உன் அன்பில் நான் இணைய வா ❤️
அத்தியாயம் 1
இது எனக்கு முதல் கதை..இது எதார்த்தமான காதல் கதை அதை வித்தியாசமாக கொடுக்க முயற்சி செய்கிறேன்..பிழை இருந்தால் மன்னிக்கவும்
இரவின் மடியில் அனைவரும் திளைக்க இங்கு நம் கதையின் நாயகியோ தன்னவனை நினைத்து வாடிக் கொண்டு இருந்தாள் எஸ் அவள்தான் மாயா விகாஷ்❤️
ITC grand chola
அங்கு பலத்த கரகோஷம் மற்றும் கைத்தட்டல்கள்…New MD அறிவிப்பு செய்துக் கொண்டு இருந்தார் சென்னையின் மாபெரும் பிஸ்னஸ் மேன் விகாஷ்…!
“மாயா விகாஷ் New MD of vikash groups of company….!!!
அங்கு அனைவரும் அவளுக்கு பாராட்டுக்களையும் பரிசுகளையும் வாரி வழங்கிக் கொண்டு இருந்தனர்…
ஆனால் அதற்கு காரணமானவளோ, “இந்த வீரா அண்ணா ஏன் கால் எடுக்க மாட்றாங்க??? கார்த்திக் கிட்ட சொல்லிட்டாங்களா இல்லையா??..என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.”
நம் கதையின் நாயகி பார்பதற்கு அழகு பதுமையாய் மிளிர்பவள்.. வெள்ளை நிறம் முடி அவ்வளவாக இல்லை என்றாலும் முதுகு வரை இருக்கும்…ஸ்டைல் ஹோம்லி இடத்திற்கு ஏற்றார்போல மாற்றி கொள்வாள்.
Egmore Twilight private limited
“டேய் கார்த்திக்” என்று கத்திக் கொண்டே வந்தான் வீரா…
கார்த்திக் தன் வேலைகளை முடித்துவிட்டு கிளம்ப ஆயத்தமானான்..
கார்த்திக்:சொல்லு டா???
வீரா:இல்ல மாயா…….
கார்த்திக்: “அவள பத்தி என்கிட்ட பேசாத டா.”
வீரா:”இல்லடா அவ அவங்க அப்பா ஆஃபிஸ்ல Md ஆகிட்டா உனக்கு சொல்ல கால் பண்ணாலாம் உன் மொபைல் ஸ்விட்ச் ஆஃப்”….
உடனே தன் மொபைலை பார்த்தான் அது உயிரற்று இருந்தது..
“ஓஓஓஓ மேடம் MD ஆகிட்டாங்களா…!! ஓகே டா!
என்று கிளம்பி விட்டான்…
வீரா:டேய்ய்….
கார்த்திக்:என்ன டா வீரா உனக்கு??
வீரா: இல்லை டா கால் பண்ணி விஷ் பண்ணு டா..உன் ஃபிரண்ட்ல….
கார்த்திக்:Frnd அ?
அளுக்கு அதுக்கு மீனிங் கூட தெரியாது.. என்று கூறி இறுகிய முகத்துடன் தன் வீட்டிற்கு கிளம்பினான்…
வீரா:”இவர்களுக்குள்ள என்ன தான் பிரச்சினையோ” என்று விட்டு மாயாக்கு கால் பண்ணி நடந்ததை கூறினான்..
“சரி ணா பரவால்ல” என்று மாயாவும் தன் வீட்டிற்கு கிளம்பி ஒரு குளியலை போட்டு விட்டு இரவு உடைக்கு மாறி இருந்தாள்..
தன் மொபைலை ஆன் செய்தாள் வசீகர சிரிப்புடன் இருந்தான் கார்த்திக்..
கார்த்திக் மாநிறம் ஆறடி உயரம் கொண்ட நடுத்தர வர்க்கத்து ஆண்மகன்…
இங்கு இவன் மாயாவை நினைக்காமல் அசதியில் தூங்க அங்கு அவளோ இவனை ரசித்து கொண்டு தூக்கத்தை மறந்திருந்தாள்.
“கண்களின் காதலை கண்டேன் உன்னிடத்தில்!!!
காலமே காதலாய் மாறி உன்னுடன்கழிக்க துடிக்கும் என் இதயத்தை எதைக் கொண்டு நிறுத்துவேன்.!??
❤️❤️❤️❤️❤️
விடியல் அழகாய் நேர்த்தியாய் தன் பணியை துவக்கியது..பல்வேறு எதிர்ப்பார்புகளுடன் அனைவரும் தன் காலச்சுழலில் தன் தேவைக்கேற்ப பணியை துவக்கினர்.அந்த அழகிய விடியல் அனைவருக்கும் இனிதாய் தொடங்கியது….
மாயா 🏡🏠
“குட் மார்னிங் டாடி” என்று
மாயா சோம்பல் முறித்தாள்..
விகாஷ்; மாயா, “இன்னைக்கு உனக்கு important மீட்டிங் இருக்குல ?
மாயா: ஐ நோ டாட்
விகாஷ்; பாத்து மா, ஆஷிஷ் கொஞ்சம் ரூட் ஆனவன்
மாயா: ஐ கேன் மேனஜ் டாடி
இருவரும் பணிக்கு கிளம்ப ஆயத்தமாகி விட்டனர்..
ஆஷிஷ் மெஹ்ரா பெங்களூரிலிருந்து பார்ட்னர்ஷிப் சென்னையில் வைத்துக் கொள்வதற்காக வருகிறான்..இவனும் ஒரு ஹீரோ தான்..
விகாஷ் குடும்பம் பரம்பரை பணக்கார குடும்பம் ஆதலால் விகாஷ்க்கு ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளது அதில் ஒரு கம்பெனியை பராமரிக்க மாயாவிடம் தந்து விட்டு தன்னுடைய இன்னொரு கம்பெனியான textiles retailsக்கு மேற்பார்வையாளராக இருக்கிறார்.
விகாஷ் அகிலா காதல் தம்பதியினர்
தன் உறவுக்கார பெண்ணையே திருமணம் முடித்து வைத்தார்கள்..
அகிலா குடும்பம் ஓரளவு வசதி படைத்த குடும்பம் என்பதால் சொத்து வெளியில் செல்லாமல் இருக்க விகாஷ் வீட்டில் திருமணம் செய்து வைத்தனர்…
மாயா ஞாயிற்றுக்கிழமை அலுவலகம் இல்லை இருந்தாலும் ஆஷிஷ் உடன் மீட்டிங் இருப்பதால் அன்று டெனிம் ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து பாக்க படு ஸ்டைலாக இருந்தாள்..
“கார்த்திக் வீட்டிற்கு வேற போனும்ல.. அவன்கிட்ட நம்ம Md ஆனத நேர்ல போய் சொல்லனும் இல்ல நேரம் வரும்போது சொல்லிக் காட்டுவான்.பொறுக்கி….
மீட்டிங் முடிஞ்சதும் போலாம் என்றபடி உள்ளுக்குள் உளறிக் கொண்டு கிளம்பினாள்..
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
கார்த்திக் குடும்பம்
தாய் வாணி
தந்தை ராஜா
தங்கை கீதா
1)ராஜா தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிகிறார்…
2)கீதா பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள்..
3)கார்த்திக் Assistant Manager ஆக மாதம் ₹80,000சம்பாதிக்கிறான்.
ஓரளவு வசதி படைத்த குடும்பம்…!
“கார்த்திக் டேய் கார்த்திக் என்றபடி கூச்சலிட்டு கொண்டே வந்தாள்”, கார்த்திக்கின் தங்கை கீதா..
கார்த்திக்: ஏ என்னடி?? லீவ்னாள்ள கூட தூங்க விட மாட்ற ???லூசு
கீதா:இல்லடா.. இன்னைக்கு kgf chapter
2 படத்துக்கு கூட்டிட்டு போடா பிளிஃஸ்….
கார்த்திக்:12th பப்ளிக் எக்ஸாம் வச்சிட்டு மூவி கேட்குதா..வேணா ஈவ்னிங் பார்க்கலாம்..
கார்த்திக் மறுபடியும் சென்று படுத்துக் கொண்டான்…
❤️❤️❤️❤️❤️❤️❤️
மாயா அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.பி.ஏ ருத்ரா மட்டும் கூட இருந்தாள்
மாயா:ஓகே எல்லா ஃபைல்ஸ்ஸும் ரெடியா ??
ருத்ரா:எஸ் மேம் என்றாள்
மாயா fashion designing உலகில் பிரபலமானவள்.. அவளுடைய ஒவ்வொரு டிசைனிங் லும் ஒரு தனித்தன்மை இருக்கும்.அவள் விரும்பி படித்து கையில் எடுத்த வேலை இது.
மீட்டிங் ரூமுக்குள் நுழைந்தாள் நம் மாயா!!!
ஆஷிஷ்:ஹாய் மிஸ் மாயா விகாஷ் !
மாயா: ஹாய் ஆஷிஷ்!
மாயா:பீளிஸ் டேக்
யுவர் சீட்
மாயா: ஓகே மிஸ்டர் ஆஷிஷ், எதுக்காக எங்க கூட பார்ட்டனர்ஷிப் வச்சுக்க போறிங்க?
ஆஷிஷ்: வாட் தி எல் மாயா..என்கூட பார்ட்டனர்ஷிப் வச்சுக்க பிஸ்னஸ் வேர்ல்டு வெயிட் பண்றாங்க சற்று கோபமாக
மாயா: லுக் மிஸ்டர் ஆஷிஷ்..ஐ வான்ட் எ வேலிட் ரீசன்..
ஆஷிஷ்: ஏன்னா, “உன்னோட
டிசைனிங்லாம் யுனிக்கா இருக்கு”
மாயா: ஓகே ஆஷிஷ்..தாங்க்ஸ் அண்ட் வெல்கம் டூ அவர் விகாஷ் குரூப்ஸ் ஆஃப் கம்பெனி !!
தாங்க்ஸ் வீ வில் மீட் யூ ஸுன் என்று கிளம்ப எத்தனிக்கையில் மாயா என்றான் ஆஷீஷ்.
“எஸ் டெல் மீ” என்றாள்.
காஃபி ஷாப் போலாமா?
“சாரி ஆஷிஷ் எனக்கு வேலை இருக்கு” என்று கிளம்பி விட்டாள்..
இதான் மாயா அளவுக்கு மீறி யாரிடமும் பழக விரும்ப மாட்டாள் ஆனால் கார்த்திக்கை தவிர..!.
பி.ஏ ருத்ரா விடம்.. “ருத்ரா என் கூட கார்த்திக் வீட்டிற்கு வரியா?
என்றாள்..”ஓ எஸ் வரேன் மேம் என்றாள் ருத்ரா… தங்கள் காதலரை பார்க்க எவ்வளவு ஆர்வம்??
மாயா:”அடி வாங்குவ ருத்ரா,ஆஃபிஸ்ல மட்டும் தான் மேம்லாம் இப்போ நம்ம அக்கா தங்கச்சி…அப்புறம் சொன்னியே காதலர் இல்லை…கரம் பிடிக்க போகும் காதலர்”
என்று கட்டியணைத்தாள்..
இருவரும் கிளம்பி கார்த்திக் வீட்டிற்கு சென்றனர்.
ருத்ரா திருமணம் ஆனவள் மாயா வீட்டிற்கு அருகில் இருப்பவள்..கணவன் சந்தேகப்பேர்வழியினால் கைவிடப்பட்டு மாயாவின் ஆதரவில் பி.ஏ வாக இருக்கிறாள்…
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அங்கு கார்த்திக் டிவி பார்த்துக் கொண்டு இருந்தான்.. கீதா இவர்களை கண்டவுடன் “அய்ய்ய் அக்காஸ்” என்று ஓடி வந்தாள்..
வாணி:”அடடே வாமா, ஏ கீது அவங்க ரெண்டு பேரையும் முதல்ல உள்ள வர விடு” என்றார்.
இருவரும் ஹாலில் அமர்ந்தனர்.. கார்த்திக் ரூம் மில் இருந்ததால் இவர்கள் வந்தது தெரியாது..
வாணி கீதாவுடன் அரட்டை அடித்துக் கொண்டு சமையலுக்கு உதவுகிறேன் என்ற பெயரில் இரண்டாக்கி கொண்டு இருந்தனர்..
கார்த்திக் “என்ன? ஒரே சத்தமா இருக்கு” என்று வந்தான்..
மாயாவை பார்த்து ஷாக் ஆகி விட்டு “இவ எங்க இங்க” என்று மனதில் நினைத்துக் கொண்டு காட்டிக்கொள்ளாமல் “வா ருத்ரா”என்றான்..
“ஹாய் கார்த்திக் அண்ணா எப்படி இருக்கீங்க ?என்றாள் ருத்ரா.
“இதுவரைக்கும் நல்லா தான் இருந்தேன் இனிமே எப்படின்னு தெரியல” என்று மாயாவை பார்த்துக் கொண்டு கூறினான்..
மாயா “இவன் ஒரு சரியான மெண்ட்டல் மஸ்தான்” என்று நினைத்து சிரித்தாள்..
வாணி வந்து அனைவரையும் சாப்பிட அழைத்தார்.
அனைவரும் வயிறார சாப்பிட்டினர்..மாயாவும் ருத்ராவும் கிளம்ப எத்தனிக்க கீதா வந்து சிஸ்டர்ஸ் kgf chapter 2 என்ன கூட்டிட்டு போறீங்களா? என்று கேட்டாள்.
“இல்ல கீதா உங்க அண்ணாக்கு எங்க கூட நீ வந்தா பிடிக்காது” என்று மாயா கூறினாள்..
“அய்யோ அக்கா அப்படி லா இல்ல,அம்மாக்கு ஓகே தான்” என்றாள் கீதா.
“அப்ப வா போலாம்” என்றாள் ருத்ரா.
மூவரும் மாயாஜால் கிளம்ப..
ஆனா,” ஸ்கூட்டியில் மூணு பேர் போ முடியாதே” எனும் போதே கார்த்திக் வந்தான்..
“கீதா நான் உன்ன டிராப் பண்றேன்”
அய்யோ இவன்னா!!! என்று நினைத்து உள்ளுக்குள் ஒரு குத்தாட்டம் போட்டாள் மாயா.
அனைவரும் கிளம்பினர்.. கார்த்திக் கீதா புல்லட்டிலும்.. மாயா ருத்ரா ஸ்கூட்டியிலும்..
❤️❤️❤️❤️❤️❤️
ஆஷிஷ் அங்கே கத்திக் கொண்டு இருந்தான் தன் நண்பன் ராகேஷிடம்
ஆஷிஷ்:எப்படி அவ என்ன அவாய்ட் பண்ணலாம் டா மச்சான்? எவ்ளோ பொண்ணுங்கள அலைய விட்டுருக்கேன்..
இவ இப்படி பண்றா டா.
ராகேஷ்: “மச்சான், கர்மா இஸ் பூமராங் டா”
ஆஷிஷ்:போடா, “எனக்கு மாயாவ தான் லவ் பண்ணி மேரேஜ் பண்ணனும் போல இருக்கு”.
ராகேஷ்: அதுக்கு அவ ஓகே சொல்லனுமே…
ஆஷிஷ்:”சொல்லுவா…
இந்த ஆஷிஷ் சொல்ல வைப்பான்.
ராகேஷ்: என்ன திடீர்னு லவ்வு???
ஆஷிஷ்: லவ் இல்ல..அவ திமிர அடக்கனும் போல இருக்கு டா…
ராகேஷ்: அவ அடங்குவானு நம்புறியா???
ஆஷிஷ்: அதுக்கு தானே நான் இருக்கேன்…
ராகேஷ்: டேய்.. மச்சான் நீ ஹீரோ ரேன்ஜ் டா..நீ என்னடான்னா வில்லன் ரேன்ஜ்க்கு டைலாக் விடுற??
ஆஷிஷ்:டேய் ஆன்ட்டி ஹீரோ கேள்விப்பட்டிருக்கியா?
ராகேஷ்: நீ நடத்து மச்சான்…!
மாயாஜால் மால்

நால்வரும் டிக்கெட் எடுத்துவிட்டு படம் பார்க்க சென்றனர். மாயா தான் கார்த்திக்கை சைட் அடித்துக் கொண்டு இருந்தாள்.. கார்த்திக்கும் தெரிந்தும் தெரியாது போல இருந்தான்..
இடைவேளை நேரமும் வந்தது..
கீதாவும் ருத்ராவும் ஸ்னாக்ஸ் வாங்க சென்றனர்..
கார்த்திக்: “இங்க பாரு சைட் அடிக்கிற வேல லாம் வச்சுக்காத..என் தங்கச்சி இருக்கிறா உன்னோட இந்த கேவலமான பார்வைய இதோட நிறுத்திக்கோ..”
ஓர் நொடி மாயா துடித்து விட்டாள்..
என்ன வார்த்தை சொல்லி விட்டான்.
அவர்கள் இருவரும் வரவே.. படம் பார்க்க சென்றனர்..
மாயா தவறியும் அவனை பார்க்காமல் கண்ணீர் வடித்தாள்.
கார்த்திக் தான் உள்ளுக்குள், “அய்யோ ரொம்ப பேசிட்டோமோ” என்று வருந்தினான்.. பரவாயில்லை அப்ப தான் இவ அடங்குவா.
அனைவரும் படம் முடிந்து ஒரு ஹோட்டலில் இரவு உணவை முடித்துக் கொண்டு கிளம்பினர்..
மாயா இரவு உடைக்கு மாறி இருந்தாள்..
கண்ணீர் துளிகளுடன் எழுதினாள்..
என் காதல் பார்வை உனக்கு புரியவில்லையா?
நான் என்ன தவறு செய்தேன் ?
ஏன் என்னை நித்தமும் நிந்திக்கிறாய்????
என் காதலை அன்று வெளிப்படுத்திய விதம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம்…ஆனால் என் காதல் உன் உயிரின் ஆழம் வரை செல்லக்கூடியது..தண்டனை இன்னும் எத்தனை காலங்களோ… ?

மாயா அப்படியே உறங்கிப் போனாள்.
அங்கு கார்த்திக்கோ ஏன்? மாயா நம்ம பிரண்ட்ஸிப்ப கொச்சைப்படுத்துன அன்னைக்கு..”
எனக்கு உன் மேல அவ்ளோ மரி
யாதை இருந்துச்சு..
எனக்கு உன் மேல காதலே வரலனு தோணுது டி.எனக்கே புரியல டி.
ஏன் புரியாம நீ இப்படி இன்னமும் எனக்காக வெயிட் பண்ற தெரியல டி..
தொடரும்
எவ்வளவோ பேரு கதையை இப்போ படிக்கிறீங்க…!!ஒரு கமெண்ட் பண்ணா என்ன மாதிரி சின்ன எழுத்தாளர்க்கு நல்லா இருக்கும்ல😅😅😅😅😅
அன்புடன் அமுரா
- Select