விதுரனும் ஷக்தியும் விஜய்யை அழைத்து கொண்டு விமான நிலையத்திற்கு வரவும், “என்னங்கடா என்னைய எதும் நாடு கடத்த போறிங்களா..? கடைசி வரைக்கும் எனக்கு ஃபர்ஸ்ட் நைட் இல்லவே இல்லையா?..” விஜய் இருவரையும் பார்த்து பரிதாபமாக கேட்க
“நீ இப்படி இங்க நின்னு பேசிட்டு இருக்கிறதை பார்த்தால் அப்படி தான் நடக்க போகுது.. அதான் உனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடக்காம போக போகுது..” என்ற ஷக்தியை திடுக்கிட்டு விஜய் திடுக்கிட்டு பார்க்க
“உனக்கு ஹனிமூன் சுவிட்சர்லாந்துல.. நம்ம வீட்டில் தான் சிஸ்டர் உனக்காக இங்க வெய்ட்டிங் சீக்கிரம் ஓடு..” என்று விதுரன் சொல்ல, “இது எப்போடா?.. விஜய் வியப்பாக கேட்க
“உன் மேரேஜ்க்கு பின்னாடி.. உன்னை தூக்கிறதுக்கு முன்னாடி.. உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும் என்று தான் உன்னை கொஞ்ச நேரம் கடுப்பேத்தினோம்..” என்ற நண்பர்களை அணைத்து விடுவித்தவன்
“நேத்ரா பேபியை இங்க தனியாக விட்டு நாங்க எப்படி போக முடியும்..?” விஜய் மறுக்க
“அப்பா சீக்கிரம் வாங்க?.. நேத்ராவின் உற்சாக குரல் கேட்டு, விஜய் அங்கு ஓடினான்.. அங்கு நேத்ராவுடன் எழிலும் இருக்க அந்த நேரத்திலும் எழிலை சைட்டடித்து கொண்டிருந்தவனை “ப்பா நான் ஷக்தி மாமா கூட அங்க ஊருக்கு போகவா..? ஆர்வமாக கேட்ட நேத்ராவின் குரலில் தெளிந்தவன், எழிலிடம் திரும்பி “உனக்கு சம்மதமா?. “ என்று பார்வையால் கேட்க நேத்ராவின் ஆர்வமான முகத்தை பார்த்து எழிலும் சம்மதமாக தலையாட்ட
மலரின் கை பிடித்தபடி நின்ற நேத்ரா “நீங்க ஊருக்கு போறிங்கள்ல நான் அத்தை கூட போகவா அங்க ஒரு குளம் சூப்பரா இருக்கு ப்பா அந்த குளத்தில் டக் எல்லாம் இருக்கு எனக்கு அங்க பார்க்கணும் போல இருக்கு..” கண்கள் மின்ன சொன்ன நேத்ரா விடம்
“உனக்கு அப்பா, அம்மா கூட இருக்க தோணலயா பேபி..?” விஜய் கேட்க “நீங்களும் அம்மாவும் தான் வேலை விசயமா எங்கேயோ கிளம்பறிங்களே.. நான் உங்க கூட வந்தா நீங்க எப்படி வேலை செய்விங்க?.. அதான் நான்
நீங்க வர வரைக்கும் ஷக்தி மாமா கூட மலர் அத்தை கூடவும் இருக்கேன்.. அண்ணால்லாம் அக்கால்லாம் இருக்காங்க அவங்க கூட விளையாடுவேன்..” (ஷக்தி மலரின் குழந்தைகள்) நீங்க ஊருக்கு போய்ட்டு திரும்ப வரும் போது என்னை வந்து கூட்டிட்டு போங்க..” என்ற நேத்ராவின் கன்னத்தில் முத்தமிட்டு ஷக்தியை கேள்வியாக பார்த்தான்
“நேத்ரா பேபி கிட்ட அப்பாவும், அம்மாவும், பேசினாங்க பேபிக்கிட்ட என்ன பேசினாங்களோ நேத்ரா எங்க கூட வர்றேன்னு சொல்லிட்டா.. அவங்களை பார்க்க ஆசையாக இருக்காம் சோ பேபி எங்க கூட வர்றா.. விதுவும் வெண்பாவும் டூ டேஸ் எங்க கூட இருந்திட்டு அங்க இருந்து கிளம்பறாங்க.. இதான் எங்க பிளான்..” என்று ஷக்தி சொல்ல விஜய் அப்போதும் தயங்க
“மச்சி இதெல்லாம் வாழ்க்கையில் ஒரு முறை தான் இது உங்களுக்கான நேரம்.. நேத்ரா தனியாக இருந்தால் நீ தயங்கலாம் அதான் நாங்க இருக்கோமே.. நேத்ரா பேபியை நாங்க பத்திரமாக பார்த்துக்கிறோம்.. நீங்க பேபியை பத்தி கவலைப்படாமல் என்ஜாய் பண்ணிட்டு வாங்க..” என்று இருவரையும் அனுப்பி வைத்தனர்
முதல் விமான பயணம் எழிலுக்கு சற்று அச்சத்தை கொடுத்தது..
“பயமாக இருக்கா லிட்டில் கேர்ள்?.. விஜய் கேட்டபடி அவளுக்கு சீட் பெல்ட்டை மாட்டிவிட
“பயம் தான்.. அதான் நீங்க இருக்கிங்களே? சமாளிச்சுப்பேன்…” அவள் கூறி கொண்டிருக்கும் போதே விமானம் தரையில் இருந்து மேலே போக எழில் வயிற்றுக வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாத ஒரு உருண்டையும் உருளுதடி என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப பயப்பந்து உருள, எழில் விஜய் கரத்தை இறுக பற்றி கொண்டாள்.. அவள் கரங்களின் நடுக்கத்தில் எழில் பயத்தை உணர்ந்தவன், அவள் இதழில் அழுந்த முத்தமிட்டான்..
பயத்தில் கண்களை மூடி இருந்த எழில் தன் மேல் உதட்டில் மீசைமுடி குத்தவும் திகைத்து கண் விழிக்க, தன் முகத்திற்கு வெகு அருகே இருந்த விஜய் முகத்தை விழி விரித்து பார்க்க, அந்த கள்வனோ ஒற்றை கண் சிமிட்டி இன்னும் அழுத்தி முத்தமிட்டான்.. எழில் தாங்கள் இருந்த இடத்தை சுற்றி பார்க்க அவளிடமிருந்து விலகியவன்
“இது பிசினஸ் கிளாஸ் ராங்கி.. யாரும் வர மாட்டாங்க..” என்று சமாதானம் செய்த விஜய்யின் தோளில் அடித்து “இப்படியா செயாவாங்க..? தன் உதட்டை துடைத்தபடி விஜய்யை திட்ட, “ஓ இப்படி செய்ய கூடாதா?.. வேற எப்படி செய்யணும்?.. லிட்டில் கேர்ள் சொல்லி கொடுத்தா நான் கரெக்டா செய்வேன்..” விஜய் கண் சிமிட்டி விஷமத்துடன் சொல்ல
“ஹோட்டல்கார் வர வர ரொம்ப பேடா பேசறிங்க.. உங்க கிட்ட பேசினாலே இப்படி தான் ஏடாகூடமாக பேசறிங்க இனி நான் பேச மாட்டேன்..” விஜய் பேச்சில் சிவந்த தன் முகத்தை அவனுக்கு காண்பிக்காமல் பொய் கோபத்துடன் பார்வையை ஜன்னல் பக்கம் திரும்பியவள்.. வெளியே மையை அரைத்து பூசியது போல் ஒரு இருட்டாக இருக்க
“அம்மாடி..” என்று பயந்து மீண்டும் பார்வையை உள்ளே திருப்ப, ஹ..ஹ. ஆசை பட்டு ஜன்னல் சீட் கேட்டேல்ல இப்போ என்னவாம்..?” கேலியாக கேட்க எழில் உதடு சுழித்தாள்..
“அம்முவை நான் விட்டு பிரிஞ்சதே இல்லை இது தான் ஃபர்ஸ்ட் டைம்.. அவ மட்டும் அழுதிருந்தா,”
“நிச்சயமாக இந்த ட்ரிப்பை நான் கேன்சல் பண்ணிருப்பேன்..” விஜய் முடிக்க அவன் கைக்கடியில தன் கையை கோர்த்து அவன் தோள் சாய்ந்த எழில்.. விஜய்யை நிமிர்ந்து பார்த்து “எனக்கு இங்க ஒரு முத்தம் கொடுங்க ஹோட்டல் கார்..” என்று அவளே கேட்டு வாங்கவும், அவள் நெற்றியிலும், மூக்கின் நுனியிலும் முத்த மிட்டவன்
“ரெண்டு நாளாக கல்யாண பரபரப்பில் சரியாக தூங்கி இருக்க மாட்ட கொஞ்ச நேரம் தூங்குடா..” விஜய் எழில் தலையை வருடி மென்மையாக சொல்ல, அவன் தோள் சாய்ந்து உறங்க தொடங்கினாள்..
தன் மேனியில் ஊசி குத்துவது போல் குளிர் உணர்ந்த எழில் உறக்கத்தில் இருந்து மெதுவாக கண்விழிக்க, முழிச்சிட்டியா கேர்ள்?!” விஜய் கேட்க “ஆமா நல்ல தூக்கம் நாம இறங்கிற இடம் வந்திருச்சா?.” என கேட்டபடி எழில் இருக்கையில் இருந்து எழ முயற்சிக்க அவளால் அது முடியவில்லை
”நாம இறங்குற இடம் நம்மள தேடி வரல நாம தான் இங்க வந்திருக்கோம் கேர்ள்..?! என கேலி செய்த விஜய்யை எழில் முறைத்துப் பார்க்க “சரி சரி முறைக்காத கேர்ள்..” என சமாதானம் செய்தவன் “நீ முழிக்கிறதுக்குள்ள வீட்டுக்கு போய்டலாம் நினைச்சேன்..” என்ற விஜய்யிடம்,
“நான் முழிச்சு உங்க கூட வராம நீங்க மட்டும் எப்படி வீட்டுக்கு போவீங்க..?..! என கேட்க “, ஹே கேர்ள் நான் சொன்னதை நீ கவனிக்கலையா நீ முழிக்கிறதுக்குள்ள வீட்டுக்கு போகலாம்னு தான் சொன்னேன் உன்னை விட்டுட்டு போகணும் சொல்லவே இல்லை..” என்று விஜய் இலகுவாக கூற
“ஓ அப்போ நான் முடிக்காமல் தூங்கிட்டு இருந்தால் என்னை நீங்க தூக்கிட்டு போய்ருப்பிங்களோ?!” கேலியாக கேட்ட எழில் விஜய்யின் விஷம புன்னகையில், அப்போது தான் ஒரு விசயம் உணர்ந்தாள்.. தான் விஜய்யின் கரத்தில் இருப்பதும், அவன் தன்னை தூக்கி செல்வதும் உணர்ந்து விழிகளை விரித்து சுற்றும் முற்றும் பார்க்க
விமான நிலையத்தில் இருந்தவர்கள் சிலர் இவர்களை ரசனையுடன் பார்க்க, சிலர் தங்கள் பெருவிரலை உயர்த்தி காண்பித்து ஷி இஸ் சோ லக்கி..” எழிலை காண்பித்து சொல்லி செல்ல அதை ஆமோதிப்பது போல் அவர்களிடம், “எஸ் அப்கோர்ஸ் நான் லக்கி தான்..” என்று தலையசைத்து தன்னை இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்த எழில் நெற்றியில் முட்டி கண்சிமிட்டி சிரித்தவன்
“ மேடம் அசந்து தூங்குனிங்க சோ டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று உங்களை தூக்கிட்டு வந்திட்டேன்..” என்ற தன் தீரனை காதலுடன் பார்த்து அவன் கழுத்தில் தன் கரம் கோர்த்தவள், “இப்படி என்னை காதல் செய்தால் நான் எப்படி தாங்குவேன் ஹோட்டல் கார்?!..” மயக்கும் குரலில் கேட்க
விஜய் குணிந்து அவள் காதில் ஏதோ கூறவும், முகம் சிவக்க, தீராஆஆ..! சிணுங்கியபடி அவன் மார்பில் முகம் பதித்து கொள்ள, அதில் வாய்விட்டு சிரித்த விஜய் தன் மார்பில் இருந்த அவள் முகத்தை இன்னும் அழுத்தி கொண்டு நடையை தொடர்ந்தான்..
ஒரு வழியாக விமான நிலையத்தில் இருந்து இருவரும் வெளியே வர, அவர்களுக்காக காத்திருந்த காரில் இருவரும் ஏறி கொண்டனர்.. சில்லென்ற காற்று மேனியை தழுவ, லேசாக எழில் உடல் நடுங்கி தானாக விஜய்யை நெருங்கி அமர்ந்து அவன் அணிந்திருந்த ஜெர்கினுக்குள் நுழைய முயல.. அவள் முயற்சியில் சிரிப்பு வர உதடு மடித்து தன் சிரிப்பை அடக்கியவன், எழிலை தூக்கி தன் மடியில் அமர வைத்து இருவருக்கும் சேர்த்து ஜெர்கினை போட்டு விட்டான்
“ப்ஆ எவ்வளவு குளிர்?. இந்த அண்ணாக்கள் ஏங்க இப்படி ஒரு இடத்தை சூஸ் பண்ணாங்க?.. காருக்குள்ளேயே இவ்வளவு குளிர் இன்னும் வெளியே இருந்தால் அவ்வளவு தான்..” புலம்பியபடியே வர, அவள் பேசுவதை அனைத்தும் சிரித்தபடியே கேட்டு வந்து கொண்டிருந்தவன்..
“நம்ம இப்போ இருக்கிற நிலையை பார்த்தும் கூட உனக்கு இந்த கேள்வி தோணுதா..? அவள் காதில் தன் மீசை முடி உரச ஹஸ்கி வாய்ஸில் பேச, சட்டென்று அவனிடமிருந்து விலக ஒரே ஜெர்கினுக்குள் இருவரும் இருந்ததால் அவளால் அது முடியாமல் போகவே..
அவர்கள் தங்க போகும் வீட்டிற்கு இருவரும் வந்து சேர்ந்தனர்.. வீட்டின் வடிவமைப்பை பார்த்த எழில் வியப்பில் விழிகள் விரிய அந்த வீட்டை அண்ணாந்து பார்த்தவள் பின்னால் சாய்ந்து கீழே விழ போக
“ ஹேய் பார்த்து பார்த்து..” என்ற விஜய் அவளை பிடித்து நிறுத்தினான்..
“பச்சை நிற புல்வெளி கடல் போல் காட்சியளிக்க அதில் அங்காங்கே தீப்பெட்டியை தள்ளி தள்ளி வைத்தது போல் மரத்தாலான வீடுகள் கண்ணை கவர, அந்த மர வீட்டின் ஜன்னலில் தொங்க விட பட்டிருந்த பல வண்ண மலர்கள்.. பார்க்க தெவிட்டவில்லை அதன் அழகில் எழிலிற்கு குளிர் கூட பின்னோக்கி சென்றது..
“நான் இதெல்லாம் டிவில தான் பார்த்திருக்கேன்.. ஆனால் நேர்ல பார்க்கும் போது வாவ்..” கன்னத்தில் கை வைத்தபடி ரசனையுடன் கூறிய எழிலை ரசித்து பார்த்த விஜய், “ஆமா வாவ் தான்.. ரொம்ப ரொம்ப வாவ்..” என்ற ரசித்து சொன்ன விஜய்யின் குரலில் இருந்த மாறுபாட்டை உணர்ந்தவள் அவனை திரும்பி பார்க்க, அவன் உதடு குவித்து முத்தமிடுவது போல் செய்தவன்.. மீண்டும் எழிலை தூக்கி கொண்டான்..
“இது யார் வீடு?..” எழில் கேட்க
“எங்களோட.”
ம்கூம் நம்மளோட வீடு தான்.. அதோ அந்த வீடு ஷக்தியோடது அதுக்கு பக்கத்தில் இருக்கிறது விதுவோடது.. இயர்லி ஒன்ஸ் அவனுங்க இங்க வந்து ரிலாக்ஸ் செஞ்சிட்டு போவாங்க.. நான் ரொம்ப ரேர் இங்க வர்றது.. இனி அடிக்கடி வருவோம்..” என்று கூறிய விஜய்யை எழில் நிமிர்ந்து பார்க்க, “நம்ம ஃபேமிலியோட தான்..” என்று அவள் மனம் புரிந்து சொல்ல
“மை செல்ல தீரா லவ் யூ..” என்று அவன் எழில் விஜய் கன்னத்தில் முத்தமிட, உனக்கு முத்தம் கொடுக்க தெரியலடி ராங்கி..” என்றவன் எழில் என்ன என்று சுதாரிக்கும் முன் அவள் இதழ்களை முற்றுகை இட்டிருந்தான்..
இந்த முறை கொஞ்சமே கொஞ்சம் வன்மையாக அவள் இதழ்களை சிறையிட்டிருந்தான்.. சில நொடிகள் நீடித்த இதழ் யுத்தம், கட்டில் யுத்தமாக எப்போது மாறியதோ இருவருமே உணரவில்லை..
விஜய் அழைத்து செல்லும் புது மாய உலகில் அவனுடன் இணைந்து பயணித்தாள்.. சில இடங்களில் அவனுடன் செல்ல முடியாமல் தட்டு தடுமாறியவளை தன் கெஞ்சல், கொஞ்சல் மொழிகளில் அழைத்து சென்றான்.. இதுவரை வெயில் படாத தன் அங்கங்களை கணவன் என்னும் கள்வன் களவாடி கொண்டு இருக்க
அந்த கள்ளத்தனத்திற்கு தானும் உடந்தையான விந்தையை எண்ணி தனக்குள் வியந்த எழில், மன்னவன் தரும் மாற்றங்களை தாள முடியாமல், தானும் அவனுக்கு காயங்கள் கொடுக்க,
“ராங்கி..ராங்கி..” என்று இனிமையாக புலம்பியபடி அவள் தந்த காயங்களை சுகமாக வாங்கி கொண்டவன், அவள் மேனி என்னும் மீட்டாத வீணையை தன் விரல்களாலும், இதழ்களாலும் மீட்டி கொண்டு இருந்தான்.. அவன் அவளாக, அவள் அவனாக, இரு உயிர்கள் இடம் மாறிய தருணமிது.. கட்டில் யுத்தம் முடிவிற்கு வர,
அதில் இருவரும் சேர்ந்தே வெற்றி பெற்றனர்.. தன் மார்பில் முகம் புதைத்து உறங்கி கொண்டு இருந்த தன் உயிரின் சரிபாதியின் உச்சியில் முத்தமிட்டு, “லவ் யூ மை கேர்ள்..” என்று தன் காதலை சொல்ல
“நானும் லவ் யூ தீரா..?!” உறக்கத்திலேயே தன் காதலை சொன்ன ராங்கியை தன்னோடு இறுக அணைத்து கொண்டு தானும் உறங்க தொடங்கினான்..
இமை சிமிட்டும்
அடுத்த பதிவில் நிறைவு பெறும்