ஜான்வி “பிரணவ் நீங்க ஜாலியா இருங்க. சூப்பரா ஒட்டி வின் பண்ணுங்க. உங்க விக்டரிக்கு நாங்க எல்லாம் வைட்டிங். முன்ன விட இப்ப நீங்க சூப்பரா இம்ப்ரூவ் ஆகிட்டு வரீங்க. சீக்கிரமா இந்த உலகம் பழைய பிரணவ் வை பார்க்கப் போகிறது. ஆல் தீ பெஸ்ட்” என
முத்த மகனின் பார்வையைப் புரிந்து கொண்ட இந்திரா “நீ என்னமா பண்ற எங்க இருக்க அப்பா அம்மா என்ன பண்றங்க” என்று கொஞ்ச நேரத்தில் அவளின் ஜாதகம் மொத்தத்தையும் தெரிந்து கொண்டார். அவரின் கவலை முத்த மகனின் வாழ்க்கை தானே. சிறியவனை ப்ரணீதா பார்த்து கொள்ளவாள் என்ற நம்பிக்கை.
மாதவ் “நான் பின்னாடி இருக்கேன் மா” என்று அங்கே சென்று விட்டான். கொஞ்ச நேரத்தில் அவனை நோக்கி வந்தாள் ஜான்வி.
“உங்க கிட்ட பேசணும்” என “சொல்லுங்க மேடம்” என்று திரும்பி நின்றே சொல்ல,
“எனக்கு உங்களை பிடிக்காதுன்னு எல்லாம் இல்லை. நான் பார்த்து வளர்ந்த விதம், என் அக்கா வாழ்க்கையில் நடந்த விதம் எல்லாம் தெரிஞ்சு என் மனசில் ரொம்ப பயம் தான் இருக்கு. நான் டாக்டருக்கு படிக்க ஆரம்பிக்க முன்ன இதயம் சம்பந்தமா தான் படிக்க நினைச்சேன் ஆனால் என்னோட பயம் எனக்கே தெரிஞ்சுது.
அது மாதிரி நிறைய பேர் விஷயத்தில் பாதிக்கப்பட்டு அதில் இருந்து வெளியே வர கஷ்ட படுறது எனக்கு புரிஞ்சிது. என்னால என்னை மாற்றிக்க முடியலை. அதன் மற்றவங்களை மாற்ற நினைத்தேன்.
இப்ப என்னையும் மாற்றிக்க நினைக்கிறேன்” என்று முடிக்க,
எதுவும் புரியாமல் “சரிங்க ரொம்ப சந்தோசம் வேற எதாவது சொல்லனுமா” என்று அவன் முன்னே அவளை கண்டுக்காமல் செல்ல, இவளோ , மனதில் ‘என்ன இவங்க கண்டுக்கவே இல்லை’ என்று நினைக்கும் போது தான் அவள் பேசிய கடைசி வார்த்தை அவன் காதில் ரீங்காரமாக கேட்டது.
அதிர்ந்து நின்றவன் “என்ன சொன்ன இப்ப என்ன சொன்ன” என்று சந்தோசமாக கேட்க,
“எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு. நானும் எல்லாரும் போல சந்தோசமா இருக்கணும்னு நினைக்கிறன். கண்டிப்பா மாறிடுவேன் அதுவரை எனக்காக வெயிட் பண்ணுவிங்களா” என்று அவனின் முகத்தை பார்த்து கேட்க,
“ஓ மை காட்….. எனக்கு சந்தோஷத்தில் என்ன பண்றதுனே தெரியலையே. சாரி மா” என்று அவளிடம் சொல்ல, எதுக்கு சாரி என்று அவள் யோசிக்கும் போதே அவளை இறுக அணைத்து கன்னத்தில் முத்தம் இட்டு “உனக்காக இந்த ஜென்மம் முழுக்க கூட வெயிட் பண்ணுவேன். அதுக்காக உண்மையாவே காக்க வைக்காத சீக்கிரமா மாறிடு” என
அவளும் சிரித்து கொண்டே தலையை ஆட்டினாள். இந்த விஷயத்தை உடனே வீட்டினருக்கு சொல்ல எல்லாருக்கும் சந்தோசம்.
மறுநாள், எல்லாரும் சீக்கிரமாகவே எழுந்து விட்டனர். இந்திராவிற்கு மனதில் சொல்ல முடியாத பயம் இதே போல் தானே ஒரு நாள் சந்தோசமாக “அம்மி நான் இந்த முறை வின் பண்ணிட்டு சீக்கிரமா உங்க கிட்ட வந்துடுறேன். அது வரை இந்த பிரணவ் இல்லாமல் மிஸ் பண்ணிட்டு இருங்க” என்று இரண்டு வருடங்கள் முன்பு சொல்ல,
அவன் சொன்னது போல் வெற்றியும் பெற வில்லை. நலத்துடன் வீட்டுக்கும் வரவில்லை. அன்றிலிருந்து இப்பொழுது வரை அவரின் பயம் மட்டும் மாறவில்லை.
அண்ணா நகரில் இருக்கும் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் செல்ல அனைவரும் தயாராகினர். பிரணிதா “கண்ணா கண்டிப்பா இப்ப நடக்குற மேட்ச்ல ஜெயிக்கணும். உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு தைரியமா வண்டியா ஓட்டு. வேகமாகவும் போகணும் அதே சமயம் பாதுகாப்பாகவும் இருக்கணும் புரியுதா” என
பிரணவ் “டோன்ட் வொர்ரி நானும் நான் பத்திரமா ஓடிட்டு ஜெயிச்சுட்டு வரேன்” என்று சிரித்து கொண்டே சொன்னான்.
யாருக்கும் இவனின் நிலை என்ன என்று தெரியாது. அவன் ஒன்றும் மனநிலை சரியில்லாத மனிதர்கள் போல் இல்லை. சற்றே அவனின் மூளையில் சிறு பாதிப்பு. அதுவும் இப்பொழுது சரி ஆகி கொண்டு வருகிறது.
ஓடுதளத்தில் அனைத்து வண்டிகளும் தயாராக இருக்கும், அதுவரை தைரியமாக மனநிலையில் இருந்து ப்ரணிதா சற்று தடுமாறி தான் போனாள்.
“பத்திரமா என்கிட்ட வந்துடு பிரணவ் கண்ணா” என்ற வாசகத்தை திரும்பி திரும்பி சொல்லிக் கொண்டிருந்தாள். அவளை தூர இருந்தே பார்த்த பியூஷ் சிரித்து கொண்டு அவளை நெருங்க நினைக்க குறுக்கே பிரணவ் வந்து நின்றான்.
பிரணவ் எதுவும் பேசவில்லை முறைத்து கொண்டே நின்றான். பியூஷ் மெலிதாக புன்னகைத்து “ஆல் த பெஸ்ட் பிரணவ்” என்று ப்ரணிதாவையே பார்த்துக் கொண்டு சொன்னான்.
அவனின் உடையே அவனும் இந்த போட்டியில் பங்கு பெறுவது பிரணவ்விற்கு உணர்த்த, “உங்களுக்கும் ஆல் தி பெஸ்ட் போங்க அன்னவுன்ஸ்மென்ட் பண்றாங்க” என்று ப்ரணிதாவின் கை பற்றுக் கொண்டு வேறு பக்கம் சென்றான்.
அவனின் பேச்சில் வேறுபாட்டை உணர்ந்து என்ன என்று யோசிப்பதற்கு முன் போட்டி தொடங்கப்பட சிறிது நேரமே இருப்பதாக தொகுப்பாளர் மைக்கில் சொல்லிக் கொண்டு இருக்க வேறு எதுவும் யோசிக்காமல் அவனும் மைதானத்தை நோக்கி சென்றான்.
போட்டி தொடங்கியது முதலில் சற்று தடுமாறும் பிரணவ் சில நிமிடத்தில் போட்டியின் போக்கை அறிந்து கொண்டான். மொத்தம் நான்கு சுற்றுகள், முதல் சுற்றில் சற்று பின் தங்கிய நிலையில் தான் இருந்தான். மெல்ல மெல்ல போட்டி சூடு பிடிக்க ஆரம்பித்தது. பியூஷ் வேகமாக தன் வண்டியை செலுத்தி கொண்டு இருக்க, போராடி தான் வென்றான் பிரணவ்.
ஆம் வென்று விட்டான். பல நாட்கள் கனவு இது. அதுவும் முதல்படி. அவனுக்கு சந்தோசத்தில் என்ன செய்வது என்றே புரியவில்லை. அவன் ஜெயித்த அடுத்த நிமிடமே மாதவ் மீடியா கண்ணில் மண்ணைத் தூவி விட்டு அவனை தனியாக அழைத்து வந்து விட்டான்.
“ஜெயிச்சுட்டேன் ஜெயிச்சுட்டேன் நம்ம ஜெயிச்சுட்டோம்” என்று சந்தோஷத்தின் தூவிக்கொண்டு ப்ரணிதா இருக்கும் இடத்தை அடைந்தான்.
இவன் பின்னே பேசவே வேகமாக வந்தான் பியூஷ். இவனை கேள்வியாக பார்த்து கொண்டே ப்ரனிதாவிடம் “என்ன ஆச்சு. ஏன் இப்படி பிகேவ் பண்றான். ஏதாவது பிரச்சனையா” என்று படபடப்பாக கேட்க,
பெருமூச்சு விட்டுவிட்டு “இரண்டு வருஷம் முன்னாடி ஒரு ஆக்சிடென்ட் அப்பதான் கொஞ்சம் பிராப்ளம் போல. பிரைன் நேர்வெஸ் டேமேஜ் ஆகிடுச்சு. இப்ப ட்ரீட்மென்ட் போய்ட்டு இருக்கு சீக்கிரம் சரியாகிடுவான். அப்ப உன் கிட்ட கூப்பிட்டு வரேன்” என
“சாரி ப்ரணீ எனக்கு தெரியாது. தெரிஞ்சு இருந்தா இப்படி எல்லாம் சலேஞ் பண்ணி இருக்க மாட்டேன். அவனுக்கு பைக் ரேஸ் எவ்வளவு பிடிக்கும்னு தெரியும் அதான் அதில் விளையாடுனேன்.இப்படி எல்லாம் நான் யோசிச்சு கூட பார்க்கல. இப்ப தான் தான் யூஸ் ல இருந்து வந்தேன். இவன் கூட உன்னை பார்த்தேன் அதன் சீண்டுனேன். தப்ப எல்லாம் நான் எதுவும் நினைக்கல நீ நல்லா இருக்கனும் இருப்ப” என
“உன்னை பற்றி எனக்கு தெரியும். நான் தப்பா எல்லாம் எடுத்துக்க மாட்டேன். உங்க விளையாட்டு குணம் தான் உலகம் முழுக்க பேமஸ் ஆச்சே. சீக்கிரமா மீட் பண்ணலாம். கல்யாண சாப்பாடு போடுற ஐடியா இருக்கா” என்று இவளும் கிண்டலாக கேட்க,
“உன் இடத்தில வேற யாரும் வர முடியாது” என்று சோகம் போல் சொல்ல “எடு செருப்பா… போய் ஒழுங்கா வாழற வழியை பாரு” என்று கிளம்பி விட்டாள்.
இரவு பிரணவ் உடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க, இவளும் “சரி என் செல்ல கண்ணா ஜெயிச்சிட்டான் என்ன கிபிட் வேண்டும்” என்று அவனிடம் கேட்க,
அவனோ கொஞ்சம் நேரம் யோசித்தவன் பின் “நீ தான் வேண்டும். கிடைக்குமா” என்ற குரலில் இருந்தது காதலா??? மோகமா???