Loading

அனைவரும் தோட்டத்தில் ஒன்று‌ கூடியிருக்க சிதாராவுடன் அவ்விடத்தை அடைந்தான் ஆர்யான்.

சிதாரா முதலில் ஏனைய நண்பர்கள் மற்றும் அவர்களது சினியர்ஸ்ஸை அறிமுகப்படுத்தினாள்.

அனைவருடனும் ஆர்யான் இன்முகத்துடனும் ஜாலியாகவும் பேச அனைவருக்கும் அவனைப் பிடித்தது.

பின் அபினவ் மற்றும் ஆதர்ஷை அறிமுகப்படுத்தச் செல்ல அவளைத் தடுத்தவன், “வெய்ட் வெய்ட் மினி.. நானே சொல்றேன்..” என்க அவனுக்கு சம்மதமாய் தலையாட்டினாள்.

ஆர்யான் ஆதர்ஷ் மற்றும் அபினவ்வை நோக்கி, “இவங்க ஆதர்ஷ் அப்புறம் அபினவ்.. மினியோட சீனியர்ஸ்.. எல்லாத்துக்கும் மேல அவளோட ஸ்வீட் ப்ரதர்ஸ்.. மினிக்கு என்ன பிரச்சினைனாலும் முன்னாடி வந்து சப்போர்ட் பண்ணுவாங்க..” என்க இருவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

“ஐம் ஆர்யான்.. நைஸ் டு மீட் யூ காய்ஸ்..” என அவர்களை அணைத்து விடுவித்தான்.

பின்‌ பிரணவ்விடம் திரும்பியவன், “இவரு….” என‌ சற்று நேரம் யோசிக்க, “இது பிரணவ் அண்ணா.. அபி என்ட் தர்ஷ் அண்ணாவோட ஃப்ரெண்ட்..” என அக்ஷரா அவசரமாக பதிலளித்தாள்.

“ஓஹ்.. சாரி டியுட்… மினி இவங்கள பத்தி தன்னோட லைஃப்ல ரொம்ப முக்கியமான பர்சன்ஸ்னு சொல்லிருக்கா.. அதனால தான் அவங்கள முன்னாடியே தெரியும்..” என ஆர்யான் பிரணவ்விடம் மன்னிப்பு வேண்டும் விதமாக கூற, சிதாராவின் உதடுகள் தானாகவே “அடப்பாவி… என்னமா நடிக்கிறான்..” என முனுமுனுத்தன.

ஆதர்ஷ் மற்றும் அபினவ் இருவருக்குமே தர்மசங்கடமான ஒரு நிலை உருவாகியது.

பிரணவ்வுக்கோ உள்ளே புகைந்தது. மனதிற்குள்ளேயே, “நான்‌ அவளுக்கு வேண்டாதவனா… என்ன பத்தி எதுவுமே இவன் கிட்ட சொல்லலயா இவ…” என அவர்களை வறுத்தெடுத்தான்.

லாவண்யா மெதுவாக அக்ஷராவின் காதில், “ஏன்டி அச்சு.. நிஜமாலுமே சித்து பிரணவ் அண்ணா பத்தி ஆர்யான் அண்ணா கிட்ட எதுவுமே சொல்லாம இருந்து இருப்பாளா..” என்க “எனக்கென்னவோ இவரு வேணும்னே செய்றாரு போல இருக்கு வனி.. ” என அவளுக்கு பதில் அளித்தாள் அக்ஷரா.

பின் அச் சூழ்நிலையை இலகுவாக்கும் விதமாக அபினவ், “சித்து.. நீ ஆர்யான உள்ள கூட்டிட்டுப்போ.. ரொம்ப தூரத்திலிருந்து டிராவல் பண்ணி வந்ததுல டையர்டா இருப்பாரு.. அவர் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.. அக்ஷு வனி நீங்களும் அவ கூட போங்க.. ஆர்யானுக்கு ரூம் அரேன்ஜ் பண்ணி குடுங்க..” என்றான்.

சிறிது நேரத்தில் ஆதர்ஷ் அபினவ் உட்பட அனைவருமே தத்தம் வேலையை கவனிக்க உள்ளே சென்று விட பிரணவ் மட்டும் அங்கு தனித்து விடப்பட்டான்.

அவனோ, “யாரிந்த புதுசா வந்து சேர்ந்து இருக்கிறவன்.. வார்த்தைக்கு வார்த்தை என்னோட மினி என்னோட‌ மினினு வேற சொல்றான்.. இத இப்படியே விடக்கூடாது.. ஏதாச்சும் பண்ணனும்..” என யோசனையிலிருந்தான்.

ஆர்யானுக்கென வழங்கப்பட்ட அறையில் சிதாராவும் ஆர்யானும் பேசிக்கொண்டிருந்தனர்.

சிதாரா, “டேய்.. உண்மைய சொல்லு.. உனக்கு அவன தெரியாது? ” எனக் கேட்க கள்ளச் சிரிபொன்றை உதிர்த்தான் ஆர்யான்.

பின் ஆர்யான், “சரி மினி அதெல்லாம் விடு.. உன்ன அம்மா பாக்கனும்னு சொல்லிட்டு இருந்தாங்க.. டூர் முடிஞ்சி நேரா எங்க வீட்டுக்கு வரனும் ஓக்கேயா..” என்க “ஆன்ட்டி எதுக்கு சடன்னா என்ன பாக்கனும்னு சொன்னாங்க… நீ அவங்க கிட்ட ஏதாச்சும் ஏடாகூடமா சொல்லி வெச்சியா ஜிராஃபி” என பதில் கேள்வி கேட்டாள் சிதாரா.

மீண்டும் ஆர்யானிடம் அதே கள்ளப்புன்னகை வெளிப்படவும் சிதாராவுக்கு அனைத்தும் புரிந்து விட்டது.

“உனக்கு கெட்ட நேரம் ஆரம்பிச்சாச்சிடா… உன்ன இன்னிக்கு சும்மா விட மாட்டேன்..” என கட்டிலிலிருந்த தலையணையை எடுத்து அவனை அடிக்க அவளிடமிருந்து விடுபட்ட ஆர்யான், “ஏய் மினி.. வாழ வேண்டிய பையன்டி.. இன்னும் எதுவுமே பாக்கல நான்.. அதுக்குள்ள போட்டு தள்ளிராதமா..” என பயந்தது போல் நடித்தபடி அறையைச் சுற்றி ஓடினான்.

சிதாராவும் முடிந்தளவு அவனை விரட்டிக்கொண்டு ஓட ஒரு கட்டத்தில் இருவருமே களைப்புற்று கட்டிலில் வந்து அமர்ந்து பெருமூச்சு வாங்கினர்.

ஆர்யானும் சிதாராவும் ஒருவரை ஒருவர் பொய்யாக முறைத்தவாறு பார்க்க இருவருக்குமே சிரிப்பு வந்தது.

இருவரின் சிரிப்பு சத்தமும் அறையைத் தாண்டி வெளியே கேட்க சரியாக அந்நேரம் தோட்டத்திலிருந்து வீட்டிற்குள் நுழைந்த பிரணவ்வின் செவியையும் அடைந்தது.

ஒரு நிமிடம் அறை வாசலில் நின்று அறைக் கதவை வெறித்தவன் பின் வேகமாக அங்கிருந்து சென்றான்.

சிதாரா, “சரி ஜிராஃபி நான் போய் தூங்குறேன்.. ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிடுச்சி.. இதுக்கு மேலயும் தூங்காம இருந்தா டூர் ஃபுல்லா தூங்கிட்டு தான் இருக்கனும்.. ஒரு என்ஜாய்மன்ட்டும் பண்ண முடியாது..” என்றாள்.

“ஓக்கே மினி..‌நீ போய் தூங்கு.. காலைல மீட் பண்ணலாம்.. குட் நைட்..” என் ஆர்யானுக்கு புன்னகையொன்றை வழங்கிவிட்டு சென்றாள் சிதாரா.

நேராக லாவண்யா மற்றும் அக்ஷரா உறங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்றவள் அவர்கள் இருவரும் ஒரே கட்டிலில் ஒரு ஓரமாய் சிதாராவுக்கு இடம் விட்டு உறங்கிக் கொண்டிருக்க அவளோ இருவருக்கும் நடுவில் போய் விழுந்து இருவர் மீதும் கை போட்டுக் கொண்டாள்.

அவர்களும் அவளுக்கு இடம் விட்டு தள்ளிப் படுக்க மூவரும் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காதவாறு அணைத்துக் கொண்டு உறங்கினர்.

மறுநாள் அதிகாலையிலேயே அனைவரும் தயாராகி பஸ்ஸில் ஏறினர்.

சிதாரா, அக்ஷரா மற்றும் லாவண்யா மூவருமே முதலிலே சென்று கடைசி சீட்டைப் பிடித்துக் கொண்டனர். 

டூர் செல்லும் போது கடைசி சீட்டில் இருக்கும் சுகமே தனி அல்லவா.

பஸ்ஸில் ஏறியதுமே மூவருக்குள்ளும் ஜன்னல் சீட்டிற்கு சண்டை ஏற்பட்டது.

ஒரு ஜன்னல் சீட்டு தான் இருந்தது.

மற்றையதில் ஏற்கனவே அவர்களின் தோழிகளில் ஒருத்தி அமர்ந்து இருந்தாள்.

ஒருவர் மாறி ஒருவர் நான் நான் என சண்டையிட கடைசியாக பஸ்ஸில் ஏறிய ஆர்யான் நேராக அவர்களிடம் வந்தான்.

ஏற்கனவே கடைசிக்கு முந்திய சீட்டில் ஆதர்ஷ், அபினவ் மற்றும் பிரணவ் அமர்ந்திருந்தனர்.

ஆர்யான் தோழிகள் மூவரையும் நோக்கி, “ச்சீச்சீ.. என்ன இது சின்ன பசங்க மாறி வின்டோ சீட்டுக்கு சண்ட போடுறீங்க.. இருங்க என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு.. முதல்ல மூணு பேரும் ஒரே இடத்துல இப்படி நெருங்கிட்டு இருக்காம இந்தப் பக்கம் வாங்க..” என்க மூவருமே அவனை நம்பி அங்கிருந்து அவனது ஐடியாவைக் கேட்க வந்தனர். 

உடனே ஆர்யான் வேகமாக ஜன்னல் சீட்டில் தனது பையுடன் நன்றாக காலை நீட்டி உட்கார்ந்து கொண்டான்.

மூவருமே இதை எதிர்ப்பார்க்கவில்லை. தம்மால் இயன்ற மட்டும் அவனை முறைத்தனர்.

அவனோ அவை எதையும் கணக்கெடுக்காமல் மேலே பார்த்து உச்சுக் கொட்டியபடி, “அடடா… இந்த விண்டோ சீட்டுல உக்காந்துட்டு போற சுகமே தனி தான்…” என்றவன் மூவரையும் பார்த்து, “அட.. இன்னுமா நீங்க மூணு பேரும் நின்னுட்டு இருக்கீங்க.. வாங்க சீக்கிரமா வந்து உக்காருங்க.. பஸ் ஸ்டார்ட் பண்ண போறாங்க…” என்கவும் மூவரும் தரையில் காலை உதைத்தவர்கள் வந்து உட்கார்ந்தனர்.

ஆர்யானின் பக்கத்தில் சிதாராவும் அவளைத் தொடர்ந்து அக்ஷரா, லாவண்யா என அமர்ந்தனர்.

சிதாராவின் முகத்தைக் கண்ட ஆர்யானிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

தன் முனங்கையால் அவன் இடுப்பில் சிதாரா இடிக்கவும் தான் அவன் அமைதியானான்.

கடைசி சீட்டில் இடது பக்கமாகவே இவர்கள் அமர்ந்து இருந்தனர். வலது பக்கமாக கடைசிக்கு முந்தைய சீட்டில் ஓரத்தில் அமர்ந்திருந்த பிரணவ்வும் இவர்களின் கூத்தைப் பார்த்துக்கொண்டு..இல்லை இல்லை முறைத்துக்கொண்டு இருந்தான்.

ஆனால் அவன் தான் எதுவும் செய்ய இயலாத நிலையில் இருந்தானே.

ஆடல் பாடலுடன் அவர்களின் ஊட்டியை நோக்கிய பயணம் அதிகாலை 4 மணியளவில் ஆரம்பமானது.

சில மணி நேரம் கழித்து அபினவ், “ஓக்கே காய்ஸ்.. கொஞ்சம் எல்லாரும் அமைதியாகி நான் சொல்றத்த கேட்டுக்கோங்க… நாம ஊட்டி போய் சேர எப்டியும் டென் டு டுவல்வ் ஹவர்ஸ் எடுக்கும்… சோ ஃபர்ஸ்ட் நம்ம போக போற இடம்….” என இழுத்து அனைவரையும் பார்த்துக் கூற அனைவருமே அவன் கூறும் பதிலுக்கு ஆர்வமாக காத்திருந்தனர்.

“வேற என்னங்க.. நமக்கு சோறு தானே முக்கியம்.. சோ ஃபர்ஸ்ட் போற வழில இருக்குற ஒரு ஹோட்டல்ல நிறுத்தி ப்ரெக்ஃபாஸ்ட்ட எடுத்துட்டு அங்க இருந்து நம்ம ஃப்ரெஷ்ஷா ஸ்டார்ட் பண்ணலாம்.. ஓக்கே காய்ஸ் யூ கன்ட்னியு..” என்றதும் அனைவரும் மீண்டும் உற்சாகமாக இருந்தனர்.

அபினவ் அமர்ந்ததும் அவனைப் பார்த்து பிரணவ்வும் ஆதர்ஷும் கேவலமாக ஒரு லுக்கு விட்டனர்.

அப் பார்வை சொல்லாமலே சொல்லியது, ” இத சொல்லத்தான் நீ இவ்ளோ பில்டப் குடுத்தியா…” .

“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..” என கூறிவிட்டு திரும்பிக் கொண்டான்‌.

லாவண்யா மற்றும் அக்ஷராவுடன் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த சிதாரா சிறிது நேரம் கழித்து தன்னிடத்தில் வந்தமர்ந்தாள். 

“என்னாச்சி மினி..‌ வந்து உக்காந்துட்டாய்… அவங்க கூட சேர்ந்து என்ஜாய் பண்ணலயா..” என ஆர்யான் கேட்க, “இல்லடா கொஞ்சம் டையர்டா இருக்கு அதான்..” என்று விட்டு சீட்டில் சாய்ந்து கண் மூடிக் கொண்டாள்.

அதன் பின் ஆர்யானும் அவளை எதுவும் கேட்கவில்லை. அவனுக்கு தெரியும் அவளாகவே எதுவாக இருந்தாலும் அவனிடம் சொல்வாள் என்று.

ஆனால் அவள் அங்கிருந்து வந்த காரணமே வேறு.

பயணம் ஆரம்பித்ததிலிருந்து பிரணவ்வின் பார்வை அவளிடமே இருந்தது.

முதலில் சிதாரா அதைக் கவனிக்கவில்லை. பின் ஏதோ தோன்ற திரும்பிப் பார்த்தவள் பிரணவ்வைக் கண்டு கொண்டாள்.

அங்கிருக்க விருப்பமில்லாமல் உடனே அவள் வந்து அமரவும் பிரணவ்விற்கு முகத்தில் அடித்தது போல் இருந்தது. அவனும் கோவமாக திரும்பிக் கொண்டான்.

சற்று நேரம் கழித்து சிதாரா ஆர்யானின் கையிலே தூங்கி விழவும் அவன் சிதாராவுக்கு வசதியாக சீட்டில் சற்று சாய்ந்து அமர்ந்து அவளை தன்‌ தோளில் தாங்கிக் கொண்டான்.

அவளையே சற்று நேரம் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவன் மனதில் ஆயிரம் கேள்விகள்.

பின் எல்லாம் தூர எறிந்து விட்டு சிதாராவின் தோளில் தலை சாய்த்து அவனும் கண் மூடினான்.

பிரணவ் கோவமாக திரும்பிக் கொண்டவன் அதன் பின் அவர்கள் பக்கம் திரும்பவில்லை.

மணி காலை எட்டை நெருங்க பஸ் ஒரு ஹோட்டலின் முன் நின்றது. அனைவருமே இறங்கி சென்றனர்.

பஸ் நிறுத்தப்பட்டதும் விழிப்புத் தட்டிய சிதாரா அதன் பின்னே தான் இவ்வளவு நேரம் எங்கு தூங்கிக் கொண்டிருந்தோம் என்றே விளங்கியது.

ஆர்யான் இன்னும் தூங்கிக் கொண்டிருக்க அவனைக் கண்டு புன்னகைத்தவள் பின் முகத்தில் பொய்க் கோபத்தை பூசிக்கொண்டு அவனை உலுக்கியவள், “டேய்‌ வளர்ந்து கெட்டவனே.. எந்திரிடா… கொஞ்சம் இடம் கொடுத்தா போதுமே.. உடனே நல்லா சொகுசா படுத்துக்குவாய்..” என்றாள்.

அவள் உலுக்கியதும் உறக்கம் களைந்தவன் அவள் பேச்சில், “யாரு.. நான் நல்லா சொகுசா தூங்கினேன்… மேடம் என்ன பண்ணீங்க..” என்ற ஆர்யானின் கேள்வியில் சிதாரா ஒரு நொடி அமைதியாகி விட்டு பின் சமாளிப்பாக, “அது… நான் ஏதோ கொஞ்சம் தூக்கத்துல தெரியாம உன் கைல சாஞ்சிட்டேன்.. அதுக்காக நீயும் அதே பண்ணுவியா.. நான் ஒன்னும் வேணும்னு பண்ண இல்லயே…” என்ற சிதாராவின் பதிலில் அவளின் மனசாட்சியே அவளை காரித் துப்பியது.

ஆர்யான் எதுவும் கூறாமல் ஒற்றைப் புருவம் உயர்த்தி அவளை ஒரு பார்வை பார்த்தான்.

அத்துடன் வாயை மூடிக் கொண்டவள் மனதில், “இதுக்கு மேல ஏதாச்சும் சொன்னா நாமளே தான் அசிங்கப்படனும்.. பேசாம இருந்துருவோம்..” என்றவள் அவனை நோக்கி, “சரி சரி வா போலாம்.. அதுங்க ரெண்டும் இந் நேரம் என் பங்கையும் சேர்த்து சாப்பிட ஆரம்பிச்சி இருப்பாங்க..” என்றாள்.

பின் இருவருமே இறங்கி ஹோட்டலுக்குள் செல்ல சிதாரா தன் தோழிகளுடன் இணைய ஆர்யான் ஆண்களுடன் இணைந்து கொண்டான்.

❤️❤️❤️❤️❤️

மக்களே!!! சாரி யூடி கொஞ்சம் லேட் ஆகிடுச்சி… நாலாவது அத்தியாயம் எப்படி இருக்கு.. உங்க கருத்த சொல்லுங்க… மறக்காம Vote & Comments பண்ணுங்க.. நன்றி…

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
3
+1
1
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  9 Comments

    1. லக்ஷா லோச்சினி

     எனக்கு ஆர்யன் தான்பா புடிச்சுருக்கு… 😘😘😘பட், ப்ரணவ் ஹீரோவா இருந்தாலும் ஓகே தான். பையன் பாவமா இருக்கான், பொழச்சுப் போகட்டும்😜😜😜🤣🤣🤣

  1. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல்