Loading

குளிர் ஊசி – 11 ❄️

ரோஸியின் காதலன் அவளை சமாதானம் செய்வது கண்டு திரும்ப, ஜனனி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதில் இவன் முறைக்க , அவனுக்கு மட்டும் புரியும் படி தமிழில் ” அய்யா அவர்களே , உங்களின் கண் என்னை மிகவும் இம்சை செய்கிறது. உங்களிடம் விழுந்தேன் என்பதை விட உங்களின் கண்களில் விழுந்து விட்டேன் என்பதே பொருத்தம் . அதனால், நாம் குட்டி போடலாமா ……. மேரேஜ் பண்ணி? ” என்று கால் கட்டை விரலால் கோலமிட்டு கொண்டே கேட்டாள்.

குட்டி போடலாமா என்பதற்கும் மேரேஜ்க்கும் இடையில் உள்ள அரை நொடி இடைவெளி அவனின் மனதினில் அலைகள் பாய்ந்து வரும் சுனாமி போல் பரபரவென ஆகிவிட்டது.

ஒரு நிமிடம் அவனே மூச்சு வாங்கினான் நெஞ்சில் கை வைத்து. வழக்கம் போல் “யூஸ்லெஸ் இடியட் “என்று முணுமுணுவித்து விட்டு நகர்ந்தான்.

அப்படியே அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே திரும்ப , ஸ்காட்டிஸ் பையன்  நெஞ்சில் கைவைத்து வாயைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனின் அருகில் வந்து அவனின் கையை கீழே இறக்கி, ஒரக்கண்ணால் அனந்தனை பார்த்துக் கொண்டே சிரித்தாள் , வெட்கப்பட்டு திரும்பினாள்.

அவளை ஒரு மார்க்கமாக அனந்தன் பார்க்க, அவனுக்கு கேப்டனிடம் இருந்து அழைப்பு வந்ததாக கூற , சிந்தனையை கூட்டி அவ்விடத்திற்கு விரைந்து சென்று விட்டான்.

அதில் எரிச்சலுட்டு “ச்சை “என்று கூறி திரும்பி, ஒரு நொடி யோசனை செய்வது போல் செய்து “ஆமா உன் பேரு என்ன ?  ” என்று கேட்டாள்.

” அட்லாஸ்ட் ஆஸ்கட்டு ? ” (கடைசியா கேட்டுட ? ) “ஜான் ” என்று கூறி கை கொடுத்தான்.

“டைம் இல்லை டைம் இல்லை ”  என்று கூறி திரும்பும் சமயம், ஜனனி, ஜான், ரோஸி , ரோஸியின் காதலன் வில்லியம் அனைவரையும் அழைத்ததாக செய்தி வர , அனைவரும் கேப்டனின் அலுவலகத்திற்கு சென்றனர்.

❄️❄️❄️❄️

லாராவை அழைத்து சில பல விஷயங்களை கூறிவிட்டு தனது வேலைக்கு கிளம்ப வண்டியை இயக்க, பாலா அருகில் வந்தமர்ந்தான்.

அவனை ஏற இறங்க பார்த்தவன் வண்டியை ஆஃப் செய்து விட்டு, கையை கட்டி கொண்டு பார்க்க, பாலா தான் நொந்து “இவன் தொல்லை தாங்கல” என்று மனதிற்குள் அவனை அர்ச்சித்து விட்டு  “டேய், நேரமாச்சுடா போடா யப்பா சாமி ….. அப்புறம் நம்ம வேலையை பாப்போம் என்று காலில் விழாத குறையாக கெஞ்சிய பிறகே வண்டியை எடுத்தான்.

அப்பத்து நிமிடமும் பாலா மனதிற்குள் திட்டி கொண்டே கவனத்தை அலைபேசியில்  வைத்துக் கொண்டே வர, சட்டென்று முன்னே முட்டி நிமிர்ந்தான்.

அதில் அலறி, நெற்றியை நீவி விட்டு நிமிர்ந்து மித்ரனை காண ” இடம் வந்துருச்சு அதான் நிப்பாட்டுனேன் ” என்றவுடன் நிமிர்ந்து மறுபக்கம் பில்டிங்கை பார்க்க, “அப்படி சொல்லுவேனு மட்டும் நினைக்காத ! நீ என்னை திட்டிட்டே இருந்ததால எனக்கு இருமல் வந்துருச்சு. அதான் திட்டுறத நிப்பாட்டனும்னு இப்படி பண்ணேன் ” என்று அசால்ட்டாக கூறுபவனை வெட்டவா குத்தவா  என்கின்ற ரீதியில் முறைத்தான்.

அதனை கண்டுகொள்ளாமல் வந்த அழைப்பை காண, புருவ முடிச்சுடன் திரும்பி பாலாவை பார்த்தான். மித்ரனின் முக மாற்றத்தை உணர்ந்து பாலா அலைபேசியின் திரையில் வந்த பேரைக் கண்டான்.

வேகமாக அவனிடம் வாங்கி ஸ்பீக்கரில் போட்டு “ஹலோ ” என்று கூறியவுடன், எதிரில் கூறிய செய்தியில் இருவரும் அடித்து பிடித்து ஒரு இடத்திற்கு சென்றனர்.

❄️❄️❄️❄️❄️

“நீங்க நினைச்ச மாதிரி தான் எல்லாம் போகுது. சீக்கிரமா நம்ம நினைச்சதுலாம் நடக்க தான் போகுது “என்று வாய்ஸ் மெசேஜ் செய்து விட்டு நக்கல் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தாள் லாரா.

❄️❄️❄️❄️❄️

அனைவரும் கேப்டனின் அறையில் குழுமியிருக்க, அரசாங்கத்தில் கப்பல் துறையில் முக்கிய அங்கமாக  இருக்கும் அட்மைரல் (கடற்படை அதிகாரி ) “ஆயில் உற்பத்தி குறைந்துள்ளது .  அதனால் தமது வருமானமும் குறைகின்றது. அதற்காக தான் புதியதாக இந்த ப்ராஜெக்ட்டை புதிய நிறுவனத்திடம் ஒப்படைத்து உள்ளோம். அவர்களும்  புது ஆட்களையும்  நியமித்து உள்ளார். நீங்களே உங்களுக்குள் அறிமுகம் ஆகி இருப்பீர்கள். அதனால் வேலையை துரிதமாக செயல்படுத்துங்கள் ” என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு, சில ப்ளு ப்ரின்டுகளையும் கொடுத்து விட்டு சென்றார்.

“இந்தாளு என்ன கஞ்சியை சட்டைக்கு போட்டாரா இல்லை பசிக்குதுனு வாய்க்கு கொஞ்சம் போட்டாரா .இவ்ளோ ரஃப் அண்ட் டஃபா இருக்காரு “

“ஏன் இந்த கடுப்பு ? ” ஜான் ,

“பின்ன  என்னடா இவ்வளவு பெரிய கம்பெனி என்ன நம்பி வேலைக்கு எடுத்துருக்கான். யாரு என்னனு பாக்காமா கேட்காமா அவன் பாட்டுக்கு ஒரு பாட்டை பாடிட்டு போறான். அதுக்கும் இதுங்க டிங் டிங்னு மண்டை ஆட்டிட்டு இருக்குதுங்க “

டிங்ங்……….

“அய்யோ எந்த அம்மே! “என்று கத்தி ஜனனி திரும்பி பார்க்க, அனந்தன் மெதுவாக தனது கூலர்ஸை கழட்டி “ஸாரி தெரியாம இந்த பெல் டிங் னு அடிச்சிருச்சு” என்று கூறி விட்டு, தலையில் கை வைத்து தேய்த்துக் கொண்டிருந்தவளின் கையைப் பிடித்து ஒரு காகிதத்தை கொடுத்து விட்டு மற்றவர்களிடமும் கொடுத்து விட்டு அறையை விட்டு வெளியேறினான் அவளைப் பார்த்துக் கொண்டே ஆனால் , அவள் அறியா வண்ணம்.

எப்போதடா அனந்தன் கிளம்புவான் என்று காத்துக் கொண்டிருந்த ஜான், கிளம்பிய நொடி வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான். ஏற்கனவே வாய் அர்ச்சித்து கொண்டு தான் இருந்தது. ஜான் சிரித்ததால் மேலும் உஷ்ணமாகி அவனின் முதுகை பதம் பார்த்து விட்டு தான் நகர்ந்தாள்.

ரோஸியும் வில்லியமும் இவர்களின் நடவடிக்கைகளை ஒரு மாதிரி பார்க்க, ஜான் தான் வெட்கி வெளியேறி விட்டான்.

வந்தவன் பார்த்தது ஜனனி யாரிடமோ படபடவென பொறிந்து கொண்டு இருந்தது தான். அவன் தலையை லேசாக இடவலமாக ஆட்டி விட்டு, கொடுத்த காகிதத்தை பார்க்க, அதில் ஆறு மாத அக்ரிமெண்ட் பத்திரம் இருந்தது.

அதை முழுதாக படித்த பின்பு தான் தெரிந்தது அவர்கள் ஆறு மாதம் எண்ணெய் தளமான பைப் ஆயிலுக்கு செல்ல வேண்டும் என்று .

சுமார் 455000 பீப்பாய்கள் உற்பத்தி செய்து கொண்டிருந்தனர். ஆனால், இப்பொழுது 300000 பீப்பாய்கள் மட்டுமே உற்பத்தி செய்கிறார்கள். அதனால், அதன் உற்பத்தியை கூட்ட , ஒரு புது குழுமம் உருவாக்கி அனுப்பி வைக்கிறது. ஆறு மாதத்திற்குள் உற்பத்தியை பெருக்குவதே இவர்களின் வேலை.

அதனைக் கண்டு தான் ஜனனி சரணிடம் புலம்பி கொண்டிருந்தாள். “டேய் பனங்கா மண்டையா ! “

ஜான் சுற்றி முற்றி தேட, “உன்னை தான்டா”

ஜான் முறைக்க, அதை கருதாமல் ” என்னடா ஆறு மாசம் போட்டுருக்காங்க. அதுவும் ஃப்ஸ்ட் டைம் வேற ……. “

“உன் ஆளும் வராரு… உனக்கு ஒரு ……. ” என்று கூறிக் கொண்டே ஜான் திரும்பியவன் அதிர்ந்து ஆவென வாயைப் பிளந்தான்.

கூலர்ஸை மாட்டிக் கொண்டு முப்பத்திரண்டு பல்லையும் காண்பித்து “எப்போ மச்சான் கிளம்புறோம் ” என்று கேட்ட ஜனனியை முடிந்த மட்டும் முறைத்து விட்டு நாளை கிளம்புவதற்கான வேலையைப் பார்க்க சென்றுவிட்டான்.

இவளும் சீக்கிரமே சென்று சரண் மற்றும் மாயாவின் உதவியுடன்  தேவையான பொருட்களை வாங்கி நாளை விடியலுக்குக்காக காத்திருந்தாள்.

நாமும் காத்திருந்து நாளை கப்பல் பயணம் மேற்கொள்வோம் …….. டா…….டா…… அந்த கமெண்டு …… ரேடிங்க்கு …… அப்படியே கொஞ்சம் ஃபாலாயிங்கும் ……. 😎😎😎😂😂😉😉

கீர்த்தி ☘️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்