எனதழகா-19, 20❤️
🏙️AA சொல்யூஷன்ஸ்
அசோக்கை கம்பெனியில் இறங்கியவுடன் சிறிது நேரம் அங்கேயே நின்று பொறுமையாக யோசித்து விட்டு அவன் சென்ற இடம் செக்யூரிட்டி ரூம்.
திடீரென்று தன் முதலாளி ஒருவர் வருவார் என்று எதிர்பாராததால் பதட்டத்தில் ஆழ்ந்தனர் அங்கு வேலை செய்த இருவரும்.
அவர்களின் பதற்றத்தை கவனித்தும் அமைதியாக கணிணியை கவனிக்க ஆரம்பித்தான். மேல் தளத்தில் பரபரப்பு இருந்ததை உணர்ந்தவன் வேகமாக அனைத்து பகுதியையும் கவனித்தான். எதுவும் தென்படாமல் இருந்தது. அதனால் தன் அறையிலோ, அர்ஜுன் அறையில் ஏதோ உள்ளது என்று நினைத்து வேகமாக வெளியேறிய நேரம் விக்ரம் போவதைப் பார்த்தான்.
அவனை பிடிக்க வருவதற்குள் அவன் ஆட்டோவில் இன்னொருவனோடு ஏறி சென்று விட்டான். அதை அர்ஜுனிடம் கூறி விட்டு இவர்களின் அலுவலகத் தளத்திற்கு சென்றான்.அங்கே அனைவரும் இவர் வந்தவுடன் அவரவர் வேலையைச் செய்தனர். அசோக் யோசனையோடு தன் அறையில் நுழையும் சமயம் பிரகாஷ் “சார், அர்ஜுன் சார் ரூமுக்கு வாங்க. ராகவேந்தர் சார் வந்து இருக்காரு “.
அலுவலுகத்தின் பதட்டம் இவர் தான் என்று தெரிந்தவுடன் பிரகாஷிடம் திரும்பி “உள்ளே போனவுடன் பீவரேஜஸ் கொண்டு வா” என்று கூறி விட்டு சென்றான்.
“ஹலோ ராகவேந்தர் சார்” கூறிக் கொண்டே உள்ளே நுழைய அங்கு ராகவேந்தருடன் ஒரு இளம் ஆடவன் அமர்ந்திருந்தான்.
அவனை யோசனையோடு பார்த்துக் கொண்டே உள்ளே நுழைய எப்பொழுதும் இருக்கும் அதே துள்ளலோடு ராகவேந்தர் “ஹாய் யங் மேன் ? அர்ஜுன் இல்லையா ? ஆபிஸிக்கு ஏன் லேட் ? ” .
“டாடி, வாட் இஸ் திஸ்? ஒய் ஆர் யூ ஆஸ்கிங் லைக் திஸ்? ஐ ஆல்ரெடி டோல்டு யூ லாட் . ட்ரை டு அன்டர்ஸான்ட் “புதியவன் கடுமையாக பேசிக் கொண்டிருப்பதில் வைத்த தெரிந்தது அவன் ராகவேந்தரின் புதல்வன் என்று.
“சில் , மை பாய்!” என்று ராகவேந்தர் கூறிக் கொண்டே அவனின் தோளில் கைப்போட அதனை மெதுவாக அதே சமயம் கடுமையாக பார்த்துக் கொண்டே எடுத்து விட்டான்.
இவை அனைத்தையும் அசோக் கண்டும் காணாதது போல் இருந்த சமயம் மூவருக்கும் டீ கொடுக்க உள்ளே நுழைந்தாள் சாரா.
சாரா “சார், மே ஐ கம் இன் ? “. அசோக் “வாங்க சாரா ” . கண் பாஷையிலேயே அவளை நிற்க சொன்னான் அசோக். அசோக்கின் கண் அசைவிலேயே அவர்கள் முன் பானங்களை வைத்து விட்டு கையில் குறிப்பேடோடு நின்று விட்டாள்.
” இன்ட்ரஸ்டிங் ” என்று வாய் விட்டே பாராட்டினான் அப்புதியவன். அவனை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு தன் வேலையைக் கவனிக்க தொடங்கி விட்டாள்.
” அசோக், இவன் என் பையன் அகிலன். இப்போ தான் ஃபாரினில் இருந்து வந்திருக்கிறான். ஆபிஸில் நடந்த பிரச்சனையைப் பார்த்து கொந்தளிக்கிறான். இப்போ உங்களை பார்க்கனும்னு சொன்னான். அதான்” என்று தன் மகனைப் பற்றியும், அவன் நடந்து கொண்டதிற்கு விளக்கத்தையும் சேர்த்து கொடுத்தார் ராகவேந்தர்.
“புரியுது சார் உங்க இரண்டு பேரோட நிலைமையும் ” என்று அசோக் முடிப்பதற்குள் “புரியுதுல சார்! இப்போ இந்த ஆபிஸில் என்ன நடக்குது? எங்க ப்ராஜெக்ட் என்னாச்சு? “இடைபுகுந்து அகிலன் கேட்டான்.
தனது பாஸைக் கேள்வி கேட்கிறான் என்ற கோபத்தோடு தன்னை பார்க்கிறான் என்ற கடுப்பும் சேர்ந்து “சார், உங்க ப்ராஜெக்டுக்கு ஒன்றும் ஆகவில்லை. வேலை போய்க்கிட்டு இருக்கு சார். நீங்க சொன்ன டைமில் முடிச்சிருவோம்” தீர்க்கமாக கூறினாள் சாரா.
“அப்போ, கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி நடந்த பிரச்சனை? “அகிலன் நக்கலாகக் கேட்டான். தன் முன் யாரிடமும் பேசாதவள் இன்று இவனிடம் எதிர்த்து பேசுவதைப் பார்த்து அதிர்ந்த அசோக் “சாரா, வாட் இஸ் திஸ்? ” என்று பொறுமையாக கேட்டான்.
அதன் பின்னே தான் பொறுமை இழந்து பேசுவதை உணர்ந்து இருவருக்கும் பொதுவாக “சாரி” என்று கூறினாள். “நீங்க போய்ட்டு பிரகாஷை வரச் சொல்லுங்க “அசோக் கூற “சரி” என்று கூறி வெளியேற நினைக்கும் பொழுது ” ஏன் அசோக்? தன் பாஸுக்கு ஏதாவதுனா எதிர்த்து பேசிறதுல தப்பில்லை. நான் எதுவும் நினைக்கல. அவனும் நினைக்க மாட்டான் ” நக்கலாக அகிலனைப் பார்த்து கொண்டே கூறினார் ராகவேந்தர்.
பின்பு , ராகவேந்தரிடம் அனைத்தையும் கூறினான். பொறுமையாக கேட்டு கொண்டிருந்த ராகவேந்தர் “ஓகே. டேக் யுவர் டைம் “சொல்லி முடிப்பதற்குள் “நோ அப்பா! நம்ம சொன்ன வேலை சொன்ன நேரத்தில் முடியனும். வேறு எந்த உதவினாலும் உதவி செய்வோம் . ராகவேந்தரிடம் கூறி விட்டு அசோக்கிடம் திரும்பி “புரிஞ்சுக்கோங்க !” கூறிவிட்டு எழுந்து விட்டான்.
ராகவேந்தரும் எழுந்து விட்டார். வேறு வழியில்லாமல் அசோக் “எல்லாம் பேக் – அப் இருந்ததால் இப்போ பண்ணிட்டோம். ஆனால், இன்னும் பாதுகாப்பு பலப்படுத்தனும்” கூறி கைகுலுக்கி வழியனுப்பி விட்டான்.
இவர்கள் எழுந்தவுடன் சாரா வெளியில் கதவை திறந்து கொண்டு நின்றாள். இவர்கள் இருவரும் வெளியேறியவுடன் சாரா அசோக்கை பார்க்க “போங்க, உங்க வேலையைப் பாருங்க”கூறியவுடன் வெளியேற நினைத்து கதவை திறக்க ராகவேந்தர் உள்ளே நுழைந்தார்.
ராகவேந்தர் “அசோக், நான் சாராக்கிட்ட பேசணும். ஒரு அரை மணி நேரம் பெர்மிஷன் தரியா? “. அசோக் சாராவைப் பார்த்து விட்டு “அவங்களுக்கு விருப்பம் இருந்தா மட்டும் கூட்டிக்கிட்டு போங்க சார் “விருப்பத்தை மட்டும் அழுத்தி கூறினான்.
“தேங்கஸ் பா ” கூறிய ராகவேந்தர் சாராவை கெஞ்சுவதைபோல் பார்த்தார். ஒரு வயது மிக்க மனிதர், மதிக்கத்தக்கவரும் கூட. அதனால் வேறு வழி இல்லாமல் அசோக்கிடம் பெர்மிஷன் கேட்டு விடைபெற்றாள்.
அவர்கள் சென்றது ஒரு காமி ஷாப்.அங்கு ஏற்கனவே அகிலன் அமர்ந்திருந்தான்.” என்ன நடந்தது ? ” என்று அகிலன் கேட்க அனைத்தையும் கூறி முடித்தாள் அகிலனின் மனைவி சாரா.
ராகவேந்தர் யோசனையோடு இருக்க “என்ன மாமா யோசிக்கிறீங்க ? “சாரா கேட்க, “ஏன் மா , உங்க இரண்டு பேரையும் பிரிச்சு வைச்சு சங்கடப்படுத்துறேனா? “ராகவேந்தர் இயலாமையோடு கேட்க ,
மனந்தாங்காமல் “அய்யோ மாமா ,ஏன் இப்படி …. “அவள் சொல்லி முடிப்பதற்குள் “ஆமாம்னு சொன்னா சேர்த்திடுவீங்களா?” அகிலன் முறைப்போடு கேட்டான்.
சாரா அகிலனை முறைத்து விட்டு ராகவேந்தரிடம் மீதி விஷயங்களை பேசி விட்டு வந்தவளை டீ குடிப்பதற்காக வந்த பிரகாஷ் பார்த்து விட்டான்.அவன் உடனே அசோக்கிற்கு அழைத்தான். எடுக்கவில்லை என்றதும் நேரடியாக சொல்லப் போனான். ஆனால், அசோக் மீட்டிங்கில் இருந்ததால் அர்ஜுனுக்கு அழைத்து “சார், நான் நினைக்கிறேன் சாரா ராகவேந்தர் சாரோட ஸ்பைனு. இப்போ அவங்க இரண்டு பேரும் வந்தததை நானே பார்த்தேன். அவங்க ஏற்கனவே தெரிந்தவர்கள் போல் பேசினாங்க ” பதற்றத்துடன் கூறினான்.
அர்ஜுன் ஒன்றும் கூறாமல் ஒரு நிமிட அமைதிக்கு பின் ” என் கிட்ட சொன்னதா சொல்லி அசோக்கிட்ட சொல்லு. அவன் பார்த்துப்பான் “கூறி யோசனையோடு ஈஸ்வரியை பார்த்தான்.
அசோக் வந்தவுடன் கூற சாராவை விசாரித்தான் .அவள் ஒப்புக் கொண்டாள் தான் ராகவேந்தருக்காக வந்தது என்றும் அகிலனின் மனைவி என்றும்.
“எதுக்கு ராகவேந்தர் சார் எங்களுக்கு உதவி செய்யனும்? “அசோக் சாராவை கேட்ட பொழுது அர்ஜுனும் ஈஸ்வரியை கேட்டான்.
🏙️AA சொல்யூஷன்ஸ்
சாரா கூறியதை வைத்து, அசோக் அர்ஜுனிடம் கூறி ,அர்ஜுனும் அகிலனும் பேசிக் கொள்ளச் சொன்னான். ஆனால் அர்ஜூன் ” இல்லை! நீயே பேசிடு .நான் வந்து கேட்கிறேன். ஆகாஷ் கால் செய்யுறான் பை!” என்று கூறி அசோக் அடுத்து பேசுவதற்குள் வைத்து விட்டான்.
அவன் உள் மனதிற்கு தோன்றியது யாரோ தன்னை பின்தொடர்வது போன்று. அதனாலே, அசோக்கிடம் விவரமாக கூறாமல் வைத்து விட்டான்.
பின்னாலிருந்து கவனிக்கும் ருத்ரன் இவ்விஷயத்தை பெரிது படுத்தாமல் இருந்தான்.பின்னால் அவனுக்கு வர போகும் பிரச்சனையை பற்றி முன்பே தெரிந்திருந்தால் இவ்விஷயத்தை அவ்வளவு எளிதில் விட்டிருந்திருக்க மாட்டான்.
அசோக் சாராவை வைத்து அகிலனிடம் வீடியோ காலில் உரையாட நினைத்தான். இந்நிலையில் யாரிடமும் நேரடியாக உரையாடினாலும் அது நல்லதற்கு இல்லை என்று நினைத்து கொண்டான்.
அகிலனிடம் உரையாடிய பொழுது “சாரா என் மனைவி தான். ஆனால், நீங்கள் நம்புவீங்களோ மாட்டிங்களோ சாரா உங்க பி.ஏ வா இருந்து தான் என் மனைவி ஆனாள் . இன்னொரு விஷயம் அவர் பி.ஏ வாக வந்தது என் அப்பா மூலமா தான் ” என்று கூறியவுடன் கோபம் தலைக்கேறியது அசோக்கிற்கு.
“டேய், இப்போ நீ என்ன தான் சொல்ல வர்ற? ஒழுங்கா தெளிவா சொல்லு. ரிடில்(விடுகதை) போடுற நேரமாடா இது?”பல்லை கடித்துக் கொண்டு அசோக் கேட்டான்.
“என்னது டேய்யா ? ” என்று அகிலன் கையில் வாய் வைக்க, சாரா கமுக்கமாக சிரித்தாள். அதைப் பார்த்த அகிலன் “அண்ணா, பிள்ளை பூச்சிலாம் சிரிக்கிற மாதிரி செய்யாதீங்க. நீங்க எனக்கு ஒரு ரோல் மாடல். இப்படி இன்சல்ட் பண்ணாதீங்க ” என்று முறையிட்டான்.
“டேய், இன்னும் நீ விஷயத்துக்கு வரல” திரும்பவும் அசோக் கூற அகிலன் அடுத்து பேசுவதற்குள் ” சார், நீங்க எவ்ளோ கேட்டாலும் அவனோட பதில் அவ்ளோதான் .உங்க டைம் தான் வேஸ்ட் ஆகும். நீங்க ராகவேந்தர் மாமா கிட்ட கேளுங்க ” என்று சாரா உரையை முடித்தாள்.
அசோக் யோசனையோடு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்க சாரா அகிலனை பார்த்தாள். அகிலன் கையை விரித்து கண்களாலேயே “ஏண்டி ” என்று கேட்டான். சாரா கண்களை மூடித் திறந்து கையை நீட்டி “எல்லாம் நன்மைக்கே ” என்று வாயசைத்தாள்.
பின்பு அகிலனிடம் கூறி போனை கட் செய்து விட்டு ராகவேந்தருக்கு கால் செய்தான். ராகவேந்தர் காலை எடுத்தவுடன் “மை பாய், சாரா பத்தி உனக்கு தெரியணும்னு தான் நான் சாராவை கூட்டிக்கிட்டு போனேன். சாராவை உங்களுக்கு உதவிக்கு தான் வைத்தது. அப்படி என்கிட்ட கோரிக்கை வைச்சது உங்க தாத்தா தான் “என்று பொறுமையாக கூறினார்.
அசோக் யோசனையோடு கேட்க வருவதற்குள் “தாத்தாவை தப்பா நினைக்காதாப்பா! அவரு உங்களை கண்காணிக்கனும் நினைக்கல. உங்களை பாதுகாக்கத்தான் நினைக்கிறார். சாரா டெக்னாலஜி சைட்ல பயங்கர ஸ்ட்ராங் பா . ஹாக்கிங்கும் தெரியும். இப்போ வரைக்கும் தாத்தாக்கு நீங்கள் சொல்லாமல் ஒரு விஷயமும் தெரிஞ்சுகிட மாட்டார். எல்லாருக்குமே இப்படி பாதுகாப்புக்கு ஆள் வைத்திருக்கிறார்” என்று தாத்தாவின் வேலைக்கு ஆதரவாக பேசினார்.
இன்னும் அவன் யோசனையோடு இருக்க “இதுக்கு மேலே என்ன சொல்றதுனு தெரியலைப்பா!” என்று அவர் வருத்தத்தோடு கூற “அய்யோ சார் , அதில்லை …..” என்று அசோக் வார்த்தைகளை மென்று முழுங்க ” சரிப்பா, நான் எல்லாத்தையும் சொல்றேன் “என்று கூறி அனைத்தையும் கூறினார்.
அனைத்தையும் பொறுமையாக கேட்ட அசோக் அதிர்ந்து விட்டான்.” இதை நீ எக்காரணம் கொண்டு அர்ஜுனுக்கு கூறி விடாதே. நேரம் வரும்பொழுது சொல்லிக் கொள்ளலாம் ” என்று ராகவேந்தர் கூறி அசோக்கை ஒத்துக் கொள்ள வைத்தார்.
அந்நேரம் ஒருவன் அனைத்தையும் ஒன்று விடாமல் அனுவிடம் கூறினான். ” இவ்வளவு பெரிய உதவி செய்ததற்கு நன்றி. நான் அண்ணணிடம் பேசிக்கிறேன் ” என்று அனு கூறினாள்.
சிறிது நேர பொதுவான உரையாடலில் அவன் ஏதோ கூற வந்து தயங்குவது போல் இருந்தது. அதைப் புரிந்து கொண்டு அனு கேட்டதற்கு “இல்லை , AA சொலியுஷன்ஸில் இந்த மாறி ப்ராஜெக்ட் ஹேக் ஆகிடுச்சுனு ஒருத்தன் அகிலனுக்கு கால் பண்ணி சொல்லிருக்கான் உள்ளே உள்ளவங்களுக்கு தெரியுறத்துக்கு முன்னாடியே”.
“என்ன ? யாருனு தெரியுமா? வேறு எதுவும் சொன்னானா? ” என்று அனு பதறிக் கொண்டு கேட்க
” இல்லை தெரியலை! ஆனால் ஆபிஸ் ஸ்டாப்ஸ் கிடையாது . அது மட்டும் கன்பர்ம். வேறு யாரோ கால் செய்து சொல்லிருக்காங்க. அதோடு , ராகவேந்தர் சார் பொறுமையா பேசுவாரு. நீ தான் சரியான ஆளு. அவங்கிட்ட என்னன்னு கேளு? அப்படினு சொல்லிருக்கான்”
அனு” என் கெஸ் கரெக்ட்னா பண்ணது அவனா தான் இருக்கும் .என் வழியில குறுக்கு வராமா பார்த்துக்கனும் . நான் அதை பார்த்துக்கிறேன் . பை” என்று கூறி யோசித்து விட்டு அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைக்கு ஆயுத்தமானாள்.
🏥மருத்துவமனை
தாமரை ரியா முழிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தாள். அவர்கள் காத்திருப்புக்கு பதில் அளிப்பது போல் கண் விழித்தாள். நர்ஸ் டாக்டரை அழைத்து சில டெஸ்டுகள் செய்த பின் ஐ.சி.யு. வில் இருந்து நார்மல் வார்டிற்கு மாற்றினர்.
கண் விழித்தவுடன் தன் அன்னை நிற்பதை கண்டவுடன் கண்கள் குளமாகியது. தாமரையும் ஆரத் தழுவி அவளை கட்டியணைத்து அழுதார். அழுகையினிடையே “ஆபிஸில் ஆயிரம் நடக்கும் . எல்லாத்தையும் மனதில் போட்டு கொழப்பாத டா. அது உனக்கு தான் பாதிப்பு “என்று தாமரை கூற,
ரியாவிற்கு ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தும் தெரிய வர வேகமாக அன்னையை தன்னிடம் இருந்து பிரித்து அவருடைய போனைக் கேட்டாள்.
“ஏண்டி என்னாச்சு? “என்று கேள்விகள் கேட்டாலும் மகள் கேட்டது போல் போனை அவளிடம் நீட்டினார்.
போனை வாங்கியவள் யாருக்கோ அடிக்க அப்பக்க நபர் ஏற்கப்படாமல் போக, முயற்சியை விடாமல் மறுபடியும் மறுபடியும் தொடர்பு கொள்ள பார்த்தாள்.
ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் போனை வீசி விட்டு தலையில் கை வைத்த பின்னரே தன் தந்தையின் ஞாபகம் வந்து அன்னையிடம் கேட்டாள்.
” அவரும் ஆகாஷும் வசு அப்பாவையும், கேசவ் அண்ணாவையும் வெளியில் எடுக்க பேச போயிருக்காங்க ” என்று தாமரை கூறி முடித்த நொடி வேகமாக தன் தந்தைக்கு அழைத்தாள்.
மறுபுறம் போனை ஏற்கப்பட்ட உடன் ரியா ” இரண்டு பேரும் உடனடியாக இங்க வாங்க ” என்று கூறி போனை வைத்து விட்டாள்.
இவர்கள் இருவரும் பதட்டத்தோடு உள்ளே வந்தவுடன் ஆகாஷிடம் ஒரு விஷயத்தை பகிர்ந்தாள். அவள் கூறியவுடன் ,ஆகாஷ் அர்ஜுனிடம் கூறி ,ஈஸ்வரியும் அர்ஜுனும் மருத்துவமனை வந்தனர்.
அவர்களை பார்த்து ரியா மன்னிப்பு கேட்டு அழுதாள் “நான் தான் தப்பு செய்து விட்டேன். மன்னித்து விடு அர்ஜுன் ” என்று ரியா அழுது புலம்பினாள்.
தாஸும் , தாமரையும் ஒன்றும் கூற முடியாமல் அமைதியாக நின்றனர். அர்ஜுன் கண்கள் சிவக்க ரியாவை பார்த்தான்.
கீர்த்தி☘️