Loading

எனதழகா❤️

இருளின் அழகில், ஒளி சேர்க்கும் நிலவு மறைந்து காண்பது போல் இவன் வாழ்க்கையின் ஒளியும் மறைந்து போக்கு காண்பிக்கிறது. இவன் நிலவு இவனுக்கு ஒளித்தருமா?

கார் இருட்டில் நிலவைத் ரசித்துக் கொண்டே  மது பானத்தை குடித்து அவளை மறக்கவும் முடியாமல், மன்னிக்கவும் முடியாமல் உள்ளுக்குள் குமிறி கொண்டிருக்கிறான் அர்ஜுன்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தானா இருப்பது என்று அவனுக்கே ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. அவனுக்கே இப்படி என்றால் அவன் நண்பன் ஆகாஷ் வாயை ஆ வெனத் திறந்து அவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

ஆகாஷிர்க்கு ஒரு நிமிடம் உலகம் நின்றது போல் இருந்தது. திடீரென்று பின் மண்டை சூரீரென்று இருந்தது. “அய்யோ அம்மே” என்று அலறினான் ஆகாஷ்.

அர்ஜுனின் புது அவதாரத்தைக் கண்டு நெஞ்சில் கை வைத்துக் கொண்டிருக்கும் ரியாவும் அதிர்ச்சி ஆகி விட்டாள் அவனின் கத்தலில்.

“டேய் டேய்  அடங்கு எதுக்கு துள்ளுற. உன்ன  கொலையா பண்ணிட்டாங்க இப்போ” அசோக் அர்ஜுனின் இன்னொரு நண்பன்.

ஆகாஷ்”ஏன்டா பேச மாட்ட. அர்த்த  இராத்திரி 2 மணிக்கு இப்படி ஹைவேஸ்-ல அமைதியா இருக்கிற இடத்தில பிடரில வந்து ஏதோ அடிச்சா பயப்பட மாட்டாங்க”

“லூசுப்பய” அசோக்.”த்தூ” ரியா. “லூசுப்பயலா,  ஏன்டா பேச மாட்டீங்க. என்னையத் தான் டா ஈஸியா திட்டுறீங்க “என்று புலம்பிய ஆகாஷை இருவரும் மதிக்கக் கூட இல்லை .

இது எதுவும் தன் மனதில் படாமல் தூரத்தில் உள்ள நிலவை பார்க்கும் நண்பனை பார்த்து வருந்தினான் அசோக். ஆனால் அவன் மீது உள்ள கோபம் அவனிடம் காட்டிக் கொள்ள மறுத்தது. அவனுடனே வளரும் நமக்கும் இப்பிடிவாதம் இருக்கும் என்பதை நிரூபிக்க பார்க்கிறான்.

“டேய் அசோக், ஒரு வாரம் தான் டா அம்மாச்சி வீட்டுக்கு போனேன்.அதுக்குள்ள என்ன நடந்துச்சு” ரியா அசோக்கிடம்  கேட்டாள்.

ஆகாஷ் “ஏண்டி நான் தான் சொல்றேன். அப்புறம் என்ன என்னைய நம்பாம அவன கேட்குற “

“நீ கொஞ்சம்” என்று சொல்லி வாயயை கைகளால் மூடி காண்பித்தாள் ரியா.பின்பு அசோக்கிடம் திரும்பி “சொல்லு அசோக் என்னாச்சு? அன்பும், மலரும் எங்க? இவன் ஏன் இப்பிடி இருக்கான்?”

அர்ஜுன்”அன்பு ஹம்ம்… அவர்களிடம் ஏன் கேட்கிறாய் . நானே சொல்லுகிறேன். என்னை விட்டு பிரிஞ்சுப் போய்விட்டாள் . இல்லை இல்லை என்னை ஏமாற்றி விட்டு போய்விட்டாள்”

“யாரு யாரை ஏமாத்தினாங்க ” என்று எகிறினான் அசோக். “அவள் தான்டா  என்னை ஏமாற்றினாள்”ஆக்ரோசமாக கத்தினான் அர்ஜுன்.

“அய்யோ திரும்பவும் முதல  இருந்தா. செந்தமிழ வேற பேசிக் கொல்லுறானே” என்று கூறி ஆகாஷ் அதிர்ந்தான்.

“இவனுங்க எல்லாமே உச்சத்துல தான் பண்ணுவாங்க. பாசமனாலும் தாங்க முடியாது. அடிச்சுக்கிட்டாலும் தாங்க முடியாது. நம்ம தலையை உடைக்காமா விட மாட்டாங்க கடைசில” என்று ஆகாஷ் முணுமுணுத்ததை கேட்ட ரியா “அடி வாங்குவனு தெரிஞ்சும் தைரியமா பேசுறப் பார்த்தியா அதுக்கே உன்னை பாராட்டுறேன் டா”.

ஆகாஷ்” பாராட்டுறதோடு நிறுத்து. மாட்டி கொடுத்துறாத”.

ரியா” அந்த பயம் இருக்கட்டும் தம்பி. சொல்லக் கூடாது என்றால் எனக்கு சாப்பாடு வாங்கிக் கொடு”.

ஆகாஷ்”உனக்கு வேற எதுவுமே தெரியாதா டி.சோறு, சோறு, சோறு தான். உனக்கு சோறு வாங்கிக் கொடுக்கிறதுக்கு அவங்க இரண்டு பேரிடமும் 4 அடி கூட வாங்கிடலாம் “.

ரியா”அப்படியா , சரி அடியே வாங்கிக்கோ”.

டேய்  என்று ரியாவும், ஹே என்று ஆகாஷும் ஒருச் சேர கூப்பிட்டுக் கொண்டே திரும்ப, ரியா  அதிர்ந்து பார்த்தாள். ஆகாஷ் தலையில் அடித்துக் கொண்டான்.

ரியா” என்னடா இவங்க இரண்டு பேரும் அதே டயலாக் சொல்லிச் சண்டை போட்டுட்டு இருக்காங்க. அஞ்சு நிமிஷமா நம்ம பேசினதை கேட்கவில்லையா அப்போ”.

“இவ வேற…இந்தாம்மா போ போய் சண்டையை நிறுத்து ” என்று கூறி ரியாவை உலுப்பினான் ஆகாஷ்.

“ச்சை” என்று கூறி அவர்களின் நடுவில் நின்றாள்.அப்பொழுதும் அர்ஜுன் நானும் அவளும் பிரேக் – கப் பண்ணிட்டோம் என்று திரும்ப கூற ஆரம்பித்தான்.

“நீ சொல்லவே  வேண்டாம்பா சாமி. இடத்த காலி பண்ணு. அம்மா போன் பண்ணிக்கிட்டே இருக்காங்க .”ஆகாஷ்.

“சத்யா மா கூப்பிட்டாங்களா” அவசரமாக  அசோக் தன் கைப்பேசியை ஆராய்ந்தான்.
“அர்ஜுன் அம்மா இல்லடா எங்க அம்மா” .

அசோக்கும் ரியாவும் திரும்பி முறைத்தார்கள். முறைத்தவர்களைப் பார்த்து “இது என்னடா அநியாயமா இருக்கு என் அம்மா எனக்கு போன் பண்ணக் கூடாதா? “.

“உங்க அம்மாவே நீ போன் பண்ணால் எடுக்க மாட்டேங்குறனு ,எனக்கு கால் பண்ணி அந்த எருமை மாடு உன் கூட இருக்கானானு கேட்பாங்க. இதுல உன்ன கூப்பிட்டாங்களா பிராடு?” ரியா

“நண்பேண்டா “ஆகாஷ்.  “த்தூ”  என்று  அசோக்  கூறினான். “ஆனா பசிக்குதுடா.8 மணியில் இருந்து உட்கார வச்சிருக்கான் சோறு தண்ணி இல்லாம” ஆகாஷ்.

” இப்போ நானும் சோறு தானக் கேட்டேன். அப்போ ஒவரா பேசுன. இப்போ மட்டும் உனக்கு பசிக்குதா எனக்கு நியாயம் கிடைச்சு ஆகனும்டா” பொறுமிக் கொண்டே  ரியா கேட்டாள்.

ஆகாஷ்” எப்பையாவது கேட்டால் பரவாயில்லை. எப்பவும் கேட்கிறது தான் தப்பு”.

“அதுக்கு பேர் தான் ஃபூட்டி( foodie)” என்றாள் ரியா.

அசோக் ஒரு நொடி ஆகாஷை நக்கலாகப் பார்த்தான். ஆகாஷ் திருதிருவென முழித்தான். என்ன பாண்டா முழி சரி இல்லை என்று ரியா ஆராய்ந்தாள்.
அதற்குள் கால் வருவது போல் நகரப் பார்த்த ஆகாஷை அசோக்கும் ரியாவும் காலரோடு இழுக்க என்னடா மறைக்கிற என்று ரியா கேட்டாள்.

” ரியா, அந்த நாயும் நீ சொன்னா அதே டயலாக் தான் சொன்னான். ஜ ஆம் ஃபூட்டி னு ” என்றான் அசோக்.

ரியா  மூக்கு சிவக்க  முறைத்து பார்க்க, ஆகாஷ் அமைதியாக இல்லாமல் காளி விட்டு விடு என்று கூற இருவருக்கும் சண்டை வந்து விட்டது. இரண்டு பேரும் அடித்து உருண்டு கொண்டிருப்பதை  20-20 மேட்ச் நடப்பது போல் மதுபானத்தையும் சிப்ஸையும் சாப்பிட்டுக் கொண்டே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

“ஏன்டா, காளியாத்தா  நண்பனை அடிச்சு வெளுக்குறா. வேடிக்கைப் பார்க்குறியே நீ எல்லாம் நண்பனா” என்று கத்தினான் ஆகாஷ்.

“யூ டாக் இன் மவுத், ஷீ  டாக் இன் ஹாண்ட், ஒய் மீ டாக்” என்று கடுப்படித்தான் அர்ஜுன் ஆகாஷ் பேசுவது போல்.

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்,
உலகம் புரிஞ்சுக்கிட்டேன்,
கண்மணி என் கண்மணி!
ஞானம் பொறந்திருச்சு,
நாலும் புரிஞ்சிருச்சு,
கண்மணி என் கண்மணி!
பச்சை குழந்தையின்னு
பாலூட்டி வளர்த்தேன்,
பாலக் குடிச்சுபுட்டு
பாம்பாகக் கொத்துதடி!
என்று காலியான மதுபாட்டிலை வைத்து பாடினான் ஆகாஷ்.

அய்யோ என்று கூறி நண்பர்கள் இருவரையும் பிரித்து விட்டு, இருவரின்  பசி அறிந்து அனைவரையும் கிளப்பினான் அசோக்.

அர்ஜுன் திரும்பி அசோக்கை பார்த்தான். ஆனால் அப்படி ஒருவன் இருக்கான் என்று கண்டுக்கொள்ளாமல் அசோக் கார் அருகில் சென்றான்.

ரியா இதை கவனித்து விட்டு வேகமாக அசோக்கிடம் சென்று “என்ன பிரச்சனை உங்களுக்குள்ள ? “.

” என்ன பிரச்சனை எங்களுக்குள்ள ” என்று ரியா கேட்ட கேள்வியையே திரும்ப கேட்டு அவளை கோப்படுத்தினான்.

பள்ளி பருவத்திலிருந்தே இவர்கள் மூவர் பற்றியும் தெரியும் என்பதால் இதற்கு மேல் அசோக் சொல்ல மாட்டான் என்று அறிந்து அவனே சொல்லட்டும் என்று மீண்டும் கேட்காமல் விட்டு விட்டாள்.

ரியா,”ஆபீஸிலிருந்து வர்றியா அசோக்?”

அசோக்,”ஆமாம். ஆகாஷ் தான் மெஸேஜ் செஞ்சான். நீ எப்போ ஊர்ல இருந்து வந்த  ?”

” ஹப்பா இப்ப வாச்சும் கேட்கனும்னு தோணுச்சே. பஸ்ல இருந்து இறங்குறேன். அர்ஜுன் நிக்கிறான். காலை இருந்து அவன் கூடத்தான் இருக்கிறேன். ஆபிஸ் பக்கம் கூட போகல. ஈவ்னிங் போல இவன் ஹாஸ்பிட்டல் போய் பிக்-அப் பண்ணிட்டு வரோம் “.

“ஓஹோ” . அசோக் யோசனையுடன் கூறியதை வைத்து என்ன என்று ரியா கேட்பதற்குள்  அர்ஜுன்  ஆகாஷின் பைக்கில் ஏறிச் சென்று விட்டான்.

பெருமூச்சுடன் அவன் போவதைப் பார்த்து மூவரும் அவன் பின்னே கிளம்பினார்கள்.

கீர்த்தி☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்