Loading

காரில் செல்லும் போது மாதவ் “என்ன சொன்னாங்க உன் பிரென்ட்” என்ற கேள்விக்கு, 

“நம்பிக்கையா தான் சொல்லி இருக்காங்க. பார்க்கலாம் மாம்ஸ். ஆனால் நமக்குப்  பொறுமை  ரொம்ப முக்கியம். சரி பீச்சிக்கு  ஈவினிங் மேல போகலாம் வெயில் பல்லை காட்டிட்டு இருக்கு. இவன் பீச்க்கு போகாம வீட்டுக்கு போன அழுதே சாவடிப்பான். பேசாமல் மால் போயிட்டு லஞ்ச் முடிச்சிட்டு வீட்டுக்குப் போகலாம் இல்லனா எதாவது மேட்டினீ போயிட்டு பீச் போயிட்டே போகலாம். என்ன பண்ணலாம்” என 

“எல்லாமே நீயே சொல்லிட்டு என்னை டெசிஷன் எடுக்க வைக்கிற மாதிரி பில்டப் கொடுத்து என் மம்மி கிட்ட மாட்டி விட வேண்டியது. சரி நீ பிளான் போட்டுட்ட போய்ட வேண்டியது தான் ப்ரீ குட்டி” என 

இதை எதுவும் காதில் கேட்காதது போல் போனில் உலகமே அழிந்தாலும் தெரியாத பாவனையுடன் புரியவில்லை என்றாலும் தோற்றாலும் திரும்பத் திரும்ப விளையாடிக்கொண்டு இருந்தான்.  

“கண்ணா இப்ப மால் போயிட்டுச் சாப்பிட்டு படம் பார்த்துட்டு ஈவினிங் ஆஹ் பீச் போகலாமா” என்று அவனின் ஹெட் செட்டை பிடிங்கி அவனிடம் சொல்ல,

ஒரு நிமிடம் முகத்தைச் சுருக்கி யோசித்து விட்டு “சரி போகலாமே” என அடுத்த நிமிடம்  கார் பீனிக்ஸ்  மால் நோக்கி சென்றது. அவர்கள்  வாழ்வை மாற்றப் போகும் மனிதன் அங்கு தான் உள்ளான் என்று அவர்கள் அறியவில்லை.

மாதவ் ப்ரணீதாவை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். பிரணவின் கையை பிடித்துக் கொண்டு அவனின் சேட்டையை அடக்கி வைத்து யாருக்கும் அவனின் நடவடிக்கையில் மாற்றம் தெரியாமல் பார்த்துக் கொண்டாள்.

“நான் அங்க போறேன் பாரு எல்லாரும் அங்க போறாங்க” என்று கூட்டமாக மக்கள் அங்கே இருந்த சின்ன செரிமோனி நடந்து கொண்டு இருக்க அதை ஆர்வமாகச் சிலர்  பார்க்கச்  செல்ல,  

“அங்க போரிங்கா இருக்கும். நம்ம இப்ப ஐஸ் கிரீம் சாப்பிட போறோமே. அது வேண்டாமா” என்றதும் “ஐ… ஐஸ் கிரீமா எனக்கு இரண்டு வேண்டும்” என்று   உற்சாகமாகச் ] சொல்ல,

முதல் முறை மாதவ் கண்களுக்கு அவள் உணர்வுகள் புரிந்து கொள்ளத்  தொடங்கியது. அதுவும் அவளின் கண்ணில் தோன்றும் ஒரு வித ஒளி இது வரை அவன் கண்டது இல்லையா இல்லை கவனிக்க இல்லையா என்று தெரியவில்லை. அவனுக்கும் ஜான்வியை பார்த்ததிலிருந்து ஒரு வித சிலிர்ப்பான மனநிலையில் தானே இருந்தான்.

“லவ் பற்றி என்ன நினைக்கிற ப்ரீ. அதுவும் பார்த்த உடனே வர லவ் பற்றி” என்று மாதவ் தன் முன்னே நடக்கும் ப்ரணீதாவிடம் கேட்க,  ஒரு நிமிடம் தடுமாறினாலும் “எதுக்கு மாம்ஸ் இப்ப லவ் பற்றி ஆராய்ச்சி எல்லாம் பண்றீங்க” என 

“சும்மா தான். நீ உன் கருத்தை சொல்லேன்” என ஒரு நிமிடம் தன் கையை பற்றிக் 

கொண்டு வேடிக்கை பார்த்து வரும் பிரணவை பார்த்து விட்டு,

“லவ்….. தெரியலை மாம்ஸ் நமக்குன்னு யோசிக்காம பிடிச்சவங்களுக்காக யோசிக்கிறதா இல்லை நமக்காகத் துடிக்கிற இதயம் அவங்க செயலில் அதிர்ந்து துடிக்கிறதா இல்லை அவ்வளவு வலியை மனசு சந்திக்கும் போதும் எதிரே சிரிக்கிற முகத்தைப் பார்த்து மறக்கிறதா இல்லை வாழ்க்கை முழுக்க கையை பிடிச்சுட்டு போன போதும் என்று நினைக்கிற நினைப்பா எதுன்னு எனக்குத் தெரிய மாம்ஸ்” என 

“என் தம்பி எதோ ஒரு நல்லது பண்ணி இருக்கான் போல அதான் நீ கிடைச்சு இருக்க” என அவளும் சிரித்துக் கொண்டே கஃபே உள்ளே சென்றாள்.

இவர்களையே ரொம்ப நேரமாக ஒரு ஜோடி கண்கள் பார்த்துக் கொண்டு இருந்தது.  அந்த பார்வையில்  ஒரு வித ஆராய்ச்சி, யோசனை, கோவம், ஆதங்கம் சிறிதாகச் சந்தோசம் இருந்தது.  

லஞ்ச் ஆர்டர் பண்ண மாதவ் சென்று இருக்க,  இருவர் மட்டும் அந்த கஃபே ஓரமாக இருந்த மேஜையில் அமர்ந்து இருக்க வந்ததிலிருந்து ஒரு ஆடவன் ப்ரணீதாவையே பார்த்துக் கொண்டு இருக்க, அந்த பார்வை ப்ரணீதாவை தொல்லை பண்ணியதோ இல்லையோ பிரணவுக்குக்   கடுப்பாக வைத்தது. 

அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை இருந்தாலும் கோவம் வந்தது.  ப்ரணீதா “என்ன கண்ணா ஏன் ஒரு மாதிரி இருக்க உடம்புக்கு எதாவது பண்ணுதா” என அவனோ “அந்த பாய் உன்னை ஒரு ஒரு மாதிரி பார்க்கிறான். எனக்கு பிடிக்கல அவனை அடிக்கணும் போல இருக்கு ஆனால்  பெரிய பையனை அடிக்கக்  கூடாது தானே” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே மாதவ் வர 

“யாரை டா அடிக்க போற” என்று காதில் கடைசியாகக் கேட்ட  வார்த்தையை அவனிடம் கேட்க, “அதோ அந்த பேட் பாயைத் தான். என் பரியை ரொம்ப நேரமா பார்த்துட்டே இருக்கான். கண்ணை நோண்ட போறேன் பாரு” என்று கோபத்தில் சொல்ல,  

 ப்ரணீதா “அவன் கிடக்காரன் சுண்டக்க பையன்.  இப்ப ஜூஸ் ஐஸ் கிரீம் எல்லாம் வரும் சாப்பிட்டு கேம்ஸ் விளையாடப் போகலாம் கண்ணா” என அவனும் சற்று கடுப்பாகத்  தான் அமர்ந்து இருந்தான்.

அவனைப் புரியாமல் பார்த்த ப்ரணீதா மாதவ்விடம் “என்ன ஆச்சு எப்பவும் சொன்னதும் கேட்டு நடப்பான். இப்ப சொல்றத கேட்காமல் இருக்கான்” என     

 

“அவன் இப்படி தான். ஒரு நிமிஷம் எனக்குப்  பழைய பிரணவ்வை பார்த்த மாதிரி இருந்துச்சு. அவனுக்கு அவனோட சின்ன பொருளை வேற யாரவது எடுத்த வரும் பாரு ஒரு கோவம்” என்று சொல்லும் போதே “நீங்க எடுத்தா கூடவா” என 

“ஹா ஹா  ஹா நான் இல்ல அம்மாவையே  எடுக்க விட மாட்டான். அவனது ரூமை கிளீன் பண்ண கூட நாங்க யாரும் வர மாட்டோம்” என்று பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கிளம்ப அது வரை அமைதியாக இருந்த பிரணவ் கிளம்பும் போது அந்த ஆடவன் அமர்ந்து இருக்கும் பக்கமாக நடந்து வந்தான்.

அந்த ஆடவனைக் கடந்து தானே வெளியேற வேண்டும். பிரணவ்வின் கையை பிடித்துக் கொண்டு மாதவ்விடம் பேசிக்கொண்டு வந்த ப்ரணீதா கவனிக்காத போது  அந்த ஆடவனுக்குப் பின்னே வெயிட்டர் கொதிக்கக் கொதிக்க இரண்டு குவளையில் காபி எடுத்துக் கொண்டு வருவது தெரிந்தது சரியாக அவன் அருகே வரும் போது வெயிட்டர் அவனைக் கடக்க, 

யாரும் கவனிக்காத வகையில் தன் காலை கொண்டு வெயிட்டரைத்  தடுமாற வைத்தான். நிலை தடுமாறி அந்த இளைஞனின் தலையில் மேல் கொட்டியது. சூடு தாங்காமல் அவன் அலற, அவன் சத்தம் அந்த கஃபே முழுவதும் நிறைந்தது.

“என்ன ஆச்சு” என்ற பிரணிதா கேள்விக்கு தனக்குத் தெரிந்தும் “என்னனு தெரியல. நம்ம கேம்ஸ் சென்டர் போகலாம்” என்றான் மாதவ்.

அன்று முழுவதும் பிரணவ் பிரணிதா கையை விடாமல் பிடித்துக் கொண்டே சுற்றினான். ஏன் இப்படி என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால் அவனுக்கே தெரியாமல் அவனின் குணம் வெளியிட்டது.

அவர்கள் பீச் சென்ற போதும் சரி திரும்பி வீடு வந்த போதும் சரி ஒரு கார் அவர்களை பின் தொடர்ந்தது. அதை யாருமே கவனிக்க வில்லை.

இரவு, “உன் கூட தூங்கவா கண்ணா” என்ற அவளின் கேள்விக்கு அவனும் சந்தோஷமாகச் சிரித்து கொண்டே “ஹை இனி என் கூடவே இருப்ப தானே. ஜாலி ஜாலி” என்று குதாகலிக்க, அவன் தூங்கும் வரை அவள் வாழ்வில் நடந்ததை கதையாக அவனுக்கு சொல்லி கொண்டு தூங்க வைத்தாள்.

அவனின் ஆழ்ந்த தூக்கத்தை கண்ட பின் மெதுவாக அவனின் அறையில் கப்போட் நோக்கி சென்றாள். கீழ் பகுதி தான் திறந்து கொண்டதே. பல பிராண்டட் ஃபைக்களின் மினியேச்சர் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.  சற்று கலைந்து ஆங்காங்கே ஒட்டடை படிந்திருந்தது. 

அதற்கு கீழே ஒரு மெல்லிய துணியால் மூடி வைக்கப்பட்டு இருந்த டைரி அவள் கண்ணில் பட்டது. அதற்கு பின்னே ஒரு பொம்மை. கையடக்க டிஸ்னி இளவரசி பொம்மைகளில் ஒன்று போல் இருந்தது.

டைரியை மட்டும் எடுத்துக் கொண்டு வந்தவள் அதைப் படிக்க துடங்கினாள்.

அதில் முழுக்க அவனின் கனவும் அதை அடைய என்ன என்ன செய்ய வேண்டும். கனவின் ஆரம்பம் முதல் அது எப்படி முடிய வேண்டும் என்ற ஆசையைக் கூட அதில் எழுதி இருந்தான்.

அவனின் பெர்சனல் வாழ்க்கை அதில் ஒரு சதவீதம் கூட அதில் இடம் பெறவில்லை. மொத்தமும் அவனின் கனவு தான்.

அவனின் கனவு ரேஸிங், பைக் ரேஸிங். அவனின் கனவு நிறைவேறுமா??? அல்ல நிறைவேற அவன் இழக்க இன்னும் பல உண்டா??? 

உயிரோட்டங்கள் தொடரட்டும் 

நிலானி தாஸ் 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
6
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்