எனதழகா-17 ❤️
ஒரு மணி நேரத்தில் அனைத்தும் நடந்தேறிவிட்டது. எந்த பக்கமும் திரும்ப முடியாமல் இருந்தனர். ஒரு சில நிமிடங்களில் அசோக்கும், ரியாவின் தாய் தந்தையரான தாஸ் மற்றும் தாமரை அழுது கொண்டே வந்தனர்.
தாஸ் அப்பா அர்ஜுனிடம் கைகள் நடுங்க அவனை பிடிக்க , தாமரை அம்மாள் ஆகாஷை கட்டிக் கொண்டு அழுதாள். ஆகாஷால் தாங்க முடியாமல் அவனும் அழுதான். தாஸ் அப்பாதான் “தாமரை , ஆகாஷும் அழுகிறான். பேசாமல் இரு ” என்று கூறி தன்னையும் சமன் படுத்தி அர்ஜுனைப் பார்த்தார்.
“சில டெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் பேசிக்கலாம்னு சொல்லிருக்காங்க அப்பா.” என்று அர்ஜுன் கூற தாஸ் கைகளை கட்டிக் கொண்டு “என் மகள நீங்க காப்பாத்திடுவீங்கனு தெரியும். டிவியில் நியூஸ் பார்த்தேன் ” என்று அவர் கேட்டார்.
கண்கள் கலங்கி, கைகள் நடு நடுங்க ,குரல் கரகரக்க “ஹக்கும்….. அப்பா ….” அவனுக்கு வார்த்தைகள் தடுமாறியது. அதை உணர்ந்தவர் “ரிலாக்ஸ் அர்ஜுன் ” என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்தார்.
இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் வெளியே வரத் துடித்தது. முயன்றும் முடியாமல் போய் விட்டது அவர் கேட்டதும்.
பின்பு, அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டப் பின் தாமரையிடம் சென்று “நீ பாப்பாவப் பார்த்துக்கோ. நான் இவங்க கூட கொஞ்சம் வெளியே போய் விட்டு வரேன் ” என்று கூறிவிட்டு ஆகாஷிடம் திரும்பி ” அவளுக்கு சாப்பாடு மட்டும் நேரத்துக்கு கொடுக்க சொல்லு. சுகர் இருக்கு. மாத்திரை போடனும்.”
“அப்பா. அது வந்து….”அர்ஜுன் இழுக்க, “ஏன்பா, நாங்க உங்களுக்குலாம் உதவி செய்யுற அளவு இல்லையா? “தாஸ் அப்பா கேட்க
“அய்யோ” அர்ஜூன் பதற அசோக் ஏதோ சொல்ல வர “போதும் டைம் இல்லை,வாங்க” என்று மூவரையும் இழுத்துக் கொண்டு சென்றார்.
அசோக்கை AA பொலியுஷனில் இறக்கி விட்டார். “அப்பா….” முழு பிதுங்கி உள்ளே போகாமல் நண்பர்களை துணைக்கு அழைத்தான். அவர்களும் ஒன்றும் கூற முடியாத நிலையில் இருந்தனர்.
“அசோக், கஷ்டப்பட்டு உருவாக்கினது. நீங்க இந்த பிரச்சனையையும் கவனிக்கனும். நீ தான் இந்த இடத்துக்கு சரி. அவன் பதட்டப்படுவான். அதோடு வேறு யாரும் இங்க இருந்தே எதுவும் செய்யுறாங்களானு தெரியலை. சோ, நீ இங்க இரு .கிளம்புடா ” என்று அவர் கூறியவுடன் முவருக்கும் புரிந்து அவரவர் வேலையைக் கவனித்தனர்.
அவர்கள் அடுத்து சென்றது ஈஸ்வரி ( ஆகாஷ் அம்மா)அலுவலகத்திற்கு.”நீங்கள் பதற்றத்தில் யோசிக்க மாட்டீர்கள் என்று தெரியும் “என்று கூறி உள்ளே நுழைந்து வரவேற்பாளரிடம் (ரிஷப்ஷனிஸ்ட்) தங்கள் பெயரைக் கூறி காத்துக்கொண்டிருந்தனர்.
ஈஸ்வரி அம்மாவே வெளியில் வந்தார். பக்கத்தில் இருக்கும் ஹோட்டலுக்கு
அழைத்து சென்றார். மூவருக்கும் சேர்த்தே ஆர்டர் செய்த பின் தான் அர்ஜுனிடம் “டிவியில் பார்த்தேன். ஏதாச்சும் தெரிஞ்சதா? எனி கெஸ்? “.
அர்ஜுன்”ம்ம்….. உங்களிடம் ஏற்கனவே சொன்ன வரைக்கும் தான் தெரியும் ”
ஈஸ்வரி”ருத்ரன் “.
தாஸ் “பேரு தவிர எதுவும் தெரியலயா ?”. அர்ஜுன் “பேரே சந்தேகம் தான்?”
மூவரும் பேசுவதை பார்த்து ஏதோ வேற்றுக் கிரகத்தில் இருப்பது போல் தோன்றி ஆகாஷ் தலையை சொறிந்து கொண்டே “அப்பா, இப்படி ஆளு ஆளுக்கு ஹீரோ ஆனால் உண்மையான ஹீரோக்குள்ள மரியாதை போய்டும் ” என்று அந்நேரமும் சிரிக்காமல் காமெடி செய்தான்.
ஈஸ்வரி அம்மாவும், தாஸ் அப்பாவும் சிரிக்க அர்ஜூன் பல்லைக் கடித்துக் கொண்டு ஃபோர்க் ஸ்பூனை இறுக்கி பிடித்து டேபிளில் குத்தி அவனை முறைத்தான்.
ஆகாஷ் அடுத்து பேசுவதற்குள் ஆர்டர் செய்த உணவு வர அப்பொழுது தான் இருவருக்கும் வயிற்றைக் கிள்ளியது.
தாஸ் அப்பாவும் அர்ஜுனிடமிருந்து ஸ்பூனை வாங்கி சாப்பிடச் சொன்னார். “வாய மூடேன்டா ” என்று ஈஸ்வரி அம்மாவும் தன் பங்கிற்கு திட்டிய பின்னே அர்ஜுன் அமைதியாக சாப்பிட்டான்.
“யாரு ருத்ரன் ?” என்று ஆகாஷே ஆரம்பித்தான். “விக்ரம் ப்ராபளம் சொன்னேன் இல்லையா? அதை செய்ய சொன்னது ருத்ரன்.” என்று அர்ஜுனும் கோபத்தை மறந்து கூறினான்.
ஆகாஷ்”சரி , அவன் யாரு? அவன் எதுக்கு உங்களை டார்கெட் பண்ணுறான்? என்று பசியினால் பாதி வடையை வாயில் அமுக்கி கொண்டு கூறினான்.
“மச்சான், கடுப்பாகுதுடா !” என்று அர்ஜுன் கூற ஆகாஷ் மீதம் முழுவதும் உண்டு விட்டு “இப்போ நீயோ நானோ சாப்பிடாமல் இருந்தால் பிரச்சனை முடியுமா? நீ இன்னும் நிதானத்துக்கே வரலை” .
அர்ஜுன் பேச வருவதற்குள் கையை நீட்டி நிப்பாட்டி விட்டு தன் அம்மாவிடம் “மம்மி, நீயும், அர்ஜுனும் ருத்ரன் யாரு என்ன அப்புடினு தேடுங்கள்? அடுத்து என்ன மூவ் பண்ணுவானு தெரியணும்? ” என்று கூறி விட்டு தாஸிடம் திரும்பி , ” அப்பா முடிச்சாச்சா ? வாங்க போவோம் ” .
“எங்கடா மகனே ” என்று தாஸ் சிரித்துக் கொண்டே கேட்க ஆகாஷ் உங்களுக்கு தெரியாததா என்பதை போல் பார்த்து “தாத்தாவையும், அப்பாவையும் முதலில் வெளியே எடுக்கணும். லட்சுமி அம்மாவுக்கும், பாமா அம்மாவுக்கும் இந்நேரம் தெரிஞ்சு இருக்கும். அதையும் போய் பார்க்கணும். வாங்க ” என்று அவன் கூறிய பின்னே அர்ஜுனுக்கு உரைத்தது தான் எந்நிலையில் உள்ளோம் என்று .
“மச்சான் ஸாரி ” என்று அர்ஜுன் கூற “பசி வந்தால் நீங்க நீங்களா இருக்க மாட்டீங்க . பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுங்க ” என்று தாஸ் கூறினார்.
அனைவரும் ஒரு நிமிட அமைதிக்குப் பின் சிரித்தனர். “தகப்பா …. ஒன்னு ஹீரோவாக ட்ரை பண்ணற இல்லைனா காமெடியான மாற பார்க்கிற.வேணாம் . அப்பாவாவே இரு.கிளம்புவோமா? ” என்று சிரித்து கொண்டேக் கூறி நண்பர்கள் போல் தோளில் கைப்போட்டு சென்றனர்.
ஈஸ்வரி அர்ஜுனின் கைப்பிடித்து “சாப்பிட்டு முடிச்சிட்டினா நம்ம வேலையைப் பார்ப்போம்” என்று கூற ,அர்ஜுன் “ம்ம்ம் …….. கிளம்புவோம் மா!”
“ஓகே, நம்ம முதல்ல நம்பர் ட்ராக் செய்யணும். அதப்போய் முதலில் பார்ப்போம். ” என்று கூறி இருவரும் கிளம்பி விட்டனர்.
இவர்கள் இருவரும் கிளம்புவதைப் பார்த்து பின் சீட்டில் இருந்து ருத்ரன் சிரித்து கொண்டே கிளம்பினான்.
🏡பிருந்தாவனம்
ஆகாஷும், தாஸும் உள்ளே நுழையும் போது வீடே மயான அமைதியில் இருந்தது. மகாலெட்சுமி அம்மா தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தார். பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தது.
ஏதோ தவறாக நடந்ததை உணர்ந்தவர்கள் , அனுபவத்தின் காரணமாக தாஸ் ஆகாஷின் கையைப் பிடித்து அமைதியாக இரு என்று கண்களாலே கூறி விட்டு லட்சுமி அம்மாவின் முன் நின்றார்.
நிழலாடுவதை உணர்ந்து நிமிர்ந்த லட்சுமி அம்மாவிற்கு கண்கள் சுழல ஆரம்பித்தது. சரியான நேரத்தில் அவரை பிடித்துவிட்டான் ஆகாஷ். பின்பு, அவருக்கு தண்ணீர் கொடுத்து பாமா அம்மாவை அழைத்தான்.
அவரிடம் “என்னம்மா என்னாச்சு ? ஏன் வீடுலாம் ஒரு மாறி இருக்கு ? ” என்று தாஸ் கேட்டார்.
“என்ன அண்ணா நியூஸில் என்னென்னமோ சொல்லுறாங்க ? வீட்டுக்கு யாரும் வரலை? அர்ஜுன் எங்க? ” என்று பாமா கேட்டார்.
தாஸ்”வீட்டுக்கு யாரும் வந்தார்களா ? “. பாமா ” இல்லை அண்ணா, கார்ட்ஸ் நிக்கிறாங்க ” தாஸும் ஆகாஷும் புருவ முடிச்சுகளோடு பார்க்க ” அசோக் அனுப்பினதா சொன்னாங்க அண்ணா “.
“அப்புறம் ஏன் வீடு இப்படி இருக்கு ? “என்று ஆகாஷ் கேட்க ” எங்களுக்கு எதுவுமே தெரியாது. ஆருஷி வீட்டுக்கு திடீரென்று வந்தாள். இந்நேரத்துக்கு வீட்டுக்கு வர மாட்டாளேனு யோசித்து கொண்டே இருக்கும் போதே அத்தையை கூப்பிட்டாள்.
அவங்க வந்தவுடன் டிவி ஆன் பண்ணாள். பார்த்தா மாமாவையும், இவங்களையும் அரெஸ்ட் செய்ததா நீயூஸ் வந்தது.அதிர்ச்சியாகி கேட்டோம் .
“என்னாச்சு? ” என்று லட்சுமி அம்மா கேட்டார்.
ஆருஷி “புரியலையா உங்களுக்கு? உங்க பையன் காலேஜில் பாடம் சொல்லி கொடுக்கிறதோடு வேற விஷயத்தையும் ஃப்ராக்டிக்கல்லா பொருளோட சொல்லி கொடுத்தாராம். உங்க அன்பு கணவர் நேத்து கேட்டாங்களே? அது தெரியுமா? இது தெரியுமானு ? வர்ற கிளைண்ட்டுக்கு நேர்மையா செய்யனும்னு தெரியலையே? அதான் இரண்டு பேரையும் உள்ளை தூக்கி போட்டுடாங்க” என்று அவள்
படபடவெனக் கேட்டு விட்டாள்.
லட்சுமி அம்மா கைகள் நடுங்கி தலை சுற்றி
ஆருஷியின் கைகளைப் பிடிக்க அவள் வெடுக்கென்று கைகளை எடுத்து விட்டாள்.
“ஆருஷி”
கீர்த்தி☘️