Loading

மாதவ் அறையை விட்டு வெளியே வர, அவள் காதில் கேட்ட குரலோ பிரணவ் அலறும் சத்தத்தைத் தான். என்ன நடக்கிறது என்று புரியாமல் வேகமாகக் கீழே சென்று பார்க்க, அவள் தோழிகள் நால்வரும் ஒரு பக்கம் கையை பிசைந்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க, 

மறுபுறம் பிரணவ் மூச்சு விடவே கஷ்ட படும் அளவுக்குத் தரையில் படுத்துக் கதறிக் கொண்டு இருந்தான்.

அவன் சத்தம் கேட்டு இந்திரா கூட வேகமா வெளியே வர இதே போல் முன் ஒரு முறை கண்ட காட்சி அவர் கண் முன் வந்து சென்றது. 

“அம்மு ஹாஸ்பிடல் போய்டலாம் சீக்கிரமா மாதவ் இல்லனா மாமாக்கு போன் பண்ணு” என்று அவனின் நிலையைக் கண்டு அதிர்ந்து நிற்கும் மருமகளிடம் சொல்ல,

தன் தோழிகளை முறைத்துக் கொண்டே “நீங்க இவரைக் கூப்பிட்டுப் போங்க அத்தை. நான் பின்னாடியே வரேன்” என்று வீட்டில் இருக்கும் காரில் இருவரையும் டிரைவர் உதவியுடன் அனுப்பி விட்டு உள்ளே வந்து,

“இப்படி அவர் மூச்சு விடவே கஷ்டப்படும் அளவுக்கு நீங்க எல்லாம் என்ன பண்ணீங்க. உங்களை நான் கூப்பிட்டேனா வந்து என்ன பாருங்க நான் எப்படி இருக்கேன்னு நான் எதுவுமே சொல்லாம நீங்களா தானே வந்திங்க. இப்ப இவருக்கு இப்படி ஆகுற அளவுக்கு என்ன பண்ணீங்க” என்று கோவமாகக் கேட்க,

ரேணு ஏதோ சொல்ல வரும் போது அவளைத் தடுத்த சத்யா “உன் புருஷன் நார்மல் தானே. இல்ல வேற எதாவது மண்ட கோளாறு இருக்கா. ஏன் கேட்கிறேன் என்ற அவர் கையிலிருந்த காரை நாங்க வங்கிட்டோம். ஏதோ விளையாட்டுக்கு எங்க கையில் மாற்றி மாற்றி துக்கி போட்டு விளையாடினோம். கொஞ்சம் மிஸ் ஆகி கீழே விழுந்து ஒடங்சி போச்சு. அதுக்கு போய் இப்படியா” என்று நடந்ததை முழுவதும் சொல்லாமல் மேலோட்டமாக சொல்ல,

ஜீவா “இந்த பைத்தியக்கார புருஷனுக்குத் தான் நீ உனக்கு வந்த எல்லா புரோபோசலும் வேண்டாம்னு சொன்ன போல. சோ பிட்டி” என்ற உடன்,

“ஜஸ்ட் ஸ்டாப் ஜீவா. பைத்தியம் கைத்தியம் சொன்ன நான் மனுஷியாக இருக்க மாட்டேன்” என

சத்யா “சும்மா சொல்லக் கூடாது சூப்பர் மாப்பிள்ளையைத்  தான் உன் அப்பா பார்த்து இருக்கார்” என்று மேலே பேசும் போதே மாதவ் வர,

“என்ன ஆச்சு ப்ரீ..  எங்க பிரணவ்” என்ற கேள்விக்கு

“அத்தை கூட ஹாஸ்பிடல் போய் இருக்கிறார். உங்களுக்குத் தான் வெயிட்டிங் நம்ம போகலாம்” என்று அவனிடம் சொல்லி விட்டு அவள் நண்பர்களிடம்,

 “அவர் எனக்குக் குழந்தை மாதிரி. அவர் எப்படி இருந்தாலும் நான் பார்த்துப் பேன். சொல்லப் போன ஐ ஆம் லக்கி டு ஹவ் ஹிம். உனக்கு நெஸ்ட் வீக் கல்யாணம் தானே சத்யா. பெஸ்ட் ஆப் லக். இனி என்னை கண்டாட் பண்ணாத. உங்க எல்லாருக்கும் இதே தான்” என்று அவர்களை அனுப்பி விட்டு அவளும் மாதவ் உடன் மருத்துவமனைக்குச் சென்றாள்.

மாதவ் “அம்மா என்ன சொன்னாங்க” என்று வந்ததும் பரபரப்பாகக் கேட்க,

“இன்னும் எதுவுமே சொல்லல டா. ரொம்ப பயமா இருக்கு. அவனுக்கு ஏதாவது ஆச்சு என்றால் நான் உயிரோடு இருக்கவே மாட்டேன்” என்று முகத்தை மூடிக்கொண்டு அழுக,

மாதவ் எதுவும் சொல்லாமல் முழிக்க, ப்ரணிதா “நான் என்ன அத்தை பண்ணுவேன். பேசாமல் நம்ம இரண்டு பேரும் அவர் கூடவே போய்டலாமா” என்று கோவத்தை அடக்கி கொண்டு கேட்க,

உடனே “ஐயோ நீ நல்ல வாழ வேண்டிய பொண்ணு மா. இப்படி எல்லாம் பேசாத” என்று அழுகையுடன் சொல்ல,

“அழுக வருதா  நல்ல அழுங்க அத்தை. தப்பு இல்ல. ஆனா நம்ம எண்ணம் எப்பவும் பாஸிட்டிவ் வா தான் இருக்கணும் புரிகிறதா  எண்ணம் போல் தான் வாழ்க்கை. 

இதை நான் சொல்லல. பெரியவங்க தான் சொல்லி இருக்காங்க. எப்பவும் நம்ம எண்ணத்திற்கு ரொம்ப பவர் அதிகம் அத்தை. எனக்கு இப்ப கூட இது எதுவும் தப்ப நினைக்க தோணலை. என்னோட நம்பிக்கை அவர் சீக்கிரமா சரி ஆகி எதோ நம்ம முன்னாடி அவருக்கு பிடிச்ச துறையில் பெருசா சாதிக்க போறாரு பாருங்க” என 

அவரும் கண்களில் கண்ணீர் வடிய “நீ சொல்றது நடந்த என்னை விட இந்த உலகத்தில் யாருமே சந்தோசமாக இருக்க முடியாது” என 

“சரி அத்தை நீங்க கிளம்புங்க அதான் மாதவ் மாமா இருக்காரே நான் பார்த்துக்கிறேன். உங்க உடம்பை இங்க இருந்த நீங்களே அழுது அழுது கெடுத்துப்பீங்க” 

“இல்லமா டாக்டர் வந்து சொல்லட்டும் நான் கிளம்பறேன். அங்க போய் என்னால என்ன நடக்கிறதோ என்று பயப்பட முடியாது” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே டாக்டர் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே வர,

மூவரும் அவர் சொல்லப் போகும் விஷயத்தைக் கேட்க அவர் முகத்தையே பார்க்க, அதைப் புரிந்து கொண்டு “பனிக் அட்டாக் அவர் மனசை பாதிச்ச எதோ ஒரு விஷயம் அவர் கண்ணு முன்னதை நடந்து இருக்கு. அந்த நிகழ்வு அவருக்கு மறக்கணும்னு நினைக்கிற விசயத்தை அவர் அடிமனசில் நியாபகம் வந்து இருக்கலாம். இன்றைக்கு ஐசியூ வில் இருக்கட்டும் நாளைக்கு என்ன கண்டிஷன் என்று பார்த்து அப்பறமா டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்” என்று அவர் சென்று விட,

“நீங்கக் கிளம்புங்க அத்தை” என்றதும் அவரும் மனம் சரி இல்லாத காரணத்தால் கோவில் செல்லலாம் என்று கிளம்பி விட்டார்.

மாதவ் “அவனுக்குப் பனிக் அட்டாக் வர அளவுக்கு என்ன நடந்துச்சு அம்மு” என 

“எனக்கு தெரியல உங்க ரூமில் எதோ சத்தம் கேட்டுச்சு போய் பார்த்துவிட்டு வந்தேன். என் பிரண்ட்ஸ் அவர் கூட தான் இருந்தாங்க. என்ன பண்ணாங்க எல்லாம் தெரியல நான் வரும் போது மூச்சு விட கஷ்டப்பட்டார் உடனே அத்தை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்துட்டாங்க” என 

“அவங்க கிட்ட கேட்டியா” என்றதும் “எதோ அவர் கார் பொம்மையை கீழே போட்டு உடைச்சி, அதை பார்த்து இவருக்கு இப்படி ஆகிடுச்சுனு சொல்றாங்க என்னால நம்ப முடியலை” என்று தரையை பார்த்து கொண்டு சொல்ல,

‘அம்மா இருக்குற வரை நல்லா தானே என் கிட்ட பேசின இப்ப மட்டும் யார் கிட்டவோ பேசற மாதிரி பேசுவ. இவ கோவம் எப்ப போய் நான் எப்ப இவை கூட ‘ஏலே ஏலே தோஸ்து டானு’ பாட போறேனோ’ என்று விட்டு அவளிடம் “அது பிரணவ் ஏன் இப்படி ஆனான் என்று தெரியுமா” என அவள் இல்லை என்று தலையை ஆட,

“சாருக்கு பைக் ரேஸ் என்றால் அவ்வளவு பிடிக்கும். எங்களுக்கு எல்லாம் அதில் அவ்வளவு பிடித்தம் இல்லை இருந்தாலும் அவனுக்காக அவன் ட்ரீமிற்கு சப்போர்ட் பண்ணோம். அதான் நாங்க பண்ணத்  தப்பு. ஒரு முறை கார் ரேஸில் ஆக்சிடென்ட். உயிரையே போராடித் தான் மீட்டோம். அவன் தலையில் பலமா அடி அதான் இப்படி ஆகிட்டான். ஆனா நம்பிக்கை இருக்கு சீக்கிரமே சரி ஆகிடுவான் என்று” நடக்க வேண்டும் என்ற கவலையுடன் சொல்ல,

கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு “நான் டாக்டர் கிட்டக் கொஞ்சம் பேசணும் இருங்க பேசிட்டு வரேன்” என்று அவனின் பதிலைக் கூட எதிர் பார்க்காமல் சென்றுவிட்டாள்.

சில நிமிடங்கள் தன் சந்தேகத்தை எல்லாம் கேட்டு வெளிய வந்தவள். மாதவ் உடன் அவனைப் பார்க்க உள்ளே சென்றாள்.

அவனை இப்படிக் காணும் போதே கண்கள் எல்லாம் கலங்கி விட்டது மாதவ்விற்கு. துரு துரு என்று ஒரு இடத்தில நிற்காமல் எல்லாரையும் ஈர்க்கும் புன்னகையுடன் சுற்றும் அவனை இப்படி ஒரு நிலையில் பார்க்கவே முடியவில்லை. எங்கே சிறிது நேரம் நின்றாலும் கண்ணீர் இமை தாண்டி வந்து விடுமோ என்ற பயத்தில் வேகமாக வெளியே வந்துவிட்டான். 

“உங்களைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியல. நிறைய தெரிஞ்சிக்கணும் போல. உங்க கனவு எது என்று எனக்கு தெரியலை. பட் ஐ ப்ரோமிஸ் இனி அது என்னோட கனவு. நம்ம சாதிக்க இன்னும் நிறைய இருக்கு. அதுக்கு கண்டிப்பா உங்க சப்போட் வேண்டும் தானே. இன்றைக்கு நல்ல தூங்கிட்டு வாங்க நம்ம பொறுமையா இதைப் பற்றி யோசிச்சு அடுத்தது பண்ணலாம் . இப்ப இதைச் சொல்லலாமா வேண்டாமா என்று கூட தெரியல எனக்கு நீ வேண்டும். என்னோட வாழ்க்கை முழுக்க” என்று அவனின் தலையைக் கோதி நெற்றியில் மென் முத்தம் வைத்தாள்.

அத்தனை போராட்டத்திலும் அவளது முத்தத்தை உணர்ந்தது போல் அவனின் இதழில் மெல்லிய புன்னகை.

வெளியே வந்தவள் மாதவ்வை பார்க்க, கண்களை மூடிக்கொண்டு சேரில் அமர்ந்து இருந்தான். சற்று ஓரத்திலிருந்த பால்கனி அருகே சென்று தன் பள்ளித் தோழி ஜான்விக்கு ஃபோன் செய்தாள்.

ஜான்வி, அவர்கள் வாழ்வில் வரும் அழகிய தென்றலா அல்லது ஆக்ரோஷமான புயலா??

உயிரோட்டமாக வந்தவளே 

நிலானி தாஸ்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
8
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்