என் உயிர் – 22 🧬
கண்மணியின் இறப்பிற்கு பின் வழக்கம் போல் அனைவரும் காலையில் எழுந்து தத்தமது வேலைகளை செய்து கொண்டு இருக்க , மோகினி மற்றும் சந்திரன் வீட்டிற்கு வந்தனர்.
திருமலை அப்பொழுது தான் எழுந்து என்ன செய்வது என்று தெரியாமல் நாளிதழ்களை புரட்டி கொண்டிருந்தார் .
அவர்கள் வந்தவுடன் கவி காபி தயாரிக்க சென்று விட்டாள். சஞ்சய் மற்றும் நிலவன் உறங்கி கொண்டிருக்க, செல்வி குளித்துக் கொண்டிருந்தாள். சத்தம் கேட்டு தீரனும் வெளியில் வர, இருவருக்கும் வசதியாக இருந்தது.
யோசிக்காமல் சட்டென்று பேச்சை ஆரம்பித்தார் சந்திரன். “சார் ! நான் என்னடா இப்படி பேசுறேனு நினைக்காதீங்க ! நான் வளர்ந்த விதம் அப்படி ! அதனால சொல்லுறேன்”
தீரனும், திருமலையும் யோசனையுடன் காண , “தீரா, உனக்கு புரியும்னு நினைச்சு தான் சொல்லுறேன் ! சஞ்சய்யும் நிலவனும் எனக்கு ஒன்னு தான் “
“அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு புரியுது சார்! நான் அவங்க நாலு பேருக்கிட்டையுமே பேசுறேன் “
“அய்யோ அண்ணா ! செல்வியும் கவியும் சின்ன பிள்ளைங்க! நாங்க சொல்ல வந்ததது அவங்க படிப்பு பத்தி! ரெண்டு பேருமே அவங்க அவங்களுக்கு பிடிச்ச படிப்பு படிச்சா அவங்களுக்கும் நல்லது இல்லையா? இந்த காலத்துல போய் படிக்காம இருக்கிறது நல்லா இல்ல அண்ணா! ரிசலட்டும் வந்துடுச்சு ! அவங்க மார்க், பிடிச்ச கோர்ஸ் எல்லாம் விசாரிச்சு அனுப்புவோமே ! இன்னும் தள்ளுனா இந்த வருஷம் ரெண்டு பேருமே படிக்க முடியாம போயிடும் ! அதோட அவங்களுக்கும் மாறுதலா இருக்கும் இல்லையா ? ” தனது நீண்ட விளக்கத்தை மனம் கோணாதவாறு கூறினார் மோகினி.
அவரின் எண்ணம் சிற்றூரில் உறவுகளின் மத்தியில் வாழ்ந்தவர்கள். படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பாரோ மாட்டாரோ. அதோடு திருமண வேறு முடிந்த விட்டது. அதோடு தாயும் இழந்து விட்டாள். பாட்டிக்கும் முடியவில்லை. அதனால் வீட்டிலேயே இருக்க சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் தான் பேச வந்தனர்.
திருமலையின் யோசனை படிந்த முகத்தைக் கண்டு சந்திரன் “நான் இப்ப பேச வந்தது செல்விக்காக இல்லை. கவிக்காக. அவ பாதுக்காப்பா போய்ட்டு வருவா . மகிலன் பத்தி யோசிக்க வேண்டாம். கவிக்கு பிடிச்சது ஜெனிடிக்ஸ் .தீரன் சஞ்சய்லாம் இருக்காங்க. சஞ்சய் காலேஜ்லேயே படிக்கட்டும். செல்விக்கு பேஷன் டிசைனிங் சொல்லிட்டா. அதுக்கும் காலேஜ் விசாரிச்சுட்டேன். ரெண்டு அப்ளிக்கேஷன். ” என கூறி அப்ளிக்கேஷனை எடுத்து வைத்தார்.
அடுப்பறையில் இருந்து வெளியே வந்த கவியையும், அறையில் இருந்து வெளியே வந்த செல்வியையும் கண்டு கண் கலங்கினார். தன் மனக்கவலைக்கு அவர்களின் வாழ்க்கையை போக்க நினைத்தோமே என்று வெதும்பினார். அவரின் நிலையை புரிந்து தீரனே பேசி இருவரையும் அப்ளிக்கேஷனை நிரப்ப கூறினார். அவர்களுக்கும் இத்தகைய ஏக்கம் இருந்ததால் அவர்களும் ஆசையுடன் தனது தகவல்களை நிரப்பினர்.
சந்திரன் அனைத்தையும் பார்த்து விட்டு, கவி மற்றும் செல்வியிடம் “அம்மா இன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் இங்கையே சாப்பிடுறோம். உங்களுக்கு மோகினியும் உதவுவா . ” என கூறிய நொடி, கணவனின் அர்த்தப் பார்வை புரிந்து இருவரையும் அழைத்து அடுப்பறைக்கு சென்று விட்டார்.
“சார் நீங்க சங்கடபடாதீங்க! நானும் அவங்களுக்கு தகப்பன் தான்! நான் பாத்துக்குறேன் ! சங்கோஜ படாதீங்க! யாரும் இங்க எதுவும் நினைக்க போறது இல்லை! அதோட, நீங்களும், நானும் எதாச்சும் டூர் போவோமா ? ஆன்மீக சுற்றுலா மாதிரி! நீங்க சாஸ்திரம் பாப்பீங்கனா வேணா ! ஏதாச்சும் சுத்தி பாக்குற மாதிரி போவோம் ! எங்க போவோம்னு மட்டும் சொல்லுங்க ! போவோமா வேணாமானு சொல்ல வேண்டாம் ” சந்திரன் இயல்பாக கூறினார்.
திருமலை தான் நெளிந்து தீரனைக் காண , தீரனும் வருவதாக கூற, மூவரும் மைசூர் , பங்களூர் என ஆந்திரா, கன்னடா, கேரளாவை சுற்றி பார்க்க இருப்பத்தி ஐந்து நாள் பேக்கை புக் செய்தனர்.
அதனை அனைவரிடமும் பரிமாற, வனஜாவை பார்த்துக் கொள்ள பரமேஸ்வரி, மோகினி உதவுவதாக கூறினர். பூஜா, கவி மற்றும் செல்வியின் படிப்பை பற்றிக் கூற, எழுந்து வந்த சஞ்சய்யும் நிலவனும் மகிழ்ந்தனர்.
சஞ்சய் அன்றே கவிக்கு சீட்டை நியமிக்க, பூஜா மற்றும் செல்விக்கு ஒரு வாரத்திற்கு மேல் எடுத்துக் கொண்டது. பூஜா, செல்வி மற்றும் கவி கல்லூரிக்கு உடை எடுக்க, திருமலை , தீரன் மற்றும் சந்திரன் அவர்களின் சுற்றலாவிற்கு தேவைக்குரிய பொருட்கள் வாங்கினர்.
ஒரு வாரம் முடிந்த நிலையில், திருமலை தீரன் மற்றும் சந்திரனை வழியனுப்ப அனைவரும் விமான நிலையத்தில் நிற்க, தூணின் மறைவில் இருந்து இரு கண்கள் அலைமோதியது அக்கூட்டத்தில்.
அவன் பார்க்க, பின்னிருந்து ஒருவன் தோளைத் தட்டி “எப்படி அந்த கவிதாயினியை தூக்குறது மகிலா ? “
“ஹம்….. அதுக்கு தான் சரியான நேரம் பாக்குறேன் ! கிடைச்சா விடக் கூடாது ”
அவளைக் கண்களால் பஸ்பம் ஆக்கிக் கொண்டே கூறினான் மகிலன்.
“நம்ம என்னவோ வேணுக்குமே அவளை விடுற மாதிரி ரொம்ப திட்டுறாங்க டா “ஆதங்கத்தில் கொட்ட ,
“காசு நிறையா தர்றாங்கல அப்போ அப்படி தான் இருக்கும் ! விடுடா பாத்துக்கலாம் “என மகிலன் கூறி முடிக்கும் நொடி அவனது அலைபேசிக்கு அழைப்பு வர,
அவனின் முகமலர்ச்சி கண்டு “என்னடா என்ன வெட்கமலாம் படுற? ஆளா ? “
“டேய் ! ” எனக் கூறி தனியாக சென்று விட்டான் மகிலன். அவன் செல்வதை கண்ட நிலவன் மற்றும் தீரன் கண்களாலேயே பேசிக் கொண்டனர் .
மூவரையும் வழி அனுப்பி விட்டு அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர் . வனஜாவின் அறையில் இருந்து சத்தம் வர, கவி தான் சென்றாள். அங்கு வனஜா கண்களை சுழற்றி, உடம்பை முழுவதும் அசைத்து கொண்டிருந்தார்.
கை கால்களை அசைக்க முடியாததால் உடம்பு முழுவதையும் தனது பலம் கொண்டு அசைக்க முயல, வாயில் இருந்து தன்னை அறியாமல் சத்தம் எழுந்தது. அதனின் பலனே கவி உள்ளே வந்ததது.
வந்தவள் பாட்டியின் அருகில் அமர, வனஜா கடினப்பட்டு திக்கி திக்கி “திரு…. ம…லைய கூப்….. பிடு “
“அப்பா, மாமா, சஞ்சய் அண்ணா அப்பா எல்லாரும் ஊருக்கு போயிருக்காங்க பாட்டி …. வேற எதுவும் வேணுமா ? எதுனாச்சும் பண்ணுதா ? “
வனஜா கண்கள் கலங்கி எதையோ கூற முயன்றார். அந்நேரம் எதார்த்தமாக உள்ளே நுழைந்த பரமேஸ்வரி வனஜாவின் நிலையைக் கண்டு அருகில் வர, வனஜா கண்கள் விரிந்தது. அதனை கண்டு கவியை எழ கூறி பரமேஸ்வரி அமர்ந்து அவரின் அருகில் காதை வைக்க, வனஜா கவியையே பார்ப்பதை உணர்ந்து அவளை வெளியே அனுப்பினார்.
வெளியில் வந்தவள் யோசனையுடன் அங்கையே நிற்க, உள்ளே நுழைந்த நிலவன் என்வென்று விசாரிக்க, கவி கூறியதை வைத்து அவனும் அங்கேயே காத்துக் கொண்டிருந்தான்.
கால் மணி நேரம் கழித்து வெளியில் வந்த பரமேஸ்வரி இருவரையும் கண்டுவிட்டு “கவி நைட்டுக்கு என்ன பண்ணுவோம் ? “
” அம்மா….. பாட்டி….. “
“ஒன்னுமில்லை …… அவங்க யாருமே இல்லாம இருந்ததனால பயந்துட்டாங்க…. எல்லாரும் ஏர்போர்ட் போய்ட்டீங்களா அதான் …… நீ வா ! ” எனக் கூறி அவளை இழுத்து சென்று விட்டார்.
நிலவனும் தோளை குலுக்கி விட்டு அவனது அறைக்கு சென்று விட்டான். இரவு உணவும் அனைவரும் உண்டு முடிக்க, மோகினி அவரது இல்லத்திற்கு செல்ல, பூஜாவும் துணைக்கு சென்று விட்டாள். நிலவனும் சஞ்சய்யும் பேசிக் கொண்டிருக்க, அடுப்பறையில் ஒதுங்க வைத்து கொண்டிருந்த செல்வி மற்றும் கவியின் கைகளில் பால் நிறைந்த டம்ளரை கொடுத்தார் பரமேஸ்வரி.
இருவரும் அதிர்ந்து பார்க்க, அதனை சட்டை செய்யாமல் நிலவன் மற்றும் சஞ்சய்யின் அருகில் வந்து நின்றார். பின்னால் இவர்களும் நிற்க, இருவரின் கோலம் கண்டு இருவருக்கும் கலந்த உணர்வுகளோடு நின்றனர்.
பரமேஸ்வரியே “நீங்க இன்னைக்கே உங்க வாழ்க்கையை தொடங்குனு சொல்ல வரல ! அப்படி எதுனாச்சும் பண்ணீங்கனு தெரிய வந்துச்சு நானே ஜெயில பிடிச்சு போட்டுருவேன்! ஏதோ வனஜா ஆச்சி சொன்னாங்களேன் பண்ணுறேன். அவங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு ரெண்டு பேரும் ரூமுக்கு போங்க ” என நிலவன் மற்றும் சஞ்சய்யிடம் ஆரம்பித்து கவி மற்றும் செல்வியிடம் முடித்தார்.
அவர்களும் வனஜாவிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு தத்தமது அறைகளுக்கு சென்றனர்.
❤️❤️❤️❤️❤️
கூத காத்து…
கூத காத்து
கூத காத்து கொல்லுதடி…
கூர சேலை தாடி…
இல்ல கூந்தல் மட்டும் தாடி…
செல்வி உள்ளே நுழைய சஞ்சய் பாட்டு பாடினான். அதை காதில் வாங்கிய நொடி
” நீ எல்லாம் என்ன நண்பன்டா ? உன் ப்ரெண்ட் அங்க கஷ்டத்துல இருக்கான் ? உனக்கு இதெல்லாம் கேக்குதா ? “
“ஹே ஹே……. ஏன் டி மூச்சு விடு! முத்தத்துக்கு இவ்வளவு தம் கட்டி பேசணும்னு அவசியம் இல்லை ! அதோட அவன் கஷ்டத்துல இருப்பானு நீயா ஏன் நினைக்கிற ? “
“முத்தமோ மொத்தமோ
எல்லாம் ஒன்னு தான் “
” கிள்ளி கொடுக்கிறதுக்கும் அள்ளிக் கொடுக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குல ? “
” ஒரு வித்தியாசமும் இல்லை ! மொத்ததுல கொடுக்கிறது தான். அதோட முன்னாடி சொன்னது தான் அவங்க கஷ்டத்துல தான் இருப்பாங்க ! “
“உனக்கு தெரியாதுடி அவன் அதையே யூஸ் பண்ணிக்குவான் டி “
“அதெல்லாம் உன் புத்தி ! போய் படுடா ” எனக் கூறி முதுகு காண்பித்து திரும்பி படுத்துக் கொண்டாள்.
இவர்கள் சண்டையிட்டு கொள்வதற்கு காரணம் ஆனவர்களோ
பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்…
தீயாய் மாறும் தேகம் தேகம்…
உன் கைகள் என்னை தொட்டு கோலம் போடும்…
வாழ்வின் எல்லை தேடும் தேடும்…
பால் சிந்தும் பௌர்ணமியில்…
நாம் நனைவோம் பனி இரவில்…
நம் மூச்சுக் காய்ச்சலில்…
இந்த பனியும் நடுங்கும்…
வீடெங்கும் உன் பொருட்கள்…அசைந்தாடும் உன் உடைகள்…
தனியாக நான் இல்லை…
என்றே சொல்லி சினுங்கும்…
தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே…
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு…
உன் வாசம் என்னில் பட்டும் வாடி போனேன்…
வாசல் தூணாய் நானும் ஆனேன்…
கீர்த்தி ☘️