Loading

அத்தியாயம் 43

தேவ் கோபம் காணாமல் போனது . அவன் முகத்தில் மகிழ்ச்சி . பல வருட காத்திருப்பு இந்த வார்த்தைக்காக தானே . இருந்தும் அவனால் அதை ஏற்கமுடியவில்லை .

” திடீர்னு எங்கிருந்து வந்தது உனக்கு இந்த லவ் ? ”

” லவ் என்ன சொல்லிட்டா வரும் ? ”

” இவ்வளவு நாளா என்ன வெறுத்தவ திடீர்னு லவ் சொன்னா நாங்க நம்பணுமா ? சத்யா சொன்னானு என்ன ஏத்துக்கிறியா ? ”

” இல்லை . உங்களை  சின்ன வயசுல நான் வெறுத்ததற்கு ஒரு காரணம் இருந்தது . உங்க டைரி மூலம் நீங்க அந்த காரியத்தை செய்ததிற்கான காரணத்தை தெரிஞ்சிக்கிட்டேன். அதான் என் கோபமும் வெறுப்பும் போனது . எல்லோர் மீதும் நீங்க காட்டுற அன்பு , பாசம் எனக்கு பிடிச்சது . அப்புறம் தான் எனக்கு உங்க மேல் காதல் வந்தது.”

” யார கேட்டு நீ என் டைரிய படிச்ச? ” என்றுக் கேட்டான் தேவ்.

” நான் யாரை கேட்கணும் ? ”

” என்ன கேட்கணும் . இட்ஸ் மை பெர்சனல் . ”

” கல்யாணம் ஆன பின்னாடி உங்களுக்கு தனியா பெர்சனல்னு எதுவும் கிடையாது புரியுதா . இப்போ என்ன சொல்ல வர்றீங்க . என் காதலை ஏத்துக்க முடியுமா? முடியாதா ? ”

” முடியாது போடி . மேடம் சொன்னதும் நாங்க ஏத்துக்கணுமா ? உன் பார்வைக்காக எத்தன வருஷமா ஏங்கியிருக்கேனு தெரியுமா ? ”

” அதுக்காக என்ன பழிவாங்குறீங்களா?”

” இல்லை, எனக்கு நீ என்ன உண்மையா  காதலிக்குறீயானு தெரியணும். நான் உன்ன லவ் பண்ணுற மாதிரி நீ என்ன லவ் பண்ணணும் . சும்மா வாய் வார்த்தையா இல்லாமல் ஐ நீட் டூ ஃபீல் யூவர் லவ் . அதுவரைக்கும் முன்னாடி எப்படி இருந்தோமோ அப்படியே இருக்கலாம் .” என்றவன் படுக்க சென்றான் .

பால்கனி வந்து நின்று தீப்ஷீ , ‘ தேவ் சொல்வதும் சரி தான் . அவனுக்கு வரும் சந்தேகம் நியாயமனது . நான் என்னோட லவ்வ வார்த்தையா சொல்லிருக்கக்கூடாது . என் செயலால்  என் காதலை உணரவைக்கணும்.’ என்று முடிவெடுத்தாள் தீப்ஷீ.

இனி இவளின் செயல்களால் திண்டாட போவது தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தான் தேவ் .

மறுநாள் காலையில் வழக்கம் போல் சத்யாவும் தீப்ஷீயும் உடற்பயிற்சி செய்தனர் .

அங்கிருந்த நியூஸ் பேப்பரை எடுத்த சத்யா அதிலிருந்த தலைப்பை பார்த்தான் .

” பெண் சிங்கத்தின் வேட்டை தொடங்கியது. ”  என்ற தலைப்பிற்கு கீழ் தீப்ஷீ படம் இருக்க அதற்கு கீழ் நேற்று நடந்த கேஸ் பற்றிய தகவல் இருந்தது .

அதை தீப்ஷீயிடம் காண்பித்த சத்யா , ” உன்ன நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு அம்மு . ஆனா , நீ உன்னையே காயப்படுத்திக்கிட்டு அவங்களை கொன்னுருக்க தேவை இல்லை. ” என்றான் சத்யா .

” என்ன செய்ய சொல்ற சத்யா . அவனுங்களை ஜெயில்ல போட சொல்றீயா . சட்டத்தின் ஓட்டை வழியா ஈஸியா வெளிய வந்துடுவாங்க . இவனுங்கெல்லாம் திருந்த மாட்டாங்க . இவங்களுக்கு இது தான் சரியான தண்டனை. ” என்றாள் தீப்ஷீ .

தீப்ஷீ சொல்வதும் உண்மை என்பதால் சத்யா எதுவும் சொல்லவில்லை .

” அம்மு , இனி உன்னை காயப்படுத்திக்காத.”

” கண்டிப்பா முயற்சி செய்து பார்க்கின்றேன் சத்யா.”

*****

அடுத்து வந்த முகூர்த்தத்தில் ,

சத்யா , சந்தியா திருமணம் பிரம்மாண்டமாக நடந்துக் கொண்டிருந்தது .

அனைவரின் உள்ளமும் நிறைந்திருந்தது இவர்களின் திருமணத்தால் மட்டும் இல்லை தேவ், தீப்ஷீ நெருக்கத்தாலும் .

திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாலும் தேவ்வும் தீப்ஷீயும் சேர்ந்த பின் திருமணத்தை நடத்தலாமா என்று யோசனையாகவே இருந்தான் சத்யா . சந்தியாவை நினைத்தே அந்த யோசனையை விட்டான் சத்யா .

ஆனா , இன்று தீப்ஷீ, தேவ்வுடன் சிரித்து பேசுவதை பார்த்து அதிகம் மகிழ்ந்தது சத்யா தான். அவன் வானில் பறப்பது போல் உணர்ந்தான்  .

” ஏன்டி என் பின்னாலே சுற்றிக் கொண்டிருக்க? ” என்றுக் கேட்டான் தேவ்.

” அதுல உங்களுக்கு என்ன கஷ்டம் ?”

” எல்லோரும் நம்மள தான் பார்க்குறாங்க. ப்ளீஸ் சந்தியா ரூம்க்கு போ. ”

” முடியாது . ”

” ராட்சசி , என் உயிரை வாங்க பிறவி எடுத்து வந்திருக்கியா . கொஞ்சம் தள்ளியாவது வாடி என்ன உரசாமல்‌. ”

” நீங்க ரொம்ப ஹாண்ட்சம்னு எல்லாருக்கும் தெரியும். சும்மா பொண்ணுங்க முன்னாடி சீன் போடாதீங்க. நான் அந்த சைடு போனா எல்லா பெண்ணுங்களும் உங்கள தான் சைட்டடிக்குறாங்க . நான் உங்களோடு தான் வருவேன்.”

” அதுக்காக நீ என்னோடு வருவியா ? ”

” சரி நான் வரலை . நீங்க வேற இடத்துக்கு போங்க.”

” தீப்ஷீ , எனக்கு இப்போ இங்க தான் வேலை இருக்கு. நான் இங்க தான் இருப்பேன் . நீ இப்போ போறியா ? இல்லையா?”

” சரி நான் போறேன் . அதுக்கு முன்னாடி நீங்க என்னவர்னு எல்லாருக்கும் சொல்லிட்டு போறேன்.”

” அது எப்படி சொல்லுவ ? ”

” எல்லார் முன்னாடியும் நான் உங்கள ஒரு கிஸ் பண்ணிட்டு போயிடுறேன் .”

நேராக நின்றவன் , ” உனக்கு தைரியம் இருக்கா ? ” என்று கேட்டான் .

” இருக்கு . ” என்ற தீப்ஷீ தேவ்வை நேருங்க .

தேவ்வோ பயத்தில் துண்டைக்காணும் துணிய காணும்னு அந்த இடத்தை விட்டு ஓடியேவிட்டான்.

தீப்ஷீயோ சிரித்துக் கொண்டே மேடை ஏறினாள் .

சத்யா பாத பூஜை செய்ய அப்பா , அம்மாவாக வந்து நின்றனர் தினேஷ்ஷும், சரண்யாவும் .

வெறும் வார்த்தையாக இல்லாமல் உண்மையாக கல்யாண ஏற்பாடு முழுவதையும் பார்த்துக் கொண்டார் தினேஷ் .

சர்வேஷ்ஷும், தேவ்வும் எல்லா வேலையும் செய்தனர் .

வந்தவர்களை எல்லாம் கவனித்துக் கொண்டார் கமலாவும், அக்ஷிதாவும் .

தனக்கு யாரும் இல்லை என்ற உணர்வே சத்யாவிற்கு தோன்றாமல் பார்த்துக் கொண்டனர் .

தீப்ஷீ மேடையில் நின்றுக் கொண்டு சத்யாவையும் சந்தியாவையும் கிண்டல் செய்துக் கொண்டிருந்தாள் .

இருவரும் வெட்கப்படும் காட்சி அழகாக படமாக்கப்பட்டது .

*****
மனித உரிமை ஆணைய விசாரணையை முடித்து வெளியே வந்த தீப்ஷீ ,

” பொண்ணுங்களை தப்பா வீடியோ எடுக்குற பொறுக்கியையும், அவனை திருத்தாமல் அவனுக்கு துணையா இருக்குற அவன் அப்பனையும் கொன்னதுக்கு இவ்வளவு கேள்வி கேட்குறாங்க . நான் என்ன தியாகியையா கொன்னேன்? இவனுங்க உயிரோடு இருந்து நாட்டுக்கு சேவையா பண்ண போறானுங்க ? பொறுக்கி நாய்ங்க ? இவனுங்களுக்கு நான் தந்தது தான் சரியான தண்டனை . ஒருவேளை என்ன விசாரிக்கிறவங்களோட பொண்ணுக்கு இது மாதிரி நடந்திருந்தா இப்படி அவனுங்களுக்காக வக்காலத்து வாங்குவாங்களா? தலைவலியும் , வயிற்றுவலியும் அவன் அவனுக்கு வந்ததான் தெரியும் .” என்று சத்தமாக புலம்பிய தீப்ஷீ வண்டியை எடுத்தாள் .

இதுவரை அவள் தேவ்வின் வெற்றி  ஸ்போர்ட்ஸ் அகாடமி போனதே இல்லை .

திடீரென்று அங்கு போகத் தோன்ற வண்டியை அகாடமி நோக்கி ஓட்டினாள் .

*****

” யாரு மா நீ ? ” என்றுக் கேட்டார் வாட்ச்மேன் .

” தேவ் வைஃப். ” என்று தீப்ஷீ முதல்முறையாக அந்த உறவை மனதில் உணர்ந்தாள் .

” மன்னிச்சிடு மா. எனக்கு முகம் ஞாபகம் இல்லை .”

” இதுக்கு போய் பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுறீங்க தாத்தா . சரி நான் உள்ள போகட்டா தாத்தா? ”

” போங்க மா .”

உள்ளே வந்த தீப்ஷீ அந்த இடத்தை சுற்றி பார்த்துக் கொண்டே வந்தவள் தேவ் மேல் நன்றாக மோதி கீழே விழ போனவளை தேவ் பிடித்து நிறுத்தினான் .

” மேடம் நேரா பார்த்து வரமாட்டீங்களா ? அங்க என்ன வேடிக்கை . ”

” என்ன பண்ணுறது ஃபர்ஸ்ட் டைம் பார்க்குற இடத்த இப்படி தான் எல்லோரும் வேடிக்கை பார்ப்பாங்க . ”

” என்ன திடீர்னு மேடம் காத்தெல்லாம் இங்க வீசுது.”

” இன்னைக்கு எனக்கு எந்த வேலையும் இல்லை . கொஞ்சம் டென்ஷனா இருந்தேன் . அதான் இங்க வரணும்னு தோனுச்சு வந்தேன் . ”

இதுவரை இருந்த விளையாட்டு தனத்தை விட்ட தேவ் , ” தீப்ஷீ என்ன பிரச்சனை ? ”

” விசாரனை நடந்தது.  அதான் டென்ஷன் . வேற ஒன்னும் இல்ல . ”

” சரி . போயி ஆஃபீஸ் ரூம்ல உட்காரு . ”

” நீங்க எங்க போறீங்க ? ”

” நான் ஸ்டூடண்ட்ஸ்கு சொல்லி தர போறேன் . ”

” நானும் அங்க வரேன்.” என்ற தீப்ஷீ அவன் பின்னே நடந்தாள்.

வெளியே காட்டிக்கொள்ளவில்லையே தவிர தேவ்விற்கு அவ்வளவு சந்தோஷம்.

அவன் நினைத்திருந்திருந்தால் தீப்ஷீயை முன்பே இங்கு கட்டாயப்படுத்தியோ, மிரட்டியோ கூட்டிட்டு வந்திருக்கலாம் . அவன் அப்படி செய்யவில்லை . ஏன்  ஒரு வார்த்தைக்கு கூட அவளை அகடாமிக்கு வா என்று தேவ் கூப்பிட்டதில்லை. காரணம் தீப்ஷீயாக வரவேண்டும் என்று அவன் நினைத்து , வருடங்களாக காத்துக்கொண்டிருந்தவனுக்கு இன்று பலன் கிடைக்க . அவன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .

ஒவ்வொரு ஸ்டூடண்ட்ஸ் விளையாடுவதையும்  பார்த்து . அவர்கள் செய்யும் தவறை சுட்டி காட்டி எப்படி சரி செய்யணும் என்று சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தான் தேவ் .

தீப்ஷீ அமைதியாக அவனை சைட் அடித்துக் கொண்டிருந்தாள் .

இருபது நிமிடங்களுக்கு பின் , தேவ் அவனின் நண்பனோடு டைக்குவாண்டோ விளையாட நடுவில் வந்து நின்றான்.

தீப்ஷீ அவனையே பார்த்துக் கொண்டிருக்க தேவ்வால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாற அவனின் நண்பன் அவனை அடித்துக் கொண்டிருக்க .

தேவ் தோற்பதை பார்க்க முடியாமல் பொறுமை இழுந்த தீப்ஷீ , ” என் கூட விளையாடு பார்ப்போம் ? ” என்று தேவ்வின்
நண்பனிடம் சண்டைக்கு போக தயாராக .

” தீப்ஷீ அமைதியா இரு.” என்று தேவ் அவளை தடுக்க முயற்சி செய்துக் கொண்டிருக்க .

அங்கிருந்த எல்லோரும் அவர்களை பார்த்து சிரிக்க .

தீப்ஷீ அடங்கமால் திமிறிக் கொண்டிருக்க , அவளை தூக்கிய தேவ் , ” ஃபைவ் மினிட்ஸ் டா மச்சான்.” என்றான்.

” டேக் யுவர் ஓன் டைம் டா மச்சான்.” என்றவன் அவனை நக்கலாக பார்த்துச் சிரிக்க .

திரும்பி பார்க்காமல் தீப்ஷீயை ஆபீஸ் ரூம் தூக்கிட்டு போனான் தேவ்.

உள்ளே வந்த பின் தான் அவளை இறக்கி விட்டவன் . தீப்ஷீயின் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டே,” ஏன் டி இப்படி என் மானத்தை வாங்குற? எல்லோரும் சிரிக்குறாங்க.” என்றான் தேவ்.

” எரும மாடு மாதிரி வளர்ந்திருக்கீங்க … ” என்று தீப்ஷீ ஏதோ சொல்ல வர , தேவ் அவளை முறைக்க , ” இல்லை இவ்வளவு பெரிசா வளர்ந்திருக்கீங்க ஒருத்தன் அடிச்சிட்டிருக்கான். நீங்க வேடிக்கை பார்த்துட்டிருக்கீங்க . எனக்கு கோபம் வராதா ? ”

” விளையாட்டுல இதெல்லாம் சகஜம். அதுக்குனு விளையாடிட்டு இருக்கப்ப இப்படி தான் நடுவுல வருவாங்களா ? அதுவும் என் கிட்ட பேசாம அவன் கிட்ட எகுறுற?”

” உங்களை அடிச்சவருக்கு பதில் தந்துட்டு . உங்களை திட்டலாம்னு நினைச்சேன்.”

அப்போ ரூம் உள்ளே வந்த கோகுல் , ” என்ன டா மச்சான் ஆபீஸ்லே ரொமான்ஸா? தப்பான டைம்ல வந்துட்டேன் . நீ நடத்து டா . ” என்றவன் வெளியே செல்ல .

‘ இதுக்கு பேரு ரொமன்ஸாடா? சண்டப் போட்டுக்குறதுக் கூட தெரியலை. இவனுக்கெல்லாம் எப்படி கல்யாணம் நடக்கும்?’ என்று நினைத்தவன்.

தீப்ஷீயிடம்,” திரும்ப போய் நான் விளையாடுவேன். எதுவும் பேசக் கூடாது. நான் ஜெயிக்கணும் அதான உனக்கு வேணும் ?”

” ஆமா.”

” நான் ஜெயிக்குறேன் நீ அமைதியா இருக்கணும்.”

” ஓகே. ”

” வா போகலாம்.” என்ற தேவ் அவளை திரும்ப ஸ்டேடியத்திற்கு கூட்டிட்டு வந்தான் .

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்