எனதழகா – 29 ❤️
இரு நாட்களாக மருத்துவமனையே கதி என்றிருக்க , இருவரும் கண் விழித்த பாடில்லை. பெரிய பெரிய ஸ்பெஷலிஸ்டையும் அணுகி விட்டனர். ஆனால், அனைவரும் ஒரு சேரக் ஒரே பதிலைத் தந்தனர் “காத்திருங்கள் ” என்று. லஷ்மி அம்மா தான் உடைந்து விட்டார்.
மூன்று நாட்கள் கழித்து வசுதேவர் கண் விழித்தார். அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்து ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி விட்டனர்.
வயோதிகம் வந்ததால் இவ்வளவு அதிர்ச்சிகளை இவரால் தாங்க முடியவில்லை. முதலில், மகள் மற்றும் பேத்தி செய்ததையே தாங்க முடியாதவர் , மகனை கைது செய்ததோடு,இப்பொழுது இன்னொரு மகளுக்கும் இவ்வாறு நடந்ததில் தளர்ந்து விட்டார்.
ஆப்ரேஷன் செய்தாலும் உடல் ஒத்துழைக்காமல் இருந்ததால் மிகவும் சிரமப்பட்டார். அவரை காப்பற்றுவதற்குள் போதும் போதும் என்றானது. ஒரு வழியாக, அவர் சரியானாலும் அனைவரும் சந்தோசப்பட முடியவில்லை. ஏனென்றால், பத்து நாட்கள் ஆகினும் இன்னும் மீரா கண் முழிக்கவில்லை.
ஆருஷி தான் மிகவும் சோர்ந்து போய் விட்டாள். யாரிடமும் பேசாமல் எந்நேரமும் அழுகையோடையே இருந்தாள். வீட்டிற்கே செல்லாமல் மருத்துவமனையே கதி என்றிருந்தவளை அதட்டி உருட்டி ஓய்வு எடுக்க வீட்டிற்கு அனுப்பவும்,சாப்பிடவும் வைத்தனர்.
வெங்கடேஷன் என்ன தான் மாமனாரைத் திட்டினாலும் , வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்பது போல், வசுதேவருக்கும் முடியவில்லை , ரியாவிற்கும் உடம்பு சரியில்லை என்று பொறுப்பாக அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொண்டார்.
அர்ஜுன் ஆபிஸையும் அசோக் பார்த்துக் கொண்டான்.நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கேசவரின் ஆபிஸ்க்கும் சென்று வந்தான். இவ்வாறு நாட்கள் கடந்து கொண்டிருந்தது. ஆனால், மீராவிற்கு தான் எந்த முன்னேற்றமும் இல்லை. அவர் கோமாவிற்கு சென்று விட்டார் என்றும் உறுதியாக கூற முடியவில்லை. டெஸ்டுகள் எடுத்துக் கொண்டே இருந்தன.
இவ்வாறு நாட்கள் போய்க் கொண்டிருந்தது. ரியாவை பரிசோதிக்க மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் தாஸும், தாமரையும்.உள்ளே நுழையும் போதே அர்ஜுன் வெளியில் வந்தான்.
உடனே தாஸ் “சாரிப்பா, சொல்லக்கூடாதுனுலாம் இல்லை. நீயே பிஸியா இருக்க. தொந்தரவு பண்ண வேணாம்னு தான் நினைச்சேன். செக் – அப் முடிச்சவுடனே சொல்லலாம்னு இருந்தேன் பா ” என்று அவர் கூறிக் கொண்டே போக,
“என்ன நயினா ! இப்படி பம்முற ? என்னா விஷயம்? ” என்று சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் ஆகாஷ்.
அர்ஜுனும் சிரித்துக் கொண்டே “அது ஒன்னுமில்லைடா! அப்பாக்கு ஒரே டென்ஷனாம். அதான் மருந்து கேட்டாரு “
“ஓஓ…… ஓஹோ! இதுதான் விஷயமா !” என்று தாடையை தடவிக் கொண்டே கேட்க,
“கேளுடா, விருந்தும் மருந்தும் மூணு நாளைக்குனு சொல்லி மூணு நாள் விடாமல் மருந்து சாப்பிடத்துல “அர்ஜுன் சிரித்துக் கொண்டே கூற,
ஆகாஷ்”சாப்பிடத்துல …… “
” நாலாம் நாள் மருந்து சாப்பிட மா கை உதறுது ” என்று அர்ஜுன் கூறிய மறுநொடி தாஸ் தலையை தேய்த்துக் கொண்டிருந்தார் .
” அய்யோ, அப்பா!” என்று ரியா துடித்து விட்டாள்”. “ஏன் மா, இப்படி தான் அடிப்பியா அதுவும் பொது இடத்துல !” என்று எகிறி கொண்டிருந்தாள். பதிலுக்கு தாமரையும் மல்லுக்கட்டி கொண்டிருந்தார்.
இருவருக்கும் இடையில் தாஸ் பாவமாக நின்று கொண்டிருந்தார். ஏற்கனவே, தலையை கொட்டியது வேறு அவமானமாக இருந்ததோடு வலிக்கவும் செய்தது. இதில் இருவரும் பொது இடத்தில் சண்டை போடுவது அதை விட சங்கடமாக இருந்தது.
ஆனால், இதற்கு காரணமானவர்களோ கமுக்கமாக சிரித்துக் கொண்டிருந்தனர். தாஸ் பாவமாக இருவரையும் பார்க்க, “எங்களை விட்டுட்டா பார்ட்டி போனீங்க. இன்னும் வேணும் உங்களுக்கு ” என்று வாயசைத்தான் ஆகாஷ்.
அர்ஜுன் கவலையோடும், டென்ஷனோடு இருப்பதால் இவர்களுக்கு (ஆகாஷ், அசோக், அர்ஜுன், தாஸ்)மட்டுமே இருக்கும் இவர்களின் வாட்ஸ் அப் குருப்பில் குடிப்பது போல் போட்டோ போட்டிருந்தார்.
எந்த சுக துக்கம் இருந்தாலும், மாதத்திற்கு ஒரு முறை ரியா வீட்டின் மொட்டை மாடியில் நால்வரும் அமர்ந்து விடிய விடிய கதை பேசிக் குடித்து சந்தோஷப்படுவர்.
அர்ஜுன் மட்டும் இதில் குடிக்க மாட்டான். தாஸை அனுமதிக்க மாட்டார்கள். மற்ற இருவரும் அளவாக குடிப்பார்கள்.
அவர் தன் மன மாற்றத்திற்கு தான் இவ்வாறு அனுப்பியுள்ளார் என்று மனம் மகிழ்ந்தான் அர்ஜுன். ஒவ்வொரு தடவையும் தனக்கு துணையாக நிற்பதை நினைத்து உள்ளம் சிலிர்த்தது அவனுக்கு .
ரியாவிற்கு அப்பாய்ட்மெண்டு வாங்கியது அர்ஜூன் மற்றும் ஆகாஷ் முயற்சியால் மட்டுமே .
இவர்களுக்கு தெரியும் ரியா மேல் இவர் எவ்வளவு உயிராக இருக்கிறார் என்று. அதனாலேயே, பதட்டத்துடன் தான் இவர்கள் இருப்பார் என்பதால் மனதை மாற்றும் பொருட்டு சகஜமாக பேசினார்கள்.
ஒரு வழியாக சண்டை முடிந்து, ஐவரும் முதலில் சென்றது நியுராலஜி ஸ்பெலிஸ்ட் மிஸ்டர். கிருஷிடம் தான்.
ரியாவின் ரிப்போர்ட்டை பார்த்து விட்டு குறிப்பிட்ட ஸ்கேன் மற்றும் டெஸ்டுகள் எடுக்கக் கூறினார். ஆகாஷ் அவனை அறிமுகப்படுத்திக் கொண்டான் அவனும் நியுராலஜி தான் என்று .
பின்பு, அதை எடுப்பதற்கு தாமரையுடன் அனுப்பி வைத்தார் தாஸ். ஆனால், ஆகாஷும் அவர்களுடன் சென்று விட்டான்.அந்நேரம் இவர்களை நோக்கி வந்தான் அசோக். வேர்வை வழிய, படபடப்புடன் வந்தான். என்ன என்று கேட்பதற்குள் தாமரை கத்தும் சத்தம் கேட்டது.
வேகமாக சென்று பார்த்தால் ரியாவை யாரோ தாக்க முற்பட அதை ஆகாஷ் தடுத்துக் கொண்டிருந்தான். அங்கு அர்ஜுன் மற்றும் அசோக் ஓடி வருவதைப் பார்த்து ஆகாஷை தள்ளி விட்டு ஓடி விட்டான் அந்த கயவன்.
அவனை பிடிக்க முயன்ற போது அவன் முகமூடியை கழட்டி முகத்தை பார்த்து விட்டான் அசோக்.
“சே…. மிஸ் ஆயிட்டான். இவன் யாருனே தெரியல……” என்று ஆகாஷ் புலம்ப,
“அவன் விக்ரம் (AA சொலியுஷனில் கிளைண்டை மாற்றி விட்டதால் வேலையில் இருந்து நீக்கப்பட்டவன் ) தம்பி, அபியோட நண்பன்.” அசோக் அவன் சென்ற பாதையையே பார்த்து கொண்டு கூறினான்.
“ஹம்.. ஆமா. விக்ரமை ஃபாலோ பண்ணுறதுக்கு ஆள் போட்டுருக்கேன். அப்போ தெரிந்தது இவன பத்தி “அர்ஜுன் கூற,
இவர்கள் இருவர் கூறுவதையும் ஆவென பார்த்துக் கொண்டிருந்த ஆகாஷ் “என்னடா இது? பெரிய சிஐடி மாதிரி பேசுறீங்க? நீங்க ஒருத்தன்ட்ட வேலைக் கொடுத்து அவன் லோலோனு அலைஞ்சு திரிஞ்சு உனக்கு போட்டோ கொடுத்ததை நீங்களே கண்டுபிடிச்ச மாதிரி பேசுறீங்க !” என்று கூறிய அடுத்த நொடி அசோக் சுளீரென்று முதுகில் ஒன்று வைத்தான்.
துடித்த ஆகாஷ் ” என்ன தான் டா ஈஸியா அடிச்சுறீங்க ” என்று வழக்கம் போல் கூறினான்.
அர்ஜுன் தான் இன்னும் முகத்தை சிரியஸாக வைத்துக் கொண்டு ரியாவை காணச் சென்றான்.
அவனைப் பார்த்தவுடன் கட்டியணைத்து அழுதாள். ஆனால், ஒரு ஜோடி கண்கள் ரியாவைப் பார்த்து கோபக் கணல்களைக் கக்கியது.
ஒரு குடோனில் விக்ரமின் தம்பியைப் பிடித்து அடித்து துவைத்துக் கொண்டிருந்தாள் அனு. அவளைத் தடுக்க நிவானும், அபியும் முயற்சி செய்துக் கொண்டிருந்தனர். முயற்சியை முறியடிக்க உள்ளே நுழைந்தான் இந்தர் ,அனுவின் அண்ணன் .
அவனைக் கண்டு விக்ரமின் தம்பி பதற, நிவானும், அபியும் அவனை முறைத்துப் பார்க்க. நக்கலாக சிரித்துக் கொண்டே வந்த இந்தர், விக்ரமின் தம்பியை நெருங்க நெருங்க பயந்து ஒடுங்கினான். ஆனால், அவனைத் தாண்டி சென்றவன் , யாரும் உணராத நேரம் அபியின் கன்னத்தில் அறைந்து விட்டான்.
அவனுடைய உதடு கிழிந்து
இரத்தம் வந்தது. அரை நிமிடத்திற்குள் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியது நிவானுக்கு .
நிவான் இந்தரைப் பார்த்து கத்தும் சமயம் உள்ளே வந்தார் வெங்கடேஷன் .
அதே சமயம், லெனின் மற்றும் ஈஸ்வரி வெங்கடேஷனின் ஊரில் கால் வைத்தனர்.
எனதழகா – 30 ❤️
“டேய், இன்னொரு முறை என் பையன் மேல கைய வச்ச அப்புறம் நடக்கிறதே வேற ! “வெங்கடேஷன்
“இவன் உன் பையனா? ” என்று இந்தர் நக்கலாக கேட்டான்.
“டேய் , வந்திருக்கிறது குணா மாமா இல்லை தீனா மாமா ” என்று நிவான் கூறினான்.
நிவானைத் திரும்பி பார்த்த இந்தர் சிரித்துக் கொண்டே அபியிடம் “ஏன்டா அபி, அவனுக்கு தான் மாமா. அதனால அடையாளம் தெரியலை. உனக்கு அந்தாளு அப்பா தானா. உனக்கு கூட வா தெரியலை. “
அபி உதடு கிழிந்து வலிந்த ரத்தத்தை துப்பி விட்டு “ஆமா, வித்தியாசம் தெரியும். இவர் என் அப்பா குண வெங்கடேஷன் இல்லை. இவர் என் பெரியப்பா தீன வெங்கடேஷன்”
மெச்சுதலாக பார்த்த அனு “கேட்டீயா நிவான் “என்று கேட்க , நிவான் அபியை பார்த்தான். நிவான் கண் அசைத்து ஆமாம் என்று கூறினான்.
நிவான் வெங்கடேஷனை பார்க்க கன் கலங்கி நின்றார். “அபிக்கு தெரியும்னு எனக்கு தெரியாது. ஆனால், உங்ககிட்ட சொல்லி வருத்தப்பட வைக்க விரும்பல.அவன் நம்மள விட்டு போய் ஒரு வருஷம் ஆச்சுப்பா. அவனை மாதிரி தான் நான் இருக்கேனு உங்களை காயப்படுத்த கூடாதுனு நானே இரண்டு பேரு மாறியும் நடந்துக்கிட்டேன்.எனக்கு வேற வழி தெரிலை “
நிவான் அதிர்ச்சியாகி பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நிமிட துளிகளுக்கு பின், தொண்டையை கரகரத்து காய்ந்த உதட்டை நனைத்து “எப்படி? ” என்று கேட்டான்.
“எனக்கும் தெரியலைப்பா! எனக்கு போன் வந்துச்சு. போய் பார்த்தேன் அவன் சடலமா இருந்தான். கேட்டேன் எப்படினு ஆக்சிடென்ட்னு சொன்னாங்க. அந்நேரம் இந்தர் வந்தான். அவங்க சொன்னதை வச்சு நான் தான் கொன்னுட்டேனு நினைச்சுட்டான் “என்று நீண்ட விளக்கவுரை கொடுத்தார்.
நிவான் அமைதியாக இருந்தான். அபி எந்தவொரு உணர்வுகளையும் காட்டாது உணர்ச்சி துடைத்தவன் போல் இருந்தான். நிவானுக்கு அவன் அப்பா அம்மா இறந்த பின், கூட இருந்த உண்மையானவர்கள் இரு மாமாக்களும், மாமா பிள்ளைகள் மட்டுமே.அபிக்கு அவனது உணர்ச்சிகள் புரிந்ததால் அவனை மாற்றும் பொருட்டு ” இது எங்களுக்கு தெரியனும்னு தான் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு எங்களை தூக்குனியா ? “.
“ஹாஹா …..நிவானுக்கு எப்படி ஒரு விஷயம் தெரிய வச்சேனோ , இப்போ உன் பெரியப்பூவுக்கும் ஒரு விஷயம் சொல்லப் போறேன். மூணு பேரோட எதிர்வினையை பாக்கணும்னு ஆவல் எனக்கு . அதான் தூக்குனேன்”என்று கூறி விட்டு அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து கைகளைத் தூக்கி நெட்டி முறித்து விட்டான்.
“உங்களை தூக்கனும்னு நினைச்சிருந்தால் எப்பவோ தூக்கிருப்பேன். அதுக்கு கால,நேரம் இருக்கு . அதான் இப்போ, இங்கே, இப்படி இருக்கீங்க “அனுவும் அவள் பங்கிற்கு சில விஷயங்கள் கூறினாள்.
இவர்கள் பேசுவது ஒன்றும் புரியாமல் இருந்தது மறைந்திருந்து பார்த்த ஆகாஷிற்கு .அபியையும், நிவானையும் தூக்கியதாக கூறியவுடனேயே எங்கு தன் உயிருக்கும் ஆபத்து வந்து விடுமோ என்றெண்ணி வாட்ஸ் – அப் மூலம் இடத்தை அனுப்பி விட்டார் அர்ஜுனுக்கு.
ஆனால், அர்ஜுனின் போனைப் பார்த்தது என்னவோ ஆகாஷ் தான்.வெங்கடேஷனுக்கு ஆபத்தோ என்றெண்ணி அர்ஜுனிடம் கூட கூறாமல் இடத்தை தேடி வந்து விட்டான் போனுடன்.
ஆனால், அவனுக்கு கிடைத்த அதிர்ச்சி அனு தான்.
அனுவைப் பார்த்தவுடன் வேகமாக ஓடி வந்து “டேய் ஷா, என்னடா இங்க என்ன பண்ணுற? ” .அதிர்ந்தது அனு மட்டுமல்ல. அனைவருமே அதிர்ந்தனர். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு மனநிலை இருந்தது. வந்தவன் விடாமல் குசலம் விசாரிப்பதாக நினைத்து அவள் போனதிலிருந்து இன்று வரை என்ன நடந்தது என்று பேசிக் கொண்டே இருக்க, அபி , நிவான் மற்றும் வெங்கடேஷன் தப்பி விட்டனர்.
ஆனால், அதை நினைத்து சிறிதும் கலங்கவில்லை அவ்விருவரும். எதிர்ப்பார்த்தது தான் என்பது போல் காட்டிக் கொண்டனர். அதன் பின், இந்தருக்கு கண் அசைத்து விக்ரமின் தம்பியை வேறு இடத்திற்கு மாற்ற சொல்லி விட்டு,ஆகாஷுடன் உணவகத்துக்கு சென்று விட்டாள் அனு.
🌿🌿🌿🌿🌿
அதே நேரம் பொல்லாச்சியின் அருகே சோலனூர் என்ற கிராமத்தில் இருந்த லெனின் மற்றும் ஈஸ்வரி வெங்கடேஷனை பற்றி விசாரித்த போது தான் அவர்களுக்கும் தெரிந்தது அவர் தம்பி இறந்து விட்டார் என்று.
அதன் பின் அபியைப் பற்றியும் குணாவைப் பற்றியும், அவர்களின் குடும்பம் பற்றியும் தீர விசாரித்து விட்டு தான் அவ்வூரில் இருந்து நகர்ந்தனர்.
🌿🌿🌿🌿🌿
தப்பிச் சென்ற மூவரும் காரில் பயணம் செய்யும் பொழுது, வெங்கடேஷன் தான் புலம்பி தள்ளி விட்டார்.
வெங்கடேஷன்”எப்படி டா நீங்க மாட்டிக்கிட்டீங்க? “. அபி” என் ஃபிரண்டு நம்பரிலருந்து கூப்பிட்டாங்க. என்ன ட்ராப் பண்ண நிவான் வந்தான்.”
வெங்கடேஷன் “ஏன்டா இதுலாம் ஒரு காரணமா ? அவங்க தான் பைத்தியம்னா நீங்க அதுக்கு மேல இருக்கீங்க? “. அபி “என்னை மரியாதை குறையுது ” என்று பல்லைக் கடித்து கொண்டு கேட்டான் அபி.
” ஆமாம், இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை ” என்று மனதில் நினைத்து கொண்டு , “டேய். நான் சொல்ல வர்றது வேற பா . நீங்க போய் மாட்டுனா என்னாகும். அந்த பிருந்தாவளம் கூட்டத்துக்கும் தெரியவரும். பஞ்ச பாண்டவர்களுனு சுத்திக்கட்டு இருக்கிற பஞ்ச பரதேசிகளுக்கும் தெரிய வரும். இவ்ளோ நாள் பண்ண எல்லா விஷயமும் தெரிய வரும் “என்று புலம்பி கொண்டிருந்தார்.
நிவான் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவனுக்கு மனதிற்கு அமைதி தேவைப்பட்டது.வெங்கடேஷன் பேசுவதை பொறுக்க மாட்டாமல்” கொஞ்ச நேரம் அமைதியா வரீங்களா !” என பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான்.
வெங்கடேஷன் கப்சிப் என ஆகி விட்டார். இதற்கு பின்பும் பேசி அவனிடம் திட்டு வாங்க அவர் ஒன்றும் முட்டாள் இல்லை. சிறு வயதிலிருந்தே அபிக்கு நிவானுக்கும் அபியின் அப்பாவே உயிர் . அவருக்கு அனைத்து பிள்ளைகளும் தன் பிள்ளை என்று கருதுபவர். ஆனால், குண வெங்கடேஷனுக்கு தன் பிள்ளை ஆருஷி மட்டும் தான் உயிர்.
அபி தீனாவின் குழந்தை என்றும், நிவான் தீனாவின் பின்னாலேயே செல்வது பிடிக்காமல் இப்பிள்ளைகளை ஏதேனும் சொல்லி கொண்டே இருப்பார். ஆனால், எதிர்பாராமல் நிவானின் பெற்றோர்களும் , அபியின் அம்மாவும் தவறி விட , நிர்கதியாக இருந்த அப்பிள்ளைகளைக் கண்டு மனம் தாங்காமல் தன்னோடு வைத்து கொண்டார்.
சிறு பிள்ளைகள் என்பதை விட ,தன் உடன் பிறந்தவர்களை இழந்ததே வெறியும், பகையும் உண்டாக்கியது இவருக்கு. அதை மூவருக்கும் போதித்தார். தீனா இருக்கும் வரை பிள்ளைகளையும் சத்தம் போடுவர் ,தன் அண்ணனையும் திட்டுவார் பிள்ளைகளுக்கு கெட்ட விஷயங்களை சொல்லி கொடுப்பதற்கு .
ஆனால், ஆருஷிக்கு அவள் அப்பா சொல்வதே வேத வாக்காக இருந்தது. இதனால் அபிக்கும், ஆருஷிக்கும் சண்டை வந்துக் கொண்டே இருக்கும். நிவான் தான் இதற்கு நடுநிலையாக இருந்து தீர்ப்பு வழங்குவான்.அவள் பெண் என்பதாலோ இல்லை அதிகம் பழகாமல் இருந்ததாலோ இல்லை அவள் மேல் கொண்ட ஈர்ப்பா தெரியவில்லை.அவளுக்காக அபியைத் தான் எப்பொழுதும் அடக்குவான். அபிக்கும் , ஆருஷிக்கும் வயது வித்தியாசம் பெரிதாக இல்லை. மாசங்கள் மட்டுமே வித்தியாசம் ஆகும்.
இவ்வாறு தீனாவுடன் உண்டான நினைவுகளை நினைத்து உருகிக் கொண்டிருந்தான் நிவான். தன் மேல் பாசமுள்ள அனைவரும் பிரிவது நெருஞ்சி முள்ளாக இதயத்தை கூறு போட்டது.
இவ்வாறு நினைக்கும் நேரம் ஆருஷியிடம் இருந்து கால் வந்தது. வெங்கடேஷன் இருப்பது தெரியாமல் காலை எடுத்தான் . அது காரில் இருக்கும் ப்ளூடூத்தில் இணைந்து விட்டது.
“ஹலோ மாமா “
கீர்த்தி☘️