
அத்தியாயம் 13
சத்யாவும் அம்முவும் கீழே வந்தனர் . தாத்தாவிடம் இருந்து போன் வாங்கியவன் , “ ரொம்ப நன்றி தாத்தா . “ என்றான் சத்யா .
“ இருக்கட்டும் பா . இன்னும் நீங்க இரண்டு பேரும் நல்லா ஆட வேண்டும் . “
“ தாத்தா நாங்க இப்போ டான்ஸ் ஆடலை. கால் வலித்ததால் சும்மா எங்களுக்குள் கோ ஆர்டினேஷன் வருதா என்று தான் பார்த்தோம் . “ என்றாள் தீப்ஷீ .
“ ஓஹோ அப்போ சரி . நீங்க இரண்டு பேரும் வேறுபாடு இல்லாமல் கரெக்டா ஆடுனீங்க . நாளைக்கு நல்லா ஆட வாழ்த்துக்கள் . “ என்றார் தாத்தா .
“ நீங்க இரண்டு பேரும் நாளைக்கு கண்டிப்பா எங்க டான்ஸ்ஸை பார்க்கணும் . இப்போ பாய் தாத்தா , பாய் பாட்டி . “ என்றாள் தீப்ஷீ .
“ சத்யா , டயர்டா இருக்கு , கால் ரொம்ப வலிக்குது . “ என்றாள் தீப்ஷீ .
“ கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது அம்மு . இனி நீ போய் நல்லா ரெஸ்ட் எடு அம்மு . நாளைக்கு இரண்டு தடவை பிராக்டிஸ் பண்ணால் போதும் . “ என்றான் சத்யா .
“ சத்யா , என்னால் நடக்க முடியலை . “ என்றவள் அப்படியே மண் தரையில் அமர்ந்தாள் .
“ எழுந்திரி அம்மு . நான் உன்னை முதுகில் தூக்கிக் கொள்கிறேன் . “ என்றவன் தீப்ஷீயை தூக்கிக் கொண்டான் .
“ சத்யா , என்னை கீழ போட்டுட மாட்டாயே ? “
“ அம்மு நீ முன்னாடி அமுல் பேபி மாதிரி இருந்த. அப்படி இருந்தால் தான் கஷ்டம் . இப்போ தான் நீ ரொம்ப ஸ்லிம்மா இருக்கியே ஒன்னும் கஷ்டம் இல்லை . நீ பயப்படாமல் வா . “
தீப்ஷீயின் வீட்டில் , அவள் அறையில் இறக்கி விட்டவன் . எதுவும் பேசாமல் தன் வீட்டிற்கு சென்றான் .
“ என்ன ஆச்சு தீபு ? எதுக்கு சத்யா , உன்னை தூக்கிட்டு வரான் ? எங்க விழுந்த ? எங்க அடிப்பட்டது ? “ என்றுக் கேட்டார் சரண்யா .
சரண்யாவின் கேள்வி அம்பு முடிவதற்குள் , அங்கு வந்த சத்யா , “ சரண்யாமா , அம்முக்கு டான்ஸ் ஆடியதில் கால் வலிக்குது , இந்த தைலம் தடவி விடுறீங்களா ? “
‘ இதெல்லாம் உனக்கு தேவைத்தான் ‘ என்று மனதில் கேலியாக நினைத்து தீபுவை பார்த்து , “ இதுக்கு தான் இதெல்லாம் வேண்டாம் என்று சொன்னேன் காது குடுத்து கேக்குறதே இல்ல . “ என்றார் சரண்யா .
பாவமாக சத்யாவை பார்த்தாள் தீப்ஷீ .
“ சரண்யாமா , சும்மா அவளை கிண்டல் செய்யாதீங்க உங்களால் தைலம் தடவ முடியுமா முடியாதா ? இல்லை என்றால் நானே தடவிவிடுறேன் . “ என்றான் சத்யா .
“ நான் தடவி விடுறேன் சத்யா . “ என்றவள் தீப்ஷீக்கு தைலம் தடவ ,
“ சரி அம்மு , நீ சாப்பிட்டு தூங்கு , காலையில் கால் வலி சரியாகிடும் . “ என்றான் சத்யா .
“ இரு சத்யா , சாப்பிட்டு போகலாம் . “ என்றார் சரண்யா .
“ இல்ல சரண்யாமா . நீங்க அம்முக்கு ஊட்டிவிடுங்க . பாய் அம்மு , பாய் சரண்யாமா . “ என்றவன் தன் வீட்டை நோக்கி சென்றான் .
‘ இவன் அலப்பறை தாங்க முடியவில்லை . இவன் கொடுக்கும் செல்லம் தான் இவள் ரொம்ப அடம் பிடிக்க காரணம் . ‘ என்று மனதில் நினைத்த சரண்யாவிற்கு இவர்களின் நட்பின் மேல் கொஞ்சம் பொறாமை வந்தது .
*****
“ ஏன் நீங்க இரண்டு பேரும் ஆடலை ? “ என்றுக் கேட்டார் அவர்கள் வில்லாவின் செக்ரெட்ரி கணேஷ் .
“ அங்கிள் , என் ப்ரெண்ட் தேவ்வை ஹாஸ்டல் சேர்க்க போறாங்க. அதான் மனசு சரியில்லை . மகிழ்ச்சியின் வெளிப்பாடே டான்ஸ் . அதான் நாங்க டான்ஸ் ஆடலை “ என்றான் சர்வேஷ் .
“ ஆமா சர்வேஷ் , நீ சொல்வதும் உண்மை தான் . ஆனா, உங்க இரண்டு பேர் டான்ஸ்க்கு இங்கு தனி ஃபேன் பேஸ்ஸே இருக்கு . அவங்களுக்கு தான் ஏமாற்றமா இருக்கும் . “ என்றார் கணேஷ் .
இவர்கள் மூவரையும் கடந்துச் சென்றுக் கொண்டிருந்த சத்யா , தீப்ஷீயை நிறுத்திய கணேஷ் , “ என்ன சத்யா எல்லாம் ரெடியா ? “ என்றுக் கேட்டார் .
“ எஸ் அங்கிள் . “ என்றான் சத்யா .
“ சூப்பர் . சீக்கிரமா ஸ்டேஜ் பக்கத்தில் உட்காருங்க , உங்க டான்ஸ் தான் செகண்ட் . பாய் தேவ் , சர்வேஷ் . “ என்று சத்யா , தீப்ஷீயிடம் தொடங்கியவர் தேவ் , சர்வேஷ் இடமிருந்து விடைப்பெற்று சென்றார் கணேஷ் .
அவளின் தோற்றம் கண்டு அடக்க முடியாமல் சத்தமாகவே சிரித்துவிட்டான் தேவ் .
அவனை திரும்பி முறைத்த தீப்ஷீ , கோபமாக சத்யாவுடன் சென்றாள் .
“ ஏன் சர்வேஷ் உன் தங்கை மீசையும் , கைலியுமா இருக்கா ? “ என்றுக் கேட்டான் தேவ் .
“ என்னை என்ன செய்ய சொல்லுற ? எல்லாம் எங்க அப்பா , அம்மா தரும் செல்லம் . “ என்றான் சர்வேஷ் .
“ சரி வா டா அவங்க ஆடுவதை சாரி சாரி எக்சர்சைஸ்ஸை பார்க்கலாம் . “ என்றான் தேவ் .
ஸ்டேஜ் அருகில் உள்ள முன் இருக்கையில் உட்கார்ந்தனர் இருவரும் .
வழக்கம் போல் முதலில் பரதநாட்டியம் ஆடினார்கள் , இரண்டாவதாக வந்து நின்றனர் நம் சத்யா தீப்ஷீ .
“ ஊத்திகினு கடிச்சிக்கவா
கடிச்சிகினு ஊதிக்கவா “
என்று பாடல் ஆரம்பிக்க இருவரும் தங்களை மறந்து ஆடினர் .
ஒரு கூட்டம் இவர்களின் வேக நடனத்திற்கும் , ஒன்றாக ஆடும் அழகில் தங்களை மறந்து ரசித்தனர் .
மற்றொரு கூட்டம் இவர்களின் ஆட்டத்தில் இணைய விரும்பி கீழே குத்தாட்டம் போட்டனர் .
தேவ் , சர்வேஷ் வாயை பிளந்து பார்த்தனர் இவர்களின் ஆட்டத்தை .
“ என்ன டா நடக்குது ? “ கேட்டான் தேவ் .
“ எனக்கும் ஒன்னும் புரியலை டா . “ என்றான் சர்வேஷ் .
ஒருவழியாக அவர்கள் ஆடி கீழே வர , அவர்களை அனைவரும் பாராட்டினர் . அனைவரிடமும் இன்முகமாக பேசியவர்கள் கடைசியாக தங்கள் குடும்பத்தார் இருக்கும் இடம் சென்றனர் .
சரண்யா முதல் அமர் வரை அனைவரும் சத்யா , தீப்ஷீ டான்ஸை வாழ்த்தினர் . தேவ் மற்றும் சர்வேஷ் காதில் புகைவந்தது தான் மிச்சம் . அவர்கள் அந்த இடத்தை விட்டு சென்றனர் .
நேற்று இவர்கள் பார்த்த வயதான தம்பதியும் வந்து வாழ்த்தினர் . சத்யா மற்றும் தீப்ஷீ மனம் நிறைந்தது , அவர்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாக நினைத்தனர் .
விழா முடிந்ததும் அவர்களின் தனி காம்பவுண்ட்டிற்கு வந்ததும் அக்ஷிதா , “ இங்கே நில்லுங்க சத்யா , தீப்ஷீ . “ என்றவர் தன் வீட்டை நோக்கி சென்றார் .
அவர் வரும் போது ஒரு தட்டில் ஆலம் கரைத்து எடுத்துவந்தார் .
“ எல்லார் கண்ணும் இன்னைக்கு உங்க மேல தான் . “ என்றவர் இருவருக்கும் ஆலம் சுற்றி கீழே ஊத்தினார் .
எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றிய கதையானது தேவ்வின் நிலைமை . பின் அனைவரும் அவர்களின் வீட்டை நோக்கி சென்றனர் . ‘
பழைய நினைவுகளிலிருந்து மீண்டவன், தீப்ஷியைப் பார்க்க… அவளோ
பாட்டை மாற்றியதில் கோபம் அதிகமாக ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள்.
தோளைக் குலுக்கிய தேவ், எவ்வளவு மெதுவாக ஓட்ட முடியுமோ அவ்வளவு மெதுவாக ஓட்டினான் . அவன் தீப்ஷீவுடனான இந்த பயணத்தை மிகவும் நேசித்தான் .
அன்று தீப்ஷீ , சத்யா சென்ற ஐஸ்கிரீம் பார்லர் வர , வண்டியை ஓரமாக நிறுத்தினான் தேவ் .
‘ உன்ன பேச வைக்க என்னெல்லாம் செய்ய வேண்டியிருக்கு . ‘ என்று மனதில் பேசினான் தேவ் .
அதேபோல் தீப்ஷீ ஃப்ரெண்ட் மிரரை பார்த்து , “ எதுக்கு வண்டிய நிறுத்துன ? “ என்று கேட்கவந்தவள் , அதே மிரர் வழியாக தேவ் முறைப்பதை உணர்ந்து , “ எதுக்கு வண்டிய நிறுத்தினீங்க ? “ என்று கேட்டாள் .
“ வண்டியில் ஒரே வெப்ப காத்தா வருது , ரொம்ப சூடா இருக்கு அதான் கொஞ்சம் கூலாக குல்பி சாப்பிட போறேன் . உனக்கு வாங்கிட்டு வரவா ? “ என்றுக் கேட்டான் தேவ் .
“ வேண்டாம் “ என்று கோபமாக கூறிய தீப்ஷீ ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள் .
தோளை குலுக்கிய தேவ் , நேராக ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்றான் , இரண்டு குல்பி வாங்கி வந்தவன் , காரில் உட்கார்ந்து சாப்பிட்டான் , தீப்ஷீயை வெறுப்பேற்றுவதற்காக .
தீப்ஷீயும் கஷ்டபட்டு குல்பி பக்கம் திரும்பாமல் அமைதியாக இருந்தாள் .
ஒருவழியாக இரண்டு குல்பியை உள்ளே தள்ளிய தேவ் , காரை ஸ்டார்ட் செய்தான்.
அவர்கள் வீடும் வந்துவிட , காரில் இருந்து வேகமாக இறங்கிய தீப்ஷீ , தேவ்விடம் எதுவும் பேசாமல் போய்விட்டாள் .
“ அப்பாடா ! நன்றி சொல்லி என்னை யாரோ மூன்றாம் நபராக ஆக்கிவிடுவாளோ என்று பயந்தேன் . நல்லவேளை எதுவும் சொல்லாமல் கோபமா போறா என் கோபக்காரி. “ என்று தனியாக பேசிக் கொண்டிருந்தான் தேவ் .
தீப்ஷீ வீட்டிற்குள் நுழைந்தாலோ இல்லையோ சரண்யா , ” தீப்ஷீ வந்துட்டியா . நீ வந்ததும் உங்க அப்பா ஃபோன் பண்ண சொன்னார் . நீ போய் முகம் கழுவிட்டு வந்து அவருக்கு ஃபோன் பண்ணு . ” என்றார் .
வேகமாக தன் அறைக்கு சென்ற தீப்ஷீ , முதலில் ஃபோனை தான் எடுத்தாள் சத்யாவிடம் பேசுவதற்காக .
” ஹலோ சத்யா , நீ எப்போ வருவ ? ” என்று லேசாக அழ தயாராகும் குரலில் கேட்டாள் .
” சென்னை வந்துட்டேன் டா . ”
” நைட் தான வருவேனு சொன்ன ? ”
” போன வேலை சீக்கிரமா முடிஞ்சிடுச்சு . என் அம்மு பாப்பா நான் இல்லைனா அழுவாள் . அதான் ஃபிளைட் ஏறி சென்னை வந்துட்டேன் . ”
” ஓகே சத்யா . ”
” அம்மு என்னாச்சு ? ஏன் ஒருமாதிரி பேசுற ? ”
” சத்யா , அப்பா இன்னைக்கு என்ன செஞ்சாங்கனு தெரியுமா? காலேஜிலிருந்து என்ன கூட்டிட்டு போக வரமுடியாம வேலைவந்துடிச்சுனு அந்த தேவ் காரில் வர சொன்னாரு . ”
” அச்சோ ! உனக்கு தான் தேவ்வை கண்டாலே ஆகாதாச்சே . ” என்று சத்யா கதை கேட்க தயாராக ,
” உனக்கு தெரியுது சத்யா ஆனா , அப்பாக்கு அதுக்கூட தெரியலை . ” என்ற தீப்ஷீ , ஒன்னு விடாமல் நடந்த அனைத்தையும் சத்யாவிடம் சொன்னாள்.
அவள் சொல்லி முடித்தாளோ இல்லையோ சத்யா சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான் .
சத்யாவின் சிரிப்பில் தீப்ஷீயின் கோபமும் காணாமல் போனது .
” அம்மு , நான் ஏர்போட்டில் நிக்குறேன் . எல்லாரும் என்ன ஒருமாதிரி பார்த்துட்டு போறாங்க . நீ சொன்னதுல ஹைலைட் எது தெரியுமா குல்பி தான் . உனக்கு குல்பினா உயிராச்சே… எப்படி அவன் கேட்டும் நீ வேண்டாம்னு சொன்ன ? இதுல வேற அவன் காரில் உன் பக்கத்திலே சாப்பிட்டும் நீ திரும்பாம இருந்திருக்க ? என்னால நம்பவே முடியல ? ”
” என்னாலையும் தான் சத்யா . ஆன சத்யா இதிலிருந்தே எனக்கு ஒன்னு நல்லா தெரியுது . அந்த தேவ்வ நான் எவ்வளோ வெறுக்குறேணு . ”
” அம்மு , நீ ஏன் தேவ்வ இவ்வளவு வெறுக்குற ? ”
” ஒன்னா இரண்டா நிறைய காரணமிருக்கு சத்யா . நீ இந்த வீட்டிற்கு வர முன்னாடி, நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா ? எங்க அண்ணனுக்கு அந்த தேவ்வை தான் பிடிக்கும். என்ன பிடிக்கவே பிடிக்காது . ”
” அதுக்கு காரணம் தேவ் இல்ல. தினேஷ் அப்பா தான் காரணம் . எப்பவும் உன்ன சொல்லி சர்வேஷை திட்டினா . அவனுக்கு எப்படி உன்ன பிடிக்கும் ? இப்பவரைக்கும் அப்பா அதே தப்பை தான் செய்றாங்க . ”
” சத்யா , நீ சொல்லுவது சரி தான். ஆனா , உன்ன கேலி பண்ணதுக்காக நான் அக்ஷிதாமா கிட்ட மாட்டிவிட்டதுக்கு அவன் நோட்டை எடுத்து வெச்சிக்கிட்டான் . அன்னிக்கு கிளாஸ்ல நான் எல்லார் முன்னாடியும் எப்படி அவமானமா நின்னேன் தெரியுமா? அப்போ நான் தேர்டு ஸ்டாண்டர்ட் தான் படிச்சேன். ஆனா எனக்கு எல்லாமே அப்படியே ஞாபகம் இருக்கு . ”
‘ நினைவுகள் …
தேவ் இன்டர்வல் டைம் ஆனதும் தீப்ஷீ நோட்டை எடுத்துக்கொண்டு அவளின் வகுப்பிற்கு சென்றான் . அடுத்த பீரியட் மேக்ஸ். அதான் அவள் அடிவாங்குவதை பார்க்க போனான் .
அவளின் கிளாஸ் ஜன்னல் அருகே நின்றுக் கொண்டான் . வகுப்பின் உள்ளே நிகழ்வது அவனுக்கு தெரிவதுப் போல் . ஆனால் ஆசிரியருக்கு அவன் நிற்பது தெரியாதது போல் நின்றுக் கொண்டான் .
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


விருப்பமான gulfi கூட வேண்டாம்னு வீம்பா இருக்காளே தீ. அந்த அளவு வெறுப்பா தேவ் மேல்.
சின்ன வயதில் விவரம் இல்லாமல் அவன் செய்த சின்ன சின்ன தவறுகள், அதனால் அவளுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் இத்தனை வெறுப்பை கொண்டு வரும் என்று நினைத்து இருக்க மாட்டான் தேவ்.
எப்படி அத்தனையையும் சரி செய்து, சத்யாவின் நட்பை தாண்டி, அவளது காதலை பெற போகிறானோ?
சிறு வயது சின்ன சின்ன சண்டைகள் எல்லாம் அழகான நினைவுகள் தான்