Loading

எனதழகா – 27 ❤️

“என் குடும்பம் மேலே உள்ள கோபத்தை இப்படி காண்பிக்கிறீயா? ” என்று கேசவர் வெங்கடேஷனின் சட்டையை கொத்தாக பிடித்து நின்றார்.

அதிர்ந்த வெங்கடேஷன் மெதுவாக தன் காலரிலிருந்து கையை பிரித்து ” நான் கேக்கறதுக்கு முன்னாடி நீ முந்திக்கிறீயா ? என் குடும்பம்னா அது மீராவும் , ஆருஷியும் தான். என் அப்பா, அம்மா ,கூடப்பிறந்தவங்களோட சண்டைனா அது அவங்க உங்ககிட்ட  சண்டை போட்டது. இதுல நான் எதுக்கு தலையிடனும். உன்னால அவங்க போனாலோ, இல்லை அவங்களால நீயோ இல்லை உன் குடும்பம் போனாலோ எனக்கு கவலையே இல்லை. சம்பந்தமே இல்லாம என் குடும்பத்த நான் ஏன் அழிக்கனும் . அப்புறம் , ரொம்ப பக்காவா பிளான் போட்டு என்னை திருப்புற? “என்று நக்கலாக சிரித்துக் கொண்டே கூறினாலும் அவரின் கண்கள் சிவந்து கொண்டே இருந்தது.

கேசவருக்கு குழப்பம் ஏற்பட்டது. “மீரா தற்கொலை செய்யும் ரகம் இல்லை அதே போல் கோழையும் இல்லை. அன்பையும் சரி, கோபத்தையும் சரி திகட்ட திகட்ட கொடுப்பவள். அதே போல் அவள் ஒரு ஸ்டைரைட் ஃபார்வட் . ஒளிவு மறைவு இன்றி இருப்பவள். எதற்கும் துணிந்தவள் .பின்பு ஏன் இப்படி ? “என்று மனதிற்குள்ளேயே கேள்வி கணைகளைத் தொடுத்தார்.

அப்படி யோசித்து கொண்டிருக்கும் பொழுதே  வெங்கடேஷன்  “ஆமா, இவ்ளோ கேள்வி கேக்குறீங்க ! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். நான் தான் கதவைத் திறந்து பால்கனிக்கு போனேன். ஆனால், நீ கதவை திறந்து உள்ளே வந்த!யாரு பால்கனி கதவை உள்பக்கமா தாள் போட்டது? ” என்று பொறுமையோடு கேட்டார்.

அதன் பிறகே கேசவருக்கு புரிந்தது.பின்பு, இருவரும் ஒன்று சேர்ந்து யோசித்தனர். அப்பொழுது கேசவரின் தொலைபேசி ஒலி எழுப்பியது .

அதில் சுயநினைவு பெற்றது கேசவர், வெங்கடேஷன் மட்டுமல்ல ஆருஷியும் தான்.

ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று புரிவதற்கு நேரம் எடுத்தது.பின்பு தான் அனைத்தும் ஒன்று ஒன்றாக நினைவுக்கு வர, வேகமாக படுக்கையை பார்த்தாள்.

ஆனால் , அங்கு மீரா இல்லை. புருவ முடிச்சோடு நெற்றியில் கை வைத்து சிந்தித்தாள் ஒரு வேளை தான் கண்டது கனவோ என்று.

இல்லை என்பதற்கு சான்றாக படுக்கையின் கீழ் ரத்தக் கறை இருந்தது. பின்பு, உடனே வெளியேற துடித்து, கதவை திறக்க முற்படுகையில் கைப்பட்டு அழகுக்கு வைத்திருந்த ஜாடி தவறி விழுந்தது.

அச்சத்ததில் வெங்கடேஷன் மற்றும்  கேசவர் ஓடி வந்தனர். கேசவர் முதலிலேயே தெரிந்ததால் ஆருஷியை பொறுமையாக கையாள முயன்றார்.

ஆனால், வெங்கடேஷனோ தன் மகளின் இக்கோலம் கண்டு துடித்து அவளை இழுத்து சாந்தப்படுத்த முயன்றார். ஆனால், அவர் அமைதி நிலையை இழந்து விட்டு .

ஆருஷியோ யார் கூறுவதையும் காணாமால் , கேளாமல் அவள் ஒட முயற்சித்தத்தோடு புலம்பி கொண்டே இருந்தாள்.

” என்னால தான் அம்மா இப்படி செஞ்சாங்களா ? நான் தான் காரணமா ? நான் கோபப்பட்டத்துக்காக இப்படி பண்ணிக்கிட்டாங்களா? ” என்று அவள் சொன்னதையே கூறிக் கொண்டிருந்தாள்.

” அப்படிலாம் இல்லடா! நீயா ஏன் கற்பனை பண்ணுற ? “என்று கேசவ் ஒரு பக்கமும் , ” ஏன்மா இப்படி சொல்லுற? அதுலாம் ஒன்னும் கிடையாது நீயா எதுவும் நினைக்காத !” என்று கத்தி கூறி கொண்டிருந்தார் வெங்கடேஷன்.

” இல்லை, நான் ஒன்னும் கற்பனை பண்ணல ! அவங்க கையாலேயே எழுதிருக்காங்க ” அவர் கத்தியதற்கு மேல் இவளும் கத்தினாள்.

“என்ன சொல்லுற ? என்ன எழுதிருக்காங்க ? ” என்று கேசவர் அவளை உலுக்கினார்.

தன் கையில் உள்ள தாளை நீட்டினாள். அதை கேசவர் வாங்கும் முன் வெங்கடேஷன் வாங்கி பார்த்தார்.

“ஆருஷி , நீ தான்டா அம்மாவோட எல்லாமே. உனக்காக மட்டும் தான் வாழுறேனு பொய் சொல்ல மாட்டேன். ஆனால், உன்னை வசதியா வாழ வைக்கணும்கிறது என்னோட ஆசை இல்லை பேராசை . நீ நினைச்சது எல்லாமே கிடைக்கணும்னு நினைப்பேன். நீ தான்டா அப்பாவ காப்பதணும். பத்திரம் டா “

இவ்வாறு எழுதியிருந்ததை யோசனையுடன் பார்த்தார் வெங்கடேஷன். கேசவர் அதை வாங்கி பார்த்து மிகப் பெரிய குழப்பத்தில் ஆழ்ந்தார்.

அதை வெடுக்கென பறிங்கி ” என் மனைவிக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சு ” என்று கூறி விரல் நீட்டி எச்சரித்து விட்டு ஆருஷியையும் கையோடு இழுத்து சென்றார்.

கேசவருக்கு தான் தலைச் சுற்றுவது போல் இருந்தது. மறுபடியும் அர்ஜுன் அழைக்க ஒரு யோசனையும் இல்லாமல் இங்கு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினார்.

அமைதியாக கேட்டவன் “சரிப்பா , பாத்துக்கலாம். இப்போ நீங்க வாங்க. அசோக் இல்லை ஆகாஷை அனுப்புறேன். “

கேசவர் “வேணாம்பா , பக்கத்துல தான ரியா, ஆதிரா வீடு இருக்கு. நடந்து போய்டுறேன். அவங்களோட வரேன். “

அர்ஜுன் “சரிப்பா, அவங்க இரண்டு பேரிடம் சொல்லிடுறேன். நீங்க போங்க “

கேசவர் “ம்ம்ம்… வச்சுடுறேன் “

அர்ஜுன் “அப்பா……”

கேசவர் “சொல்லுப்பா “

அர்ஜுன் “இல்லப்பா , அந்த லெட்டர் …..”

கேசவர் “வெங்கடேஷன் வச்சிருக்காரு “

அர்ஜுன் “சரிப்பா… நான் ஆதிரா கிட்ட பேசிடுறேன். அங்கையே போங்க “

கேசவர் “சரிப்பா ” என்று கூறி போனை வைத்து விட்டு வீட்டின் வெளியே வந்த பொழுது வாட்ச்மென ஓடி வந்து ஆட்டோ பிடித்து தருவதாகக் கூறினான். வேண்டாம் என்று கூறி நடந்தே ஆதிராவின் வீட்டிற்கு சென்றார்.

அவர் ஆதிராவின் அப்பார்ட்மென்டை சென்றடையும் நேரம் ஆதிரா ஸ்கூட்டியை அவர் முன் நிறுத்தினாள்.

ஒன்றும் கூறாமல் அவள் பின்னே அமர்ந்து விட்டார். இலக்கின்றி எங்கோ பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென்று பிரேக் போட்டதில்  சுயநினைவு பெற்றார்.

திரும்பி பார்த்தவர் ஒன்றும் கூறாமல் ஆதிராவைப் பார்த்தார்.

“இறக்குங்கப்பா ! டென்ஷனில் பிபி தான் ஏறும் . ஏதாச்சும் சாப்பிட்டு போனா கொஞ்ச பெட்டரா இருக்கும் ” என்று கூறி அருகில் இருக்கும் ஹோட்டலில் நிறுத்தினாள்.

அவருக்கு அப்பொழுது தான் பசி வயிற்றை கிள்ளுவது புரிந்தது. இரண்டு பேருக்கும் காபி ஆர்டர் செய்து காத்துக் கொண்டிருக்கையில் கேசவர் “ஆதி , ஏதாச்சும் சாப்பிட ஆர்டர் பண்ணேன்”என்று கூறி தலையில் கைவைத்து நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.

அவரின் நிலை உணர்ந்து எதுவும் கூறாமல் அமைதியாக  ஆர்டர் செய்தாள். அதோடு, அர்ஜுனுக்கு அனைத்தையும் மெசேஜ் செய்து விட்டாள்.

அவர்களின் ஆர்டர் வரவும், அசோக் உள்ளே நுழையவும், கேசவருக்கு போன் வரவும் சரியாக இருந்தது.

எடுத்து காதில் வைத்த  போது அடுத்த பக்கம் கூறிய செய்தியில் அங்கேயே மயங்கி சரிந்தார்.

அவரை கைதாங்கலாக பிடித்து அமர வைத்து தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டான் அசோக். அருகிலிருந்தவர்களின் வற்புறுத்தலில் காபியை குடித்தவர் மடமடவென எழுந்து வெளியில் வந்தார்.

பின்னாடியே வந்த அசோக்கும், ஆதிராவும் என்ன என்று விசாரிக்க “பசித்ததால் மயங்கி விட்டேன். ஒன்னுமில்லை. நீங்க போங்க. நான் பாத்துகிறேன் ” என்று கூறி அருகிலிருக்கும் ஆட்டோ ஒட்டுநனரை அணுகினார்.

அசோக்கும், ஆதிராவும் அவரின் செய்கை குழப்பத்தை உண்டு படுத்தினாலும் வற்புறுத்தி இவர்களோடு சேர்ந்து காரில் கூட்டி சென்றனர்.

மீராவை சேர்த்திருக்கும் அறையை நெருங்க நெருங்க டிக் டிக் நொடிகளாக இருந்தது.

அந்நேரம் “அய்யோ,   இந்த வயசுல உனக்கு இப்படியா நடக்கணும் ” என்று கத்திக் கொண்டிருந்தனர்.

எனதழகா – 28 ❤️

” அய்யோ, உனக்கா இப்படி நடக்கனும் ? ” என்று  கேட்கும் குரல் கேசவரை நிலைகுலைய வைத்தது. தடுமாறியவரை ஆதிரா பிடித்துக் கொண்டாள்.

” இப்போ நடக்குறதுலாம், பன்னிரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த மாறியே இருக்குடா ” என்று குரல் கரகரக்க கூறினார்.

ஆதிரா”அப்பா, மனச குழப்பிக்காதீங்க! போய் பார்ப்போம் “

ஆறுதலாக பேசும் ஆதிராவை காண்கையில் சின்ன பிள்ளையில் இரட்டை ஜடை போட்டு சொல்லும் இளம் மொட்டு பவித்ராவின் நியாபகம் வந்து கண்கள் சிவந்தது.

ஆதிரா “அப்பா “

கேசவர்” ஒன்னுமில்லை. பவி நியாபகம் வந்துருச்சு. அப்போ பவி சொன்னத இப்போ நீ சொல்லுற “

ஆதிராவிற்கு கேசவரின் நிலைமை புரிந்ததால் ஒன்றும் கூறாமல் புன்னகைக்க மட்டும் செய்தாள்.

இவர்கள்  ஐசியூவிற்கு சென்றடையும் நேரம், அசோக் வேகமாக ஓடி வந்தான்.அங்கு அர்ஜுன் கதவின் ஒரு பக்கம்  நின்று கொண்டிருந்தான். வெங்கடேஷன்  மறுபக்கம் நின்று கொண்டிருந்தார்.

ஆருஷி பாமாவின் மடியில் படுத்திருந்தாள்.லஷ்மி அம்மா அப்பொழுது தான்  மயக்கத்திலிருந்து எழுத்திருந்தார். அவரை கைதாங்கலாக ஒரு செவிலியர் கூட்டி வந்தார்.

பாமாவை கண்டு மறுபடியும் அழுக ஆரம்பிக்க, ஆருஷியும் தேம்ப , அர்ஜுன் தான்  அனைவரையும் அமைதிப்படுத்தினான். வெங்கடேஷனுக்கு இதை கண்ட பொழுது எரிச்சல் முட்டியது.

ஒருவழியாக, மருத்துவர் வெளியில் வர அனைவரும் அவர் அருகில் சென்றனர். ஆருஷி ” அம்மாக்கு எப்படி இருக்கு? நார்மலா இருக்காங்களா ? முழிச்சு பாக்குறாங்களா? “என்று ஒரு பக்கம் அவள் கேட்க, லஷ்மி அம்மா “டாக்டர் என் மகள் முழிச்சு பாத்தாலா? நான் போய் பாக்கலாமா ? சரி ஆகிடுச்சா? ” என்று மறுபக்கம் மருத்துவரை பேச விடாமல் கேட்டனர்.

மருத்துவர் ” ரிலாக்ஸ் மா, அவங்களுக்கு ஒன்னுமில்லை ! கை அறுத்ததால்  கொஞ்சம் பள்ட் லாஸ் அதிகம் தான். பட், அதுக்கு டிரீட்மெண்ட் கொடுத்து சரி பண்ணிடுவோம். ஆனால், அவங்க இன்னும் கண் முழிக்கல. அதனால, சில டெஸ்ட் எடுக்க சொல்லிருக்கேன். பாப்போம்”

லஷ்மி அம்மா “அப்போ  என் மகள், ஏன் அவள் முழிக்கல? அவள இப்போ நாங்க பாக்கலாமா?”

மருத்துவர் “அம்மா , திரும்பவும் சொல்றேன் ரிலாக்ஸ்! அவங்களுக்கு இரத்தம் போயிருக்கு . அதுனால கூட அவங்க மயக்கத்துல இருக்கலாம். டெஸ்ட் எடுக்க சொல்லிருக்கேன். ரிஸல்ட் வரதற்கு முன்னாடி முழிச்சாலும் நான் வந்து பாக்குறேன். அதோட, நீங்க இப்போலாம் பாக்க முடியாது. எங்க அப்ஸர்வேஷன்ல இருக்கட்டும். கண் முழிச்சதுக்கு அப்புறம் பாருங்க “என்று கூறி விட்டு சென்றவரை அர்ஜுன் , ஆதிரா மற்றும் அசோக் அவர் முன் சென்றனர்.

மருத்துவர் “சொல்லுங்க “

அசோக் “இல்லை … தாத்தா இப்போ எப்படி இருக்காங்க ? “

மருத்துவர் “சீஃப் டாக்டர் பாத்துட்டு இருக்காங்க. சொல்லட்டும் என்னனு “

ஆதிரா “டாக்டர்,  நான் ஆதிரா. கைனகாலஜிஸ்ட்.”

டாக்டர் “ம்ம்ம்…. தெரியும் மா!”

ஆதிரா “டாக்டர், பாட்டி ரொம்ப டிப்ரஸ்டா இருக்காங்க.அவங்களுக்கு இன்னும் தாத்தா பத்தி தெரியாது. அதுனால், சிலிப்பிங் டோசேஜ் கொடுக்கலாமா ? “

டாக்டர் “அப்படியா ” என்று கூறி யோசித்தவர் திரும்பி லக்ஷ்மி அம்மா புலம்புவதைப் பார்த்தவர் “சரி , அவங்க ஹெல்த் செக் – அப் டிடெயில்ஸ் சொல்லுங்க. அதுப்படி பாத்துக்கலாம் ” என்று கூறி அவர் சென்று விட்டார்.

இவர்கள் மூவரோடு கேசவரும் வசுதேவரைக் காணச் சென்றனர். ஆருஷி பாமாவை விடாது பிடித்துக் கொண்டிருக்க பாமாவால நகர முடியவில்லை.

தன் மனைவியின் நிலைக்கு காரணம் இவர்கள் தான் என்று நினைத்து வசுதேவரைக் காணச் செல்லவில்லை.

அங்கு டாக்டர் பார்த்து விட்டு சென்று விட்டார். நீங்கள் யாரேனும் வந்தால் டாக்டரை சந்திக்க சொன்னார் என்று செவிலியர் சொல்ல, இவர்கள் கண்ணாடி வழியே வசுதேவரைப் பார்த்து விட்டு டாக்டரின் அறைக்கு சென்றனர்.

இவர்கள் குடும்பம் பெரிது என்பதால், வசுதேவரை பரிசோதித்து விட்டு அவர் யார் என்பதைத் தெரிந்து கொண்டார். இவர்கள் நால்வரும் சென்றவுடன் சில பல  விசாரிப்புக்கு பின்பு  விஷயத்திற்கு வந்தார்.

டாக்டர்”சார், நான் நேரடியாகவே சொல்லுறேன்.அவருக்கு அட்டாக் வந்துருக்கு.ஏற்கனவே, ஒரு அட்டாக் வந்துருக்கு இல்லையா? “

கேசவர் “ஆமாம்” அர்ஜுன் “இல்லை” என்று ஒரு சேரக் கூறினர்.

அர்ஜூன், அசோக் மற்றும் ஆதிரா அதிர்ந்து விட்டனர்.

அச்சமயத்தில், நிவான் தனது மாமாவிடன் மல்லுக்கு நின்று கொண்டிருந்தான். “உங்களுக்கு என்ன பைத்தியமா? எதுவுமே புரியாதா உங்களுக்கு ? “

“என்ன புரியனும்? இல்லை என்ன புரியனும்? “

நிவான் “ஆமாம், உங்களுக்கு புரியாது. ஏன்னா, இறந்தது என் அப்பா, அம்மா😡”

“நிவான், நல்லா கேட்டுக்கோ. உனக்கு அம்மாவகிறதுக்கு  முன்னாடி எனக்கு அக்கா. அதே மாதிரி , உனக்கு அப்பாவாகிறதுக்கு முன்னாடி அவன் என் தோழன் . வயசு கம்மினு கூட பாக்காம  உங்க அம்மாவை  கல்யாணம் பண்ணிக்கிட்டான்😤”

” இப்போ அதுக்கு என்ன உங்களுக்கு ? அவங்க இரண்டு பேருக்கும் மனசு ஒத்துப் போச்சு. அதுக்கு மேல என்ன வேணும் ” என்று நிவான் எகிறிக் கொண்டு கத்தினான்.

“மனசு ஒத்துப் போச்சு தான் . நான் இல்லைனு சொல்லல. ஆனா , ஜாதகம் பொருத்தம் பாக்காம கல்யாணம் பண்ணி இப்படி ஆயுள குறைச்சுட்டானே! என்ன பண்ணுறது? “

அபி ” இப்போ எதுக்கு இந்த தேவையில்லாத பேச்சு. நம்ம அடுத்த மூவ் என்ன? அத்தை சாவுக்கு நியாயம் கிடைக்கணும்” என்று ஆக்ரோஷமாகக் கூறினான்.

“அக்கா இப்படி பண்ணிடுச்சேனு கோபம் தான் . ஆனால், என் அக்காவை இப்படி செய்த குடும்பத்துக்கு தண்டனை கொடுக்காம விட மாட்டேன்.”என்று அவரும் சபதம் எடுத்தார்.

🏔️ஊட்டி

அனு ” அவங்க அடுத்த மூவ் என்ன? எதுவும் தெரிஞ்சதா ? அவங்க தொடங்கிறதுக்கு  முன்னாடி நம்ம வேலையைப் பாத்துடனும் “என்று அவள் தனியாக திட்டமிட்டாள்.

போனில் விசாரித்து விட்டு திரும்பும் பொழுது கையில் வைத்திருக்கும் பேனா கழுத்தில் போட்ட சங்கிலியில் சிக்கியது.

லாக்கெட் போல் இருக்கும்  அந்த செயின்  பேனாவை உருவும் சமயம் அது திறந்தது.
அதில் அழகாக அர்ஜுனும், அனுவும் சிரித்துக் கொண்டிருக்கும் காட்சி மனதை வருடியதோடு ஒரு அழகான காதல் பாடல் மனதிற்குள் தோன்றியது.

கொஞ்சம் கனவுகள்…
கொஞ்சம் நினைவுகள்…
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்…

கொஞ்சும் உறவுகள்…
கெஞ்சும் பிரிவுகள்…
கண்ணை துண்டாக்கி துள்ளும்…

திமு திமு தீம் தீம் தினம்…
தள்ளாடும் மனம்…
கண்ணில் காதல் வரம்…
தம தம தம் தம் சுகம்…
உன்னாலே நிதம்…
நெஞ்சில் கூடும் மணம்…

 ஓ… அன்பே நீ சென்றால் கூட வாசம்…வீசும் வீசும் வீசும் வீசும்…
என் அன்பே என் நாட்கள் என்றும் போல…போகும் போகும் போகும் போகும்…
என் உள்ளே என் உள்ளே…
தன்னாலே காதல் கணம் கொண்டேன்…

 ஓ… அன்பே நீ சென்றால் கூட வாசம்…வீசும் வீசும் வீசும் வீசும்…
என் அன்பே என் நாட்கள் என்றும் போல…போகும் போகும் போகும் போகும்…
என் உள்ளே என் உள்ளே…தன்னாலே காதல் கணம் கொண்டேன்…

சந்தோஷமும் சோகமும்…
சேர்ந்து வந்து தாக்க கண்டேனே…சந்தேகமாய் என்னையே…
நானும் பார்த்து கொண்டேனே…
ஜாமத்தில் விழிக்கிறேன்…
ஜன்னல் வழி தூங்கும் நிலா…
ஓ… காய்ச்சலில் கொதிக்கிறேன்…கண்ணுக்குள்ளே காதல் விழா… விழா…

ரம் தம் தன நன…
ரம் தம் தன நன…
ரம் தா ரம் தா தம் தம்…

அப்பாடலின் நியாபகத்தோடு அர்ஜுனின் நினைவுகளையும் கலந்து நிலவை ஏக்கத்தோடு பார்த்தாள்.

அதே நேரம் , இவ்வளவு வேதனைகளுக்கு தன் கூட அனு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அர்ஜுனும் நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கீர்த்தி☘️

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்