Loading

குளிர் ஊசி – 10 ❄️

வெளியில் வந்த  ஜனனிக்கு மூச்சு முட்டியது. அவனின் கண் அவளை இம்சை செய்தது. அதோடு தான் நினைத்தது போலவே அவனது கண் ப்ளு ஹேசல் போன்று இருந்தது அவளின் மனதில் சாரல் அடித்தது.

அவ்வுணர்வை தனது கையை நெஞ்சில் வைத்து நீவிக் கொண்டே “என்ன கண்ணுடா ? ” என்று லயித்துக் கொண்டே கூற,

“இவ்வளவு அசிங்கம் பட்டும் திருந்தல . அதோட உனக்கு தைரியம் கூடத் தான் “என்று கேட்க, ஜனனி திரும்பி அசட்டு சிரிப்பு சிரித்து ” இதலாம் சகஜம் ” என்று கூறி அவனின் தோளைத் தட்டினாள்.

அவளின் அணுகுமுறை அவனுக்கு வித்தியாசமாக இருந்தது. அதை வாய்விட்டே கேட்டு விட்டான். “நான் ஒரு ஸ்காட்டிஸ். நான் நல்லா தமிழ் பேசுறேன். ஆனால், நீ ஒரு சின்ன ஷாக் கூட முகத்தில காமிக்கல ? “

“பெரிய உலக ரகசியம் பாரு. நான் தான் இன்டர்வியூ எடுக்கும் போதே விசாரிச்சு தான் வந்தேன் “

” அவர் பொய் சொல்லிருந்தா? “

” அதுல அவருக்கு என்ன லாபம்? “

“யாரும் இப்படி ஒரு வேலைக்கு வர மாட்டாங்க இல்லையா? “

” அப்படி என்ன வேலை? “ஒரு புருவத்தை மட்டும் தூக்கி கொண்டு கேட்க,

” வருஷத்தில் முக்கால்வாசி நாள் நமக்கு கப்பல் தான். அது யாரு ஒத்துக்குவா? வி நீட் யங்ஸ்டர். பட் நோ ஒன் ரெடி டூ லீவ் த ஃபேமிலி. சோ, ஐஸ்ட் பை சேயிங் தட் யுவர் ஜாப் இஸ் இன் கம்பெனி ஒன்லி.  (நமக்கு வாலிபர்கள் தான் வேணும். ஆனா, அவன் எப்படி குடும்பம் விட்டு வருவான். அதனால, கம்பெனில தான் வேலைனு சொல்லி தான் ஆள் எடுப்பாங்க)

எச்சிலை முழுங்கியவள் “என்னடா சொல்லுற? நீ என்ன சொல்லுற ? ” விழி பிதுங்கி கேட்டாள்.

” எனக்கு தமிழ் நல்லாவே புரியும்னு கேப்ல மரியாதை கொடுக்க விடுகிறாயா ? “

“எப்பா உன் தமிழே! கேட்கவே முடியல. யூ ஜஸ்ட் ஸ்பீக் இன் இங்கிலீஷ் ஒன்லி. ஐ திங்க் யூ அஸ் அ ஃபிரண்ட் . தட்ஸ் ஒய் ஐ டின்ட் கிவ் ரெஸ்பெக்ட் . ” ( நீ இங்கிலீஷ்ல மட்டும் பேசு . உன் நண்பனா நினைக்கிறேன். அதான் மரியாதை கொடுக்கல. )

” அப்படியென்றால்  நானும் தமிழில் தான் பேசுவேன் ” என்று கூறி அவளின் தோளில் கை போட்டு அவள் கதற கதற தமிழில் பேசிக் கொண்டே இழுத்துச் சென்றான்.

இதை டென்டின் இடையே பார்த்துக் கொண்டிருந்தவன் வாயில் முணுமுணுத்தான் “யூஸ்லெஸ் இடியட் ” . அப்பொழுது வந்த ஒரு முக்கிய செய்தியில் கணினியில் முழ்கி விட்டான்.

ஒரு மணி நேரம் கழித்து நிமிர்ந்தவன் மணியை பார்த்து விட்டு, சோம்பல் முறித்துக் கொண்டே சாய்வு நாற்காலியில் சாய, அவனின் மனம் ஜனனியின் புறம் சாய்ந்தது.

சட்டென்று சுதாரித்து தன்னை சமன்படுத்தி கொண்டவன் வெளியில் வந்தான். பரந்து விரிந்த ஊதா நிற போர்வை போல் இருக்கும் கடலில், சிறு குழந்தை திரும்பி திரும்பி படுக்கும் பொழுது மேடு பள்ளமாக மாறுவது போல், அலைகளும் ஏறி இறங்கி வந்தது.

தன்னவனான மணலை சந்திக்க வெகுதூர பயணத்தின் களைப்பா இல்லை, உணர்ந்த மகிழ்ச்சியா என்று தெரியவில்லை. சத்தமின்றி ஒன்றோடு ஒன்றி கூடி கலைந்து அமைதியாக பின்னோக்கி அதனின் இருப்பிடம் சென்றது. அதனை உணர்ச்சிகளோடு காணாமல், கடவுள் படைத்த படைப்புகளில் ஒன்று. அது அவரின் கடமை என்பது போல் முகத்தை துடைத்து வைத்தது போன்று எவ்வித உணர்வுமின்றி அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவ்வமைதியில் சிறு சலசலப்பு செவியில் எட்டி மனதை தொட்டது. இம்சை தான் ஆனால், அது எவ்வித இம்சை என்று தான் புரியவில்லை இவனுக்கு . இருந்தும் திரும்பி அங்கு பார்க்க, தனது நீண்ட நாள் மனதினில் அடைத்து வைத்திருக்கும் காதலியான ரோஸியிடம் ஜனனி சண்டை வளர்த்துக் கொண்டிருந்தாள்.

அதில் முகத்தை சுருக்கினான். அவ்விடத்துக்கு விரைந்து சென்றான். ஜனனி பத்து பேர் முன்பு அவளை வெளுத்துக் கொண்டிருந்தாள்.

“மூணு நாளைக்கு ஒரு தடவ சோசியல் மீடியலா கரெக்ட்டா போஸ்ட் போடுறீங்க !  டிரஸுக்கு ஏத்த மாதிரி பேக் மாத்துறீங்க! இதெல்லாம் கரெக்ட்டா பண்ண தெரியுது …. இங்க வேலை மட்டும் பண்ண தெரியாதா? கலர் கலரா போட்டோ மாத்திக்கிட்டே இருந்தா இங்க வேலை நடக்குமா என்ன? இங்க ஒர்க்ல கவனம் வேணும். ஹவ் கேன் யூ பீ சோ கேர்லஸ் ? “

” என்ன பண்ண? “

“வந்துட்டாரு டாடா ஹீரோ ? ” என்று கூறி திரும்பினாள் தானும் அதே படத்தில் உள்ள வசனத்தை தான் கூறுகிறோம் என்பதை மறந்து விட்டு .

அனந்தன் ஒரு முறை தான் முறைத்தான். இவள் பல்லை இளித்துக் கொண்டு நகர்ந்தாள்.

“மேடம் தான் டாடா ஹீரோயினுக்கு டயலாக் எழுதி கொடுத்தீங்களோ ?”

“ஹி ஹி……. சும்மா…….. இருந்தாலும் கவின் விட நீங்க ரொம்ப ஸ்மார்ட் அண்ட் ஹேண்ட்சம்மா இருக்கீங்க சார் “

அவள் சும்மா என்று கூறியதை கேட்டு கொண்டே நகர்ந்தவன் இறுதியில் அவள் தன்னை ரசிக்கிறாள் என்பது தெரிந்தவுடன் ஆண்மைக்கே உரிய வெட்கம் வெளியில் தென்பட்டது. அதன் பிரதிபலனாக உதட்டில் மெல்லிய கீற்றாக ஒரு சிரிப்பு.

அதோடு நிமிர்ந்தவன் ஒரு ஏக்க பெருமூச்சு விட்டுக் கொண்டு தொண்டையை செருமினான்.

ரோஸியின் தோளைத் தட்டி ஒருவன் ஆறுதல் கூறிக் கொண்டிருந்தான். அதனை கண் இடுங்கில் பார்த்துக் கொண்டிருந்தான்.

பின்பு, ரோஸி கப்பல் கேப்டனிடம் அனுப்ப வேண்டிய முக்கிய தகவலை  மறந்து விட்டாள் என்பதை கூறியவுடன் அதன் முக்கியம் புரிந்ததால் அனந்தனும் அவளை எச்சரிக்கை செய்து விட்டு திரும்ப அவனையே ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் பார்வை அவனை இம்சை செய்தது. இருந்தும் மனம் வராமல் முறைக்க முயல அதிர்ந்து விட்டான் அவளின் பேச்சில்.

கீர்த்தி ☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்