Loading

அத்தியாயம் 5

 

 

 

யோகேஷ் தன் தங்கையை கல்லூரியில் இறக்கிவிட்டவன்.அங்கு இருந்து தன் காரை கிளப்பிக்கொண்டு சிறிது நேர பயணத்திற்க்கு பின்பு தன் அலுவலகத்தை வந்தடைந்தவன் வண்டியை அதான் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு தன் அலுவலக அறையை சென்றடைந்தான்.

 

 

பின்பு ,இன்டர்காம் வழியாக தனது பிஏவான யாழினியை தொடர்புக்கொண்டு, இன்றையை அலுவலக பணியின் அட்டவணை எடுத்து வருவமாறு கட்டளையிட்டவன் தன் பணியை தொடர்ந்தான்..

 

 

சிறிது நேரத்தில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு நிமிர்ந்தவன், “எஸ் வாங்க” என்று பணித்தான்.

 

“குட் மார்னிங் சார்”

 

“யா குட் மார்னிங் யாழினி இன்னைக்கான மீட்டிங்க்கு எல்லாம் பிரிப்பேர் பண்ணிட்டிங்களா”?

 

“எஸ் சார் எல்லாம் ரெடி இன்னும் கொஞ்ச நேரத்துல மீட்டிங் ஸ்டார்ட் பண்ணிடலாம்”.

 

“ஒகே மிஸ்  யாழினி இப்பே நீங்க போய் மீட்டிங் ஹால்ல எல்லாம் ரெடியா இருக்கனு ஒன்ஸ் செக் பண்ணிடுறிங்களா”..

 

“யா ஷ்யூர் சார்”

 

“அன்ட் தென் எல்லாம் முடுச்சுட்டு கால் பண்ணுங்க நான் மீட்டிங் ஹாலுக்கு வந்துடுறேன்”.

 

“ஒகே சார்”.

 

“தேங்கியூ யாழினி”

 

இதுக்கு எதுக்கு சார் தேங்கியூ சொல்லுறிங்க இது தான என் வெர்க் அப்பே அத நான் பார்ப்பெஃக்ட்டா பண்ணணும்ல சே நோ தேங்க்ஸ் சார்.

 

“அப்படி இல்லை கொஞ்சம் நெவஸ்ஸா இருக்கு இன்னைக்கு நடக்க இருக்க மீட்டிங் ரொம்ப முக்கியம் அதுல எதும் செதப்பிட கூடாதுனு தான் இப்படி உங்கள பாக்க சொல்லுறேன்”.

 

“டேண்ட் வொரி சார் இன்னைக்கு மீட்டிங்க நீங்க சாக்ஸாஸ்ஃபூல்லா முடிப்பிங்க அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு”.

 

“தேங்கியூ சே மச் யாழினி என் மேல இவ்வளவு நம்பிக்கை!வச்சதுக்கு நான் கண்டிப்பா என் பெஸ்ட் குடுக்குறேன்”.

 

“ஒகே சார் நான் போய் எல்லா அரெண்ஜ்மெண்ட்ஸூம் சரியா இருக்கானு பாத்துட்டு உங்களுக்கு இன்பார்ம் பண்ணுறேன் அப்புறம் வாங்க” என்று கூறியவள்,அந்த அறையை விட்டு வெளியேறி, மீட்டிங் நடக்க இருக்கும் அறைக்கு சென்று சரிப்பார்க்க ஆரம்பித்தாள்..

 

அவள் சென்ற பின்பு தன் மனதுக்குளையே அவளுக்கு பாரட்டு விழா நடத்தியவன் தன் பணியை தொடர்ந்தான்.

 

அங்கு சென்றவள் எல்லாம் சரியா இருக்கிறதா என்று மீண்டும் ஒருமுறை சரிப்பார்த்தவள், இன்டர்காம் வழியாக அவனை தொடர்ப்பு கொண்டு அந்த அறைக்கு வருமாறு கூறியவள் தன் பணியை மேற்க்கொண்டாள்..

 

சிறிது நேரத்தில் தன் நண்பனும் இந்த கம்பெனியின் மேனேஜர்ருமான வருணையும் அழைத்துக்கொண்டு மீட்டிங் நடக்கும் ஹாலை அடைந்தவன்.அங்கு எல்லாம் தன் மனதுக்கு திருப்திகரமாக அமைந்ததை பார்த்து தன் உறையை ஆரம்பித்தான்…

 

சிறிது நேரத்தில் மீட்டிங் முடிவுக்கு வரும் தருவாயில் வந்திருந்த கிளையண்ட்களுக்கு இவனுடைய செயல் விளக்கம் மிகவும் திருப்திகரமாக அமைந்ததால் அந்த பிராஜெக்ட் அவனுக்கே கிடைத்தது.

 

மீட்டிங் முடிந்ததும் அனைவரும் இவனுக்கு வாழ்த்து கூறி விடைப்பெற்றனார்..

 

அந்த அறையை விட்டு வெளியே வந்த இருவரும் யாழினியை பார்த்து ஒருசேர “தேங்கியூ யாழினி”என்றவர்களை பார்த்து முறைத்த வண்ணம் இருந்தாள்.

 

அவளை  இருவரும் விளங்காத பார்வை பார்த்து வைத்தனார்.

 

“எம்மாடி என் டா இப்பே முறைக்குறா” என்று வருண் வினாவினான்?.

 

“அப்புறம் என்ன ண்ணா, இது என்னோட வெர்க் அதா தான் நான் பண்ணுணேன் அதுக்கு என்னாம்மே தேங்க்ஸ்லாம் சொல்லிட்டு இருக்கிங்க, இது உங்க திறமைக்கு கிடைச்ச வெற்றி அண்ணா சரியா”.

 

” ம்ம் சரி டா சரி ஏதே தெரியாம சொல்லிட்டோம்  சாரி போதுமா என்று கூறி சரணடைந்தான் வருண்”.

 

“ம்ம் இன்னும் என் கோவம் போகலை சே உங்க சாரியா நான் அக்செப்ட் பண்ணல”.

 

“ஓஓஓ அப்படியா மேடம்க்கு என்ன பண்ண என் சாரியா எதுப்பீங்க”?

 

“ம்ம் என்று தன் தடையில் விரல் வைத்து யோசித்து பின் அஹான் இந்த புராஜெக்ட் உங்களுக்கு கிடைச்சதுக்கு எனக்கு நல்ல பெரிய ஜஸ்கீரிம் வாங்கி தாங்க நான் சாரியை அக்செப்ட் பண்ணிக்குறேன் ஒகே வா”..

 

ம்ம் இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான் டா யாழிமா ஒரு தேங்க்ஸ் சொன்னதுக்கு ஜஸ்கீரிம் கேக்குற பாத்தியா”?

 

“ப்ச் போங்க ண்ணா நான் உங்க கூட இனி பேச மாட்டேன் என்று முறுக்கி கொண்டாள் அவள்”.

 

சரி சரி இன்னைக்கு ஈவினிங் வெர்க் முடிச்சு போகும் போது நம்ம ஜஸ்கீரிம் பார்லார் போயிட்டு போகலாம் ஒகே வா..

 

“ஐய் ஜாலி செம ண்ணா ஒகே போகலாம்”..

 

சரி வாங்க இப்பே போய் நாம நம்ம ஒர்க்க கண்டினியூ பண்ணலாம்..

 

ம்ம் சரி என்று கூறியவள் தன் வேலையை பார்க்க சென்றாள்.

 

இவ்விருவரின் சாம்பஷினைகளை பார்த்து யோகேஷ் தன் மனத்துக்குள் (“பாரேன் இவன் கிட்ட மட்டும் பார்த்த ஒரே நாள்ல எப்படி எல்லாம் வாயடிக்குற ஆன நம்ம மட்டும் எதவது ஒன்னு கேட்ட ஓன்வேர்ட் குவெஸ்டின் மாதிரி அன்ஸார் பண்ண வேண்டியது ம்க்கும்” என்று புலம்பியவனை பார்த்து அவன் மனசாட்சி எள்ளி நகையாடியது..

“ஹாலே பாஸ் இங்க கொஞ்சம் கவனிக்குறளா”..

யாரு டா அது என்னை கூப்புடுறது?.

“அஹான் நான் தான் உங்க மனசாட்சி”.

“ஓஓ நீயா இப்பே எதுக்கு சார் வந்திங்க”?

இல்லை நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஏதே புலம்புனிங்களா அதுக்கு பதில் சொல்ல தான் வந்தேன்,ஆமா நீங்க என்னைக்கு ஒரு பெண்ணுகிட்ட போய் பேசிருக்கிங்க உங்க தங்கச்சியா தவிற மற்ற யாருகிட்டயும் பேச மாட்டிங்க அப்படி இருக்கப்ப இந்த பெண்ணு மட்டும் எப்படி உங்க கிட்ட பேசனும்னு எதிர்பார்க்குறிங்க???

“ஈஈஈஈஈஈஈஈ அது சும்மா தான்”

“போங்க பாஸ் போங்க நீங்க அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டிங்க போய் வேலையா பாருங்க என்று கூறியவாரு மறைந்தது”..)தன் மனசாட்சி கூறியதை நினைத்து தன் தலையிலையே தட்டியவன் மீதம் இருந்த வேலையை பார்க்க சென்றான்..

 

அதன் பின் வந்த உணவுஇடைவேளியில் கூட மூவரும் எதுவும் பேசது உணவருந்தியவர்கள் அவர் அவர் வேலை யை பார்க்க சென்றனார்..

 

மாலை 6மணி ஆனதும் தன் கை கடிகாரத்தை திருப்பி பார்த்தவள் நேரம் ஆவதை உணர்ந்து தன் கணிணியை அணைத்தவள்,இன்று தயார் செய்த கோப்புகளை எடுத்துக்கொண்டு எம்டியின் அறை நோக்கி சென்றவள் கதவை தட்டி விட்டு அவன் அனுமதிக்காக காத்திருந்தாள்..

 

கதவு தட்டப்படும் ஓசை கேட்டு நிமிர்ந்தவன் அவளை உள்ளே வருமாறு பணித்துவிட்டு தன் வேலையில் கவனமனான்..

 

“எஸ்கியூஸ்மி சார்”.

 

ம்ம் “யா சொல்லுங்க யாழினி”.

 

சார் இது இன்னைக்கு மீட்டிங்ல குடுத்த வெர்க் அத ரெடி பண்ணிட்டேன்,மீதி வெர்க்க நாளைக்கு வந்து ரெடி பண்ணிடுறேன்.இப்பே டைம் ஆச்சு நான் கிளம்புட்டுமா சார்..

 

ம்ம் ஒகே நீங்க கிளம்புங்க மீதி வெர்க்க நாளைக்கு பாத்துக்கலாம்..

 

“ஒகே சார்”என்று கிளம்ப எத்தனித்தவளை.

 

“ஒரு நிமிசம் இருங்க யாழினி உங்க அண்ணா அந்த தடியன் ஐஸ்கிரீம் வாங்கி தரேன் சொன்னான் தானே வெயிட் பண்ணுங்க அவன கூட்டிட்டு போக சொல்லுறேன்”.

 

அச்சே சார் அது நான் சும்மா தான் கேட்டேன்.

 

பரவலை இருக்கட்டும் இருங்க நீங்க ஆசையா கேட்டுட்டிங்க சாப்புட்டுட்டே போகலாம் என்றவன் தன் மொபைலை எடுத்து வருணுக்கு அழைப்பு விடுத்து விட்டு காத்திருந்தான்.

 

சிறிது நேர காத்திருப்பிற்க்கு பின் அழைப்பை எடுத்தவனை பேச விடமால் இவனே அவனை வறுத்தேடுக்க ஆரம்பித்தவன்,”டேய் எருமை தடிமாடு எங்க டா இருக்க ஒரு கமிட்மெண்ட் குடுக்கும் முன்னாடி உன் வெர்க்க ஃபிரி பண்ணிக்க மாட்டியா”?.

 

எதிர்முனையில் இருந்தவனே”அடேய் இரு டா இப்பே எதுக்கு இப்படி காத்துற”?

 

அஹான் நீ தான டா மார்னிங் யாழி கிட்ட ஐஸ்கிரீம் பார்லார் கூட்டிட்டு போறேன் சொன்ன?

 

ஆமா அதுக்கு என்ன டா இப்பே? அங்க தான் டா வந்துட்டு இருக்கேன் போனை போட்டவன் எதிர் லைன்ல இருக்கவன் என்ன சொல்ல வரான் கூட கேட்கம காட்டு கத்துகத்திட்டு கேக்குறன் பாரு கேள்வியை என்று பொரிந்தான்..

 

தன்னிடம் போனில் பொரிந்தவனை ஒருவாறு சமாளித்து,சரி சரி சிக்கிரம் வா யாழி இங்க என் ரூம்ல வெயிட் பண்ணிட்டு இருக்கா  என்றவன் போனை வைத்துவிட்டு திரும்பினான்.

 

அவன் போனை வைத்ததும் சிறிது நேரத்தில் வந்தவன் “என் டா இப்போ போன் பண்ணி கத்துனா இங்க தான வந்துட்டு இருந்தேன் அதுக்குளையும் திட்டுற”.

 

இல்லை மச்சி டைம் ஆச்சுனு அவ கிளம்புறேன் சொன்ன டா அதான் என்று இழுத்தவனை பார்த்து அவள் நமட்டு சிரிப்பு சிரித்து வைத்தாள்..

 

சரி சரி “சாரி டா யாழிமா கொஞ்சம் வெர்க்   அதை கம்ப்ளிட் பண்ண லேட் ஆகிடுச்சு அதான் சரி வாங்க போகலாம்”.

 

பரவலை  அண்ணா நான் உங்க கிட்ட சும்மா தான் கேட்டேன்,இவரு தான் இப்பே டென்சன் ஆகிட்டாரு..

 

அவன் அப்படி தான் மா நம ஒருத்தருக்கு கமிட்மெண்ட் குடுத்தா அதை சரியா செய்யனுமுனு நினைப்பான்.

 

“ம்ம்  அவரை பார்த்தலே தெரியுது ண்ணா”.

 

சரி சரி இப்படி பேசிட்டே இருந்தோம்னா டைம் ஆகிட்டே தான் இருக்கும் கிளம்புங்க இரண்டு பேரும் போகலாம்..

 

“டேய் நான் வரலை நீங்க இரண்டு பேரும் போங்க எனக்கு இங்க வேலை இருக்கு அதை முடிச்சுட்டு நான் வீட்டுக்கு கிளம்புறேன்”.

 

“அது எல்லாம் நாளைக்கு பாத்துக்கலாம் இப்போ கிளம்பு நாம ஒன்ன வெளியா போய் சாப்புட்டு ரொம்ப நாள் ஆச்சு”.

 

“இல்லை டா நான் வரலை நீயும் உன் தங்கச்சியும் போயிட்டு வாங்க”.

 

ம்க்கும் நீ இப்படி சொன்ன எல்லாம் சரிப்பட்டு வர மாட்ட என்றவன் அவனுடையை மடிகணினியை எடுத்து அணைத்தவன் அவனையும் கையோடு அழைத்துக்கொண்ட (இழுத்துக்கொண்டு)

சென்றவனை தானும் பின் தொடர்ந்து சென்றாள்.

 

அவனை தர தரவேன இழுத்துக்கொண்டு வந்தவன் கார் பார்க்கிங்கை அடைந்தவன் அவனுடைய காரில் அமர வைத்து “யாழி மா வா டா வந்து உக்காரு போகலாம்”என்றவன் அவளையும் அழைத்துக்கொண்டு அந்த புகழ்ப்பெற்ற ஐஸ்கிரீம் பார்லரை நோக்கி தன் வாகனத்தை செலுத்தினான்..

 

 

துர்கா கார்த்திகேயன்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்