Loading

அத்தியாயம் 19

 

தேவ் , தன் கோபத்தையெல்லாம்

டோர்னமெண்டில் , போட்டியாளர்களிடம் காண்பிக்க… முன்பே சிறப்பாக விளையாடக் கூடிய தேவ் இப்போ வெறித்தனமாக விளையாடினான். மற்றவர்களுக்கு வாய்ப்பே தராமல் வெற்றியை நோக்கி மட்டுமே இருந்தது அவனின் விளையாட்டு பயணம் .

 

உலக டைக்குவாண்டோ கிராண்ட் பிரிக்ஸ் தொடரினை வென்ற முதல் இந்திய வீரராகினான் தேவ் . மாஸ்கோவில் அவனுக்கு கிடைத்த பாராட்டு கூட தேவ்வின் கோபத்தை குறைக்கவில்லை . விரைவாக இந்தியா செல்ல வேண்டும் அதுமட்டுமே அவனின் எண்ணமாக இருக்க, நினைவெல்லாம் தீப்ஷீயாக இருந்தது .

 

விமானத்தில் ஏறியவன் சென்னையை நோக்கி பறந்து வந்தான் .

 

காதில் ஹெட்போனை மாட்டியிருந்தவன் , வாயில் சாக்லேட்டை சாப்பிட்டுக் கொண்டே தன் ட்ராலியை தள்ளிக் கொண்டு வந்த தேவ்வை வரவேற்க யாருமில்லை . அவன் வெற்றியை கொண்டாட எவருமில்லை .

 

எதைப் பத்தியும் கவலைப்படாமல் , விமான நிலையத்தின் வெளியே வந்தவன் , தன் நண்பன் கோகுலின் காரில் ஏறினான்.

 

” கோகுல் எப்படி போகுது நம்ம ஸ்போர்ட்ஸ் அகாடமி ? ” என்றுக் கேட்டான் தேவ்.

 

” ரொம்ப சூப்பரா போகுது மச்சான் . நீயும் வந்துட்ட இனி செம என்ஜாய்மென்ட் தான் ‌. ” என்றான் கோகுல் .

 

” இல்ல டா , எனக்கு முக்கியமான வேலை இருக்கு. இன்னும் ஒரு வாரத்திற்கு நான் அந்த பக்கம் கூட வரமாட்டேன். ”

 

” நான் பார்த்துக்குறேன் டா . ஆனா நீ ஏன் கோபமா இருக்க ? ”

 

” எதுவும் என்னைக் கேட்காத டா. ” என்ற தேவ் காரின் முன் சீட்டில் நன்றாக சாய்ந்து படுத்துக் கொண்டான் .

 

” சரி டா ‌. ”  என்ற கோகுல் , காரை தேவ்வின் வீட்டிற்கு செலுத்திக் கொண்டிருந்தான் .

 

தேவ்வாக விஷயத்தை சொன்னால் தான் உண்டு அவனை கட்டாயப்படுத்தி ஒரு வார்த்தையைக் கூட வாங்க முடியாது என்பதால் கோகுலும் விட்டுவிட்டான் .

 

” தேவ் , வீடு வந்துடுச்சி டா. ” என்றான் கோகுல் .

 

காரிலிருந்து இறங்கிய தேவ், தன் பேக்கை எடுத்தவன் , வீட்டை நோக்கி நடந்தான் .

 

ஏதோ தோன்ற திரும்பி பார்க்கை பார்த்தான் தேவ் . அங்கு தீப்ஷீ காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு , பாட்டின் இனிமையை ரசித்துக் கொண்டே ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்தாள் தீப்ஷீ .

 

கோபம் வர , தன் கையில் இருந்த பையை கீழே போட்டவன் , வேகமாக நடந்து தீப்ஷீ அருகில் போனவன் .

 

தேவ் நிற்பதுக்கூட தெரியாமல் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்தாள் தீப்ஷீ . அவளின் காதில் இருந்த வயரை பிடிங்கினான் தேவ் .

 

பாட்டு நின்றதால், கண் திறந்து பார்த்த தீப்ஷீ , தன் அருகில் நின்ற தேவ்வை அதிர்ச்சியாக பார்த்தாள் .

 

அவனின் கோபத்தைக் கண்ட தீப்ஷீக்கு பயம் வர ஊஞ்சலில் இருந்து எழுந்து நின்றாள் .

 

” நான் இங்கு உனக்காக காத்திருக்க , எவனுக்கோ கல்யாணத்திக்கு சம்மதம் சொல்லியிருக்க ?” என்ற தேவ் , தீப்ஷீயின் கன்னத்தில் அறைய , தீப்ஷீ கண்ணில் இருந்து நீர் அவன் அடித்த இடத்தில் பாய்ந்து சென்று குளுமைப்படுத்தியது .

 

தீப்ஷீயின் கண்ணீரை கற்பனையில் கூட காணமுடியாத தேவ் , ‘ இப்படி எல்லாம் இவ கிட்ட என்னால் நடந்துக்க முடியாது . இவள் விருப்பத்தோடு என்னால் இவளை கல்யாணம் பண்ணிக்க முடியாது . மணமேடையில் வைத்துத்தான் இவளின் விருப்பமில்லாமல் கல்யாணம் பண்ணிக்க முடியும்.’  என்று முடிவெடுத்தான் தேவ் .

 

தூரத்திலிருந்து அவளை பார்த்த தேவ் , ‘ எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியா பாட்டு கேட்டிட்டிருக்கா . நான் இவளால் ஒரு வாரம் நிம்மதியே இல்லாம சுத்திக்கிட்டிருந்தேன் .’  என்று நினைத்தவன் , தன் வீட்டை நோக்கிச் சென்றான் .

 

குளித்து முடித்து , சாப்பிட்டானோ இல்லையோ சர்வேஷிற்கு போன் செய்தான் தேவ் , ” எங்க இருக்க சர்வேஷ்?”  என்றுக் கேட்டான் .

 

” இந்தியா வந்துட்டியா தேவ்? நான் பெசன்ட் நகரில் இருக்க , கேட்டரிங் செஃப்பை பார்த்து பேச வந்தேன் டா.”

 

” யாரோடு போன ? வேலை முடிஞ்சதா ?”

 

” சத்யாவோட தான் வந்தேன் . வேலை பத்து நிமிஷத்துல முடிஞ்சிடும்.”

 

” சரி அப்போ வேலை முடிஞ்சதும் நீ பெசன்ட் நகர் பீச்சுக்கு வா , சத்யாவை அனுப்பிவிடு. ”

 

” ஓகே தேவ். ”

 

தன் காரை எடுத்த தேவ் பீச்சை நோக்கி சென்றான் .

 

சர்வேஷ் வருவதற்கு முன் அங்கிருந்தான் தேவ் .

 

” தேவ் , என்னடா அவசரம்? ஊரிலிருந்து வந்ததும் பார்க்க வர சொல்லுற. அதுவும் நம்ம ஏரியாவை விட்டுவிட்டு இங்கு வர சொல்லியிருக்க. ”

 

” பல வருஷமா , தீப்ஷீயை நான் காதலிச்சிட்டிருக்கேன்.”

 

” என்னடா இப்போ வந்து சொல்லுற ? இன்னும் மூணு நாள்ல அவளுக்கு கல்யாணம். ”

 

” எனக்கு அதைப் பத்திக் கவலையில்லை . நான் உன்னோட மச்சானாகுவதில் உனக்கு விருப்பமிருக்கா? இல்லையா?  ”

 

” நீ தீப்ஷீயை கல்யாணப் பண்ணிக்கிட்டா முதலில் சந்தோஷப்படுவது, நானா தான் இருப்பேன் . ஆனா, நீ என்கிட்ட முன்னாடியே சொல்லிருந்தா , நான் எப்படியாவது இந்த பையனை பார்க்காம, உன்னையே பார்க்கலாம் என்று அப்பா கிட்ட சொல்லியிருப்பேன்.”

 

” உங்க அப்பா ஒத்துக்கொண்டாலும் , உன் தங்கை ஒத்துக்க மாட்டா. ”

 

” என்னால் இப்போ ஒன்னும் செய்ய முடியாது , நீ என்ன செய்ய போற ? ”

 

” முகூர்த்த நேரத்தில் நீங்க பார்த்த பையன் இருக்கமாட்டான் . அப்போ நீ , அங்கிள் கிட்ட தீப்ஷீக்கு மாப்பிள்ளையா என்ன கை காட்டணும் . அந்த நேரத்துல நீ எனக்கு உதவியா இருக்கணும் . உன்னால் முடியுமா? ”

 

” கண்டிப்பா அந்த நேரத்துல நான் நீ சொன்ன படி செய்றேன். ஆனா , மாப்பிள்ளைய என்ன செய்ய போற ?  எனக்கு பயமா இருக்கு டா ?”

 

” அந்த பையன் கிட்ட முதல்ல பேசி பார்ப்பேன் , ஒத்துவந்தால் பிரச்சனையில்லை . ஒத்துவரலைணா அவனை ஆள் வைத்து தூக்கவும் யோசிக்க மாட்டேன் ”

 

” அடப்பாவி. ” என்று வாயை பிளந்து பார்த்தான் சர்வேஷ் .

 

” அந்த பையன் பற்றிய விபரம் சொல்லு . ”

 

தமிழன்பனைப் பற சொன்னான் சர்வேஷ் .

 

” ஆனா , உங்க பாட்டி கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்களா ? அவருக்கு நான் உன்னோடு பேசுவதே பிடிக்காதே. இதில் எப்படி என் தங்கச்சியை, அதுவும் உன் மனைவியா ஏத்துப்பாங்க?”

 

” அவங்களே வந்து உங்க அப்பா கிட்ட சம்மதம் சொல்வாங்க . என் நானி ஜாதி அப்படி இப்படினு பேசுபவர் தான். ஆனா , நான் என்றால் அவங்களுக்கு உயிர் . அவங்க கிட்ட எப்படி பேசணுமோ அப்படி பேசி தான் கல்யாணத்துக்கே கூட்டிட்டு வருவேன். ”

 

” சரி டா . எப்படியாவது எல்லாம் நீ நினைச்சப்படி நடந்தா சந்தோஷம் தான். ”

 

” எல்லாம் நடக்கும் , நடத்திக் காட்டுவேன் ஆனா , உன் தங்கச்சி சம்மதிப்பாளா என்பது தான் எனக்கு தெரியாது ?  அவளை சமாளிப்பது தான் கஷ்டம். ”

 

” அதெல்லாம் அப்பா பார்த்துப்பார் . இப்போ வா வீட்டிக்கு போவோம் உன் கல்யாண வேலை தலைக்கு மேல் இருக்கு‌. ”

 

அவன் சொல்லியவிதத்தில் தேவ்விற்கே சிரிப்பு வந்துவிட்டது .

 

ஒரு வாரமாக இருந்த மன அழுத்தம் குறைந்ததுப் போல் உணர்ந்தான் தேவ் .

 

*****

அடுத்த நாள் காலையிலேயே சத்யா , தமிழன்பனுக்கு போன் செய்தான் ,” ஹலோ தமிழ். ”

 

” சொல்லுங்க சத்யா .”

 

” கல்யாணத்துக்கு எத்தனை நாள் லீவ் எடுக்க போறீங்க தமிழ்? ”

 

” எதுக்காக கேக்குறீங்க சத்யா? ”

 

” கல்யாணம் முடிஞ்சதும் ஹனிமூன் ட்ரிப் ஏற்பாடு செய்றேன் . அதான் எத்தனை நாள் உங்களால் லீவ் எடுக்க முடியும்னு தெரிஞ்சா, அதுக்கு தகுந்த மாதிரி எந்த இடம் போகலாம் , எத்தனை நாளுக்கு ஹோட்டல் புக் பண்றதுனு பார்த்து அரேஞ்ச் பண்ணுவேன். ”

 

” எதுக்கு சத்யா இதெல்லாம் ?”

 

” என்னோட கிப்ட் இது தான் தமிழ் . நீங்க சொல்லுங்க எத்தனை நாள் லீவ் எடுக்க முடியும். ”

 

” சத்யா , இப்போ என்னால் மூணு நாள் தான் ஹனிமூன் போக முடியும். அதனால் ஊட்டி இல்லை கொடைக்கானல் ஏற்பாடு பண்ணுங்க . கல்யாணம் முடிஞ்சு ஒரு நாள் கழிச்சி ட்ரிப்புக்கு ஏற்பாடு பண்ணுங்க. ”

 

” ஓகே தமிழ் . பாய் ‌.” என்ற சத்யா போன் காலை கட் செய்தான் .

 

****

 

மதிய நேரத்தில் , தமிழன்பன் தன் வங்கி உள்ளே செல்ல முயன்றபோது , அங்கிருந்த செக்யூரிட்டி , ” தமிழ் சார் , பெண் வீட்டில் சம்மதம் சொல்லிட்டாங்களா ? கல்யாணம் எப்போ ? ” என்றுக் கேட்டார் .

 

” ஓகே சொல்லிட்டாங்க . மூணு நாளில் கல்யாணம். நாளைக்கு எல்லோருக்கும் பத்திரிகை தரலாம் என்றிருக்கிறேன். ”

 

” ரொம்ப சந்தோஷம் சார். ” என்றவர் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி .

 

ஆனால் இதைக் கேட்டுக் கொண்டே வந்தவளின் முகத்தில் அப்படி ஒரு வேதனை.

 

உள்ளே வந்த தமிழன்பனிடம் கிளார்க் , ” சார் , நீங்க சாப்பிட போனப்ப ஒருத்தர் உங்கள பர்சனல் விஷயமா பார்க்கணும்னு வந்தார்.  உங்க ரூம்ல இருக்க சொன்னேன் .” என்றார் .

 

” சரி , நான் பார்த்துக்குறேன்.” ,

என்ற தமிழன்பன் தன் அறைக்கு சென்றான் .

 

” யார் நீங்க ? ”

 

” என்னோட பெயர் தேவ் . தீப்ஷீயை நான் காதலிக்கிறேன் அதனால் , நீங்கள் விலகிக்கோங்க. ”

 

” ஹலோ என்ன இப்படியெல்லாம் பேசுறீங்க . பார்க்க டீசன்ட்டா இருக்கீங்கனு பொறுமையா பேசிட்டு இருக்கேன் .”

 

” நீங்களா நான் சொன்னதை செய்ய போறீங்களா இல்லை, நானா உங்களை செய்ய வைக்கவா? ”

 

” என்ன மிரட்டுறீங்க ? நான் ஒரு கவர்மெண்ட் எம்பிளாய் . அதுவுமில்லாமல் உங்களுக்கு தீப்ஷீயை பிடிச்சிருந்தா நேரா போய் அவங்க கிட்ட சொல்லணும். இல்லனா  அவங்க பரேன்ஸ் கிட்ட சொல்லணும். ஏன் என்கிட்ட சொல்லுறீங்க . நீங்க சொல்றதையெல்லாம் என்னால் செய்ய முடியாது . இப்போ வெளியே போங்க. ”  என்றான் தமிழன்பன் .

 

” இது என்னோட கார்டு . உங்களுக்கு சம்மதம் என்றால் இதில் இருக்கும் என் நம்பருக்கு ஃபோன் போட்டு சொல் . என்னோட திட்டத்தை நான் சொல்றேன். ” என்ற தேவ் , தன் கார்டை டேபிள் மேல் வைத்துவிட்டு வெளியே சென்றான் .

 

தேவ் சொல்லியதைக் கேட்டு கோபத்தோடு குழம்பி என்ன செய்வதென்று புரியாமல் தலையில் கை வைத்து உட்கார்ந்திருந்தான் தமிழன்பன் .

 

அப்போது அவனிடம் அனுமதிக்கேட்காமல் உள்ளே வந்தவள் , ” அப்படி என்ன சார் காரணம் உங்களுக்கு என்ன பிடிக்காம போக . நான் நல்லா படிச்சி , வேலையில் இருக்கேன் , பார்க்கவும் நல்லா தான் இருக்கேன் . நான் அமைதியான பெண்ணுனுறதால  தான என் காதலை கூட லெட்டர் மூலமா சொன்னேன் . என் உணர்வு அடிப்பட்ட நிலையில் தான் நான் இப்படி பேசுறேன் . நீங்க அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கோங்க நான் இனி உங்க முன்ன வரமாட்டேன்.”  என்றாள் மதி .

 

” வேலையை விட்டுப் போகப் போறீயா. ”

 

” இல்ல… உலகத்தவிட்டு . ஆனா நீங்க பயப்பட தேவையில்லை , என் சாவுக்கு நீங்க காரணம்னு நான் எழுதி வைக்க மாட்டேன்.” என்ற மதி திரும்பி கதவருகே செல்ல .

 

” ஏதோ லெட்டர்னு சொன்னியே அத என்கிட்ட தந்தியா ?”

 

அதிர்ச்சியாக திரும்பி பார்த்த மதி , ” அன்னைக்கு ஒரு நாள் உங்க கிட்ட நான் ஐஞ்சு லேட்டர் பேங்க் சம்பந்தப்பட்டது என்றும் ஒன்னு உங்களுக்கான லெட்டர்னு தந்தேனே. ”  என்றாள் .

 

‘ எல்லாவற்றையும் ஒன்றாக செல்ஃப்புல் வெச்சுட்டேன். ‘ என்று நினைத்தவன் அவளிடம் , ” சரி நீ போ .”  என்றான் .

 

அவன் லெட்டரை படிக்கலை என்பது புரிய . எல்லாம் முடிந்துவிட்டது இனி ஒன்னும் செய்ய முடியாது என்று நினைத்தவள் தன் இடத்திற்கு சென்றாள்.

 

அவள் சென்ற பின் அந்த லெட்டரை எடுத்து படித்தான் தமிழன்பன் . அவனுக்கு என்ன செய்வதென்றே புரியலை .

 

‘ ஒருவேளை முன்பே இந்த லெட்டரை படித்திருந்தால் இந்த சிக்கலில் நான் மாட்டியிருக்கமாட்டேனோ ?’ என்று நினைத்தான் தமிழன்பன் .

 

ஐந்து நிமிடம் அமைதியாக யோசித்தான் தமிழ் , ‘ நான் தீப்ஷீயை கல்யாணம் பண்ணா கண்டிப்பா இரண்டு பேருக்கு மனவருத்தம் வரும். மற்றவரின் மனவேதனையில் ஆரம்பிக்கும் எங்க வாழ்க்கை எப்படி அமையும் என்பது கேள்விக்குறியே . அதுவுமில்லாம தீப்ஷீக்கு என் மேல பெருசா விருப்பமில்லை. அப்படி இருக்க என்ன நேசிக்கும் பெண்ணை நான் கல்யாணம் பண்ணிப்பது தான் எனக்கு நல்ல யோசனையா தெரியுது. ‘  என்று மனதில் முடிவெடுத்தான் .

 

தேவ் தந்த கார்டை கையில் எடுத்தவன் அவனுக்கு போன் செய்தான் , ” ஹலோ நான் தமிழன்பன்‌. ” என்றான் .

 

” நீங்க பேசுனதை பார்த்து எப்படியும் ஒத்துக்க மாட்டிங்கனு நினைச்சேன் . உங்கள எப்படி ஆள் வைத்து தூக்குறதுனு தான் யோச்சிட்டிருந்தேன் . பரவாயில்லையே ஒருமணி நேரத்துல் ஃபோன் பண்ணிட்டீங்க. ” என்றான் தேவ்.

 

” என் விதி என்ன வேறு எங்கோ கூட்டிட்டு போது. சரி நான் என்ன செய்யணும்? ” என்றுக் கேட்டான் தமிழ் .

 

தன் திட்டத்தை அவரிடம் சொன்னான் தேவ் .

 

” எதுக்கும் நான் சத்யா கிட்ட சொல்லவா ?” என்றுக் கேட்டான் தமிழ் .

 

” வேண்டாம் , அவனுக்கு தெரிஞ்சா தீப்ஷீக்கு தெரிஞ்சிடும். அவ என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டா. ”

 

” அப்போ தீப்ஷீக்கு உங்களை பிடிக்காதா ? அவளை கஷ்டப்படுத்த எனக்கு விருப்பமில்லை. ” என்று அவன் முடிப்பதற்குள் ,

 

” சின்ன வயதில் நடந்ததை மறக்காம என்ன கண்டாலே ஓடுறா . அவளுக்கு இப்போ என்ன பிடிக்காது ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் என்ன பிடிக்கவைப்பேன் . அவள் என் உயிர் அவளை பத்திரமா பார்த்துப்பேன். ”  என்றான் தேவ் .

 

அவன் வார்த்தையில் உள்ள உறுதியே தமிழன்பனுக்கு போதுமானதாக இருக்க , ” சரி , நீங்க சொன்னதுப் போல் செய்றேன்.” என்ற தமிழ் போனை வைத்தான் .

 

பெருமூச்சு விட்டான் தேவ் , பெரிய தலைவலி முடிஞ்சதாக நினைத்தான் .

 

‘ இனி நானியிடம் பேச வேண்டும் . கல்யாணத்தன்னிக்கு எல்லாம் சரியா நடக்கணும். ‘ என்று நினைத்தான் தேவ் .

 

கிளார்க் மூலம் மதியை வரவழைத்த தமிழ்,” எக்ஸ்க்யூஸ் மீ சார் ?”, என்று அனுமதிக் கேட்டாள் .

 

” எஸ் . ஆனா முன்னாடி  இது மாதிரி அனுமதிக் கேட்கலையே?”

 

” எதுக்கு என்ன கூப்பிட்டீங்க சார்? ”

 

” எனக்கு சம்மதம் ” .

 

” எதுக்கு சம்மதம் ? ”

 

” உன்னோடு வாழ்வு முழுவதும் இணைவதில் எனக்கு சம்மதம் . இப்போ தான் உன் லெட்டரை படிச்சேன் , மிகவும் அழகாக இருந்தது உன் கவிதை. ”

 

” எனக்கு சம்மதமில்லை , ஒரு பெண்ணோட மனசில் ஆசையை விதைச்சிட்டு . அதை வேரோடு பிடுங்க எனக்கு விருப்பமில்லை. ”  என்றாள் மதி .

 

” முதலில் உட்காரு அப்போ தான் நடந்ததை சொல்ல முடியும். ”  என்ற தமிழன்பன் , தீப்ஷீயை பெண் பார்த்தது , இன்று தேவ் சொல்லியது என்று அனைத்தையும் சொன்னான்  .

 

” உண்மையா அந்த பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமையுமா? ”

 

“நிச்சயமா அமையும். ”

 

” அப்போ எனக்கும் சம்மதம் .” என்ற மதியின் முகம் முழுமதியாக மகிழ்ச்சியில் இருந்தது .

 

” மதி , முதல தீப்ஷீ கல்யாணம் நல்ல படியா முடியட்டும். அப்புறமா நம்ம கல்யணத்த பத்தி முடிவெடுப்போம் .” என்றான் தமிழ் .

 

” ஓகே .”  என்றாள் மதி .

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அடப்பாவிகளா எல்லாருமா சேர்ந்து தீப்ஷி வாழ்க்கையில விளையாடுறீங்க … இந்த தேவ் வை கட்டினா எப்படி அவ சந்தோஷமா இருப்பா … தமிழ் இப்படி பண்ணுவான்னு நினைக்கல … சர்வேஷ் சுத்தம் … இவன் லாம் ஒரு அண்ணனா … தங்கச்சிக்கு கட்டாய கல்யாணம் பண்ணி வைக்க பார்க்கிறான் …

    என்ன நடக்க போகுதோ

  2. தேவ் மச்சான சரிகட்டறது, கட்டிக்க போற மாப்பிள்ளைய சரிகட்டறது எல்லாம் இருக்கட்டும் முதல்ல பொன்ன சரிகட்டணும்பா.

    சர்வேஷ் “உன் கல்யாண வேலை தலைக்கு மேல இருக்கு” 🤣🤣

    கொஞ்ச நேரம் முன்ன வீராப்பா பேசின தமிழ் அடுத்த கொஞ்ச நேரத்தில் “yes boss” range ku வந்துட்டான்.

    தமிழ் எல்லோருடைய உணர்வுகளையும் மதிக்கின்றான். யோசித்து செயல்படுகின்றான்.

    நல்ல வேளை அவனுக்கு உடனே call செஞ்சு பேசின இல்லேனா உன்னை தூக்கறதுக்கு அவன் யாருக்காவது call செஞ்சிருப்பான்.