Loading

“சாரு ஸ்டாப்… ஸ்டாப்…” என வேகமாக சென்று கொண்டிருந்த ஸ்கூட்டியின் பின்னே அமர்ந்திருந்தவள் பதட்டமாகக் கூறவும், பதறி வண்டியை ஓரமாக நிறுத்திய சாரு, “என்னாச்சு அனு? எதுக்கு வண்டிய அவசரமா நிறுத்த சொன்ன? ஏதாவது கீழ விழுந்திடுச்சா?” என்க,

“அங்க பாரு சாரு… ஒரே கூட்டமா இருக்கு… ஏதோ ஆக்சிடன்ட் போல… வா போய் பார்க்கலாம்…” என அனு பதிலளிக்கவும், “உனக்கு என்ன பைத்தியமா அனு? எதுக்கு உனக்கு இந்த தேவையில்லாத வேலை? ஆல்ரெடி ஆஃபீஸுக்கு லேட் ஆகிடுச்சு… எம்.டி நம்மள திட்ட போறாரு…” எனக் கோபமாகக் கூறினாள் சாரு.

அந்தோ பரிதாபம். இவ்வளவு நேரம் சாரு கத்தியதைச் செவிமடுக்கத் தான் அங்கு யாரும் இருக்கவில்லை. அனு எப்போதோ அக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு விபந்து நடந்த இடத்தை நோக்கிச் சென்றிருந்தாள்.

அதனைக் கண்டு தலையில் அடித்துக்கொண்ட சாரு தன் நண்பியைப் பின் தொடர்ந்து சென்றாள்.

அங்கு அனு, “தள்ளுங்க ப்ளீஸ்…” என்றவாறு கூட்டத்தை விலக்கிக் கொண்டு செல்ல, இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தவனைக் கண்டு அதிர்ந்தவள் அவசரமாக கீழே இருந்தவனை மடியில் ஏந்தி தன் துப்பட்டாவை எடுத்து இரத்தம் வரும் இடத்தை இறுக்கிக் கட்டி விட்டு, “யாராவது சீக்கிரமா இவர ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போக ஹெல்ப் பண்ணுங்க… ப்ளீஸ் சீக்கிரம்…” என்க,

சுற்றியிருந்த சனமோ தமக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருக்க, அவர்களில் ஒருவர், “பார்க்க சின்ன பொண்ணா இருக்க… உனக்கு எதுக்குமா தேவையில்லால வேலை… ஆக்சிடன்ட் வேற… போலீஸ் ஸ்டேஷன் அது இதுன்னு அலைய வேண்டி வரும்…” என்றார்.

அதனைக் கேட்டு ஆத்திரப்பட்ட அனு, “என்ன மனுஷங்க நீங்க? கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா உங்களுக்கு? ரோட்டுல அடி பட்டு விழுந்து கிடக்குறார்… நீங்க எல்லாருமே வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க…” என்கவும் மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்தவன் கஷ்டப்பட்டு விழி திறந்து பார்க்க, அனுவின் முகம் மங்கலாக அவன் மனதில் பதிந்திட, அடுத்த நொடியே மயங்கியிருந்தான் பிரணவ்.

அதற்குள் சாரு அவசர ஊர்த்திக்கு அழைத்திருக்க, அது வந்ததும் பிரணவ்வை அதில் ஏற்றி விட்டு அனுவும் அவனுடன் ஏறப் பார்க்க, அதற்குள் அவளின் கைப் பிடித்து தடுத்த சாரு, “போதும் அனு… அதான் ஆம்பியூலன்ஸ் வந்திடுச்சே… அவங்க ஹாஸ்பிடல் கூட்டிட்டு போவாங்க… இப்பவாச்சும் கிளம்பலாம் டி…” என்க, தோழியின் வார்த்தைக்கு இணங்கி மனமேயின்றி அவ் இடத்திலிருந்து சென்றாள் அனு. அவசர ஊர்த்தியும் மருத்துவமனையை நோக்கிக் கிளம்ப, அனுவின் மனதிலோ ஏதோ சொல்ல முடியா வலி.

************************************

“டேய்… எங்கடா இருக்க… நீ எங்க கல்யாணத்துக்கு வருவியா மாட்டியா?” என அழைப்பின் மறுபக்கத்தில் இருந்தவன் கோபமாகக் கேட்க,

“சாரிடா அபி… நான் வரலடா… ஆதர்ஷ் கிட்டயும் சாரி கேட்டதா சொல்லு…”  என பிரணவ் பதிலளிக்கவும்,

அபினவ், “அப்படி என்ன பிரச்சினைடா உனக்கு? ஃப்ரெண்டு ஃப்ரெண்ட்னு பேச்சுக்கு தான் சொன்னியா? எங்க கல்யாணத்துக்கு கூட உன்னால வர முடியாதா?” என்கவும் சில நொடி அமைதி காத்த பிரணவ்,

“நான் அங்க வந்தா தாரா கஷ்டப்படுவாள் அபி… அவ ஃப்ரெண்ட்ஸோட மேரேஜ்… என்னைப் பார்த்தா அவ மூடே ஸ்பாய்ல் ஆகிடும்டா…” என்றான்.

மறுபக்கம் கைப்பேசி கை மாறும் சத்தம் கேட்க, “பிரணவ்… இன்னைக்கு மினியோட ஃப்ரெண்ட்ஸுக்கு மட்டுமில்ல மேரேஜ்… உங்க ஃப்ரெண்ட்ஸுக்கும் தான்… நீங்க வாங்க… என் மினிக்காக நீங்க எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணி இருக்கீங்க…” என்க, 

“இல்ல ஆர்யான்… நான் வந்தா எல்லாருக்கும் சங்கடமா இருக்கும்… ப்ளீஸ்… என்னைக் கம்பில் பண்ணாதீங்க…” என மறுத்தான் பிரணவ்.

************************************

பிரணவ் அவசரமாக ஊருக்கு கிளம்புவதற்காக உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, அவன் பார்வையில் பட்டது அந்த மஞ்சள் நிற துப்பட்டா.

அதனைக் கரத்தில் எடுத்தவனின் நினைவில் ஒரு பெண்ணின் முகம் மங்கலாகத் தெரிய, பல தடவை முயன்றும் அம் முகத்திற்கு சொந்தக்காரியை அவனால் நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை.

“ச்சே…” எனத் தலையைப் பிடித்துக் கொண்டு கோபமாக கட்டிலில் அமர்ந்தவன் அந்த துப்பட்டாவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, கீழிருந்து அவனின் தாயின் குரல் கேட்கவும் அதனைக் கட்டிலில் வீசி விட்டுச் செல்ல, அந்த துப்பட்டாவோ பிரணவ்வின் பைக்குள் தஞ்சம் அடைந்தது.

************************************

“ஹேய் காய்ஸ்… ஒரு குட் நியூஸ்… நம்ம டீமுக்கு புது ப்ராஜெக்ட் மேனேஜர் வரப் போறாங்க… பக்கத்து பிரான்ச்ல இருந்து ட்ரான்ஸர் ஆகி வரார்… இனிமே அந்த சிடுமூஞ்சி சிங்காரம் கிட்ட வீணா திட்டு வாங்க வேண்டிய அவசியமில்ல…” என மாலதி உற்சாகமாகக் கூறவும், “ப்ச்… அடப்போம்மா நீ வேற… இப்போ வரப் போறவன் கூட இந்த சிடுமூஞ்சி சிங்காரத்த போலவே ஓல்ட் பீஸ் ஒன்னா இருக்கும்… எப்படியும் நம்மள திட்ட தான் போறார்… ஏனா நம்ம முக ராசி அப்படி…” என்றாள் சாரு சலிப்பாக.

அதனைக் கேட்டு அனு உதட்டை மடித்து சிரிக்க, “அதான் டி இல்ல சாரு… இப்போ வரப் போறவர் யூத்… செம்ம ஹேன்ட்சம்மா இருப்பார்… நான் ஒரு தடவை அவரைப் பார்த்து இருக்கேன்…” என மாலா கூறவும் சாருவின் கண்கள் பளிச்சிட, “ஹேய்… ஹேய் மாலு… சொல்லுடி அவரைப் பத்தி… ஆள் பார்க்க எப்படி இருப்பார்? எனக்கு மேட்ச்சா இருப்பாரா?” என ஆர்வமாகக் கேட்க, மாலதி புது பிராஜெக்ட் மேனேஜரைப் பற்றி தனக்கு தெரிந்தை வைத்து ஆஹா ஓஹோ என வர்ணிக்க, ஏனோ அனுவின் நினைவு அந்தப் பெயர் தெரியாதவனிடமே சென்றது.

************************************

காதலர் தினத்துக்காக புதுக் கதையோட ஒரு குட்டி டீசர்… படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க ☺️

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்