Loading

பொறுமையாக மெல்ல மெல்ல  அடி எடுத்து நடந்து வந்தாள் பிரணிதா. அவள் அருகே அவளின் தோள் பையை சுமந்து கொண்டு கண்களால் யாரையோ ஆர்வமாக தேடிக் கொண்டே வந்தான் மாதவ்.

அதை கவனித்த பிரணிதா “என்ன மாம்ஸ் வர வர ரொம்ப பொறுப்பா என் கூட ஹாஸ்பிடல் வர மாதிரி இருக்கே. வாட்ஸ் த மேட்டர்” என

“ஹி ஹி… அது வந்து பிரீ குட்டி உனக்கு என்னால பண்ண முடியற சின்ன ஹெல்ப்” என்று தன் மொத்த பற்களையும் காட்டி சொல்ல,

“ஹெல்ப்…. சரி தான். நீங்க பண்ற வேலையில் எனக்கும் என் பிரெண்டுக்கும் ஏதாவது பிராப்ளம் வந்துச்சு…. பிரணவ்வை அடிக்க ஒரு பெரிய கட்டை இருக்கே அது தான் பேசும் இப்பவே சொல்லிட்டேன்” என்றவளை பாவமாக பார்த்தவன் மனதில் ‘கட்டுன பாவத்துக்கு அவன் வாங்குறான் வொய் மீ’ கடுப்பாக நினைத்தாலும் சிரித்து கொண்டான் இவளின் துணை வேண்டுமே.

ஜான்வி, இவளின் உயிர் தோழி மற்றும் தற்பொழுது இவளின் மருத்துவரும் கூட. பிரணிதவிற்கு உதவ வந்தவன் ஜான்வியை கண்டதும் உருகி போய் விட்டான்.

***

“மாம்ஸ் நியூஸ் பார்த்தீங்களா. நேஷனல் பைக் ரேஸ் அனௌன்ஸ் பண்ணி இருக்காங்க. இந்த முறை கண்டிப்பாக பிரணவ் கலந்துகணும். அது மட்டும் இல்ல ஜெய்க்கணும்” என்று கண்கள் மின்ன கனவோடு சொல்ல,

இவளின் நிலைமை உணர்ந்து “இந்த மாதிரி டைமில் நீ ரிஸ்க் எடுக்கிற மாதிரி இருக்கு குட்டி. நெஸ்ட் டைம் பார்த்துக்கலாம். பிரணவ் கிட்ட சொன்ன புரிஞ்சிப்பான்” என்று பொறுப்பாக மாதவ் சொல்ல,

“இல்ல மாம்ஸ் இந்த முறை என் பிரணவ் வீன் பண்ண வைக்கிறேன். பாருங்க” என்று இந்த செய்தியை பிரணவிடம் சொல்ல சந்தோசமாக சென்றாள்.

உயிரோட்டங்கள் தொடரட்டும்…

நிலானி தாஸ் 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment