“நீ தான் வேண்டும்” என்ற அவனின் வாசகத்தில் சற்று தடுமாறி தான் போனாள். பின் அவன் முகத்தை பற்றி,
“பிரணவ் கண்ணா இந்த பரி உனக்கு மட்டும் தான். ஆனால் நீ இன்னும் கொஞ்சம் நாளில் நீ சரி ஆகிடுவா தானே. அப்ப பார்த்துக்கலாமா” என அவனுக்கோ அவள் பேசியது எல்லாம் கேட்கவே இல்லை, மிகவும் அருகில் அவள் முகத்தை பார்த்தவன் நிலை தடுமாறி தான் போனான்.
தன் ஒரு கரத்தை அவளின் இடையை இறுக்கி கொண்டு மற்ற கரத்தை அவள் நெற்றியில் இருந்து கொடு வரைய ஆரம்பித்தான்.
நெளிந்து கொண்டே “நான் சொல்றத…” மேலே என்ன கூற நினைத்தாளோ அனைத்தும் அவன் இதழிலில் விழுங்கப்பட்டது.
அதன் பிறகு அங்கே தொடங்கியது காதல் யுத்தம். காதலாக தாபமாக மோகமாக அவர்களுக்கே உண்டான அழகிய தருணமாக மாறியது.
வண்டியின் வேகத்தை பார்த்து பயந்து “பொறுமையா போ கண்ணா” என்று ப்ரணீதா கத்த, அதை கேட்காமல் சென்ற பிரணவ் எதிரே வந்த வண்டியை கண்டுக்கவே இல்லை. ப்ரணீதா தான் தூர இருந்து பதறி கத்தி கொண்டு இருந்தாள். வேகமாக வந்த லார்ரி இவன் வண்டியை தூக்கி அடித்து இருக்க, “பிரணவ்” என்று கத்தி கொண்டு எழுந்தாள் ப்ரணீதா.
ஒரு நிமிடம் அதிர்ந்தவள் கனவு தான என்று திரும்பி அவன் இடத்தை காண அதுவோ வெறுமையாக இருந்தது. கலைந்த தன் ஆடைகளை சரி செய்து கொண்டு வேகமாக கீழே ஓடி அவனை எல்லா இடமும் தேட, அவன் இருக்கும் தடையாமே இல்லை.
“மாதவ்…. அத்தை…..” என்று சத்தமாக அழைக்க அவர்களும் வந்தனர். தகவலை சொல்ல, எல்லா இடமும் மீண்டும் தேடினார். பின் மாதவ் தான் எதோ சந்தேகத்தில் அவனின் கார் ஷெட் நோக்கி செல்ல, பிரணவ்வின் பைக் அங்கே இல்லை.
“அம்மா அவன் வண்டி அங்க இல்ல. நான் வெளியே போய் தேடுறேன். ஒரு வேல இங்க எங்கையாவது இருக்கானா பாருங்க” என்று கிளம்பிவிட்டான். அவளின் கனவே அவளை மிரட்டியது. அவனுக்கு ஒன்றும் ஆகா கூடாது என்று வேண்டி கொண்டே இருக்க, அவளின் வேண்டுதலை கடவுள் செவி சாய்க்கவில்லை.
மாதவ் விடம் இருந்து போன், அவன் கூறியதை கேட்க சிலை ஆகி போனாள். வேகமாக அத்தை யிடம் சொல்ல அவரோ “கடவுளே ஏற்கனவே ஒரு முறை இப்படி தானே சொன்னாங்க. ஒன்றும் இல்லை என்று நாங்களே சமாதானம் சொல்லி போய் பார்த்த என் பையன் இப்படி தான் எங்களுக்கு கிடைச்சான். இப்ப என்ன சொல்ல போறாங்களோ” என்று அழுது கொண்டே சொல்ல,
“நான் இருக்கேன் அத்தை என் இதயம் துடிக்கிற வரை அவனுக்கு எதுவும் ஆக விட மாட்டேன்” என்று வேகமாக மாதவ் சொன்ன ஹாஸ்பிடல் நோக்கி சென்றாள்.
உள்ளே நுழைந்ததும் மாதவ் இவர்களுக்காக காத்திருக்க இந்திரா “டாக்டர் என்ன சொன்னாங்க பா” என
“தெரியலை மா உள்ளே இருந்தே இன்னும் வெளியே வரல. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று குரல் நடுங்க சொல்ல,
“மாம்ஸ் என்ன ஆச்சு பிரணவ் எங்க இருந்தான்” என “வேகமா போய் இருக்கான் போல நடுவுல எதோ வண்டி மக்கர் பண்ணி இருக்கு. அவன் இப்படி ஆனதில் இருந்து இந்த வண்டியை நாங்க யாரும் உஸ் பண்றது இல்லை. நீ கூட இவனுக்கு ப்ரசிடிஸ் பண்ண வேற வண்டி தானே யூஸ் பண்ண. ஆரம்பத்தில் நல்ல போய் இருக்கும் போல நடுவுல என்ன ஆச்சுன்னு தெரியல மரத்தில் போய் முட்டி இருக்கான். நான் நாம வீட்டை சுற்றி இருக்கிற மூன்று பக்கமும் பார்த்துட்டு இந்த பக்கமா வரக்குள்ள ஒரு அங்கிள் அவனுக்கு ஹெல்ப் பண்ணிட்டு ஆம்புலன்ஸ் கூப்பிட்டு இருக்காரு. உயிருக்கு எதுவும் ஆகாதுன்னு தான் நினைக்கிறன்” என்க,
டாக்டர் வந்ததும் ப்ரணீதா ஓடி போய் “டாக்டர் அவருக்கு எதுவும் இல்லை தானே. என் புருஷன் நல்லா தானே இருக்கான். சொல்லுங்க” என்று பதட்டத்தில் கேட்க,
“ரிலாக்ஸ் அவருக்கு ஒன்றும் ப்ரோப்லேம் இல்லை. நல்ல வேலைய அவர் விழுந்த பக்கம் மணல் முட்டை இல்லைனா மணல் குவியல் இருந்து இருக்கும். லைட் டா மண்டையில் அடிப்பட்டு இருக்கு வேற ஒன்னும் இல்லை” என அவளுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் அப்பொழுது தான் மூச்சே வந்தது.
இந்திரா “இவன் எதுக்கு இந்த நேரத்தில் வெளியே போனான்” என “எனக்கும் தெரியலை அத்தை. நல்ல தூக்கத்தில் இருந்தேன் கெட்ட கனவு வந்து எழுந்த இவரை காணோம். பதறி போய்ட்டேன். கனவில் வேற இவர் மேல லார்ரி எற மாதிரி எல்லாம் இருந்துச்சா ஒரு நிமிஷம் உயிரே போய்டுச்சு” என்று தன்னை சமாளித்து கொண்டு சொல்ல,
மாதவ் “நான் இங்க இருக்கேன் நீங்க இரண்டு பேரும் வீட்டுக்கு போயிடு மார்னிங் வாங்க” என “இல்லை” என்று இருவரும் ஒன்றாக சொல்லிவிட்டு அங்கையே அமர்ந்து தூங்கிவிட்டனர்.
காலையில் முதலில் எழுந்த ப்ரணீதா மாதவ் வை மட்டும் எழுப்பி “மாம்ஸ் எனக்கு பசிக்கிற மாதிரி இருக்கு நான் டி குடுச்சிட்டு வரேன்” என்று கிளம்பிய அடுத்த நொடி நர்ஸ் வேகமாக வெளியே வந்து “பெசன்ட் கண்ணு முழிச்சிட்டாங்க நான் டாக்டர் கிட்ட சொல்லிட்டு வரேன்” என்று வேகமாக ஓட,
மாதவ் இந்திரா விடம் சொல்ல, இருவரும் வேகமாக உள்ளே சென்றனர். இருவரிடமும் அவன் எதுவும் பேச வில்லை. மெலிதாக புன்னகைத்தான். இவர்கள் பேசும் முன்னே டாக்டர் வந்துவிட, “ஹலோ பிரணவ் ஹொவ் ஆர் யூ பீலிங்” என
அவனும். “பைன் டாக்டர். ஜஸ்ட் ஹெட் பைன். அனிதிங் சீரியஸ்” என மற்ற இருவரும் அவனை தான் ஆச்சரியமாக பார்த்து கொண்டு இருந்தனர். டாக்டர் பொதுவான செக் அப் முடித்து விட்டு “ஹி ஐஸ் பைன்” என்று செல்ல,
“என்ன இரண்டு பெரும் என்னை இப்படி பார்க்கறீங்க. இதுக்கு முன்ன என்னை பார்த்ததே இல்லையா. டேய் அண்ணா என்ன இது கண்ணுல கண்ணீர் எல்லாம்” என
இந்திரா “டேய் நீ நீ” என்று சொல்லும் முன்னே நர்ஸ் வந்துவிட சில மருந்து மாத்திரை கொடுக்கவே வந்து இருப்பார் போல. “என்ன நீங்க இரண்டு பேர் மட்டும் தான் இருக்கீங்க. என்ன சார் ஓட மனைவி” என்ன “டேய் அண்ணா எப்ப டா கல்யாணம் பண்ண” என்று பிரணவ் கேட்க,
“என்ன சார் விளையிடறீங்களா…. உங்க மனைவி தான் வேற யாரை நான் கேட்க போறேன்” என்று சொல்லி கொண்டே அவனுக்கு ஒரு ஊசியை போட்டு விட்டி வெளியே செல்ல,
“எனக்கு எப்ப கல்யாணம் ஆச்சு. எனக்கு ஒன்றும் புரியவில்ல என்ன தான் நடந்துச்சு” என்று கோவமாக கேட்க,
மாதவ் “என்னடா சொல்ற…. உனக்கு இரண்டு வருஷம் முன்ன நடந்த ஒரு அச்சிடேன்டில் உன்னோட மனநிலை கொஞ்சமா மாறிடுச்சு. அம்மா ஒரு நாள் ஜாதகம் எல்லாம் பார்த்து உனக்கு மேரேஜ் ஆனா சரி ஆகிடுவா என்று சொல்லி இருக்காங்க அதான் அம்மா உனக்கு கல்யாணம் பண்ணாங்க” என
“யாரை கேட்டு எனக்கு கல்யாணம் பண்ணீங்க. என்ன பண்ணி இருக்கீங்க எனக்கு நல்லது பன்றேன்னு எவ்வளோ பெரிய தப்ப பண்ணி இருக்கீங்க தெரியுமா. ஐயோ இப்ப நான் என்ன பண்ணுவேன்” என்று தலையில் அடித்து கொள்ள,
இந்திரா “நல்ல பொண்ணு பா அவ. உன்னை ரொம்ப நல்ல பார்த்துக் கிட்டாள். நீ சந்தோசமா இருப்ப அவ கூட” என
“அம்மா புரியாம பேசாதீங்க நீங்க சொல்ற பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணா இருக்கலாம் ஆனா எல்லாரும் என்னோட ஏஞ்சல் ஆகிட முடியுமா” என்று முகத்தில் வேதனை அப்பட்டமாக தெரிய,
அதே நேரம் அவன் கண் விழித்த செய்தி கேட்டு வேகமாக உள்ளே வர நினைத்து கதவை திறக்க நினைத்ததவள் காதில் அவனின் கடைசி வார்த்தை கேட்க, அப்படியே நின்று விட்டாள்.
மாதவ் “சரி டா நாங்க பண்ணது தப்பு தான் இப்ப என்ன பண்ண முடியும். அவ கிட்ட பேசி பாருடா உனக்கே பிடிக்கும்” என்று அவன் மனதை மற்ற நினைக்க,
“என்னடா என் மனசை மாற்ற நினைக்கிறியா நான் மனநிலை சரி இல்லாத போது நீங்க பண்ணீங்களே அந்த கல்யாணமே செல்லாது. நான் கோர்ட் பண்ண எனக்கு ஈஸியா டிவோர்ஸ் கிடைச்சுடும். நீங்க சொல்ற பொண்ணை எனக்கு பார்க்கணும் என்று எனக்கு அவசியமே இல்லை. எனக்கு என் ஏஞ்சல் தான் வேண்டும்” என்று பிடிவாதமாக சொல்ல,
உள்ளே செல்ல நினைத்தவள் அப்படியே வெளியே நின்று விட்டாள். மாதவ் மற்றும் இந்திரா இருவரும் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டே வர, அங்கே சாரில் அமர்ந்து இருந்தாள் ப்ரணீதா.
அவள் அருகே வர, “எனக்கு டிவோர்ஸ் வேண்டும் மாம்ஸ்” என்று மெதுவாக கேட்க, அவனுக்கு தூக்கி வாரி போட்டது.
“என்னமா பேசற அவன் எதோ புரியாம பேசறான். சரியாகிடுவான். கொஞ்சம் வெயிட் பண்ணலாம்” என “இல்ல அத்தை அவங்களுக்கு பிடிச்ச பொண்ணை கட்டிக்கிட்டு சந்தோசமா இருக்கட்டும் ப்ளீஸ்” என்று மாதவ் பார்த்து “மாம்ஸ் ஜான்வி கிட்ட சொல்றேன் அவங்க வந்து பார்ப்பாங்க. எதுவும் ப்ரோப்லேம் வராது. நான் வீட்டுக்கு போறேன் டாக்டர் கிட்ட இப்ப தான் கேட்டேன் ஈவினிங் மேல டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க” என்று அவள் கிளம்ப நினைத்தாள்.
மாதவ் “என்ன பேசற ப்ரீ… உனக்கு அவனை எவ்வளோ பிடிக்கும் என்று எனக்கு தெரியும். எப்படி அவன் இல்லாமல் நீ இருப்ப” என்ற கேள்விக்கு “அவன் சந்தோசமா இருப்பான் ல” என்று புன்னகைத்தாள். அதில் இருக்கும் வலி இருக்கருக்குமே வலித்தது.
கொஞ்ச நேரத்தில் ஜான்வி வர, மாதவ் “வா ஜானு வந்து அவனை என்னனு கேளு. என்ன என்னமோ சொல்றான்” என்று அவளையும் அழைத்தது கொண்டு உள்ளே செல்ல,
அவள் உள்ளே வந்ததும் “ஹே மூக்குப்பொடி நீ என்ன இங்க” என்று அவளை வரவேற்றது பிரணவ் தான்.
அவளும் சிரித்து கொண்டே “எப்படி இருக்க மச்சி” என்றாள்.
இருவருக்கும் என்ன சம்பந்தம்??? ப்ரணீதாவின் முடிவு சரியா???