ஆர்யான் கூறி முடிக்க அனைவரின் கண்களும் கலங்கி இருந்தன.
அந் நேரம் அங்கு வந்த நர்ஸ் ஆர்யானிடம், “டாக்டர் உங்கள வர சொன்னாங்க..” என்று விட்டு செல்ல ஆர்யான் அவருடன் செல்ல ஆதர்ஷும் அவர்களைப் பின் தொடர்ந்தான்.
டாக்டரிடம் சென்றவர்கள், “டாக்டர் வர சொல்லி இருந்தீங்க…” என்க,
டாக்டர், “யா.. ப்ளீஸ் டேக் யுவர் சீட்…” என்க,
ஆர்யான், “டாக்டர்.. மினிக்கு ஒரு பிரச்சினையும் இல்லல்ல..” என பதட்டமாக கேட்க,
ஆதர்ஷ் அவன் கையைப் பிடித்து அமைதியாக்கினான்.
டாக்டர், “அதை பத்தி பேச தான் வர சொன்னேன் சார்…” என்றவர் சற்று இடைவெளி விட்டு,
“இது அவங்களுக்கு தேர்ட் டைம்னு சொன்னீங்க இல்லயா… நானும் அவங்கள டெஸ்ட் பண்ணேன்… அவங்க சாதாரணமா இருக்குற போல வெளிய உங்களுக்கு தெரியலாம்… பட் அது உண்மை இல்ல அவங்க எதை பத்தியோ ரொம்ப டீப்பா திங்க் பண்ணிட்டு இருப்பாங்க… இது தான் மிஸ்.சிதாராவுக்கு ஃபிட்ஸ் வர ஸ்டார்ட் ஆக காரணமா இருந்திருக்கு…
பொதுவா ஃபிட்ஸ் வர பல ரீசன்ஸ் இருந்தாலும் அது நேரடியா அவங்களோட ப்ரைன தான் தாக்கும்… இது மிஸ்.சிதாராவுக்கு தேர்ட் டைம் வேற… இது தொடர்ந்தா அவங்க ப்ரைன் டேமேஜ் ஆகி உயிருக்கு ஆபத்தாகலாம்… கோமா ஸ்டேஜ்க்கு போக கூட வாய்ப்பு இருக்கு…” என்று நிறுத்த ஆர்யான், ஆதர்ஷ் இருவரும் அதிர்ந்தனர்.
ஆர்யான் பதறி, “என்ன சொல்றீங்க டாக்டர்… ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க டாக்டர்... என்னோட மினிய எப்படியாச்சும் கியூர் பண்ணி குடுங்க…” என அழ ஆதர்ஷுக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை.
உடன் பிறக்காவிட்டாலும் அவனின் செல்லத் தங்கை அவள்.
சொல்லப் போனால் லாவண்யா, சிதாரா இருவரில் யார் முக்கியம் என்று கேட்டால் ஒரு நொடி கூட யோசிக்காமல் சிதாரா என்று கூறுவான்.
அவ்வாறிருக்க டாக்டர் கூறியதைக் கேட்டவனால் தாங்க முடியவில்லை.
ஆதர்ஷ், “இதை கியுர் பண்ண ஏதாவது வழி இருக்கும் தானே டாக்டர்..” என்க,
டாக்டர், “மெடிசின்ஸால இதை பர்மனன்ட்டா கியூர் பண்ண முடியாது சார்… மெடிசின்ஸால ஃபிட்ஸ் வராம ஸ்டாப் பண்ணி வைக்க முடியும்… மெடிசின்ஸ் ஸ்டாப் பண்ணா அகைன் ஃபிட்ஸ் வரும்… என்ட் கன்ட்னியுஸா மெடிசின் எடுத்துக்குறது அவங்களோட கிட்னிய டேமேஜ் பண்ணும்… அதனால ஏதாவது பண்ணி அவங்க மனசுல இருந்து அவங்கள ரொம்ப பாதிச்ச அந்த விஷயத்த எடுத்துப் போட ட்ரை பண்ணுங்க… நான் இப்போதெக்கி அவங்களுக்கு ஃபிட்ஸ் வராம இருக்க மெடிசின்ஸ் எழுதி தரேன்… பட் இது நிரந்தர தீர்வு இல்ல…” என்றார்.
அவரிடம் நன்றி கூறி விட்டு இருவரும் சிதாரா இருந்த வார்டுக்கு வந்தனர்.
அக்ஷரா, “டாக்டர் என்ன சொன்னாங்க அண்ணா…” என ஆர்யானிடம் கேட்க அவன் ஏதோ யோசனையில் இருக்க,
ஆதர்ஷ் டாக்டர் கூறிய அனைத்தையும் அவர்களிடம் கூறியவன் வந்த ஆத்திரத்தில் பிரணவ்விடம் சென்று அவன் கன்னங்களில் மாறி மாறி அடித்தான்.
பிரணவ்வோ குற்றவுணர்ச்சியில் இருந்ததால் ஆதர்ஷ் அடித்தது எதுவும் உறைக்கவில்லை.
ஆதர்ஷ், “மனுஷனாடா நீ… ச்சீ… உன்ன எல்லாம் ஃப்ரன்ட்டுன்னு சொல்லவே அசிங்கமா இருக்குடா…” என்றவன் மீண்டும் அவனை அடிக்க லாவண்யா வந்து தடுத்தாள்.
பின் பிரணவ்வை பார்த்து லாவண்யா, “உங்களுக்கும் சித்துக்கும் இடைல ஏதோ மிஸ் அன்டர்ஸ்டேன்டிங்… அதனால தான் பிரிஞ்சிட்டீங்கன்னு நெனச்சேன் அண்ணா… பட் எங்க சித்துவ நீங்க இப்படியெல்லாம் பேசி இருப்பீங்கன்னு சத்தியமா எதிர்ப்பார்க்கல அண்ணா… அந்த பைத்தியக்காரி உங்கள எவ்வளவு காதலிச்சிருக்கான்னா எங்க கிட்ட ஒரு வார்த்தை உங்கள பத்தி தப்பா சொல்லல அவ… ” என்கவும் பிரணவ்விற்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.
நர்ஸ் வந்து, “இவ்வளவு பேர் இருந்தா பேஷன்ட்டுக்கு டிஸ்டர்ப்பா இருக்கும்… யாராவது ஒருத்தர் மட்டும் கூட இருங்க…” என்க,
ஆர்யான் சிதாராவுடன் இருக்க மற்ற அனைவரும் வெளியேறினர்.
சிதாரா கண் விழிக்கும் வரை அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆர்யான்.
சற்று நேரத்தில் அவள் மெதுவாக கண்விழித்தவள் எழுந்து அமர முயற்சிக்க அவளுக்கு உதவி செய்த ஆர்யான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
சிதாரா அவனைப் பார்த்து புன்னகைக்க அவனோ அமைதியே உருவமாக இருந்தான்.
சிதாரா, “சாரி ஜிராஃபி… உன்ன நான் ரொம்ப டென்ஷன் படுத்துறேன்ல… ” என்க,
“ஃபிட்ஸ் வந்த பொண்ணு… உடம்புல தெம்பு இருக்காதுன்னு பாக்குறேன்… இல்ல நீ இப்படி சொல்றத கேட்டு கன்னத்துல போட்டிருப்பேன்…” என ஆர்யான் கூற, சிதாரா கப் சிப்பென வாயை மூடிக் கொண்டாள்.
அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டவன்,
“நான் அவ்வளவு சொல்லியும் நீ புரிஞ்சிக்க மாட்டேங்குறல்ல மினி… போதும்… உன்ன ரொம்ப நாள் விட்டு வெச்சாச்சி… இன்னெக்கே எனக்கொரு பதில் வேணும்…” என்றான்.
சிதாரா, “ஹஹா… நீ என்ன லூசா ஜிராஃபி… எப்போ ஜோக் பண்ணனும்னு கூட ஒரு விவஸ்தை இல்லையா…” என்க,
அவளை முறைத்த ஆர்யான், “போதும் சமாளிச்சது… நீ இந்த தடவ எப்படி தப்பிக்கிறன்னு நானும் பாக்குறேன்..” என்க,
அவனை எதிர்த்து சிதாரா ஏதோ கூற வர, அதற்குள் பிரணவ்வையும் அபினவ்வையும் தவிர மற்றவர்கள் அறைக்குள் நுழைந்தனர்.
ஆதர்ஷ் தான் அவனை உள்ளே வர வேண்டாம் எனக் கூறியிருந்தான்.
பிரணவ் ஏற்கனவே குற்றவுணர்வில் தவித்துக் கொண்டிருப்பதால் அவனுடன் அபினவ்வும் நின்றான்.
லாவண்யாவும் அக்ஷராவும் சிதாராவை இரு பக்கமும் இருந்து அணைத்துக் கொள்ள புன்னகைத்த சிதாரா,
“ஏன்டி… நான் செத்துடுவேன்னு பயந்துடீங்களா..” என்க அக்ஷரா பட்டென அவள் கன்னத்தில் ஒன்று போட்டாள்.
ஆர்யான், “இன்னும் ரெண்டு சேத்து போடும்மா… அப்ப தான் புத்தி வரும்…” என்க,
சிதாரா அவசரமாக இரு கன்னத்தையும் கைகளால் மறைத்துக்கொண்டு பாவமாக உதட்டைப் பிதுக்கினாள்.
அவள் முகம் சுருங்குவதைத் தாங்காத ஆதர்ஷ்,
“எல்லாரும் சும்மா இருங்க என் தங்கச்ச எதுவும் பண்ணாம..” என்றவன் சிதாராவிடம் சென்று அவள் தலையை வருடினான்.
லாவண்யா, “பாசமலரே… அப்படியே உங்க தொங்கச்சிக்கு ஒழுங்கா பேசவும் சொல்லி கொடுங்க..” என கேலியாக கூற ஆதர்ஷ் அவளை முறைத்தான்.
லாவண்யாவோ உதட்டை வளைத்துக் காட்டியவள் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.
வெளியே அபினவ் பிரணவ்விடம், “நீ பண்ணது தப்பு தான் மச்சான்… இல்லன்னு சொல்லல… அதுக்காக நான் இங்க நின்னுட்டு இருக்குறதுக்கு அர்த்தம் நீ பண்ண தப்புக்கு சப்போர்ட்டா இருக்குறேன்னு இல்ல… என்னோட ஃப்ரென்ட் தான் பண்ண தப்ப உணர்ந்திருப்பான்னு ஒரு நம்பிக்கை… இந்த நேரத்துல உன்ன தனியா விட எனக்கு மனசு வரலடா…” என்க,
“தேங்க்ஸ் டா..” என அவனை அணைத்துக் கொண்ட பிரணவ்,
“நீயும் உள்ள போடா… உனக்கும் அவ மேல நிறைய அக்கறை இருக்குன்னு எனக்கு தெரியும்… எப்படியும் உள்ள இருக்குற யாரும் தாராவ பத்தி என் கிட்ட சொல்ல மாட்டாங்க… நீ போய் பாத்துட்டு வந்து அவள் எப்படி இருக்கான்னு சொல்லு…” என்றான்.
அபினவ், “நீயும் உள்ள வா மச்சான்… ” என்க,
“வேணாம்டா… தாரா என்ன பாத்தா இப்ப ரொம்ப டென்ஷன் ஆகுவா… என்னாலயும் அவ முகத்த நேரா பாக்க சக்தி இல்ல…” என பிரணவ் கூற,
வேறு எதுவும் கூறாமல் சிதாரா இருந்த அறைக்குள் நுழைந்தான் அபினவ்.
பின் சிதாராவை டிஸ்சார்ஜ் செய்து அவர்கள் தங்கியிருந்த ரெட் ஹவுஸ் அழைத்துச் சென்றனர்.
அடுத்த இரண்டு நாளில் டூர் முடிய அனைவரும் ஊருக்கு கிளம்பினர்.
அந்த இரண்டு நாளுமே ஆர்யான், லாவண்யா, அக்ஷரா மூவரும் சிதாராவை விட்டு எங்கும் அசையவில்லை.
எப்போதும் அவளுடன் ஏதாவது பேசிக்கொண்டு அவள் யோசனை வேறு எங்கும் செல்லாமல் பார்த்துக் கொண்டனர்.
பூஞ்சோலை கிராமத்தை அடையும் போது இரவாகி இருந்தது.
எனவே அனைவரும் அன்று அங்கே தங்கி விட்டு அடுத்த நாள் வீடுகளுக்கு செல்ல முடிவெடுத்தனர்.
மறுநாள் காலையில் அனைவரும் கிளம்பிய பின் ஆதர்ஷ், பிரணவ், அபினவ் மூவரும் கிளம்பத் தயாராகினர்.
( பூஞ்சோலைக் கிராமத்திற்கு பக்கத்து ஊரான வேந்தன்யபுறம் தான் ஆதர்ஷ் மற்றும் அபினவ்வின் ஊராகும்.
ஆனால் இருவருமே வேலைக்காக சென்னையில் இருக்கின்றனர்.
பிரணவ் மற்றும் ஆர்யானின் வசிப்பிடம் சென்னை.
சிதாரா, லாவண்யா இருவரும் ஆரம்பத்திலிருந்தே பூஞ்சோலைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
அக்ஷராவின் பள்ளிப் பருவத்தில் அவள் குடும்பத்தோடு பூஞ்சோலைக் கிராமத்திற்கு குடிபெயர்ந்தனர்.
சிதாராவின் பெற்றோர் தற்போது கோயம்புத்தூரில் இருக்கின்றனர்.
சிதாராவின் தந்தை சங்கர் ஒரு பேங்க் மேனேஜர் என்பதால் அவருக்கு ட்ரான்சர் கிடைத்து இப்போது அங்குள்ளனர்.
லாவண்யாவின் குடும்பம் பரம்பரை பணக்காரர் என்பதால் அவள் தந்தை ராஜேந்திரனே அங்கிருந்த நாட்டாமை.
அக்ஷராவின் தந்தை கருணாகரன் ஒரு ஆசிரியர்.
மூவரின் தாய்மாருமே இல்லத்தரசிகள். )
ஆர்யான் தோழிகள் மூவருடன் ஹாலில் இருக்க மற்ற மூன்று ஆண்களும் மேலே அறையில் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தனர்.
பிரணவ், “டேய் ஆதர்ஷ்… ப்ளீஸ்டா… ஒரே ஒரு தடவ நான் தாரா கூட பேசனும்டா… திரும்ப அவள ஹர்ட் பண்ற மாதிரி எதுவும் பேச மாட்டேன்… ப்ராமிஸ்டா… ” என்க,
ஆதர்ஷோ அபினவ்வைப் பார்த்து, “இவனுக்கு பேசாம இருக்க சொல்லு அபிணவ்… இது வரைக்கும் இவன் செஞ்சி வெச்சிருக்குறதையே சரி பண்ண முடியாம இருக்கோம்… ஒழுங்கா ஊருக்கு கிளம்புற வேலைய பார்க்க சொல்லு..” என்க,
பிரணவ், “மச்சான் ப்ளீஸ்டா… ஊருக்கு போக முன்னாடி கடைசியா ஒரே ஒரு தடவ தாரா கூட பேசிட்டு வரேன்டா..” என்றான்.
அதற்கும் ஆதர்ஷ் அபினவ்வைப் பார்த்து ஏதோ சொல்ல வர,
இருவருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு முழித்த அபினவ்,
“அடச்சீ நிறுத்துங்க… ஆதர்ஷ்… உனக்கு தான் அவன் மேல இருந்த கோவம் கொறஞ்சிடுச்சுல்ல.. பின்ன நேரா பார்த்து பேசிக்கிட்டா என்னவாம்… நடுவுல என்ன வெச்சி காமெடி பண்றீங்களா… டேய்.. அதான் பிரணவ் அவன் பண்ண தப்ப உணர்ந்துட்டானே… கடைசியா ஒரு தடவ சித்து கூட பேசுறேன்னு சொல்றான்.. சரின்னு சொல்லேன்டா…” என ஆதர்ஷைப் பார்த்து கூறியவன்,
பின் பிரணவ்விடம், “இங்க பாருடா… திரும்ப ஏதாவது ஏடாகூடமா பேசினன்னு வையேன்… அப்புறம் நானே உன்ன சும்மா விட மாட்டேன்…” என்றான்.
சற்று சமாதானமான ஆதர்ஷ், “சரி… பட் அவன் எங்க எல்லாரு முன்னாடியும் தான் சித்து கூட பேசனும்..” என்கவும் பிரணவ் சற்று யோசித்து விட்டு சரி என்றான்.
தமது பையுடன் மூவரும் கிளம்பி ஹாலுக்கு வர ஆர்யான் ஏதோ சீரியசாக கூறிக் கொண்டிருக்க மூவரும் அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
பிரணவ் மெதுவாக அவர்களிடம் சென்று தொண்டையை செறும நால்வரும் அவனை ஏறிட்டனர்.
பிரணவ் தயங்கியபடி சிதாராவைப் பார்த்து தாரா எனக்கூற வர சிதாராவின் பார்வையில் அவசரமாக,
“சிதாரா.. நான் உன் கூட கொஞ்சம் பேசனும்..” என்க,
ஆர்யான் கோவமாக எழுந்து ஏதோ கூற வர அவனைத் தடுத்த சிதாரா,
“சொல்லுங்க பிரணவ்..” என சிறிதும் மாற்றமின்றி தெளிவான குரலில் கூறினாள்.
அவளின் தெளிவான பேச்சில் அங்கிருந்த அனைவருமே வியக்க ஆர்யான் மட்டும் மகிழ்ந்தான்.
பிரணவ், “உன் கிட்ட மன்னிப்பு கேட்க கூட எனக்கு தகுதி இருக்கான்னு தெரியல… எதுவும் தெரியாம பண்ணேன்னு பொய் சொல்ல மாட்டேன்… தெரிஞ்சி தான் எல்லாம் பண்ணேன்… பட் ப்ளீஸ் முடிஞ்சா என்ன மன்னிச்சிடு..” என்க,
சிதாரா ஒரு நொடி கூட யோசிக்காது, “சரி மன்னிச்சிட்டேன்… வேற ஏதாவது சொல்லனுமா..” என்றாள்.
சிதாராவின் தெளிவான பேச்சை பிரணவ் கூட எதிர்ப்பார்க்கவில்லை.
அதை அவன் முகமே காட்டிக் கொடுத்தது.
ஆர்யானுக்கு அப்போது பிரணவ்வைக் காணும் போது ஏனோ சிரிப்பு வந்தது.
வாயை மூடி சிரித்தான்.
“எனக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் தர மாட்டியா தாரா…” என சட்டென பிரணவ் ஏக்கமாக வினவ,
ஆதர்ஷ் கோவத்தில் பிரணவ்வை ஏதோ சொல்ல முன்னேற அவன் கைப் பிடித்து தடுத்தான் அபினவ்.
அனைவரும் சிதாராவின் பதிலை எதிர்ப்பார்க்க சிதாராவோ திரும்பி ஆர்யானைப் பார்த்து புன்னகைத்தாள்.
ஆர்யான் கூட சிதாராவின் முகத்தை தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
சிதாரா, “சாரி பிரணவ்… என்னால நீங்க கேட்டத தர முடியாது… நான் உங்கள மன்னிச்சிட்டேன் தான்.. ஆனா நீங்க பண்ண எதையுமே மறக்கல… அத என்னால மறக்க முடியுமான்னு கூட தெரியல… அதை மனசுல வெச்சிக்கிட்டு திரும்ப உங்க கூட என்னால இருக்க முடியாது… சோ நீங்க ஆசைப்படுற மாதிரி உங்களுக்கு ஏத்த ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க… சாரி…” என்க,
பிரணவ், “நான் நிஜமாவே திருந்திட்டேன் தாரா… என் தப்ப உணர்ந்துட்டேன்… என்னால இனி உன்ன தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது… நம்ம பிரேக்கப் அப்போ நீ கூட சொன்னாய் தானே என்ன தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு… நாமளே கல்யாணம் பண்ணிக்கலாமே…” என்கவும் சிரித்தாள் சிதாரா.
பின், “அந்த டைம்ல காதல் கண்ண மறச்சிடுச்சி பிரணவ்… ஏதோ உங்க மேல அப்போ இருந்த அளவுக்கதிகமான காதல்ல அப்படி சொன்னேன்… இப்போ தான் வெளியுலகத்த பாத்து கொஞ்சம் மெச்சூர்ட் ஆகி இருக்கேன்… அதனால தான் நான் எவ்வளவு பைத்தியக்காரியா இருந்திருக்கேன்னு புரிஞ்சிக்கிட்டேன்…” என சிரித்தபடி கூறிய சிதாரா பின் பிரணவ்வின் கண்களைப் பார்த்து அழுத்தமாக தெளிவாக,
“ஆனா இப்போ தெளிவா சொல்றேன் கேட்டுக்கோங்க… நான் நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பேன்… ஆனா அது என்ன பத்தி முழுசா தெரிஞ்சி என்ன புரிஞ்சிக்கிட்டு என்ன நானாவே ஏத்துக்குற ஒருத்தனா இருப்பான்… நிச்சயம் அது நீங்க இல்ல..” எனக் கூறினாள்.
அவள் இன்னொருவனைத் திருமணம் செய்வேன் எனக் கூறியதைக் கேட்ட பிரணவ்விற்கு கோவமாக வந்தது.
பிரணவ், “உன்னால நிச்சயமா என்ன தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது தாரா.. எப்போ இருந்தாலும் நீ என்ன தான் கல்யாணம் பண்ணிப்பாய்..” என சிதாராவைப் பார்த்து கூறியவன் தனது பையுடன் அவசரமாக அங்கிருந்து கிளம்பினான்.
அவன் செல்வதை புன்னகையுடன் பார்த்தக் கொண்டிருந்தாள் சிதாரா.
ஆதர்ஷ், *சாரிம்மா.. அவன் சொன்னது எதையும் நீ கண்டுக்காதே… அவன் சும்மா பைத்தியம் போல ஒலரிட்டு போறான்… நாங்களும் கிளம்புறோம்மா..” என சிதாராவிடம் கூறினான்.
பின் அபினவ், ஆதர்ஷ் இருவரும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப அனைவரும் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
அவர்கள் சென்றதும் ஆர்யானுக்கு அழைப்பு வர பேசி விட்டு துண்டித்தவன் சிதாராவிடம்,
“மினி.. கேப் புக் பண்ணி இருக்கேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துரும்… ரெண்டு பேரும் முதல்ல எங்க வீட்டுக்கு போய்ட்டு அப்புறம் நான் உன்ன உங்க வீட்டுல ட்ராப் பண்றேன்..” என்கவும் அவனைப் பார்த்து சரி என தலையசைத்தாள் சிதாரா.
❤️❤️❤️❤️❤️
– Nuha Maryam –
மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.
Thank you sis… Keep supporting ☺️☺️☺️