். காலை நீட்டி அயர்வாக சோபாவில் அமர அவனின் அம்மா அவனை பயங்கரமாய் முறைத்தார்.
“வர்றதை பாரு ஒன்பது மணிக்கு.. காலேஜ் ஒரு மணிக்கு முடியும்.. ஆனா வீடு வர்றது ஒன்பது மணிக்கு..” என பொரிந்து தள்ள ஆரம்பிக்க சலித்துக் கொண்டான் ஸ்ரீ.
“அம்மா நல்ல விஷயம் ஒன்னு கொண்டு வந்து இருக்கேன். காலேஜ்ல ncc சர்டிபிகேட் குடுத்து நான் ஆர்மி அக்கடமில சேர எனக்கு லெட்டெர்ரும் குடுத்து இருக்காங்க.. ஏய் அபி.. ப்ராஜெக்ட் முடிஞ்சா கையோட நான் அக்கடமிக்கு சேர போறேன்..” மகிழ்வுடன் அவனின் அம்மா மற்றும் தங்கையிடம் கூறிட அவனின் அம்மா முகம் வாடியது.
“ஸ்ரீ எத்தனை முறை சொல்லி இருக்கேன்.. இது வேண்டாம்.. நீ ஒழுங்கா ஏதாவது கம்பெனிக்கு வேலைக்கு போ..” என கூறிட கடுப்பில் உச்சி கொட்டிய ஸ்ரீ, “அம்மா ஆரம்பிக்காதிங்க.. என் கனவு லட்சியம் இது தான்.. ஆர்மிக்கு அப்பறம் தான் எல்லாமே.. இதை பத்தி பேசாதிங்க” என பேச்சிற்கு முடிவு கட்ட நினைத்தான்.
“என்ன டா பேச வேணாம் சொல்ற? அப்போ நீ அப்படியே போன்னு விட சொல்றியா? நீ பத்தாவது படிக்குறப்போ உன் அப்பா நாட்டுக்காக உயிற விட்டாரு.. அந்த நாளுல இருந்து எவ்ளோ கஸ்ட்டபடுறேன்னு நீயும் தானே பாக்குற.. சொந்தம் பந்தம்னு ஆளுங்க இருந்தும் நாதி அத்த ஆளா இருக்கோம்.. நீயும் இப்போ பட்டாளத்துக்கு போறேன்னு சொன்னா ஒரு பொட்ட புள்ளைய வச்சிட்டு நான் இங்க தவிக்கணும்.. ஏற்கனவே உன் அப்பாவ வாரி குடுத்துட்டு நான் தெனமும் தவிச்சிட்டு இருக்கிறேன்.. எனக்குன்னு இப்ப இருக்குற ஒரு புள்ளையையும் என்னால விட்டுட்டு இருக்க முடியாது.. நான் கஸ்ட்ட பட்டது எல்லாம் பாத்தும் எங்களை எல்லாம் விட்டுட்டு போறேன்னு சொல்ற.. எந்த நேரத்துல என்ன ஆகும்னே தெரியாது.. உயிர் கையில புடிச்சிட்டு என்னால இருக்க முடியாது.” என ஆதங்கத்துடன் கூறியவரின் குரல் கடைசியில் அழுகையில் நின்றது.
“அம்மா எனக்கு ஒன்னும் ஆகாது” என பட்டும்படாமல் கூறியவன் அவன் அறை உள்ளே புகுந்துக் கொண்டான். அவன் அப்பா இறந்த பின் அவன் தாய் படும் வேதனைகளை அவனும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான். ஆனால் அந்த எண்ணம் அவனை மிலிட்டரிக்கு செல்லுவதில் தடையாக இல்லை.. என்ன ஆனாலும் தேசத்தை காக்க தன் தந்தை வழியில் செல்ல வேண்டும் என யுத்வேகத்துடன் இருந்தான். அவன் மிலிட்டரிக்கு சென்றாள் அபி அவளின் அம்மாவை நன்றாய் பார்த்துக் கொள்வாள் என எண்ணம் உறுதியாய் இருந்தது. என்ன இருந்தாலும் பெற்றவர்கள் மகன்களையே சார்ந்து இருக்க தானே நினைப்பார்கள். பெண்ணை கட்டி குடுத்தாள் அத்துடன் வர போவ மட்டுமே உரவு என்ற எண்ணம் அவர்களுக்கு. மகளிடம் சார்ந்து இருப்பதில் தன்மானம் குறையாது என்ற எண்ணம் இருந்தாள் ஒரு பெண்ணால் புகுந்த வீட்டையும், பிறந்த வீட்டையும் நன்றாய் கவனித்துக் கொள்ள முடியும். இவற்றை எல்லாம் சரியாக யோசித்த ஶ்ரீ எண்ணத்தில் ருத்ரா நினைவு வந்தது. அவன் மனம் நிலை இல்லாமல் தவிக்க எப்பொழுது உறங்கினான் என்றே அவனுக்கு தெரியவில்லை.
மறுநாள் பேர்வல் சிறப்பாக சென்றிட அன்று எப்படியாவது தன் காதலை ருத்ராவிடம் கூற துடித்துக் கொண்டு இருந்தான். ஆனால் அவள் அழகில் சொக்கி தவித்தவனுக்கு வார்த்தை வெளிவரவில்லை.. இது தான் அவர்கள் கல்லூரியில் அவர்களுக்கு கடைசி நாள். இனிமேல் பரீட்சை அதன் பின் பிராஜக்ட் என்று ஒடிடும். அதனால் இருவருமே தங்களின் மன விருப்பத்தை கூறிட துடித்துக் கொண்டு இருந்தார்கள். வாய் வர வந்த வார்த்தைகளை வெளியே சொல்ல சிரமப்பட்டான் ஶ்ரீ. அவளின் அழகில் திக்கு முக்காடினான். ருத்ராவும் அவனையே இமைக்காமல் பார்த்தாள். அவளை போலவே சந்தன நிற சட்டையும் வெள்ளை நிற வேட்டியும் அணிந்து நெற்றியில் லேசான சந்தன கீற்றுடன் நிற்பவனை இமைக்காமல் பார்த்தாள். அவர்கள் இருவரையும் ஆச்சரியப்படுத்தியது ஜூலியும் கார்த்திக்கும். அடர் நீல நிறத்தில் இருவருமே ஒன்றாய் உடை உடுத்தி நடந்து வர ருத்ரா ஜூலியை பார்த்து பெரிதாய் புன்னகைத்தாள். அவர்கள் ஒன்றாய் வருவதை வைத்தே காதலை வெளிப்படுத்தி விட்டார்கள் என அறிந்துக் கொண்ட ருத்ரா ஏக்கத்துடன் ஶ்ரீயை பார்த்தாள். இருவர்
விழிகளும் காதலால் ததும்பி வழிந்தது.