Loading

உயிருள்ளவரை உன்னுறவு 

        ‘ பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாத மாநகரம் நம் சென்னை பட்டணம். அதிகாலை நான்கு மணிக்கே துவங்கும் ரயில்வே சேவையும் பேருந்து சேவையும் இரவு பதினொரு மணிவரை நிற்காதே தொடர்ந்திடும். 

   மிட்நைட் பிரியாணிகள் மூன்று நான்கு மணியளவில் முடிவுக்கு வந்தாலும் கூட, இதோ காலை நேர பிரியாணிகள் அடுத்த ஒரு சில மணிநேரங்களில் ஆவிபறக்க கடைகளில் தம் உடைத்து விற்பனைக்கு வந்திடும், அதை வாங்கிட கூடிடும் அடுத்த கூட்டம்… 

    இருபத்து நான்கு மணிநேரமும் இயங்கும் பல்நோக்கு மருத்துவமனைகள், சிறப்பு மருத்துவமனைகள் ஒருபுறம். மிட்நைட் பார்ட்டிகள் மிட்நைட்டில் ஐடி வேலைகள் மட்டும் அல்ல… ஏற்றுமதி இறக்குமதிகள்… கடல்சார் பணிகள்… மருத்துவ பணிகள்… காவல்துறை ரோந்துகள்… இரயில்வே பணிகள்… விமான போக்குவரத்துகள்

    இப்படி வைகறை துவக்கம் முதல் பொழுது சாய்ந்து நடு இரவுநேரம் வரை இயக்கத்தில் இருந்திடும் சென்னை மாநகரம். ‘

    இவை யாவும் மடிக்கணினியின் திரையில் ” சூப்பர் சென்னை” என்ற தலைப்பின் கீழாக தட்டச்சு செய்யப்பட்டிருந்த வார்த்தைகள். 

     சென்னை விம்கோ நகரில் இருந்து திரிசூலம் விமான நிலையத்திற்குச் செல்லும் மெட்ரோ ரயிலிற்காகக் காத்திருந்தாள் விதுரா. இப்பொழுது அவள் தேரடி நிலையத்தில் அமர்ந்திருக்கிறாள். நேரம் ஆவதை உணர்ந்து தட்டச்சு செய்வதை நிறுத்தியவள், சேமித்து வைத்து விட்டு மடிக்கணினியை மடித்து பத்திரப்படுத்திக் கொண்டாள். 

    இரயிலானது சில பணிமனை வேலைகளால் காலை பத்து முதல் இரவு பத்துவரை நிறுத்தி வைத்து இதோ இப்பொழுது தான் மீண்டும் துவங்கி உள்ளனர். கூட்டம் கொஞ்சம் அதிகமாகத் தான் இருந்தது. 

      அவளது காத்திருப்பிற்கு பலனாக அந்த ரயிலும் வந்துவிட, அடித்துப் பிடித்து ரயிலில் ஏறி ஒரு ஓரமாக நின்று கொண்டாள். ஏறியதும் சுற்றி யார் இருக்கிறார் என்பது கூட உணராமல் அலைபேசிக்குள் முடிந்துவிடும் மக்கள் கூட்டம்… ஆனால் அவர்களுக்கு மத்தியில் விதுராவின் கண்கள் யாவற்றையும் உற்றுப் பார்க்கத் துவங்கியது. 

    வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் சிலரின் சோர்ந்த முகங்கள்… தன் அருகில் நிற்கும் இணையுடன் காதல் பேசும் கனிவான இளைஞனின் முகம்… அலைபேசியிலேயே தன் காதலை வளர்க்கும் தொலைதூர காதலர்களின் ஏக்கங்கள்… தான் வாங்கி வந்த பொம்மையைப் பார்த்துப் பார்த்து ஆசை தீர விளையாடும் சிறுபிள்ளையின் முகம்… தாயிடம் புரியாத மொழி பேசும் மழலையின் முகம்… தோளில் சாய்ந்து யாவும் மறந்து உறங்கும் சிறுமலரின் கள்ளம் கபடமற்ற அன்பு முகம்… இன்னும் அநேகம்… 

    யாவரையும் பார்த்து முடித்து கடைசியாக ஒரு நபரின் முகத்தைக் காணவும் சற்றுத் தடுமாறிப் போனாள். தலை குனிந்தவள் அப்படியே பின்பக்கமாகத் திரும்பி மறுபக்கம் செல்ல வழி தேட, கூட்டத்தில் கொஞ்சம் கூட அசைய முடியாது என்ற நிதர்சனம் நெற்றிப்பொட்டில் தட்டியது. ஆனாலும் அவள் மனம் தைரியமாய்த் துள்ளிச்சாட, ‘கமான் விது, உன்னால முடியும்… யூ கேன்’ என்று தனக்குத்தானே ஆறுதல் உரைத்துத் திரும்ப முயல, முடியவில்லை… 

      தலையை மட்டும் திருப்பி பார்க்க, அவள் யாரைப் பார்த்துத் திகிலடைந்தாளோ அதே நபர்… 

   “பப்பு… ஈ… ” 

 “மூடிட்டு நில்லு… இல்ல… மவளே ஸ்பெஷல் டிரீட்மென்ட் தனியா தந்திடுவேன்… ” 

     முகத்தில் கோபத்தின் சாயல் சிறிதுமின்றி முக அசைவு மாறாது சத்தமின்றி வார்த்தைகள் கடித்துத் துப்புவது போன்று வெளிவந்தன. 

   ‘ஐயைய்யோ ரொம்ப கடியாகிட்டான் போலவே… இன்னைக்கு இருக்கு… வச்சு செய்வானே… ஐயோ கர்த்தரே எ(ஹெ)ல்ப் மீஈஈஈ…’ மனதினுள் பலவாறாக புலம்பிக் கொண்டிருந்தாள் விதுரா.  அவள் பின்னே நின்றிருந்தவனுக்கு அவளின் செய்கையும் முக அசைவுகளும் மெல்லிய சிரிப்பைக் கொடுத்தன. ஆனால் இப்பொழுது சிரித்து விட்டால் காரியம் கெட்டு விடும்… அதன்பின்னர் அவள் ஆட்டம் தான் யாராலும் சமாளிக்க இயலாது. 

      முக்கால் மணிநேரம் பயணத்திற்குப் பின்பாக கிண்டி இரயில் நிலையம் வந்திட, இறங்கும்படியாக செய்கை‌ செய்தவன்‌ முன்னே நகர அவளோ “முடியாது” என்றவள், நீ போய்க்கொள் என்பதுபோல் நின்று கொண்டாள். 

   “அடம்பண்ணாம வா… டிரெயின் எடுக்கப்போறாங்க…”

   “ நான் எங்கேயும் வரல…”

‌    “ விதண்டவாதம் பண்ணாத… உன்கிட்ட பேசுற அளவுக்கு பொறுமை இல்லை…”

   “யாருக்கும் பொறுமை வேண்டாம். தயவுசெய்து கிளம்பு… அவன பார்க்காம கண்டிப்பாக நான் வர மாட்டேன்” என்றவளின் குரல் உடைந்து வெளிவந்தது. 

      “அழுவாதடி… ஏன்மா இப்படி அடம்பண்ணுற… வந்துருமா… அவங்க யாரோ எவரோ… நல்லவனா னு கூட தெரியலையே… அவங்கள தொல்லைப்பண்ணுற மாதிரி ஆகிட கூடாதுடா…” என்றவன் , அவளைத் தன் மார்போடு அணைத்துக் கொள்ள, அவளுக்கும் அந்த அணைப்பு தேவையானதாக இருந்தது. 

        “அம்… அம்மா” என்று அழுதவாறு கூற, “அது லாம் பாத்துக்கலாம் வாடா” என்றவன் , “சரி இப்ப வீட்டுக்குப் போக வேணாம்… இங்கேயே எங்கனாச்சும் சுத்தலாம்… அப்படியே நானும் பீர் அடிச்சுக்குறேன்…” என்றிட, “அடிங்க… நீ இந்த இஸ்க்கு இஸ்க்கு தான் வந்தியா…”என்றவள் அடுத்த இரயில் நிலையத்தில் அவளின் பாப்புவோடு இறங்கிவிட்டாள். துக்கம் மனதை அடைத்தாலும் அதிக அளவு அதை வெளியே காட்டிக்கொள்ள மாட்டாள். ஆனால் அவளின் பப்புவிடம் மட்டும் அவள் ஒரு மடை திறந்த ஆறு. 

    விதுரா‌… இருபத்து ஐந்தின் துவக்கத்தில் இருக்கும் இளம்பெண். ஆஹா ஓஹோ என்று சொல்லாவிட்டாலும் இளைஞர்கள் சைட்டடிக்கும் வகையில் என்று சொல்லப்படும் பக்கத்து வீட்டுப்பெண் வகையறா அவள். பளிச்சிடும் மைதா மாவு நிறம் கிடையாது. சராசரியான திராவிட நிறம்… சராசரியாக ஐந்தரை அடி உயரம் இருப்பாள்‌. இப்போதைக்கு இவ்வளவு போதும்.

      “ இப்ப எங்கடி போறது… ஒரு பீருக்கும் நோ சொல்லிட்ட…” பப்பு

      “பப்பு தூரத்துல ஒரு சர்ச் தெரியுது பாரேன். வாடா போய்ட்டு வரலாம்…” 

     “ மிட்நைட் ல பாருக்கு போற நேரத்துல சர்ச்சுக்குப் போய் இவ கூட சிங்கி அடிக்க வைக்குறாளே… கடவுள் மேல நம்பிக்கை இருந்தால்கூட பரவாயில்ல… நம்பிக்கை இல்லாதவன இழுத்துட்டுப் போய் வாட்ச்மேன் டியூட்டி பாக்க வைக்குறாளே…” பப்பு.

   “ஏன் அவனவன் இந்த நேரத்துல அவன் லவ்வர் கூட உளுந்து போட்டுட்டு இருப்பான்… நீ … ம்ஹ்ம்ம்… ஒன்னத்துக்கும் வக்கில்ல… அப்புறம் என்னடா பாடிசோடா…” விதுரா

   “ஆமா அது என்ன உளுந்து போடுவான்… மிட்நைட் ல விவசாயமா பண்ண போறானுங்க… லவ் பண்றவங்க விவசாயம் கூட பண்ணுவாங்களா…” என்று மிக முக்கியமான கேள்வியை அவன் கேட்க, அவளும் பதிலுக்கு 

   “எத்தனை நாள் தான் கடலை போடுறாங்க சொல்றது… கொஞ்சம் மாத்தி உளுந்து பருப்பு கடுகுனு தான் சொல்லுவோமே…

   ஆனா ஒன்னுடா… இந்த லவ்வர்ஸ் லாம் விவசாயம் பண்ணணும்னு ரூல்ஸ் கொண்டு வந்தா நல்லா இருக்கும்ல…” 

   “ஏன் அப்படி சொல்லுற…” பப்பு

   “ஆமாம்டா இந்த லவ்வர்ஸ் கடுகு போடுற நேரம் ரொம்ப அதிகம்… ஒரு ஏக்கர் நிலத்துல பத்து ஜோடி இறக்குனா கூட, இரண்டு மணிநேரம் ஒரு ஜோடினு கணக்கு போட்டா கூட நிலத்தை உழுற வேலையை சூப்பரா செஞ்சு முடிச்சிடுவாங்க… 

   நீ வீடியோஸ்ல இத பாத்தது இல்லையா… நம்ம தளபதி கூட வேட்டைக்காரன் படத்துல அனுஷ்காகிட்ட பேசிக்கிட்டே பைப்ப உடைச்சு தண்ணி வர வைப்பாரே… எப்படி என் ஐடியா… “ என்று பெருமையாகச் சொல்ல , 

      “இதுகூட நல்ல ஐடியா தான்… வருங்கால முதலமைச்சர் தளபதி விஜய் அண்ணா கிட்ட இதைப்பத்தி பேசணும்டி” என்று அவளுக்கு ஒத்து ஊதிக்கொண்டான். 

  “நம்ம பெரிய ஆள்தான்டா… நமக்குள்ள எம்பூட்ட்ட்ட்டு அறிவு..‌.“ என்று இவள் தன்னை மேதையாக நினைத்துக் கூற, அவனும் “ ஆமாடி… நாம இங்க இருக்க வேண்டிய ஆளே கிடையாது… இந்த உலகம் நம்மைய இங்கவே அடக்கி வச்சுட்டாங்க” என்று ஒத்து ஊதிக் கொண்டான். அப்படியே அவளது ஆசைக்கேற்ப தொலைவில் தெரிந்த ஆலயத்திற்கும் அழைத்துச் சென்றான்.

    விதுராவின் வாய் என்ன தான் குறும்பாகப் பேசினாலும் அவள் தேடும் அந்த மனிதனைக் காண இயலாத ஏக்கம் அவளுக்குள் கொட்டிக் கிடப்பதை அவனும் அறிவான். ஆனால் இதற்குமேல் மனதைத் திறந்து சொல்லிவிட மாட்டாளே படுபாவி… 

* * * *

     “அண்ணே… பாப்பா ரொம்ப தேடுறாங்க அண்ணே… கம்பீரமா பாத்து பழகிட்டு இப்ப அவங்கள இப்படி பாக்க முடியல அண்ணே… “ 

“எனக்கு மட்டும் ஆசையா என்ன… பாப்பாகிட்ட நான் என்னத்த சொல்ல… சொன்னாகூட புரிஞ்சுப்பாளா… இப்பயும் அம்மா அம்மானு அடிக்கடி புலம்புறதா பப்பு சொன்னான். என்னால முடியலடா தம்பி… 

    மகராசி அவபாட்டுக்கு சேவை செய்யுறேன்னு சொல்லிப் போய்ட்டு கடைசில பொணமாதான் வந்தா… அவ சாவையும் மரியாதையா‌ பண்ண விட்டானுகளா… போயிட்டாளே… போனவ எங்களையும் சேத்து கொண்டுபோகாம நட்டாத்துல விட்டுட்டு போய்ட்டா…” 

     தன் ஏக்கத்தை எப்படி தீர்க்கவென்று தெரியாமல் பெருமூச்செறிந்து சொல்லி முடித்தார் ஜாண்போஸ். 

   அவருடைய மகள் விதுரா எத்தனை குறும்புக்காரியோ அதே அளவு தைரியமானவளும் கூட. துளியும் கவலைகளைக் கண்டு அஞ்சாதவள். ஆனால் ஒரு இழப்பு அவளை அடியோடு சாய்த்து விட்டது. இப்பொழுது துவண்டுபோய் விட்டாளா என்றால் அப்படி சொல்ல முடியாது. இப்பொழுதும் பழையதுபோல தான் இருக்கிறாள். ஆனால் அவளது குறும்புகளிலும் சிரிப்பிலும் உயிர்ப்பே இல்லை. எங்கே வீட்டிற்கு வந்தால் திரும்ப பழைய நினைவு தன்னை ஆட்கொண்டு விடுமோ என்ற பயத்தின் விளைவாக சென்னையிலேயே தங்கி விட்டாள். 

    “அண்ணே, பாப்பாக்கு வயசும் ஆகுதே ண்ணே‌… இருபத்தஞ்சு (25) முடிய போகுதே…” 

    “ஹ்ம்ம்… வயசும் ஏறுதுல… அவள இந்த கையில தான் சின்ன பூவப்போல வாங்குனேன். அப்ப எல்லாம் நீங்க இல்ல… என் புள்ளய கையுல வாங்கவே பயம் தெரியுமா… 

     நீ அவள அப்ப பாத்திருக்கணுமே சின்ன கருப்பு திராட்சை பழம் கண்ணுக்குள்ள இருக்குறது போல இருக்கும்… அவ கைபோல பத்து கைய என் உள்ள கையில வைக்க முடியும்… அப்படி ஒரு அழகி… 

     எனக்கு தான் அவள தூக்க தெரியாது. உனக்கு ஒரு விஷயம் தெரியுமாடா… ஒரு முறை தூக்க தெரியாம தூக்கி கீழ போட்டுட்டேன்… அதுக்கு அப்புறம் என்ன பாத்தாலே கிட்ட வரமாட்டா தெரியுமா… என்னைய பூச்சாண்டி னு காட்டியே என் மகராசி என் புள்ளைக்கு சாப்பாடு குடுப்பா‌… 

     அப்பயில இருந்து எனக்கு பெயர் என்னமோ பூச்சாண்டி தான்… ஆனா அவளுக்கு என்னைய பெருசா பிடிக்காது போல… என்கிட்ட அளந்து தான் பேசுவா… ஆனா எனக்கு அவகிட்ட உக்காந்து பேச கோடி விஷயம் கொட்டி கிடக்குது‌… ஆனா அந்த ஆசையெல்லாம் நிறைவேறாதுனு எனக்கே தெரியும்… 

     எனக்கு என் புள்ள கல்யாணத்த கண்குளிர பாத்து அவ பெத்து குடுக்குற பொம்பள பிள்ளைக்கும் நானே பூச்சாண்டியா மாறிடணும்டா தம்பி…”

    “என்ன ண்ணே… அதுலாம் நம்ம பாப்பா கல்யாணத்த நல்லா ஜாம் ஜாம்னு நடத்திடலாம்…”

    “இல்லடா… என் மனசு என்னமோ தப்பா படுது… எங்க அவள கடைசியா பாக்காமலே கண்ண சாச்சுடுவேனோனு… எதுக்கும் நாளைக்கு அவள நானு சென்னைல போயி பாத்துட்டு வரேன்…”

   எதனாலோ தெரியவில்லை… அவருக்கு மனது நன்றாக இல்லை… எதாவது கெட்டது நடந்துவிடுமோ என்று பயம். அதற்குமுன் தன் மகளைக் கண்டுவிட வேண்டும் என்ற ஆவல். இதோ நாளைக்கு செல்ல வேண்டும் என்று ஆயத்தமாகி விட்டார். 

***

வாழ்க்கை என்னும் படகில் தற்போதைய குறிக்கோள்கள் பல உள்ளன. பள்ளி செல்லும் மாணவிக்கு ஆசிராயர் தந்த வீட்டுப்பாடத்தைச் செய்வதும் வீட்டில் இருக்கும் மனைவிக்கு இரவு உணவு சமைத்து நேரத்தோடு உறங்குவதும் போல, இதோ விதுராவிற்கு அந்த நபரைக் கண்டடைவதும் ஜாண்போஸிற்கு தன் மகளைக் காண்பதும் தங்கள் குறிக்கோள்கள். அவற்றை அடைந்தார்களா… 

தொடரும்… 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
19
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    12 Comments

    1. Nice ud semma start sillu ma😍😍.
      Papu and vithu convo semma comedy ah cute ah iruku. Apdi yaara theduraa ava 🤔🤔

      Avanga appva patha konja varuthama iruku. Ana vithu kolanthaikum poochandiya mara porarama😂😂😂.

      Vithu avanga appa kooda pesa veppiya sil.
      Waiting for next ud 😍

      1. Author

        Thank you. S ofcourse… Poochandiye tha…
        Peasa vaikanum ah 🫣😁

      1. Author

        நன்றி க்கா 🤩.

    2. உங்க அறிவுல தீய வைக்க😂😂 சில்லு.. வழக்கம் போல உன் கதையில இருக்குற அழுத்தத்தை ஆரம்பத்திலேயே காட்டிட.. அப்பா பொண்ணு சென்டிமென்ட்.. பப்பு விது combo super♥️ சீக்கிரம் அடுத்த episode போடு

      1. Author

        🫣🤣🤣🤣

        எப்படி என்னுடைய அறிவான திட்டம் 🫣🤣… எப்படி தான் சிரிப்பா கொண்டுபோனாலும் கடைசில கேவலமா மாட்டிக்கிறேன் டோரா 😂
        ஜீக்கிரம் போடுறேன் 😁😁😁🫣

      2. அக்கா அருமைக்கா.. ஆரம்பமே ஆப்பு வெச்சுட்டீங்க போல

    3. அருமையான ஆரம்பம் 😊😊
      விம்கோ தேரடி எல்லாம் வருது..
      அது எங்க ஏரியா ஆச்சே
      😊🤔🤔🤔

      1. Author

        Anga apopo vantha pazhakam 😁. Atha antha route ah potu vitean 😝…