Loading

“குட் ஈவ்னிங் எவ்ரிவன்… நைஸ் டு மீட் யூ ஆல் ஹியர்…” என அனுபல்லவி மைக்கில் பேச ஆரம்பிக்கும் போதே அவ் அரங்கம் முழுவதும் கரகோஷங்களால் நிரம்பி வழிந்தன.

 

சாருமதிக்கு தன் தோழியை எண்ணி பெருமையாக இருந்தது.

 

பிரணவ்வும் அனுபல்லவியை மெச்சுதலாகப் பார்க்க, அர்ச்சனாவிற்கோ பொறாமைத் தீ கொழுந்து விட்டெரிந்தது.

 

“ஓக்கே காய்ஸ்… ரொம்ப இழுக்காம நேரா விஷயத்துக்கு வரேன்… எதுக்காக இந்த பார்ட்டி அரேன்ஜ் பண்ணி இருக்கேன்னு உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும்… பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் ஃபேக்டரில வர்க் பண்ணுற வசதி குறைந்த நூறு பேரோட குடும்பத்துக்கு வீடு கட்டி கொடுத்து அவங்களுக்கு தேவையான அடிப்படை வசதி எல்லாம் பண்ணி கொடுக்கலாம்னு திட்டம் இட்டிருக்கோம்… முன்னாடியே ஒவ்வொரு வருஷமும் நம்ம கம்பனி சார்பா வசதி இல்லாதவங்களுக்கு இதெல்லாம் பண்ணி கொடுத்துட்டு தான் இருந்தோம்… பட் லாஸ்ட் ஃபைவ் இயர்ஸா சில பிரச்சினைகளால அதைப் பண்ண முடியல…” என அனுபல்லவி கூறும் போதே குழப்பத்தில் பிரணவ்வின் புருவங்கள் முடிச்சிட்டன.

 

மேலும் தொடர்ந்த அனுபல்லவி, “பட் இனியும் தாமதிக்காம இந்த ப்ராஜெக்டை திரும்ப ஆரம்பிக்கலாம்னு இருக்கோம்… ஏதோ வீடு கட்டி கொடுக்குறோம்னு இல்லாம எல்லாமே தரம் வாய்ந்ததா இருக்கணும்னு விரும்புறேன்… அன்னைக்கே மீட்டிங் வெச்சி எல்லார் கூடவும் பேசிட்டேன்… என்ட் தனிப்பட்ட விதத்துலயும் வெளிய விசாரிச்சு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்… இந்த வருஷத்துக்கான ப்ராஜெக்டை எம்.எல்.க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸுக்கு கொடுக்கலாம்னு இருக்கோம்…” என்கவும் பிரணவ்வின் இதழ்கள் விரிய, அனைவரும் அவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

 

பிரணவ் மேடைக்குச் செல்லவும், “கங்கிரேட்ஸ் மிஸ்டர் பிரணவ்…” எனத் தன் கரத்தை அவன் முன் நீட்டினாள் அனுபல்லவி.

 

மென் முறுவலுடன் அவளின் கரத்தைப் பற்றிய பிரணவ், “தேங்க் யூ மிஸ் பல்லவி…” என்றவன் அனுபல்லவியின் கரத்தை விடாது அவளின் விழிகளையே ஆழ நோக்கினான்.

 

அவனின் பார்வையோ, ‘இனிமே நாம ரெண்டு பேரும் ஒன்னா தான் வர்க் பண்ணணும்…’ எனும் விதமாக இருந்தது.

 

அனுபல்லவிக்கு தான் அனைவரும் பார்க்கிறார்கள் என சங்கடமாக இருக்க, ஒரு புன்னகையுடனே தன் கரத்தை இழுத்துக்கொண்டாள்.

 

ப்ராஜெக்ட் பற்றி மேலும் சில நிமிடங்கள் பேசிய அனுபல்லவி, “அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்…” என்கவும் அனைவரும் அவளின் முகம் நோக்கினர்.

 

சிலர் ஏற்கனவே அவள் என்ன கூறப் போகிறாள் என அறிந்திருந்தனர்.

 

அனுபல்லவி, “இந்த பார்ட்டிய அரேன்ஜ் பண்ணினதுக்கு இன்னொரு முக்கியமான ரீசன் இருக்கு…” என்றவள் சில நொடி அமைதிக்குப் பின், “உங்க எல்லாருக்கும் தெரியும் லாஸ்ட் ஃபைவ் இயர்ஸா நான் ஃபாரின்ல இருந்து தான் கம்பனிய மேனேஜ் பண்ணிட்டு இருந்தேன்… அங்க இருக்குற நம்ம கம்பனி கூட என் பொறுப்புல தான் இருக்கு… சோ இந்தியால இருக்குற நம்ம கம்பனிய இனிமே இவர் தான் மேனேஜ் பண்ண போறார்… அதுக்காக மொத்தமா இங்க கம்பனீஸ நான் பார்த்துக்க மாட்டேன்னு இல்ல… பட் மெய்னா இவர் தான் இனி பார்க்க போறார்…” என பிரதாப்பைக் காட்டினாள்.

 

பிரணவ் அதிர்ச்சியாக அனுபல்லவியை நோக்க, ‘திரும்ப உன்ன சந்திக்குற எந்த சூழ்நிலைக்கும் நான் இடம் தர மாட்டேன் பிரணவ்…’ என மனதினுள் நினைத்துக் கொண்டாள் அனுபல்லவி.

 

‘அடடா… அர்ச்சனா… உன் காட்டுல மழை தான்… எனக்கு இருந்த ஒரே தொல்லையும் ஒழிஞ்சது… இனிமே பிரணவ் எனக்கு மட்டும் தான் சொந்தம்… பிரணவ்வோட மொத்த சொத்தையும் அனுபவிக்க போறது இந்த அர்ச்சனா தான்…’ என விஷமமாக நினைத்துக் கொண்டாள் அர்ச்சனா.

 

பின் சில பிஸ்னஸ் பேச்சுகளுடன் பார்ட்டி முடிவடைந்தது.

 

அனுபல்லவி தன் அலுவலக அறையில் இருந்த ஜன்னல் வழியாக மண்ணை முத்தமிடும் மழைத் துளிகளை ரசித்துக் கொண்டிருந்தாள்.

 

திடீரென அவளின் முதுகில் பட்ட நன்றாக பழக்கப்பட்ட சூடான மூச்சுக் காற்றில் வேகமாகத் திரும்பிய அனுபல்லவி கால் தடுக்கி கீழே விழப் போக, அவள் விழாமல் தாங்கிய பிரணவ்வின் கரம் அனுபல்லவி அணிந்திருந்த சேலையைத் தாண்டி அவள் வயிற்றில் அழுத்தமாக பதிந்தது.

 

அனுபல்லவியின் கண்கள் அதிர்ச்சியில் விரிய, பிரணவ்வின் முகமோ பல வித உணர்ச்சிகளைக் காட்டியது.

 

பிரணவ்வின் கரம் அனுபல்லவியின் வயிற்றைத் தடவ, சட்டென அவனைத் தள்ளி விட்டாள் அனுபல்லவி.

 

அதே நேரம் ஆகாஷும் பிரதாப்பும் அங்கு வந்தனர்.

 

அனுபல்லவியின் கோபமான முகத்தையும் பிரணவ்வின் உணர்வுகளைத் தொலைத்த பார்வையையும் புரியாமல் பார்த்த ஆகாஷ், “என்னாச்சு?” எனக் கேட்டான்.

 

அவனின் கேள்விக்கு பதிலளிக்காத அனுபல்லவி, “எதுக்காக இவங்க இப்போ வந்திருக்காங்க மாமா?” எனக் கேட்டாள் பிரதாப்பிடம்.

 

பிரதாப் ஏதோ கூற வாய் திறக்க, “ஆகாஷ்… வாங்க கிளம்பலாம்… இனிமே நமக்கு இங்க வேலை இல்ல… பெங்களூர் போக டிக்கெட் புக் பண்ணுங்க…” என அழுத்தமாகக் கூறி விட்டு அங்கிருந்து வெளியேறினான்.

 

ஆகாஷும் பிரணவ்வைத் தொடர்ந்து வெளியேறி விட, தலையைப் பற்றிக் கொண்டு தன் இருக்கையில் அமர்ந்தாள் அனுபல்லவி.

 

“அனு…” என்ற பிரதாப்பின் குரலில், “இதுக்கு மேல என்னால இங்க இருக்க முடியல மாமா… ரொம்ப கஷ்டமா இருக்கு… நாளைக்கே நான் கிளம்ப ஏற்பாடு பண்ணுங்க…” என்றாள் உடைந்த குரலில்.

 

“நாளைக்கே நீ கிளம்ப முடியாது அனு… ஆகாஷ் இப்போ தான் பேசினார்… கம்பனி ஃபார்மாலட்டீஸ் படி அவங்க கம்பனி சார்பாவும் ப்ராஜெக்ட் சைன் பண்ண நாம பெங்களூர் போகணும்…” என்றான் பிரதாப்.

 

“நீங்க போக வேண்டியது தானே…‌ நான் எதுக்கு?” எனக் கேட்டாள் அனுபல்லவி புரியாமல்.

 

பிரதாப், “எனக்கும் நீ அங்க போறது பிடிக்கல தான்… ஆனா என்ன பண்றது? கம்பனிய நான் பொறுப்பேற்றாலும் நீ தான் பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் எம்.டி‌… சோ நீ தான் போய் எல்லாம் பார்த்து சைன் பண்ணணும்…” என்றான் எங்கோ பார்த்தபடி.

 

எதுவும் கூறாது பெருமூச்சு விட்டாள் அனுபல்லவி.

 

தாம் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்ததில் இருந்து பிரணவ் சிடு சிடு என்றே இருந்தான்.

 

ஆகாஷிற்கு அவனிடம் பேசவே பயமாக இருந்தது.

 

ஒரு பக்கம் என்ன நடந்தது என்ற கேள்வி அவனின் மண்டையைக் குடைந்தது.

 

“பாஸ்…” என்ற ஆகாஷின் குரலில் ஏதோ சிந்தனையில் மூழ்கிக் கிடந்த பிரணவ் தன்னிலை அடைந்து ஆகாஷைக் கேள்வியாக நோக்கினான்.

 

ஆகாஷ், “பெங்களூருக்கு உடனே எந்த ஃப்ளைட்டும் இல்ல… நாளைக்கு நைட் தான் டிக்கெட் கிடைச்சிருக்கு…” என்றான் தயக்கமாக.

 

பிரணவ்வோ அவனுக்கு பதிலளிக்காது கட்டிலில் படுத்தவன் கண்களை மூடி உறங்க ஆரம்பித்தான்.

 

ஆனால் அவன் மனதிலோ ஏதேதோ குழப்பங்கள்.

 

************************************

 

மறுநாள் காலை ஆகாஷிடம் கூட கூறாது அனுபல்லவியை சந்திக்க வந்திருந்தாள் சாருமதி.

 

“சாரு… வா வா… வந்து உட்கார்…” என அனுபல்லவி புன்னகையுடன் அவளை வரவேற்க, “நான் உட்காருறது இருக்கட்டும்… நீ ஏன் சடன்னா இப்படி ஒரு முடிவெடுத்த? ஆல்ரெடி ஃபைவ் இயர்ஸ் நீ எங்க இருக்க? என்ன பண்ணுற? எதுவுமே தெரியாம இருந்துட்டோம்… இப்போ திரும்ப ஃபாரின் போறேன்னு சொல்ற… அதுவும் அங்க செட்டல் ஆகுறேன்னு வேற சொல்ற… நீ ஏன் பிரச்சினைய பார்த்து பயந்து ஓட நினைக்கிற? அதான் எல்லாம் சோல்வ் ஆகிடுச்சுல்ல… இன்னும் ஏன் நீ எங்கள விட்டு போகணும்னு நினைக்கிற?” எனக் கேட்டாள் சாருமதி ஆற்றாமையில்.

 

“நான் எங்க போனாலும் இனிமே உன் கூட கான்டாக்ட்ல தான் இருப்பேன் சாரு…” என்றாள் அனுபல்லவி தயக்கமாக.

 

சாருமதி, “நீ என் கிட்ட சொன்ன விஷயம் தவிர வேற ஏதாவது என் கிட்ட மறைக்கிறியா அனு?” எனக் கேட்டாள் அழுத்தமாக.

 

ஒரு நொடி அவளை அதிர்வுடன் ஏறிட்ட அனுபல்லவி மறு நொடியே அதனை மறைத்து புன்னகையுடன், “இ…இல்ல சாரு… என்னோட பாஸ்ட் எல்லாம் சொல்லிட்டேன்… இ..இதுக்கு மேல உன் கிட்ட மறைக்க என்ன இருக்கு?” என்றாள் சமாளிப்பாக.

 

“அப்போ இங்கயே இருக்க வேண்டியது தானே… எதுக்காக எல்லாத்தையும் விட்டு போகணும்னு நினைக்கிற?” என்ற சாருமதியின் கேள்விக்கு பெருமூச்சு விட்ட அனுபல்லவி, “ரொம்ப கஷ்டப்பட்டு இந்த வாழ்க்கைய நான் ஏத்துக்கிட்டு இருக்கேன்… திரும்ப திரும்ப பிரணவ்வ பார்க்கும் போது நான் பழையபடி உடைஞ்சி போயிடுறேன்…” என்றாள் கண்ணீருடன்.

 

அவளின் கரத்தை ஆதரவாகப் பிடித்த சாருமதி, “அனு… பிரணவ் சார் உன் லைஃப்ல முடிஞ்சி போன சேப்டர்… அவருக்கு உன்ன சுத்தமா ஞாபகம் இல்ல… உனக்கும் வேற ஒருத்தர் கூட கல்யாணம் ஆகிடுச்சு… எப்பவோ நடந்த விஷயத்துக்காக நீ ஏன் இன்னும் ஃபீல் பண்ணுற? அவருக்கும் அர்ச்சனாவுக்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்க போகுது… உங்க ரெண்டு பேரோட பாதையும் ஃபைவ் இயர்ஸ் முன்னாடியே வேற வேறயா பிரிஞ்சிடுச்சு… அப்படியே அவருக்கு உன் ஞாபகம் வந்தாலும் எந்த யூஸும் இல்ல… நீங்க ரெண்டு பேரும் இனிமே சேர முடியாது… அப்படி இருக்குறப்போ எதுக்காக வீணா பயந்து எங்கள விட்டு தள்ளி போக பாக்குற?” எனக் கேட்டாள்.

 

‘யார் என்ன சொன்னாலும் பிரணவ்வோட நினைவுகள் என்னைக்கும் என்னை விட்டு போகாது… அது சுகமான நரக வேதனை… பிரணவ்வுக்கு நான் பொருத்தமானவ இல்ல… அதனால தான் அந்தக் கடவுளே எங்கள பிரிச்சிட்டார் போல…’ என வருத்தமாக எண்ணிக் கொண்டாள் அனுபல்லவி.

 

அனுபல்லவி, “நான் எங்க எப்படி இருந்தாலும் நீ என் பெஸ்ட் ஃப்ரெண்ட் தான்… உனக்கு ஒன்னுன்னா முதல் ஆளா நான் ஓடி வருவேன்… பட் என்னால இங்க இருக்க முடியாது சாரு… பிரணவ் லைஃப்ல என்னால எந்த பிரச்சினையும் வரத நான் விரும்பல… ட்ரை டு அன்டர்ஸ்டேன்ட் மீ…” என்றாள் கெஞ்சலாக.

 

************************************

 

“என்னடா நான் பெத்த மகனே… இன்னைக்கு தான் உனக்கு இந்த அப்பனையும் ஆத்தாளையும் பார்க்க வழி தெரிஞ்சதா?” எனக் கேட்டார் பிரதாப்பின் தந்தை சுந்தர்.

 

“அவனுக்கு எங்கங்க நம்ம ஞாபகம் இருக்க போகுது? அதான் ஒத்த ஆளா மொத்த சொத்தையும் அனுபவிக்கிறான்ல…” என்றார் பிரதாப்பின் தாய் ஜெயந்தி நக்கலாக.

 

கோபத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு அவர்கள் இருவரும் இருந்த சிறையைப் பார்த்தவன், “ஜெயிலுக்கு வந்தும் நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் கூட திருந்தவே இல்லல்ல… ச்சே…” என்றான் பிரதாப் ஆத்திரத்துடன்.

 

“சும்மா நல்லவன் போல பேசாதே டா… நீயும் தானே நாங்க பண்ண எல்லாத்துக்கும் ஒத்து ஊதின…” எனக் கேட்டார் சுந்தர் பதிலுக்கு.

 

பிரதாப், “ஆமா… அது சின்ன வயசுல இருந்தே நீங்க சொன்னத எல்லாம் உண்மைனு நம்பினேன்… ஆனா என்னோட அம்மா அப்பா மாமாவுக்கு இவ்வளவு பெரிய அநியாயத்தை செஞ்சி இருப்பாங்கன்னு நினைக்கல… உங்களால இன்னைக்கு மாமா முன்னாடியும் அனு முன்னாடியும் நானும் குற்றவாளியா நிற்கிறேன்…” என்றான் வருத்தமாக.

 

அவனின் பெற்றோரோ பிரதாப்பின் பேச்சில் உதட்டை சுழிக்க, அதனைக் கண்டு கொள்ளாதவன், “இது தான் நான் உங்கள பார்க்க வர கடைசி தடவ… சும்மா சும்மா ஜெயிலர் கிட்ட என் பையனை பார்க்கணும் பையனை பார்க்கணும்னு சண்டை போடாதீங்க… இனிமே எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல… இனியாவது திருந்துற வழியா பாருங்க… ஒருவேளை அனு உங்கள மன்னிச்சா அதுக்கப்புறம் நான் யோசிக்கிறேன் உங்கள மன்னிக்கலாமா வேணாமான்னு… இப்போ நான் தனி ஆள் இல்ல… என்னை நம்பி அனு இருக்கா… எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு… வீணா என்னை சீண்டிப் பார்க்க நினைக்காதீங்க…” என்ற பிரதாப் அவர்களைத் திரும்பியும் பார்க்காமல் அங்கிருந்து சென்றான்.

 

************************************

 

ஹோட்டல் அறையில் அடைந்து கிடக்க மனமின்றி இன்றும் அதே பார்க்கில் வந்து கல் பெஞ்ச்சில் படுத்து தீவிர சிந்தனையில் இருந்தான் பிரணவ்.

 

அன்று போலவே இன்றும் “அப்பா…” என ஒரு குழந்தையின் உற்சாகமான குரல் கேட்கவும் மெல்ல கண் விழித்துப் பார்த்தவன் அன்று இருந்த அதே குழந்தை பிரணவ்வைப் பார்த்து புன்னகைத்தபடி நின்றது.

 

அதன் குரலில் மெய் சிலிர்த்தவன் அக் குழந்தையை நோக்கி புன்னகையுடன் அடி எடுத்து வைக்க, பிரணவ்விற்கு முன்னே அவனைத் தாண்டி நடந்த ஒரு ஆடவன் அக் குழந்தையைத் தூக்கினான்.

 

“அப்பா வரும் வரைக்கும் கொஞ்சம் வெய்ட் பண்ண முடியாதா? அப்படி என்ன அவசரம்?” என அவ் ஆடவன் அக் குழந்தையிடம் கேட்கவும் அக் குழந்தையோ அவனுக்கு பதிலளிக்காது இடுப்பில் கையூன்றி அவனை முறைத்தது.

 

ஏதோ பழக்கப்பட்ட குரலில் பிரணவ் புருவம் உயர்த்தி அவ் ஆடவன் திரும்பும் வரை காத்திருக்க, குழந்தையைத் தூக்கிக்கொண்டு திரும்பிய பிரதாப்பைக் கண்டு ஏகத்துக்கும் அதிர்ந்தான் பிரணவ்.

 

பிரணவ்வை அங்கே எதிர்ப்பார்க்காத பிரதாப்பும் ஒரு நொடி அதிர்ந்தவன், “நீங்க…” என ஏதோ கூற வர, “இது உங்க குழந்தையா?” எனக் கேட்டான் பிரணவ் அக் குழந்தையின் மீது பார்வையைப் பதித்தபடி.

 

“ஆமா… என் குழந்தை தான்…” என பிரதாப் பதிலளிக்கவும், “அ…அம்மா?” எனக் கேட்டான் பிரணவ் தயக்கமாக.

 

பிரதாப் பதிலளிக்க எடுத்த இடைவெளியில் பிரணவ்வின் மனம் காரணமே இன்றி இரு மடங்கு வேகத்தில் துடித்தது.

 

“அனு தான்… என்னோடதும் அனுவோடதும் குழந்தை… பெயர் பிரஜன்…” எனப் பிரதாப் கண்கள் மின்ன புன்னகையுடன் கூறவும் பிரணவ்வின் மனம் சுக்குநூறாக உடைந்தது.

 

அதன் காரணம் எதுவும் அவன் அறியவில்லை.

 

“சரி அப்போ நாங்க கிளம்புறோம்… அனு எங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பா…” எனப் பிரதாப் கூறவும் அவனின் கரத்தில் இருந்த குழந்தை பிரதாப்பை முறைத்து விட்டு பிரணவ்வைப் பார்த்து புன்னகைத்தது.

 

அப் பார்வை பிரணவ்வை ஏதோ செய்ய, குழந்தையின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

 

பின் பிரதாப் தன் குழந்தையை அழைத்துக்கொண்டு அங்கிருந்து செல்லவும் பிரணவ் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்