Loading

தன் தந்தையின் கடிதத்தை படித்து அவளின் மனநிலை என்ன என்றே அவளையே பார்த்துக்கொண்டு இருக்கும் மிட்டலுக்கு சுத்தமாக புரியவில்லை. அவளும்   சற்று யோசித்து, “சரி அங்கிள் நான் பொறுப்பை ஏற்றுக்கிறேன்” என 

 

“ரொம்ப சந்தோசம் மா.  இங்க இருக்கிற  மெயின் ஆபீஸ் போய்டலாம்” என்று மிட்டல் சொல்ல,  அவளும் சிறிது நேரத்தில் கிளம்பி சென்றாள். 

 

பதினைந்து தளங்கள் கொண்டு பல்வேறு துறைகளின் தலைமை இடமாக இயங்கி வருவது தான் மேத்தா’ஸ் குளோப். முதலில் சற்று தடுமாறினாலும் கொஞ்சம் நேரத்திலே அனைத்தும் பிடிபட  ஒரே நாளில் மொத்த நிறுவனத்தின் நிலையையும் கண்டறிந்து விட்டாள். பின்னே புலிக்கு பிறந்து பூனை ஆகுமா. அசோக் மேத்தாவின் மகள் ஆகிற்றே. 

 

அதற்கு பக்கபலமாக இருந்து நேத்ரன்.  நேத்ரன் ஆரம்ப கால முப்பதின் தோற்றம். அசோக் மேத்தாவின் நம்பகமான பிஏ. அசோக் மேத்தாவின் மகள் என்பதாலே அவருக்கு கிடைக்கும்  அதே மரியாதை இப்போது மோகித்ராவிற்கும் கிடைத்தது. 

 

மறுநாள்,  அலுவலகத்தில் மோகித்ரா பல சந்தேகங்கள்  கேட்க அதற்கு பொறுமையாக பதில் அளித்து கொண்டு இருந்தான் நேத்ரன்.  அப்போது மிட்டல் அங்கு வர, 

 

“வாங்க அங்கிள். இப்ப தான் அக்கௌன்ட்ஸ் பார்க்க எடுத்தேன். இனி தான் தெரியும் எதாவது தப்பு இல்ல குளறுபடி நடந்து இருக்கானு” என்று தன் எதிரே இருக்கும் கம்ப்யூட்டரை பார்த்து கொண்டே சொல்ல,

 

“நான் வேற விசயத்திற்காக தான் வந்தேன் மா” என்று சற்று படபடப்பாக சொல்ல, 

 

அவரின் படபடப்பு அவளுக்கு சற்று சந்தேகம்  தர இருந்தும் “சொல்லுங்க அங்கிள் என்ன விசயம்” என்று அவரை பார்த்து கொண்டே கேட்க,

 

“அது இன்னும் இரண்டு நாளில் உனக்கு பிறந்தநாள் வருது மா. அதற்குள் இந்த சொத்தை உன் பெயருக்கு மாத்திக்கனும்” என்று ஒரு குண்டை தூக்கி போட,

 

“நோ அங்கிள் எனக்கு இந்த சொத்து எதுவும் வேண்டாம்.  என் அப்பாக்காக தான் பொறுப்பை எடுத்துக்கிட்டேன். மத்தபடி வேற எண்ணம் இல்ல” என்று தன் நிலைப்பாட்டை சொல்ல,

 

“உன் இருபத்தி ஐந்தாவது வயதுக்குள்ள இந்த சொத்தை உன் பெயருக்கு மாற்றலைனா இந்த மொத்த சொத்தும் அரசாங்க சொத்தா மாறிடும்” என

 

“நான் யூகே சிட்டிஸன் தெரியும் தானே. எனக்கு இங்க இருக்கிற சொத்து எல்லாம் வேண்டாம் அங்கிள், அவரோட இரண்டாவது பொண்ணு பெயரில் தானே இருக்கும்” என்று கனக்கு வழக்கை பார்க்க ஆரம்பிக்க, 

 

சற்று தயங்கி கொண்டு “இந்த லெட்டரை நீ பொறுப்பை ஏற்ற பின் கொடுக்க சொன்னார்” என்று வேற ஒரு கடிதத்தை கொடுக்க

 

அதில்   “உன் பாதுகாப்பும் முக்கியம் இந்த சொத்தை பாதுகாக்கிறதும் முக்கியம்.  உன் தங்கை பாயல் உலகம் அறியாதவள் அவள் பெயரில் சொத்து இருக்க வேண்டாம். அதே போல் உன் பெயரிலும் சொத்து இருக்காது.  உன்னை கல்யாணம் செய்ய போகும் மாப்பிள்ளைக்கு தான் சொத்தின் முழு உரிமையும். ஆனால் உங்களுக்கு ஆள அனுபவிக்க உரிமை உண்டு.  இந்த முடிவுக்கு சில காரணங்கள் உண்டு விரைவில் கண்டுகொள்வாய்”  என்று இருக்க, 

 

“ஃபுல்சிட்….  என்ன அங்கிள் இது. எனக்கு  கல்யாணம் எல்லாம் பண்ணிக்கிற ஐடியா  கிடையாது.  என் அப்பா செத்து ஒரு மாசம் கிட்ட ஆக போகுது அப்ப எல்லாம் சொல்லாம இப்ப என் பிறந்தநாளுக்கு இரண்டு நாள் முன்ன வந்து சொல்றீங்க.  கல்யாணம் நடக்கலைனா சொத்து இல்ல. அப்படி தானே” என்று கோபமாக கத்தி கொண்டு இருக்க காற்றில் பக்கத்தில் இருந்த ஃபையில் திறந்து கொள்ள அதில் இருந்த புகைப்படத்தை பார்த்த மோகித்ரா

 

“சரி அங்கிள் நீங்க போங்க நான் சொல்றேன்” என்றவளின் மூளையில் பல யோசனைகள் தோன்ற,

 

அவர் போனதும் நேத்ரனிடம்  “இது யாரு” என

 

“நம்ம அடுத்த படத்தோட ஹீரோ விபி மேம்” என்று அவனும் சொல்ல,

 

“அவனை பற்றி மொத்தமாக  விசாரிச்சு நாளைக்கு சொல்லுங்க” என்று அவனுக்கு சொல்ல

 

“ஓகே மேம்” என்று நேத்ரன் வெளியேற அவளின் விழி சென்றதோ  புகைப்படத்தில் கன்னங்குழி விழ அழகாக புன்னகை புரியும் விஸ்வ பிரசாத்தை அதுவும்  சில பல திட்டங்களுடன். 

 

சென்னை, 

 

‘இன்று எப்படியாவது அம்மாவை பார்க்க போகனும். போன வாரத்தில் இருந்து போகனும் போகனும்னு நினைச்சு போகவே முடியலை’ என்று தன் அன்னையை காண கிளம்பிக் கொண்டு இருக்க,  அந்த நேரத்தில் போன் வந்தது. 

 

“ஹலோ!!” 

 

“இஸ் திஸ் விபி” என்று எதிர் பக்கம் கேட்க, 

 

“எஸ்… யாருங்க இது”  

 

“ஹலோ சார்.  திஸ் எஸ் நேத்ரன்  ஃப்ரம் மேத்தா புரொடக்ஷன்ஸ்” என்றதும், 

 

“சொல்லுங்க சார்…  எனி நீயூஸ்” என்று ஆர்வமும் படபடப்பும் ஒருங்கே கேட்க,

 

“இப்ப மேடம் தான் கம்பெனி மொத்தம் ஹண்டர் டேக் பண்ணிருக்காங்க.  இன்னும் நீயூஸ் நாங்க அஃபிசியலாக கொடுக்கலை. பட் மேம் உங்களை இன்றைக்கு பார்க்கனும்னு கேட்டாங்க” என

 

“இன்றைக்கா இப்ப முடியாதே நாளைக்கு வரட்டுமா” என்று இழுக்க 

 

“இல்ல சார் உங்களுக்கு டிக்கெட் கூட எடுத்தாச்சு… கண்டிப்பாக நீங்க வரனும்.  சாரி ஃபார் த இன்கன்வினியஸ். டிக்கெட் இன்னும் தென் மினிட்ஸ்ல உங்க கிட்ட வந்திடும்.  சீக்கிரமா  வந்திடுங்க.  மும்பை ஆர் போட்டில் எங்க டிரைவர் இருப்பார்” என்று பேசி விட்டு வைத்து விட, 

 

‘என்ன இது இப்படி அவசரமா கூப்பிடறாங்க. ஒரு வேளை இப்ப இருக்கிற ப்ராஜெக்ட் வேண்டாம்னு சொல்ல போறாங்களா. அதுக்கு போனிலே சொல்லலாமே. வேற என்னவா இருக்கும்’ என்று யோசித்து கொண்டு மும்பை கிளம்ப தயாரானான். 

 

‘மும்பை என்னோட கனவு நகரம். இங்கவே வாழ்க்கை முழுக்க இருக்கனும்னு இல்ல பட் கொஞ்ச நாளாவது இங்க இந்த சூழலை அனுபவிக்கனும். மேத்தா சார் படத்தை பற்றி பேசும் போது எனக்கு அவ்வளவு சந்தோசமா இருந்துச்சு…. நிறைய பேருக்கு கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைச்சு இருக்கு. பட் இப்ப என்ன ஆக போகுதோ’ 

 

அவர்கள் சொல்லியது போல் கார் டிரைவர் ஒருவர் தனது பெயரை தாங்கி இருக்க அவரிடம் அறிமுகப்படுத்தி கொண்டு சென்றான். 

 

காரில் சென்றுக் கொண்டே மும்பை அழகை ரசிக்க, சிறிது நேரத்தில் கார் நிற்க மேத்தா’ஸ் குளோப் பிரம்மாண்டமான அழகு அவனை கவர்ந்தது. 

 

நான்காவது தளத்தில் தான் மோகித்ரா அறை உள்ளது. அந்த தளத்தை அடைந்ததும் நேத்ரன் வரவேற்று மோகித்ராவின் அறைக்கு அழைத்து சென்றான். 

 

“ஹலோ விஸ்வா டேக் யுவர் சிட்” என்று மோகித்ரா சொல்ல

 

விபி சத்தியமாக இப்படி ஒரு பெண்ணை எதிர்பார்க்கவில்லை. அழகு கொட்டி கிடைக்க பேரழகியாக காட்சியளித்தாள். நேர்த்தியான உடையில் கம்பீரமாகவும் இருந்தாள். 

 

ஒரு நிமிடம் அவனை தடுமாற வைத்த அழகியை கண் எடுக்காமல் பார்க்க, 

 

அவன் பார்வையை கூட சட்டை செய்யாத மோகித்ரா அவனை கூர் கண்களால் பார்த்து கொண்டே  “லெட்ஸ் கேட் மேரிட்” என

 

“வாட்!!” என்று புரியாமல் விழித்த விபியிடம், 

 

“கல்யாணம் மேன் கல்யாணம்…..  ஜஸ்ட் மேரி மீ அண்ட் இட் வில் பீ சீக்ரெட் பார் எவர்” என

 

பேசுவது எதுவும் புரியாமல் பெரும் அதிர்ச்சியில் இருந்த விபிக்கு அடுத்து காத்திருக்கும் அதிர்ச்சி என்னவோ??? 

 

உண்மையான உறவுகள் கொடுக்காத பாசத்தை, நேசத்தை, எதிர்பார்ப்பை, கண்டிப்பை இந்த ஒப்பந்த உறவில் கண்டிப்பாக எதிர் நோக்கி இருக்க மாட்டாள். ஆனால் எல்லாமே ஒரு நாள் மாறும் தானே. மாற்றம் ஒன்று தான் மாறாதது.  மாறும் என்ற நம்பிக்கையில் தானே எவ்வளவு பிரச்சனை நடந்தாலும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். 

தொடரட்டும் ….

நிலானி 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்