ஆர்யான் தன் காதலை சிதாராவிடம் இன்னும் நேரடியாக வெளிப்படுத்தாததால் அவள் வேண்டுமென்றே ஆர்யானை சீண்டிக் கொண்டிருந்தாள்.
சிதாராவின் நெருக்கம் ஆர்யானைப் பாடாய்ப்படுத்த அதைத் தெரிந்து கொண்டவள் இன்னும் அவனை சீண்ட எண்ணி அவனின் முகத்திலும் மார்பிலும் விரலால் கோலம் போடத் தொடங்கினாள்.
சிதாராவின் செய்கையில் பெருமூச்சு விட்ட ஆர்யான், “இதுக்கு மேல முடியாது…” என நினைத்தவன் சிதாராவின் இடையைப் பிடித்து சுற்றி தனக்குக் கீழ் கொண்டு வந்தான்.
ஆர்யான் இவ்வாறு செய்வான் என எதிர்ப்பார்க்காத சிதாரா கண்கள் விரிய அதிர்ச்சியில் இருக்க,
ஆர்யான் அவள் கண்ணை ஆழமாகப் பார்த்து, “என்ன பண்ற…” என்றான் அழுத்தமாக.
“அ… அது… ஜி… நான்… வந்து…” என இவ்வளவு நேரமும் ஆர்யானை சீண்டும் போது வராத வெட்கமும் தயக்கமும் சிதாராவை தொற்றிக் கொண்டது.
சிதாராவின் கண்களையே நோக்கிக் கொண்டிருந்த ஆர்யானின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி அவள் உதட்டில் நிலைத்தது.
ஆர்யானின் பார்வையின் மாற்றத்தை உணர்ந்த சிதாராவின் உதடுகள் துடிக்க முகம் சிவந்தது.
அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத ஆர்யான் பட்டென சிதாராவின் இதழ்களை சிறை செய்தான்.
ஆர்யான் அவள் இதழ்களைக் கௌவவும் அதிர்ச்சியில் கண்கள் வெளியே தெரித்து விடும் அளவு விரித்த சிதாரா சற்று நேரத்திலே அவன் முத்தத்தில் மூழ்கி கண்களை மூடிக் கொண்டாள்.
இருவருக்கும் முதல் முத்தம்.
பல நாள் தவம் இருந்து கிடைத்தது போல் ஆர்யான் சிதாராவின் இதழ்களை விட மனமின்றி இருக்க சிதாராவும் அதில் லயித்து இருந்தாள்.
அம் முத்தம் நீண்டு கொண்டே செல்ல அப்போது தான் ஆர்யானுக்கு தான் செய்யும் காரியம் புரிந்து அவசரமாக சிதாராவை விட்டு விலகியவன், “ஐ… ஐம்.. ஐம் சாரி..” என்று விட்டு பால்கனியில் சென்று நின்று கொண்டான்.
உள்ளங்கையை மடித்து தன் நெற்றியில் அடித்துக் கொண்ட ஆர்யான், “ஷிட்… என்ன காரியம் பண்ணி வெச்சிருக்க ஆரு… மினி உன்ன பத்தி என்ன நினைப்பாள்… இவ்வளவு நாள் அமைதியா இருந்தது போல இருக்க வேண்டியது தானே… ஓஹ் காட்… அவள் இன்னும் உன்ன ஃப்ரென்டா நெனச்சிட்டு இருக்கா… இன்னெக்கி தான் ஏதோ மனசு வந்து அவ வாயாலே புருஷன்னு சொன்னாள்… அதையும் கெடுத்து விட்டுட்ட… ச்சே… இப்போ நீ எப்படி அவ மூஞ்சில முழிக்க போற…” எனத் தன்னையே திட்டிக் கொண்டான்.
ஆர்யான் திடீரென தன்னை விலக்கி விட்டு செல்லவும் சிதாராவுக்கு அவன் மனநிலை புரிந்தது.
தனக்காகத் தான் அவன் இவ்வளவு யோசிக்கிறான் எனப் புரிந்து கொண்ட சிதாரா எழுந்து ஆர்யானை நோக்கி சென்றாள்.
ஆர்யான் பால்கனியில் நின்று தனது செயலை நினைத்து வருந்தியவன் தலையைக் கைகளால் தாங்கியபடி இருக்க,
இரண்டு மென்கரங்கள் அவன் கரங்களிற்கு இடையில் நுழைந்து அவனை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டன.
ஆர்யான் அதிர்ச்சியில் இருக்கும் போதே அவனை பின்னாலிருந்து அணைத்திருந்த சிதாரா, “ஐ லவ் யூ ரயன்… லவ் யூ சோ மச்…” என்றாள்.
சிதாரா திடீரென அவ்வாறு கூறவும் அதிர்ச்சியில் உறைந்த ஆர்யான் வேகமாக அவள் பக்கம் திரும்பி அவள் தோள்களைப் பற்றியவன்,
“எ…என்ன சொன்ன மினி.. திரும்ப சொல்லு…” என அதிர்ச்சி மாறாமல் கேட்டான்.
சிதாரா ஆர்யானின் முகம் நோக்காது கீழே குனிந்தபடி, “ஆமா ரயன்… நான் உன்ன காதலிக்கிறேன்… ரொம்ப காதலிக்கிறேன்.. இதை சொல்லத் தான் அன்னைக்கு உன்ன ரூஃப் கார்டன் வர சொன்னேன்… அதுக்காக தான் நீ எனக்குன்னு வாங்கி தந்த சேரிய கட்டிக்கிட்டு உன்ன பார்க்க வந்தேன்… ஆனா… அதுக்குள்ள…” என நிறுத்தவும் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற ஆர்யான்,
“நிஜமா தான் சொல்றியா மினி… உனக்கு என்ன பிடிச்சிருக்கா…” எனச் சிறு பிள்ளை போல் கேட்க ஆம் எனத் தலையசைத்தாள் சிதாரா.
ஆர்யான் சந்தோஷத்தில் வானை நோக்கி, “தேங்க் யூ கடவுளே….. என் லவ் சக்ஸஸ் ஆகிடிச்சு……” எனக் கத்தவும் சிதாரா அவசரமாக தன் கரத்தால் அவன் வாயை மூடியவள்,
“என்ன பண்ற ஜிராஃபி… பைத்தியமா உனக்கு… எல்லாரும் தூங்குற நேரம் இது…” என அவனைக் கடிந்து கொண்டாள்.
தன் வாயை மூடியிருந்த சிதாராவின் கரத்தை விலக்கிய ஆர்யான் அவள் முகத்தைக் கையில் ஏந்தி புன்னகையுடன்,
“நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா மினி… இந்த உலகத்துல இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்குறது நானா தான் இருப்பேன்… அதை வார்த்தையால சொல்ல முடியாது… என் லவ்வ நீ எக்சப்ட் பண்ணுவியா மாட்டியான்னு எவ்வளவு நாள் தூங்காம யோசிச்சிருப்பேன் தெரியுமா… உன் கூட கற்பனையிலேயே நான் வாழ்ந்துட்டு இருந்தேன் மினி…. ஒவ்வொரு செக்கனும் உன்ன பத்தி மட்டுமே நெனச்சிட்டு இருப்பேன்… நீன்னா எனக்கு அவ்வளவு பிடிக்கும்… என்னைக்கு உன்ன காதலிக்கிறேன்னு உணர்ந்தேனோ அப்போவே எங்க வீட்டுல கூட சொல்லிட்டேன் நீ தான் அவங்க மருமகள்னு… லவ் யூடி… லவ் யூ சோ மச் மை பேபி டால்…” என்றவன் சிதாராவின் முகம் முழுவதும் முத்தமிட்டான்.
ஆர்யான் பேசப் பேச மகிழ்ச்சியில் சிதாராவின் கண்கள் கலங்கின.
சிதாராவின் குரல் நடுங்க, “நான் நிறைய இழந்துட்டேன் ரயன்… என்னால நிச்சயம் உன்னையும் இழக்க முடியாது… தப்பானவன காதலிச்சி அவன் தான் எல்லாம்னு நெனச்சிட்டு இருக்கிறப்போ உன்ன உடம்புக்காக மட்டும் தான் காதலிக்கிறது போல நடிச்சேன்னு ஈஸியா தூக்கிப் போட்டுட்டு போனான்… ஆரம்பத்துலயே வாழ்க்கைய சந்தோஷமா அனுபவிக்க வேண்டிய வயசுல சந்தோஷம், நிம்மதின்னு எல்லாத்தையும் இழந்துட்டு நின்னேன்… அடுத்தவங்க மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சி… திரும்ப ஒருத்தர நம்பி காதலிக்கவே பயந்தேன் நான்… ஆனா நீ… நீ வித்தியாசமானவன்… சந்தோஷம்னா என்ன… காதல்னா என்னன்னு எனக்கு புரிய வெச்ச.. வெறும் வார்த்தையால சொல்லாம உன்னோட ஒவ்வொரு செயல்லையும் அதை நீ எனக்கு உணர்த்தின… இப்போ கூட ஒரு விஷயம் என் மனசுல உறுத்திக்கிட்டே தான் இருக்கு… எந்தப் பையனுக்கா இருந்தாலும் தான் காதலிக்கிற பொண்ணு தன்னை மட்டுமே காதலிச்சி இருக்கனும்னு ஆசை இருக்கும்… உனக்கு கூட அப்படி இருக்கும் தானே… நான் இப்போ இந்த நிமிஷம் உன்ன உயிருக்கு உயிரா காதலிக்கிறேன் ரயன்… திரும்ப உன்னையும் என்னால இழக்க முடியாது… நீ இல்லாத லைஃப என்னால நெனச்சி கூட பார்க்க முடியாது ரயன்…” என்றாள் கண்ணீர் வடிய.
அவள் உதட்டில் விரல் வைத்த ஆர்யான், “ஷ்ஷ்ஷ்… இதுக்கு மேல எதுவும் பேசாதே மினி… நீ சொல்றது உண்மை தான்… பொதுவா பசங்களுக்கு தான் காதலிக்கிற பொண்ணு தன்னை மட்டுமே காதலிச்சு இருக்கனும்னு ஆசை இருக்கும்… எனக்கும் இருக்கு…” என்று கூறவும் சிதாராவின் முகம் வாடியது.
சிதாராவைப் பார்த்து புன்னகைத்த ஆர்யான், “அதான் என் ஆசை நிறைவேறிடுச்சே… என் மினியும் என்னை மட்டும் தான் லவ் பண்ணினா.. பண்ணிட்டு இருக்கா...இனியும் பண்ணப் போறா…” என்க குழப்பமாக அவன் முகம் நோக்கினாள் சிதாரா.
அவளின் இடையை வளைத்து தன்னுடன் நெருக்கமாக நிற்க வைத்தவன் சிதாராவின் மூக்கைப் பிடித்து ஆட்டி விட்டு, “என்ன அப்படி பார்க்குற… அந்த வயசுல உனக்கு பிரணவ் மேல வந்தது காதலே கிடையாது மினி… இட்ஸ் ஜஸ்ட் அன் அஃபேக்ஷன்… அது கொஞ்சம் நாள்ள காணாம போயிடும்… அந்த வயசுல உனக்கு காதல்னா என்னன்னே சரியா தெரியாது மினி… அதான் நீ அதை காதல்னு நெனச்சிட்ட… நம்ம நெருக்கமா பழகின ஒருத்தர் நம்மள விட்டு போனா நமக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்… அதை நம்மளால தாங்கிக்கவே முடியாது… அது போல தான் பிரணவ் உன்ன விட்டு போனதும் உனக்கு வருத்தமா இருந்தது… மத்தபடி நீ ஒன்னும் அவன லவ் பண்ணல…” என்ற ஆர்யான் சிதாராவின் நெற்றியில் தன் நெற்றியை முட்டிக் கொண்டு,
“என் பேபி டால் என்னை மட்டும் தான் லவ் பண்றா… அவளை விட யாராலயும் என்னை இந்த அளவுக்கு லவ் பண்ண முடியாது… நானும் அவள தவிர யாரையும் இந்த அளவு லவ் பண்ணல… பண்ண போறதும் இல்ல… அது நம்ம குழந்தைங்களா இருந்தாலும் சரி…” என்க,
ஆர்யானைப் பார்த்து புன்னகைத்த சிதாரா அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
பின் அவனை விட்டு விலகிய சிதாரா அவன் கண்களையே காதலுடன் நோக்க ஆர்யானும் அவளைக் காதலுடன் நோக்கினான்.
ஆர்யான் மெதுவாக சிதாராவின் முகம் நோக்கி குனிய அவனே எதிர்ப்பார்க்காத நேரம் அவன் இதழ்களை சிறை செய்தாள் சிதாரா.
முதல் தடவை போல் அல்லாது அம் முத்தம் நீண்டு கொண்டே செல்ல,
இருவரும் ஒரு முத்தத்தின் மூலமே தம் காதலை தம் இணையானவர்களுக்கு கடத்த முயற்சி செய்தனர்.
அவ் இதழ் முத்தத்தை மென்மையாக ஆரம்பித்தது என்னவோ சிதாராவாக இருந்தாலும் அதனை வன்மையாக கொண்டு சென்றது ஆர்யான் தான்.
சற்று நேரத்தில் சிதாரா மூச்சு விட சிரமப்பட மனமேயின்றி அவள் இதழ்களை விடுவித்தான் ஆர்யான்.
சிதாராவுக்கு ஆர்யானின் கண்களைப் பார்க்கவே தயக்கமாகவும் வெட்கமாகவும் இருந்தது.
ஒரு கையால் அவள் இடையை வளைத்து அணைத்தவன் மறு கையால் சிதாராவின் பின்னங்கழுத்தை மெதுவாக தடவி விட சிதாராவின் காது மடல் சிவந்தது.
தன் விரலால் சிதாராவின் தாடையை உயர்த்தி தன் முகம் நோக்க வைத்த ஆர்யான் அவள் கண்களை ஆழமாக நோக்கி, “யூ ஆர் தி பெஸ்ட் திங் தெட் எவர் ஹெப்பன்ட் டு மீ மினி…” என்றான்.
சிதாரா அவனைப் பார்த்து மெலிதாகப் புன்னகைக்க ஆர்யானுக்கோ அவள் முன்பை விட பல மடங்கு அழகாக இருப்பது போல் தோன்றியது.
சிதாராவின் கண்களில் தனக்கான காதலைக் கண்டான் ஆர்யான்.
வார்த்தைகள் ஏதுமின்றி இருவரின் பார்வையுமே தம் உணர்வுகளை வெளிப்படுத்தின.
காற்று கூட உள்ளே நுழைய முடியாத அளவு சிதாராவை தன்னுடன் இறுக்கி அணைத்த ஆர்யான், “கடவுள் எனக்குனு கொடுத்த வரம் நீ… உன் கூட வாழ என்ன வேணாலும் பண்ண தயாரா இருக்கேன் நான்… ஐ லவ் யூ மினி…” என்றவன் சிதாராவைக் கைகளில் ஏந்திக் கொண்டு கட்டிலை நோக்கி சென்றான்.
ஈருடல் ஈருயிராக இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் தாமே ஆடையாகவும் துணையாகவும் மாறி ஓருடல் ஓருயிராக மாறினர்.
அவ் இரவு ஆர்யான், சிதாரா இருவருக்கும் இல்லறம் நல்லறமாக இனிதே ஆரம்பமானது.
❤️❤️❤️❤️❤️
– Nuha Maryam –
Semma saying mam ” you are the best thing that ever happened to me “. wow mam both excepted their love for each other. 😊😊
Thank you ma ☺️ keep supporting
மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.