Loading

இன்றைக்கு பிரஸ் மீட் இருக்கிறது. காரணம் பெரிதாக  எதுவும் இல்லை.  தற்பொழுது  நடித்து முடித்த படத்துக்கான அப்டேட் தான் கொடுக்க போகிறார்கள்.  விபி  போக வேண்டும் என்ற  அவசியம் இல்லை தான்.   ஆனால்  பிரேம் கூப்பிட்ட காரணத்திற்காக செல்ல நினைத்தான்.  அதுவும் அவனோட அடுத்த படத்திற்கு  அறிவிப்பு கொடுக்க போகிறதா சொல்லவே செல்ல வேண்டியது. 

 

‘இதோ சீக்கிரம் கிளம்பனும்னு அவரசமா எழுந்து என்ன புரோஜனம் இப்படி டிராஃபிகில் வந்து மாட்டிக்கிட்டேன்.  இன்னும் பத்து நிமிடத்தில் பத்தாக போது.  மொத்த மீடியாவும் வந்தாச்சுனு பிரேமோட பிஏ கால் பண்ணான்’ என்று சென்னை போக்குவரத்தில் நீந்தியே சென்றான்.

 

“அப்பாடா ஒரு வழியா வந்துட்டேன்.  அரைமணி நேரத்தில் வர வேண்டிய இடத்திற்கு ஒன்றரை மணி நேரமா காரில் நீச்சல் அடிச்சு வந்து இருக்கேன்” என்று சற்று பெருமூச்சு விட்டு உள்ளே செல்ல,

 

அவனை பார்த்த பின்ன தான் பிரேம் கண்ணில்  நிம்மதியே வந்தது. இனி பத்திரிகையாளர் கேட்கிற கேள்விக்கு பொறுமையாக  அதை விட யோசிச்சு பதில் சொல்லனும் என்ற நினைப்போடு எல்லாரும் மேடை ஏறினார்கள்.

மேடையில் நான்கு நாற்காலி இருக்க அதன் முன் பல்வேறு குறியீடு கொண்ட மைக் இருந்தது.  கீழே இருபதுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர் அமர்ந்து கேட்க போகும் கேள்வியை தங்களின் நோட்பேடில் ஒரு முறை சரி பார்த்து  கொண்டு இருக்கும் போதே,  பிரேம், விபி,  படத்தின் நாயகி கயல் மற்றும் மற்றொரு தயாரிப்பாளர் ஜெகன் நால்வரும் அமர்ந்தனர். 

பிரேம்  “எங்கள்  அழைப்பை ஏற்று வந்த எல்லோரும் முதல் வணக்கம்” என என்று பேச்சை ஆரம்பிக்க,

 

“இந்த திடீர் அழைப்பிற்கான  காரணத்தை தெரிந்து கொள்ளலாமா பிரேம் சார்” என்றான் பத்திரிகையாளரில் ஒருவர். 

 

“எஸ் கண்டிப்பாக… எல்லாருக்கும் தெரிந்த விசயம் தான் ‘கேங்வார்’  படத்தோட படப்பிடிப்பு போன வாரம் முடிஞ்சிது.  இப்ப இறுதி கட்ட வேலைகள் போய்ட்டு இருக்கு.  சீக்கிரமா மூவியை ரிலீஸ் பண்ற ஐடியாவில் இருக்கோம்.  நெக்ஸ்ட் வீக் படத்தோட டீசர் மற்றும் ஆடியோ லான்ச் இருக்கு. அந்த டேட் சொல்ல தான் இந்த மீட்.  கூடவே ஒரு சப்ரைஸ் இருக்கு”  என்று பிரேம் சொல்ல

 

“ஓ… நல்லது சார்.. விபி சார் நீங்க சொல்லுங்க இந்த படத்தில் நடிச்ச அனுபவம் எப்படி இருக்கு”

“உண்மையை சொல்லனும் என்ற எனக்கு நிறைய புது அனுபவம் கிடைக்க காரணமான படம்னு சொல்லலாம். இதுவரை பண்ண  படங்கள் எல்லாம் கொஞ்ச குடும்ப பாங்கான கதை. ஆனால் இது இரண்டு கேங்குள்ள நடக்கிற மோதல் அதனால் வர துரோகம், துரோகத்தால் வர பிரச்சினை,  காதலை காப்பாத்திற போராட்டம் இப்படி எல்லாமே இருக்கும்.  அதைவிட முக்கியமாக விசயம் கதைகளம் நடக்கிறது எல்லாம் பத்தொன்பதாம் நூற்றாண்டில். மொத்தத்தில் மாஸ்ஸா இருக்கும்”  என்றான்.

 

உடனே அடுத்த ஒருவன்  “உங்க அடுத்த படம் பாலிவுட்டில்னு ஒரு பேச்சு வருதே. அது எந்த அளவுக்கு உண்மை” என 

 

“வேல்… உங்க சப்போர்ட் அண்ட் பிளஸ்ஸிங் இருந்தால் அதுவும் நடக்கும். அப்படி நடக்கும் போது கண்டிப்பா சொல்றேன்” என்று மேலோட்டமாக சொல்ல,

 

“சீக்கிரமே நடக்க வாழ்த்துகள் விபி சார். தென் உங்களுக்கு கல்யாணம் எப்ப சார்” என்று ஆர்வமாக கேட்க,

 

மெலிதாக புன்னகைத்து “நடக்க வேண்டிய நேரத்தில் எல்லாமே சிறப்பா நடக்கும்” என்றான்.

 

“சார் பதிலை கூட  இப்படி சொன்னா எப்படி சார்.  கயல் மேடம் உங்க அடுத்த பிளான் என்ன” என்று அடுத்த நபரிடம் தாவ,

 

பிரேம்  “அட அதுக்கு தான் மெயினா வந்த நோக்கம்.  இவர் தான் ஜெகன்  இவர் கூட சேர்ந்து தான் அடுத்த படம் தயாரிக்க போறோம்.  அதிலேயும் கயல் தான் ஹீரோயின்.  பட் ஹீரோ இப்ப யாருனு சொல்ல மாட்டோம்” என

 

கயல்  “எஸ் என்னோட திறமையை நம்பி என்னை அடுத்த படத்திலும் கமிட் பண்ண பிரேம் சார் ஜெகன் சார் தென் புது டைரக்டர் ஹேமந்த் சார் எல்லாருக்கும் நன்றி” என்று அவளும் தன் பங்கிற்கு சொல்ல,

 

இன்னும் சில பல கேள்விக்கு பின் பிரஸ் மீட் முடிய,  பிரேம்  “விபி அவுட் ஸ்டேஷன் போகலாமா” என 

 

“நான் வரலை பிரேம் அம்மாவை பார்க்க போகனும்.  நேற்றே  வரத சொன்னேன். இன்றைக்கு இங்க வரேன்னு சொல்லவே போகலை. நாளைக்கு கண்டிப்பா போகனும்”

 

விடைபெற்று வீட்டிற்கு வந்தவன் தன் அன்னை விரும்பி அணியும் காஞ்சி பட்டு சேலையை வாங்க விரும்பி பக்கத்தில் இருக்கும் பெரிய கடைக்கு சென்றான். 

தான்  வந்து ஒரு நாள் முடிந்த பின்னும்  இன்னும் தன்  அப்பாவோட மனைவியை அவள் பார்க்கவில்லை. எதோ பக்கத்தில் இருக்கிற கோவிலுக்கு அவரும் அவர்  பொண்ணோட போய் இருப்பதாக சொன்னார்கள் . வருவதற்கு  இன்னும் இரண்டு நாள் ஆகும் என்று மிட்டா பாய்  அவளிடம் சொல்லி இருக்க, 

 

‘பன்னிரெண்டு மணிக்கு மிட்டல் அங்கிள் என்னை பார்க்கிறதா சொன்னார்.  என்ன விசயமா இருக்கும்னு  முழுசா தெரியலை பட் இருக்கிற சொத்தில் தான் எதோ சொல்ல போறார்’ என்று அவள் மனதில் தோன்றியதை யோசித்து கொண்டே இருக்க,

 

“பாப்பா மிட்டல் சார் வந்து இருக்கார்” என்ன மிட்டா பாய் சொல்ல

 

“இங்க வர சொல்லுங்க ஆன்ட்டி” என்று அவரை சந்திக்க தயாராக இருக்க,

 

சிறிது நேரத்தில்  மிட்டல்  “மோகிம்மா வெல்கம் டூ இந்தியா” என்று வரவேற்க,

 

“நான் வந்து ஒரு நாள் ஆச்சு அங்கிள். சரி விசயத்தை சொல்லுங்க.  எதோ உதவி தேவைனு கேட்டிங்க.  அதை முடிச்சிட்டு நான் லண்டன் கிளம்பனும்” என்று நேரடியாக விசயத்தை கேட்க,

 

“மோகிம்மா உன்னை நான் போகிறதிற்காக  வர சொல்லலை.  உன் அப்பா கட்டி காத்த தொழில் எல்லாம் இப்ப தலைமை இல்லாமல் தவிக்கிது.  உன் தங்கை சின்ன பொண்ணு அவளுக்கு உலகமே முழுசா தெரியாது.  அவ அம்மாக்கு காசை அழிக்க தான் தெரியும். வளர்க்க தெரியாது. நீ தானே பொறுப்பை ஏற்க வேண்டும்” என்று அவளுக்கு பொறுமையாக அவர் அழைத்ததின் நோக்கத்தை சொல்ல,

 

“வாட்!!  நான் சென்ஸ் என்னையே வேண்டாம்னு தானே இத்தனை வருசமா தள்ளி வெச்சாங்க.  இப்ப மட்டும் நான் வந்தா இவங்க எல்லாம் அப்படியே சந்தோசமா வரவேற்கிற மாதிரி சொல்றீங்க. 

 

அதைவிட எனக்கு அப்பாவோட பெயர் என் பெயரோட இருக்கிறதே போதும். அவர் சம்பாதித்த எதுவும் எனக்கு தேவை இல்லை. அவருக்கும் என்னை விட அவர் செல்ல மகளை தானே பிடிக்கும். 

 

கண்டிப்பாக அவளுக்கு தான் இதெல்லாம் போகனும்.  சின்ன பொண்ணு தான் இருந்தாலும் சொல்லி கொடுங்க கத்துப்பா.  என்னை ஆளை விடுங்க” என்று தன்னை ஒதுக்கிய ஆதங்கத்தில் பேச,

 

“மோகிம்மா நீ கோபத்தில் பேசற. சரி கோபமாகவே இரு. ஆனால் நமக்கு கீழ வேலை பார்க்கிற அத்தனை பேரோட உழைப்பும் வீணாக வேண்டுமா…  இந்தா இந்த லெட்டரை உன் அப்பா உன் கிட்ட கொடுக்க சொன்னார்” என்று மிட்டல் ஒரு கடிதத்தை கொடுக்க அதில், 

 

“ப்யாரி பேட்டி, 

 

எல்லோருக்கும் நல்லது பண்ண நான் உனக்கு மட்டும் பெரிய பாவத்தை பண்ணிட்டேன். முடிஞ்சா இந்த அப்பாவை மண்ணிச்சிடுமா. யார் கிட்டவும் சொல்லலைனாலும் நீ தான் மா இந்த அப்பாவோட உயிர்.  சந்தேகமா பார்க்காத மா. உண்மை அது தான்.  நான் உயிருக்கு உயிரா காதலிச்சு கல்யாணம் பண்ணவ தான் மித்ரா உன் அம்மா. உன் அம்மா தான் நான் இப்ப வரை வெற்றிகரமாக ஓட காரணம். 

 

நீ பிறந்ததை பண்டிகையா கொண்டாடி இருக்கோம். ஆனால் அந்த கொண்டாட்டம் சில மாதம் தான் நிலைச்சுது. மித்ரா போனது என் வாழ்க்கையில் நான் வாங்கிய மிக பெரிய அடி.  அந்த ஒரு வருசம் நான் ஒழுங்கா இருந்து இருந்தால் இப்ப என் கூட நீ இருந்து இருப்ப. 

 

உன் பிஞ்சு முகத்தை பார்க்கும் போது எனக்கு மித்ரா தான் கண்ணு முன்ன வந்தா அதை மறக்க நான் குடிக்க ஆரம்பித்தேன்.  அதை பார்த்து என் அம்மா அவரச அவரசமாக சுலோச்சனவை எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சாங்க. 

 

என் கிட்ட சொன்ன காரணம் உன் வளர்க்க ஆனால் என் அம்மாக்கு மித்ராவை  பிடிக்காது அதனால் உன்னையும் பிடிக்காமல் போச்சு.  சுலோச்சனா நல்ல மனைவி தான். சிறந்த அம்மா தான் ஆனால் உன் கிட்ட மட்டும் வில்லியா தான் நடந்துகிட்டா. அதுக்கு காரணம் என் அம்மா தான். 

 

எப்பவும் இல்லாமல் உன் ஏன் பத்து வயசில் லண்டன் அனுப்னேன் தெரியுமா. என் அம்மா உன்னை கொல்ல முயற்சி பண்ணாங்க. 

 

எனக்கு இது எதுவும் தெரியாது.  உன்னை காப்பாத்தியதே சுலோ தான். அவளுக்கு உன்னை பிடிக்காது தான் அதுக்காக கொலை எல்லாம் பண்ண மாட்டா. உன்னை இங்க இருந்து தூரமா அனுப்ப சொன்னா.  எனக்கு வேற வழி தெரியலை. 

 

தப்பு தான் இருந்தாலும் உன்னை அனுப்பினேன். என் அம்மா இறந்த பிறகு நிறைய முறை கூப்பிட்டும் நீ  வரலை. இப்ப மட்டும் கூப்பிடுறேன் மா. என்னோட சுயநலமா கூட நினைச்சிக்கோ ஆனால் உன்னை தவிர வேற யார் கிட்டவும் சொல்ல முடியாதே. 

 

நம்ம கம்பெனிக்கு ஆபத்து இருக்குமா.  அதில் தான் பல  லட்சம் பேர் வேலை பார்க்கிறாங்க.  அவங்க குடும்பமே நம்ம கொடுக்கிற சம்பளத்தில் தான் நடக்குது. சுலோ தம்பி பணத்துக்கு ஆசைப்பட்டு தப்பான வழிக்கு போறான். 

 

நம்ம குடும்பத்தை நீ தான் அவன் கிட்ட இருந்து காப்பாத்தனும்.  சுலோக்கு  தம்பி தான் எல்லாமே.  கொஞ்சம் பார்த்துக்க மா. எனக்காக.  இந்த அப்பாவோட கடைசி ஆசை!!!” என்ற கடிதத்தை படித்தவளுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை தெரியவில்லை.  என்ன தான் முடிவு எடுக்க போகிறாள் என்பது அவள் மட்டுமே அறிந்தது.

 

அன்பு பாசம் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமல் மனம் இறுக்கி போன பின் கிடைத்தால் அதற்கு மரியாதையும் இல்லை மதிப்பும் இல்லை சொல்ல போனால் அதை அனுபவிக்க மனமும் வராது. காலம் கடந்து பின் கிடைக்கும் அன்புக்கு பதில் என்னவோ???

தொடரட்டும் 

நிலானி 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்