தேம்ஸ் நதியின் அழகை இரவில் ரசிக்கவே இந்த அப்பார்ட்மெண்டிற்கு பல பவுண்ட் அதிகமாக கொடுத்து வாங்கி இருந்தாள் மோகித்ரா மேத்தா. அவள் வாழ்க்கையில் அவள் தான் ராணி. யாருக்கு ராணி என்று கேட்டால் சிரித்து கொண்டு கடந்து விடுவாள்.
அம்மா இருந்த வரை இளவரசி தான். ஆனால் அம்மா போன பின்னே அவள் அப்பாவிற்கு அவள் இளவரசியாக தெரிய வேண்டாம் ஒரு சாதாரண மனுஷியாக கூட தெரியவில்லை. பத்து வயதில் அவள் அப்பா அவரோட இரண்டாம் மனைவியின் பேச்சை கேட்டு இவளை ரெசிடென்சியல் ஸ்கூலில் சேர்த்தார். அதுவும் நாடு கடந்து அது தான் ஏன் என்று இதுவரை அவளுக்கு புரியாத புதிர்.
‘இந்தியாவில் இருந்து இருந்தா கூட நான் கலங்கி இருக்க மாட்டேன். பத்து வயசில் இருந்த நாட்டை பழகிய வீட்டை விரும்பிய மனுஷங்களை விட்டு தூரமா நாடு கடத்தியது போல இங்க தள்ளிட்டு போய்டாங்க.
ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு…. வளர வளர புரிஞ்சிக்கிட்டேன். என் அப்பா அசோக் மேத்தா இந்தியாவில் பணக்காரர்களில் ஒருவர் பல நல்ல காரியங்களைச் செய்யும் மகான் ஆனால் எனக்கு வேறும் மூன்றாம் நபர் தான்.
எந்த அளவுக்கு தெரியுமா அவர் இறந்து நான்கு நாள் கழிச்சு தான் எனக்கு விசயமே தெரியும். எனக்கும் இந்தியாவிற்கும் இருந்த சம்பந்தம் இவரோட முடிஞ்சி போச்சு. இப்ப என்னோட வாழ்க்கை முழுக்க லண்டன் தான்.
பான் வித் கோல்ட் ஸ்பூன் பட் ப்ராட் அப் பை மைசேல்ப் வித் லாட் ஆப் ஸ்டக்கில்’
‘போன் ஒலி கேட்க’ அதுவரை தூரத்தே வெறித்து கொண்டு மனதில் தோன்றும் வலியை வெளியே சொல்ல கூட ஆள் இல்லாமல் சூழலில் மாட்டிய எலியாக தவித்து கொண்டு இருந்தவள் அப்பொழுது தான் நிகழ்காலத்திற்கு வந்தாள்.
‘என்ன இந்த நேரத்தில் மிட்டல் அங்கிள் கால் பண்றாங்க. என்னவா இருக்கும்’ என்று யோசனையோடு “ஹாய் அங்கிள்… எணி இம்பர்ட்டண்ட் நியூஸ்” என
“இல்ல பாப்பா…. உன் கிட்ட ஒரு விசயம் பேசனும். நீ ஒத்துப்பியானு தெரியலை. பட் எனக்கு வேற வழி தெரியலை” என
“என்ன அங்கிள் எதாவது பிரச்சினையா… எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லுங்க. ஐ வில் ஹெல்ப் யூ”
“இந்தியா வரியா பாப்பா. கொஞ்சம் பிரச்சனை தான் ஆனால் போனில் பேச கூடிய பிரச்சினை இல்லைடா” என்று தயங்கி கொண்டே சொல்ல,
“ஓ….. விசாக்கு அப்ளை பண்ணனுமே அங்கிள்” என்று அடுத்த யோசனை அவளுக்கு. அவள் தோற்பொழுது யூ கே சிட்டிஸன். பதினைந்து வருடத்தில் அவள் இந்திய பெண் என்ற அடையாளமே மறந்து மாறி போய் இருந்தது.
“அதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நாளைக்கு உன் கிட்ட விசா இருக்கும். நீ கிளம்பி வாடா பாப்பா” என்று பேசியை அணைத்தவர் மனதில்
‘உன் அப்பா உருவாக்கிய சாம்ராஜ்யத்தை அழிக்க பல குள்ளநரிங்க சுத்திட்டு இருக்கு. உன்னை பற்றி யாருக்கு தெரியுமோ தெரியாதோ எனக்கு நல்லா தெரியும். உன் பொறுப்பை நீ எப்பவும் தவறவிட மாட்ட. இதை உன் கிட்ட ஒப்படைச்சுடா என்னோட கடமை முடிஞ்சிடும்’ என்று பல நாட்களாக மனதில் அழுத்திய பாரம் குறைந்தது போல் உணர்ந்தார்.
****
கொல்கத்தாவின் முக்கிய நகரில் எப்பொழுதும் போல் அன்றும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்க, ஒரு நபர் தனது அடையாளம் முழுவதும் தெரியா வண்ணம் மறைத்து கொண்டு குறுக்கு தெரு வழியில் பாழடைந்த கட்டிடத்தின் நுழைவாயில் நுழைய அவனுக்கு போன் வந்தது.
“ஹலோ”
…..
“கேட்ட பொருள் கேட்ட நேரத்தில் கேட்ட இடத்தில் இருக்கும். சும்மா கால் பண்ணி தொல்லை பண்ணிட்டு இருக்காதீங்க”
‘இப்ப தான் கால் பண்ணுவாங்க. இவங்க வெட்டியா இருப்பாங்க அதே மாதிரி எல்லாரும் இருப்பாங்களா’ என்று கோபமான மன நிலையுடன் உள்ளே சென்றான். அங்கே அவனுக்கு முன் நான்கு பேர் இருந்தனர்.
“சலாம் சாப்…. நீங்க சொன்ன வேலையை முடிச்சிட்டேன். அது பண்றத்தில் தான் கொஞ்சம் சிக்கல் இருக்கு. எதிலாவது மாட்டிக்கிட்டா நம்ம வாழ்க்கையே அவ்வளவு தான்” என்று பிதியாக சொல்ல,
“யாரும் மாட்ட மாட்டோம். என் மாமா செத்து கொஞ்ச நாள் தான் ஆகுது. இன்னும் கொஞ்ச நாளில் மொத்த சொத்தையும் என் பெயருக்கு மாற்றிப்பேன். அப்புறம் எந்த போலீஸை பார்த்தும் பயப்பட வேண்டியது இல்லை. எல்லாத்தையும் பணம் பார்த்துக்கும். அதுவரை பத்திரமா இருங்க” என்று பேசிக்கொண்டே ஜெயதேவ் பக்கத்தில் இருக்கும் ஸ்காச் பாட்டிலை காலி செய்து கொண்டு இருந்தான்.
ஒருவன் “உங்க மாமாக்கு பசங்க இருக்கும் தானே. அவங்க எப்படி சும்மா இருப்பாங்க” என
“பொண்ணு இருக்கா தான். ஆனால் எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக்க என் கிட்ட ஐடியா இருக்கு. ஒருத்திய இந்த உலகத்திற்கே தெரியாது ஒருத்திக்கு உலகமே தெரியாது. என் அக்கா தான் கொஞ்ச விவரமான ஆளு. அதையும் என் கைக்குள்ள வைச்சிக்கிட்டா என்னோட திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது” என்று கண்ணில் கனவோடு சொல்ல,
“உங்கள் திட்டம் நிறைவேற வாழ்த்துகள்” என்று சரக்கு கோப்பைகளை காலி செய்யும் பணியை செய்தனர்.
****
சுலோச்சனா “அவளுக்கு இந்த காய் பிடிக்காதுனு தெரியும் தானே. இதை போய் செய்து இருக்க அதுவும் அவள் அப்பா போன கவலையில் இருக்கும் போது. என் பொண்ணு சரியா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுது. அவளுக்கு பிடிச்ச பிசாவை ஆடர் பண்ணு. அது வரக்குள்ள அவளை கீழ கூப்பிட்டு வரேன்” என்று சமையல்கார அம்மாவிடம் கத்தி விட்டு தன் மகளை காண சென்றார்.
அசோக் மேத்தாவின் இரண்டாவது மகள், மோகித்ராவின் ஒரே தங்கை பாயல் மேத்தா. தாய் வேற வேறயாக இருக்கலாம் ஆனால் இரத்தம் ஒன்று தானே. அவள் லண்டன் செல்லும் போது இவளுக்கோ நான்கு வயது. அது தான் அவளை கடைசியாக மோகித்ரா பார்த்தது.
பாயல் பெயரை போல் எப்போதும் கலகலப்பான பெண். சுற்றி இருப்பவரை தன் நற்குணத்தால் ஈர்க்கும் வசியக்காரி. அனைவரையும் எளிதில் நம்பி விடும் அப்பாவி. பாசம் வைத்தால் உயிரையே கொடுக்கும் பாசக்காரி.
“பாயல் பெட்டி….. கதவை திற. எவ்வளவு நேரம் தான் அந்த ரூமிற்குள்ளே அடஞ்சி கிடப்ப வெளியே வந்தா தானே மனசில் இருக்கிற இறுக்கம் போகும்”
“எனக்கு எதுவும் வேண்டாம் போ” என்று முகத்தை திருப்பி கொள்ள,
“சரி இந்த வீட்டு இளவரசிக்கு என்ன வேண்டும்”
“எனக்கு தீதியை பார்க்கனும். அவங்க எப்படி இருப்பாங்கனு கூட தெரியாது. ஆனால் மிட்டல் அங்கிள் ஒரு முறை சொல்லி இருக்கார் தீதி அப்படியே டாடா மாதிரினு. டாடா தான் கூட இல்லை. எனக்கு தீதி வேண்டும்” என்று இரண்டு நாட்களாக அடம் பிடிக்க,
‘அந்த பொண்ணு வாரிசாக வரவே கூடாதுனு தான் இத்தனை வருசமாக அப்பா மகள் இருவரையும் பிரிச்சு வெச்சேன். இந்த மிட்டல் தான் சும்மா இல்லாமல் அவளை பார்த்துட்டு வரேன்னு சும்மா சும்மா போய் வந்தார். எல்லாத்திற்கும் இவர் தான் காரணம். எப்பவோ போனவளை திரும்ப கூப்பிட பார்க்கிறாங்க. ஆனால் அவ வர மாட்டா’ என்று கனவு கண்டு கொண்டு இருந்தார்.
“சரி மிட்டல் அண்ணா கிட்ட சொல்றேன். இப்ப சாப்பிட வா. உனக்கு பிடிச்ச பிசாவை சொல்லி இருக்கேன். இந்நேரம் வந்திருக்கும்”
இருவரும் அந்த நாளை பேசிக்கொண்டு வீட்டின் அலங்காரத்தை மாற்றி கொண்டும் செலவழித்தனர்.
****
“என் தாய் நாடுக்கு போறேன். ஆனால் எதோ தயக்கமா இருக்கு. எனக்குனு இருந்த ஒரே ஒரு உறவு என் அப்பா தான். அவரே போய்ட்டார். அந்த வீட்டில் இதுவரை என் கிட்ட யாரும் பேசனது இல்லை. எனக்கு ஒரு தங்கை இருக்கா. நான் இங்க வரும் போது அவளுக்கு நான்கு வயசு. இப்ப எப்படி இருப்பானு கூட தெரியலை. என் அப்பாவோட மனைவி நான் இங்க வரும் போது பேசனது அதோட பேசவே இல்லை. எதாவது விசயம் சொல்லனும்ன கூட ஒரே வரியில் மெசேஜ் வரும்.
என் அப்பா….. என் மேல அவருக்கு பாசம் இருக்கானு தெரியலை பட் அக்கறை இருக்கும். ஆரம்பத்தில் வாரம் ஒரு முறை போன் பேசுவார். அது கொஞ்சம் கொஞ்சமாக மாதம் ஒரு முறைனு மாறுச்சு. அதுக்கு அப்புறம் எப்பவாச்சு பேசுவார்” என்று பல நாள் கழித்து செல்லும் பதட்டம் மனதில் நிறையவே இருக்க,
“சரி நேரம் ஆகுது பாய் லண்டன் சீக்கிரமா திரும்பி வரேன்” என்று சொல்லி கொண்டே ஏர்போர்ட் நோக்கி சென்றாள். அவள் பிறந்த மும்பை அவளை பல வருடங்கள் கழித்து அரவணைக்க காத்துக் கொண்டு இருக்கிறது.
பாசமே கிடைக்கமால், கிடைக்காததை நினைக்காமல் வாழும் பலர் பாசத்தை வெறுப்பதாக உலகத்தை ஏமாற்றி , ஏக்கம் தோன்றி பொறாமையாக மாறாமல் இருக்க முகமுடி போட்டு வாழும் வேஷங்களே அதிகம். வெறுக்கும் உறவுகளால் அன்பை மறைக்க தான் வைக்க முடியும் அழிக்க முடியாது. உண்மையான நேரத்தில் புதைந்து கிடக்கும் அன்பு பாசம் வெளிவரும். உறவுகளும் பாசத்திற்கும் சம்பந்தம் தான் என்னவோ????
தொடரட்டும்…
நிலானி