எனதழகா – 9❤️
உண்ட மயக்கம் தொண்டனுக்கு உண்டு என்ற பழமொழி போல் அனைவரும் பேசி சிரித்துக் கொண்டிருக்கும் போது சற்று கண் அயர்ந்தாள் ரியா.
அதை கவனித்த ஆதிரா மற்றும் ஆகாஷ் வேகமாக அவள் அருகில் சென்று ரியாயாயாயாயா …… என்று கத்தினர்.
பதறிக் கொண்டு எழுந்தாள் ரியா வேகமாக “அம்மாமாமாமாமா” என்று அலற ஈஸ்வரி அம்மா தலையில் அடித்துக் கொண்டே வந்தவர் “ரத்தம் வந்தால் மட்டுமே என்னை அணுகவும் ” என்று கூறிவிட்டு அவர் வேலையை கவனிக்க தொடங்கினார்.
“ஏண்டி, மாசத்துக்கு ஒரு நாள் மீட் பண்ணுறோம். அப்பொழுதும் தூங்கினால் என்ன அர்த்தம்? “என்று அவள் தலையில் அடித்துக் கொண்டே கேட்டான் ஆகாஷ்.
“ரொம்ப வுர்க் டா .நைட்டு தூங்க மணி மூணு ஆகிடுச்சு. ஆதி காலையில் 6 மணிக்கு வந்து பெல் அடிச்சுட்டா. அதோடு ஆரம்பித்த விட்டார் என் வீட்டு மகாராணி அர்ச்சனையை…… ஆதிரா அப்படி, ஆதிரா இப்படி னு!” என்று சொல்ல சொல்ல ஆதிரா அதற்கு ஏத்தார் போல் கைகட்டி நிற்பதும், கூலர்ஸ் போடுவது போல் செய்கை செய்து கொண்டிருந்தாள்.
“ஆனா,இந்த ஆதிரா எப்படினு நமக்கு தானே தெரியும். இந்த லீவ் நாளை கெடுத்து விட்டு விட்டாள்” என்று தூக்கமும் போய், திட்டும் விழுந்தக் கடுப்பில் பிதற்றிக் கொண்டிருந்தாள்.
“உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்ட அப்படித்தான?” என்று அர்ஜுன் கேட்க
” இல்லைடா, எனக்கு காலையிலேயே சீக்கிரமா தூக்கம் போயிடுச்சா?” என்று ஆதிரா இழுத்துக் கொண்டே கூற
“அதற்கு அவளை வம்பிழுத்துருக்க?” என்று அசோக் கேட்க
அதற்கு அவள் ” இல்லைடா, எனக்கு காலையிலேயே சீக்கிரமா தூக்கம் போயிடுச்சா? காபி ….” என்று திரும்ப கூற
ஆகாஷ் ” அதை தான் சொல்லிட்டீயே . திரும்ப ஏன் சொல்லுற “என்று கேட்க
மறுபடியும் இவள் ஆரம்பிக்க ஆகாஷ் திரும்ப இடைநிறுத்த ஒரு கட்டத்திற்கு மேல் தான் ஆகாஷிற்கு புரிந்தது .
அவன் முறைத்து பார்க்க ,ஆதிரா அவனை அடித்து விட்டு ,சிரித்துக் கொண்டே “மார்னிங் எழுந்தேன்”. “ஏய்,என்னை கோபக்காரானாய் மாற்றாதே “என்று அசோக் பொங்க “டேய், முடிச்சிருவேன். காபி குடிக்க தோன்றியது. கிட்சன் போக எரிச்சல். அதான் ரியா வீட்டிற்கு சென்று தாஸ் அப்பாவிடம் ஒரு நல்ல ஃபில்டர் காபி குடிக்க சென்றேன்”.
“நாயி பல்லுக்கூட வெளக்காம வந்து இருக்கு, என் தாயி பெருமையா பேசுது. நல்லதுக்கு காலம் இல்லை.”என்று கூறிய ரியா ஆதிராவிடம் பாய்ந்தாள்.
இவ்வாறு சந்தோசமாக விளையாடி சிரித்து பேசி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
ஈஸ்வரி அம்மா கையில் குலாப் ஜாமுனுடன் வந்தவரை கூர்ந்து கவனித்தான் அர்ஜுன். “எமகாதகன்” என்று அவனை மனதிலேயே அர்ச்சித்து விட்டு அனைவருக்கும் கொடுத்தார்.
“வாவ், குலாப் ஜாமூன் ” என்று கண்களிலேயே ஜெர்ரி ஹார்ட் விடுவது போல் கையிலேயே கண்களுக்கு நடுவில் ஹார்ட் வைத்து காண்பித்தாள் ரியா.
” இவங்களாம் வந்தா தான் தெரியுது என் தாய்குலத்துக்கு இந்த மாதிரி ஸ்வீட்ஸ் செய்யத் தெரியும்னு” என்று கூறி ஒரு ஏக்க பெரு மூச்சுடன் வாங்கிக் கொண்டான்.
“டேய், நேத்து தான் யூ ஆர் த பெஸ்ட் மம்மி ,யூ ஆர் த கிரேட் மம்மி னு சொன்ன அதுவும் சிம்பிளா ஷாகி துக்டா செஞ்சதுக்கு.” என்றார் ஈஸ்வரி
“துரோகி” என்று ஒரு சேரக் கூறினர் அசோக் மற்றும் ரியா.
“நீங்க எப்போ அம்மா செஞ்சீங்க? மறந்துட்டு பேசுறீங்களா?” என்று கூறியவன் சொல்லாதீர்கள் என்று கண் சாடை காட்டினான்.
“எதுக்குடா கண் சிமிட்டிற கண் வலியோ? “என்று ஈஸ்வரி அம்மா கேட்க ,ஆகாஷ் தலையில் நங்கென்று கொட்டு வைத்தான் அர்ஜுன்.
” அட, இப்போ ஞாபகம் வரும் பாரு. நான் கூட ரியாவுக்கு ரொம்ப பிடிக்கும். போகும் போது கொடுத்து விட்டு போ என்று சொன்னதுக்கு போயும் போயும் அவளுக்காக என் டைமும் வேஸ்ட் பண்ண மாட்டேன்,என் குலாப் ஜாமுனையும் வேஸ்ட் பண்ண மாட்டேன் அப்படினு வசனலாம் பேசுனியே பா!” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டுக் கூற,
ஏற்கனவே தலையில் கொட்டிய அர்ஜுன் இதை கேட்டவுடன் ரியாவும் பொங்கி கொண்டு அவனை மிதித்து விட்டாள், அர்ஜுனும் மிதித்து விட விழுந்து விட்டான்.
விழுந்தும் அடங்காமல் அம்மாவைப் பார்த்து “வழக்கறிஞருக்கு கண் சிமிட்டின மாதிரி இருக்கு ? அதோடு தன் பிள்ளையை மிதிக்கறாங்க. பிடிச்சு ஜெயிலில் போடாமல் அமைதியா வேடிக்கை பார்க்கிறீர்கள். அருமை … அருமை ” என்று கூறிவிட்டு வராத கண்ணீரை துடைத்து போல் பாவானை செய்துக் கொண்டே,
எந்த குழந்தையும்
நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவராவதும்
தீயவராவதும்
அன்னை வளர்பதிலே
அதன் பின்னே துடித்துக் கொண்டு ஆகாஷைத் தூக்கினார்.
“ஐய்யோ, ரொம்ப சீக்கிரம் ரியாக்ட் பண்ணிடீங்க ” என்று அவனே எழுந்து அமர்ந்தான்.
“சரி டா விடு, நம்ம ஆதி கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வந்தால் சிறப்பா செஞ்சிடலாம்” என்று ஆதிராவுக்கு எடுத்துக் கொடுத்தார்.
“அவளுக்கு எப்போ கல்யாணம் நடக்க ,எனக்கு எப்போ😳”.. யோசித்தவன் “என்ன?” என்று அதிர்ச்சியாகக் கேட்டான்.
“என்ன சொல்ற, அப்போ உன் காதல் பொய்யா ? உன் பப்பி லவ் அவ்ளோதானா ? எத்தனை வருடமா உருகுன இப்போ யாருக்கோ கழுத்த நீட்ட போறேனு சொல்லுற ?” என்று ஆகாஷ் அவசரப்பட்டு அனைத்தையும் உலறி விட்டான்.
ஆதிரா தலையில் கை வைத்து “போச்சு பையன் சொதப்பிட்டான். இவன் மாட்டுறதும் இல்லாமல் நம்மளையும் கோர்த்து விடுறான். கஷ்டப்பட்டு பேசி இவங்க இரண்டு பேரையும் வழிக்கு கொண்டு வந்தேன். இப்போ திரும்ப வேதாளம் முருங்கை மரம் ஏறுன கதை தான்” என்று முணுமுணுத்து கொண்டே அர்ஜுன் மற்றும் அசோக்கை திரும்பி பார்த்தாள்.
ஆகாஷ் தொடர்ந்து பேச பேச கண்கள் சிவக்க, கை முஷ்டிகளை இறுக்கி தனது காப்பை இறுக்கி சேர்த்து வைத்து ஆதிராவை நோக்கி அடி எடுத்து வைக்க ஆதிரா அரண்டு ஈஸ்வரி அம்மாவின் பின்னால் ஒளிந்தாள்.
கோபத்தை கட்டுபடுத்த முடியாமல் பேசிக் கொண்டிருக்கும் ஆகாஷை அடி வெளுத்து விட்டான்.
போர் முடிந்தது போல் இருவரும் எழுந்த அமர இருவரின் சட்டை கசங்கி ஆகாஷ் தலை முடி களைந்து அலங்கோலமாக அமர்ந்து இருந்தனர்.
“ஹே பாண்டா, உன்மையாவே அவள் லவ் பத்தி உனக்கு தெரியுமா? ஆதி, நீ என்கிட்ட மட்டும் தான் சொன்னேன் என்று சொன்ன. அதுலாம் பொய்யா அப்போ?” என்று ரியா அதிர்ந்து கேட்டாள்.
“என்னது, உன்கிட்டடையும் இதுதான் சொன்னாலா?” என்று அசோக் கேட்க
“என்னடா பேசுறீங்க? எது உங்களுக்கு தெரியும்? எது எனக்கு தெரியாது?”என்று தலையை சொறிந்து கொண்டேக் கேட்டான்.
“டேய், தெரியாத மாதிரி நடிக்காத அடிச்சே கொல்லப் போறேன். ” என்று உச்சஸ்தாதியில் கத்தினான் அர்ஜுன்.
“டேய் ஆகாஷ், உங்களோட சீனியர் ரோஹித்க்கும், ஆதிராவுக்கும் நிச்சியதார்த்தம் முடிவு ஆகி இருக்கிறது ” என்றார் ஈஸ்வரி .
அதிர்ச்சியாகிய ஆகாஷ் “டேய் மச்சான், சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது🤯”.
அர்ஜுன் “அப்புறம் எப்படி கரெக்ட்டா சொன்னா ?”
ஆகாஷ் “அய்யோ, நாயி பார்வை பார்த்தே கண்டுபிடிச்சுட்டேன் ஸ்கூலையே. நான் இவள் கிட்ட கேட்டேன். விரும்புறேனு மட்டும் தான் சொன்னா. வேற எதுவும் சொல்லவில்லை. உனக்கு முன்னாடி சொன்னா கோபம் வரும்னு அவளை உன் முன்னாடி மட்டும் கலாய்க்க மாட்டேன். அப்போது இருந்தே நான் அவளை கலாய்ப்பேன். உண்மையான கல்பிரிட் ரியா தான். விசாரிக்காம சின்ன பிள்ளையை அடிச்சுட்டியே ” என்று பொங்கி கொண்டு கூறினான்.
ஈஸ்வரி, “போதும் பழசை எல்லாம பேசினது அவளுக்கு நிச்சயதார்த்தம் செய்வதற்கு முடிவாகி இருக்கு அதை பத்தி மட்டும் பேசுங்க .”
ரியா” நாம் மட்டும் பேச கூடாது மா.தாத்தா கிட்ட அவள் தான் பேசனும் .பேசி விட்டு வரட்டும். தாத்தா சொல்றது தான் முடிவு .நிச்சயதார்த்தம் வரைக்கும் சொல்லுறா?”
“தாத்தாவுக்கு தெரியும்” என்றவுடன் ஈஸ்வரி அம்மாவைத் தவிர அனைவரும் அதிர்ந்து அர்ஜுனை பார்த்தார்கள்.
ஆதிராவுக்கு நெஞ்சில் கை வைத்து விட்டாள் இவனுக்கு எப்படி தெரியும் என்று.
கீர்த்தி☘️