முதலில் அதிர்ந்தாலும் சந்தோஷத்தில் தலைக் கால் புரியவில்லை. “தேங்க்ஸ் டாக்டர்” என்று அவரிடம் சொல்லி விட்டு இவளின் மயக்கம் தெளிய காத்திருந்தான். சந்தோஷத்தில் வீட்டிற்கு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று கூட தோன்ற வில்லை.
கண் விழித்தவள் எதிரே மாதவ் வைப் பார்த்து “என்ன மாம்ஸ் என் ரூமில் இருக்க” என “மேடம் கண்ணை நல்ல திறந்த பார்த்த நன்றா இருக்கும். நம்ம இருக்கிறது ஹாஸ்பிடல்” என
“ஓ ஓ “ என்று பார்த்தவள் அப்பொழுது தான் தான் மயங்கியது நினைவுக்கு வந்தது. “நான் நல்ல தானே சாப்பிட்டேன் அப்புறம் எப்படி மயங்கினேன்” என்று கேள்வி கேட்க,
அவனோ “நீ ஒரு ஆளுக்குத் தான் சாப்பிட்டு இருப்ப. இரண்டு ஆளுக்கு எப்படிப் பத்தும்” என, “இரண்டு ஆள. என்ன மாம்ஸ் உளறுற” என
“நான் இருக்கிற சந்தோசத்திற்கு என்ன பண்றதுனு தெரியலை. நான் பெரியப்பா ஆகா போறேன்” என்று சொல்லி விட்டு “உலகத்தில் யாருமே இப்படி சொல்லி இருக்க மாட்டாங்கல. என்ன செய்ய உன் புருஷன் கல்லை முழுங்க மாதிரியே இருக்கான். இனி பாப்பா வர போகுது நீங்க பிரிய வேண்டிய தேவை இல்லை” என
விஷயத்தை கேட்டு ரொம்ப ரொம்பப்பட்ட பின் “முதலில் பாப்பா விஷயத்தை அவர் ஏற்றுக்கட்டும் மாம்ஸ். நீங்க எல்லாம் எதுக்கும் அவரை கம்பெல் பண்ண கூடாது. அவரே முடிவு எடுக்கட்டும். இதுக்காக சேரணும்னு இல்லை தானே” என
“உன் லவ் மேட்டர் எனக்கு மொத்தமா தெரியாது தான். இருந்தாலும் நீ அவனை எப்போ இருந்தோ லவ் பண்றனு மட்டும் தெரியும். ஏன் அவன் கிட்ட சொல்ல மாட்டேன்னு இருக்க. ஜான்வியை தெரியும் போது உன்னை அவனுக்கு தெரியாத” என
“தெரியாது மாம்ஸ்….விடுங்க என் தலை எழுத்து. முதலில் அத்தைக்கு சொல்லுங்க” என “அப்ப வா வீட்டுக்கு போகலாம்” என்று அவன் அழைக்க,
“இல்ல மாம்ஸ் நான் ஹாஸ்டல் போறேன். பிரணவ் என்ன சொல்றான்னு சொல்லுங்க அப்ப வரேன்” என்று ஹாஸ்டல் செல்ல, அவளை விட்டு விட்டு வீட்டுக்கு வந்தான் மாதவ்.
“டேய் போன் எதுக்கு இருக்கு ஒரு நிமிடம் போன் பண்ணி சொன்ன நான் பயம் இல்லாம இருப்பேன் தானே” என்று வந்ததும் திட்ட,
“இரு மா” என்று விட்டு “பிரணவ்” என்று அழைத்தான். அவனும் கீழே வர, தன் கையில் இருந்த ஸ்வீட் பாக்சில் இருந்து ஒரு ஸ்வீட் எடுத்து “இந்த மென் வாங்கிக்கோ” என அவனும் என்ன என்று தெரியாமல் வையில் வைக்க,
அடுத்த நிமிடம் “நீ அப்பா ஆக போற டா” என வாயில் வாய்த்த ஸ்வீட் தொண்டையில் மாட்டி புறை எற, அதிர்ந்த கண்ணுடன் “நானா??” என இந்திராவோ “ரொம்ப சந்தோசம் டா. அவ எங்க” என
“இந்த சார் ஓகே சொன்ன அவங்க இங்க வருவார்களாம். இல்லனா தனியாவே பாப்பாவை பார்த்துப்பாலம். இவனுக்கு பிடிச்ச பொண்ணோட சந்தோசமா இருக்க சொன்ன” என்று பிரணவ்வை பார்த்து கொண்டே சொல்ல, அவனோ எதுவும் பேசாமல் மேலே சென்று விட்டான்.
இந்திரா பாவமாக “ஏன்டா” என “அட சும்மா சொன்னேன். அப்படி எல்லாம் நடக்க நான் விட மாட்டேன். இவனை குழப்பி விட தான். குழம்பனா தானே மீன் பிடிக்க முடியும்” என்று சிரித்து கொண்டே சொன்னனவன் அன்று முழுவதும் அவன் யோசிக்கட்டும் என்று விட்டு விட்டான்.
இரவு மாடியில் இருளை வெறித்து கொண்டு நிற்க, அவன் அருகே வந்தான் மாதவ்.
“என்ன யோசனை” என உடனே “எனக்கு என்ன பண்றதுனே தெரியல ஒரே குழப்பமா இருக்கு” என்று தமையனிடம் சொல்ல,
“ஒரு குழப்பமும் வேண்டாம். முதலில் நம்ம பாப்பாவை பார்க்கலாம். பாப்பா பிறக்கிற வரை ப்ரீ இங்க இருக்கட்டும். ஒரு வேல உனக்கு பிடிக்கலாம் இல்லை பிடிக்காம கூட போகலாம். பாப்பா பிறந்த அப்பறமா அதை எல்லாம் பார்த்துக்கலாம். ப்ரீ தனியா இப்ப மனோஜ் பண்ண கஷ்டப்படுவ. அவ அம்மா வீட்டுக்கும் போக மாட்ட” என
“சரி இங்க வர சொல்லு. ஆனால் நான் மார்னிங் நியூசிலாந்து கிளம்பனும். இரண்டு மாசம் அங்க ட்ரைனிங் இருக்கு. எனக்கு ஹெல்ப்பா இருக்கும் அதான் முன்னாடியே பிளான் பண்ணிட்டேன். இப்ப சொல்றேன்னு தப்பா நினைச்சுக்க போறாங்க” என
“நாங்க கூட தப்பா நினைப்போம் அவ அப்படி எல்லாம் நினைக்க மாட்ட. அம்மா கிட்ட சண்டை போட்டு தான் உன்னை ரேஸிங்க்கு கொண்டு போன” என அவனும் புரிந்தது என்று தலை ஆட்டி சொன்னவன் கிளம்ப தயாரானான்.
அடுத்த நாளே ப்ரணீதா இங்கே வந்து விட்டாள். அவனும் அவளை பார்க்காமேலே கிளம்பிவிட்டான். பார்த்து இருந்தால் நல்லதோ என்று நினைக்க தோன்றும் ஒரு நாள்.
நடுவே ப்ரணீதா அப்பா அம்மா வந்து அவளை பார்த்தனர். ஜான்வி தினமும் அவளை பார்க்க வருவாள். வெளிநாட்டில் இருந்த பிரணவ் அப்பா கூட வந்து விட்டார். ஆனால் அவள் மனம் தேடும் மன்னவன் மட்டும் அவள் அருகே இல்லை.
அவன் வரவுக்காக தினமும் காத்திருக்க தொடங்கினாள். அவள் காத்திருப்புக்கு முடிவுக்கு வந்தது.
எல்லாரும் அன்று விடுமுறை என்பதாலும் ஹால்லில் அமர்ந்து பேசி கொண்டு இருக்க, பிரணவ் அன்று வர இருந்தான். அவன் வர இருப்பது மாதவ்வை தாண்டி யாருக்கும் தெரியாது.
ஜான்வி “என்ன பா இது நம்ம ப்ரீ வர ரொம்ப அழகாகிட்டே வர” என இந்திரா “உதை வாங்க போற. ஏன் டி கண்ணு வைக்கிற. அவளே சாப்பிட்டு சாப்பிட்டு வாந்தியா எடுக்கிற. நானே என்னடா இது னு பயந்து இருக்கேன்” என
“அத்தை இது எல்லாம் நார்மல் தான் இன்னும் கொஞ்சம் மாசம் தான் அப்புறம் சரி ஆகிடும்” என எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள் ப்ரணீதா. அவள் மனமோ பிரணவ்வை ரொம்ப தேடியது. வெளியே சொல்ல முடியவில்லை.
என்ன சத்தம் என்று எல்லாரும் திரும்பி வெளியே பார்க்க அங்கே தன் தோல்பையை மாட்டி கொண்டு ப்ரணீதாவை தான் வைத்த கண் மாறாமல் பார்த்து கொண்டு இருந்தான்.
மாற்றங்கள் புதிதோ????