Loading

இமை 63

 

ரிசப்ஷன் நல்லபடியாக முடிந்து மணமக்களை முதலிரவு அறைக்குள் அனுப்பி வைத்தனர்.. 

 

 

தான் இத்தனை மாதம் காத்திருந்து எதிர்பார்த்த நாள் இன்று.. தங்கள் அறைக்குள் செல்லும் நேரத்தை பெரும் ஆவலுடன் எதிர்பார்த்தபடி நொடிக்கொரு முறை கை கடிகாரத்தை பார்த்து கொண்டு இருந்தான் விஜய்.. 

 

 

 

“விஜி நீ ரூம் குள்ள போ..” சுமித்ரா கூறி முடிக்கவில்லை.. அறைக்குள் விரைந்து சென்ற விஜய்யை அவன் பாதம் வாசலை தொடும் முன் முகமூடி அணிந்த இருவர் அவனை குண்டு கட்டாக தூக்கி சென்றனர்..

 

 

 

“அடேய் விடுங்கடா.. எனக்கு இன்னிக்கு தான் கல்யாணம் ஆகிருக்கு.. எனக்கு இன்னிக்கு ஃபர்ஸ்ட் நைட் ரா.. டேய் ரொம்ப போராடி காதலிச்சு கல்யாணம் செஞ்சு ஃபர்ஸ்ட் நைட்டுக்காக ஆர்வமாக காத்திட்டு இருந்த நேரத்தில் இப்படி காக்கா வடையை கவ்விட்டு வந்த மாதிரி என்னைய தூக்கிட்டு வந்துட்டிங்களே யாருடா நீங்க?.. என்னை எதுக்குடா கடத்துனிங்க..? 

 

 

 

“நீங்க என்ன கடத்துறது மட்டும் என் நண்பர்களுக்கு தெரிஞ்சது உங்கள உயிரோட விட மாட்டாங்கடா நான் மாப்பிள்ளை வேஷத்துல இருக்கேன் எனக்கு இப்போ சண்டை போடுற மூட் இல்ல.. இதோ இப்பவே நான் அவனுங்களுக்கு கால் பண்றேன்.. அவனுங்க வந்து உங்களை பிரிச்சு மேய போறாங்க இன்று மிரட்டியபடி தன் போனை எடுத்து விதுரனுக்கு அழைக்க

 

 

 

முகமூடி அணிந்திருந்த இருவரில் ஒருத்தரிடம் போன் அழைப்பு சத்தம் கேட்க.. என்னடா நான் என் ஃப்ரெண்ட்டுக்கு கால் செஞ்சா உங்களுக்கு கால் வருது..” என்று சந்தேகமாக இருவரையும் பார்க்க,

 

 

 

“அடேய் போதுமடா நடிச்சது.. நாங்க யார் என்று உனக்கு தெரியும்கிறது எங்களுக்கு தெரியும்..” தான் அணிந்திருந்த முகமூடியை கழட்டியபடி விதுரன் சொல்ல..  நீ கழட்டிட்ட இன்னொருத்தர் அப்படியே நிக்கிறாரு..” என நக்கலாக கேட்டபடி சக்தியை பார்க்க 

 

 

 

“எனக்கு மட்டும் இதை கழட்டாமல் இருப்பதற்கு ஆசையா?! என்ன?!  மாட்டிக்கிச்சு வர மாட்டேங்குது கழட்டி விடுங்கடா..” என்று ஷக்தி முகமூடியை கழட்ட முயற்சி செய்தபடி சொல்ல இருவரும் சிரித்தபடி ஷக்தி அணிந்திருந்த முகமூடியை கழட்டி விட்டனர்..

 

 

 

“ஷ்ப்பா இப்போ தான் மூச்சு விட முடியுது இந்த முகமூடி கொள்ளைக்காரங்க எல்லாம் இதை மாட்டிட்டு எப்படி தான் கொள்ளையடிக்கிறாங்களோ..” என்று புலம்பியபடி விஜய்யை நிமிர்ந்து பார்க்க அவன் இருவரையும் கொலை வெறியோடு முறைத்து பார்த்து 

 

 

 

“எல்லோருக்கும் நீங்க ஹீரோவா இருக்கீங்க.. ஆனால் எனக்கு மட்டும் ஏண்டா வில்லனா இருக்கீங்க?.. நானே ரொம்ப கஷ்டப்பட்டு ராங்கியோட மனசை மாத்தி காதல் செய்ய வச்சு.. கல்யாணம் பண்ணி இப்ப ஃபர்ஸ்ட் நைட் வரைக்கும் கொண்டு வந்து ரொம்ப ஆசையாக ஆர்வமாக ரூமுக்குள்ள போக போன என்னை இப்படி தூக்கிட்டு வந்து தொல்லை செய்றிங்களே உங்களுக்கு என்ன தான் டா வேணும்..” என கேட்க 

 

 

 

“எங்களுக்கு தேவை உண்மை.. நேர்மை நடந்தது என்ன?.” என்ற ஷக்தியை விஜய் புரியாமல் பார்க்க 

 

 

 

“எங்களுக்கு நேத்ரா பேபியையும் சிஸ்டரையும் கடத்தினவங்களை எப்படி நீ உடனே கண்டுபிடிச்ச என்று தெரியணும்?. அன்னிக்கு உன் கன்னத்தில் அஞ்சு விரல் தடம் தெரிஞ்சதே.. அந்த தடம் எப்படி வந்துச்சு?.. இதெல்லாம் எங்களுக்கு தெரியணும்..? விதுரன் கேட்க 

 

 

 

அதெல்லாம் தான் முடிஞ்சு போச்சே. இன்னும் எதுக்குடா அவனுங்களை பத்தி பேசறிங்க?” விஜய் சலித்து கொள்ள, 

 

 

 

“இது இன்னும் முடியல ராசா?.. எங்களை விட நம்ம ரீடர்ஸ்க்கு  தயாளனுக்கும், அஷ்வினுக்கும் என்ன ஆச்சு என்று தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமாக இருக்காங்க.. “வேற வழியில்லை மச்சி நம்ம ரீடர்ஸ் நட்பூக்களுக்காகவது என்ன நடந்தது என்று நீ சொல்லி தான் ஆகணும்..” ஷக்தி சொல்ல 

 

 

 

“அடேய் நீ இதை முதல்லயே சொல்ல மாட்டியா?. நம்ம ரீடர்ஸ் கேட்டாங்க என்று தெரிஞ்சிருந்தா இவ்வளவு நேரம் இப்படி வெட்டியாக பேசிருப்பேனா..? என்ற விஜய்யை இருவரும் முறைத்து பார்க்க, “சரி சரி இப்போ நான் ஃப்ளாஷ்பேக் சொல்லணுமா?. வேண்டாமா?..” என்று கேட்க 

 

 

“அதுக்காக தானடா உன்னை தூக்கிட்டு வந்தோம்..” இருவரும் ஒருசேர கூற 

 

 

ரீடர்ஸ் நட்பூக்களே என் ஃபர்ஸ்ட் நைட் எல்லாம் விட்டுட்டு உங்களுக்காக அன்னிக்கு நடந்த ஃப்ளாஷ் பேக் சொல்ல போறேன்.. சோ யாரும் ஸ்கிப் செஞ்சிடாதிங்க.. என்று சிறு முன்னறிவிப்பு வச்சிட்றேன்..

 

 

“அது அன்னிக்கு நடந்தது என்னன்னா..

 

 

அந்த தயாளன் எப்படியும் எதாவது செய்வான் என்று எனக்கு தெரியும்.. நான் மதியை ஃபாலோ பன்றதுக்கு ஆட்களை வச்சாலும், தயாளனையும் அஸ்வினையும் ஃபாலோ செய்ய ஆட்களை வச்சிருந்தேன்.. இருபத்தி நான்கு மணி நேரமும் தயாளனும், அஷ்வினும் என் கண்காணிப்பில் தான் சுதந்திரமாக இருந்தாங்க..

 

 

 

மதியை கடத்தின விசயம் எனக்கு தெரியும் ஆனால் என்னை எங்கேயும் நகர முடியாதபடி ஹோட்டல் ரெய்டு..” என்று சொல்லி கொண்டிருந்த விஜய்யை இடைமறித்து 

 

 

 

“ஏன்டா அவன் தான் ரெண்டு பேரையும் கடத்த போறான்னு  உனக்கு முன்னாடியே தெரியுமே.. அப்ப நீ காப்பாற்றி வச்சிருக்க வேண்டியது தானே.. எதுக்கு அவ்வளவு தூரம் அவனுங்களை விட்ட? விதுரன் கேட்க

 

 

 

“எத்தனை நாள் இவனுங்களுக்கு பயந்து நம்ம வீட்டு பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது.?.. தப்பு செஞ்ச அவனுங்க ஃப்ரீயா சுத்துவானுங்க.. அவனுங்களை பத்தி யோசிச்சு நம்ம வீட்டு ஆட்களை வீட்டுக்குள்ள பத்திரமா வைக்கணுமா?!.. அதுதான் அவனுங்க போக்கில் போக விட்டு அவனுங்களை வச்சு செஞ்சேன்.. ஆட்டு குட்டியை பலியாடு மாதிரி வச்சு புலியை பிடிக்கிற மாதிரி.. நான் என் உயிர்களை பணயம் வச்சி இந்த நரிகளை பிடிக்க ஏற்பாடு செஞ்சேன்.. கொஞ்சம் ரிஸ்க் தான் ஆனால் வேற வழி இல்லை..

 

 

 

ரெண்டு நரிகளும் செம்மையாக வந்து சிக்கிடுச்சு.. ரெய்டு முடிஞ்சதும் நேராக தயாளன் வீட்டுக்கு தான் போனேன்.. 

 

 

அப்போ..

 

தன் வீட்டிற்கு வந்த விஜய்யை அலட்சியமாக பார்த்த தயாளன், “நீ வருவ என்று எனக்கு தெரியும் ஆனா இவ்வளவு சீக்கிரம் வருவே என்று தெரியாது.. நீ வீடியோ காட்டி என்னை பத்தி போலிஸ் கிட்ட கம்ப்ளெயிண்ட் கொடுத்தா நாங்க அப்படியே அமைதியாக இருப்போம் நினைச்சியா?.. இப்ப ஜாமீனில் வெளியே வந்திருக்கேன்..

 

 

 

இன்னும் கொஞ்ச நாள்ல இந்த கேஸே இல்லாமல் செஞ்சிடுவேன்.. ஆனால் நீ பாவம் உன் மனசுக்கு பிடிச்ச அந்த ரெண்டு பேரையும் இழந்துட்டு நிக்க போற.. இந்நேரம் என் பையன் அவன் நினைச்சதை செஞ்சு முடிச்சிருப்பான்.. அந்த பொண்ணு என் மகனோட ஆசை நாயகி ஆகிருப்பா.. இந்த ரெய்டு பிரச்சினைல இருந்து நீ எப்படியும் வெளியே வந்திருவ என்று தெரியும் 

 

 

 

ஆனால் உன்னை கொஞ்ச நேரம் எங்கேயும் நகர விடாமல் செஞ்சு அந்த நேரத்தில் எனக்கான காரியத்தை நான் சாதிச்சிட்டேன்..” என்று இறுமாப்புடன் கூறிய தயாளனிடம் 

 

 

 

“நீ கூறிய ஃபிளாஷ் பேக் எனக்கு தூக்கத்தை கொடுத்திருச்சு.. வா நம்ம அப்பிடியே கார்ல ஒரு ரெய்டு.. இல்லை ரைடு போகலாம்..” என்று சம்பந்தமில்லாமல் பேசிய விஜய்யை தயாளன் சந்தேகமாக பார்த்து 

 

 

 

“என்ன மிஸ்டர் விஜய் உனக்கு உயிரானவங்களை கடத்தினது தெரிஞ்சதும் அதிர்ச்சியில் மூளை குழம்பிடுச்சா??..” தயாளன் ஏளனமாக கேட்ட தயாளன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.. 

 

 

விஜய் தீடிரென தன்னை அடிப்பான் என்று எதிர்பார்க்காத தயாளன் விஜய்யை அதிர்ந்து பார்க்க 

 

 

 

“நானும் வயசுக்கு பெரியவராச்சே கொஞ்சம் அமைதியாக போகலாம் நினைச்சா நீ செய்வதெல்லாம் சின்னத்தனமால்ல இருக்கு.. இங்க பாரு ஒழுங்கா வாயை மூடிட்டு என் கூட அமைதியாக வரணும்..

 

 

 

“இல்லன்னா என்னடா செய்வ?..” எகிறிய தயாளன் “என்னையே அடிச்சிட்டேல்ல உன்னை என்ன செய்கிறேன் பார்..” என்றபடி தன் ஆட்களை அழைக்க,  “இங்கெல்லாம் யாரும் இல்லை.. கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தான் உன் ஆளுங்க குடிக்கிற காபி, ஜுஸ்ல மயக்க மருந்து கொடுத்து படுக்க வச்சாச்சு..‌” என்று இலகுவாக கூறிய விஜய்யை தயாளன் திகைத்து பார்க்க 

 

 

உன் பையன் செய்ற அழகான சேட்டையை நீ நேர்ல பார்க்க வேண்டாமா.. அதுக்கு தான் உன்னை கூப்பிட்றேன்.. அப்படியும் நீ வர மறுத்தா 

 

 

உன் நகை கடைக்கு வரும் நகைகள்ல முக்கால்வாசி முறைப்படி கணக்கில் வராத நகைகள் தான்.. வெளிநாட்டில் இருந்து இங்கு கொண்டு வரும் திருட்டு தங்கம்  அதுக்கான ஆதாரம் என்கிட்ட இருக்கு..” என்ற விஜய்யை பார்த்து தயாளன் ஆடி போய்விட்டார் 

 

 

“இதெப்படி உனக்கு.. பேச்சு வராமல் அவர் தடுமாற.. 

 

 

“என் எதிரிங்க லிஸ்ட்ல முதல் ஆளாக நீங்க தான் இருக்கிங்க உங்க பலவீனத்தை பத்தி தெரிஞ்சிக்காம இருப்பேனா..” உதடு வளைத்து கூறி விஜய்யை சிறு பயத்துடன் பார்த்தார்..

 

 

தயாளனின் அடையாளமே இந்த கடைகள் தானே..‌ அதற்கு எதாவது பங்கம் வந்தால் தன்னால் அதை தாங்க முடியாது.. என்று நன்றாக தெரிந்து இதை செய்திருக்கிறான் என்றால், அப்போ அஷ்வின் எங்கிருக்கிறான் என்றும் தெரிந்திருக்கும்.. 

 

 

 

“அப்போ நாங்க போட்ட திட்டம் எல்லாம் இவனுக்கு தெரிந்திருக்குமா.. இத்தனை தூரம் நாங்க பட்ட கஷ்டம் வேஸ்ட்டா போச்சா என்று.. பதட்டமாக நினைத்த தயாளன் “இருக்காது இந்நேரம் என் பையன் அஸ்வின் அங்க எல்லாத்தையும் நடத்தி முடிச்சு இருப்பான்..  இவன்  போனதும் அந்த எழில் இருக்கிற நிலை பார்த்து கதற போறான்..” வன்மமாக நினைத்தபடி அமர்ந்திருந்த தயாளன் அந்த சிறு நிம்மதி கூட நிலைக்க விடாமல்.

 

 

 

இங்கு நடந்தது எதுவும் தெரியாமல் அஷ்வின் வேறு வீடியோ கால் வந்து விஜய்யை கேலி பேசி கொண்டு இருக்க, அவன் அருகில் அமர்ந்திருந்த தயாளனுக்கு அஸ்வினை நினைத்து அத்தனை ஆத்திரமாக வந்தது.. 

 

 

 

விஜய் அஷ்வின் இருக்கும் இடத்திற்கு வந்ததும்.. வேகமாக இறங்கி உள்ள வந்த தயாளன், அஷ்வினை ஓங்கி அடித்திருந்தார்.. அதில் அதிர்ந்து அஷ்வின் தன் தந்தையை பார்த்தவன் அவர் பின்னே நின்ற விஜய்யை பார்த்து இன்னும் அதிர்ந்தவன்,

 

 

 

“அப்பா என்னை எதுக்கு அடிச்சிங்க?.. அதோடு இவனை ஏன் இங்க கூட்டிட்டு வந்த?..” அஷ்வின் கோபமாக கேட்க 

 

 

“ஏன்டா நாயே ஆளை கடத்தினதும் வேலையை முடிக்காம வசனமா பேசிட்டு இருக்க நீ..”  என்று திட்டியபடி மீண்டும் அஷ்வின் கன்னத்தில் ஓங்கி அறைந்து 

 

 

 

“நீ பேசி பேசியே எதையும் செஞ்சு கிழிக்கல.. ஆனா இவன் பேசாமல் இருந்து எல்லாம் செஞ்சு முடிச்சிட்டான்.. ஏன்டா நீ அவ்வளவு பேசியும், அவன் அமைதியாக இருந்தானே அப்போ கூடவா உனக்கு புரியல இவனுக்கு உண்மை தெரிஞ்சிடுச்சுன்னு  என்று ஆத்திரமாக சொல்ல, அஷ்வின் தலை குணிந்து நின்றான்.. 

 

 

“உங்க ரெண்டு பேருக்கும் இன்னொரு விசயம் சொல்லவா..” என கேட்ட விஜய்யை இருவரும் அடுத்து என்ன குண்டு வைக்க போறானோ..” என்று திக்கென்று இருவரும்..

 

 

 

“நீ ஆசையா தொடங்கின உன் தொழில், அந்த பில்டிங் கொஞ்ச நேரத்தில் பூந்தியாக போக போகுது..” என்று எள்ளலாக பேசிய விஜய்

 

 

“பூந்தியா?..” உங்க மனசில் கேள்வி தோணுதுல்ல..

 

 

லட்டு இருக்குல்ல லட்டு அதை உதிர்த்தால் என்ன ஆகும்?..” என்று விஜய் இருவரையும் பார்த்து கேட்க இருவரும் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கவும் “

 

 

உங்ககிட்ட தானே கேட்கிறேன் பதில் சொல்லுங்க..” என விஜய் அதட்ட 

 

 

“பூந்தி ஆகும்.” பதில் வேறு பக்கமிருந்து வரவும் அதை கண்டு கொள்ளாத விஜய் அஷ்வின் தயாளனிடம் 

 

 

“அதே மாதிரி தான் செங்கல் சிமெண்ட் வச்சு கட்டுன லட்டு மாதிரி இருந்த உன்னோட பில்டிங் இப்போ பூந்தி மாதிரி உதிர்ந்து சரிய போகுது..”

 

“என்ன உளர்ற?..”

 

 

“உனக்கு நியூஸ் பார்க்கிற பழக்கம் இருக்கா?.. பழக்கம் இல்லேன்னாலும் இன்னைக்கு மட்டும் பாரு..” என்றபடி 

 

 

இங்க டிவி இருக்கா?!..” என்று அறையை ஆராய்ந்த படி கேட்க 

 

 

“சரி இதோ போன் இருக்கே அப்பறம் எதுக்கு டிவி?..” என்றவன் தன் செல்ஃபோனில் செய்தியை ஓட விட 

 

 

 

அதில் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தில்  அஷ்வின் என்ற தொழிலதிபர் தனது டெக்ஸ்டைல் நிறுவனத்தை கட்டி இருப்பதாகவும், அரசாங்கம் அவருக்கு நோட்டிஸ் அனுப்பி விளக்கம் கேட்டும் அதை அவர் அலட்சிய படுத்தியதாலும், அவரின் கட்டிடத்தை இடிக்க கோர்ட் உத்தரவிட்டு இருப்பதாக செய்தி வரவும் அஷ்வின் இடிந்து போய் அமர்ந்தான்.. 

 

 

 

“போ முடிஞ்சா உன் பில்டிங்கை காப்பாத்திக்க..”  என்ற விஜய் அடுத்து தயாளனிடம் திரும்பி, 

 

 

“உன்  சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் எல்லாம் எங்க கொடுக்கணுமோ அங்க கொடுத்துட்டேன்.. முடிஞ்சா நீ வச்சிருக்க பணத்தை வச்சு உன் கடையையும் உன்னையும் காபாபாத்திக்கோ.. இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் கடைக்கு சீல் வைக்க போறாங்க ஓட தயாளா போ போய் உன் கடையை காப்பாத்திக்க” என்று விஜய் எகத்தாளமாக கூறியவன் 

 

 

 

உங்களையெல்லாம் அடிச்சு என் கையை அழுக்காக வேணாம்னு நினைச்சேன் ஆனா உன் மகனுக்கு என் ராங்கி வேணுமாமே.. அவனுக்கு எவ்வளவு தைரியம் என்கிட்ட வீடியோ கால்ல அவ்வளவு கிண்டலா சொல்றான்.. 

 

 

 

அதுக்கு அவனுக்கு எதாவது செய்யணும் தான..” என்று அழுத்தமாக சொல்ல அவன் குரலில் இருந்த அழுத்தம் அஸ்வினுக்கு உள்ளுக்குள் கிலி பரவியது.. 

 

 

என் ராங்கியை வேண்டும் என்று சொன்ன உன் வாயை உடைச்சா என்ன..” என்றவன் அஷ்வின் சுதாரிக்கும் முன் விஜய் அஷ்வின் வாய் மீது குத்தி இருந்தான்..

 

 

அஸ்வின் சுதரித்து விலகும் முன் அடுத்தடுத்து அவன் வாயில் குத்துவிட்ட விஜய் அஸ்வின் முன் பற்கள் நான்கு விழுந்ததை உறுதி செய்த பிறகு தான் குத்துவதை நிறுத்தினான்.. வாயில் குறுதி சொட்ட சொட்ட வலியில் துடித்த அஷ்வினை தயாளன் தாங்கி பிடித்து விஜய்யிடம் கோபமாக ஏதோ சொல்ல வர அவரை தடுத்து இன்னும் ஒண்ணு இருக்கு அதை சொல்ல மறந்துட்டேன் பாரேன் 

 

 

“உன் அன்பு மருமகள் உங்க ரெண்டு பேருமேலயும் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காங்க தெரியுமா..?. அடுத்த அதிர்ச்சி அவர்களுக்கு 

 

 

 

“இது எப்போ? எதுக்கு கம்ப்ளெயிண்ட்? என தயாளனும் அஸ்வினும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அதிர்ந்து நிற்க

 

 

“அதுவா நீ வரதட்சணை கேட்டேன்னு சொல்லி ஒரு புகார்..” என்று அஷ்வினிடமும் 

 

 

“தயாளன் நீ அதுக்காக உன் மகனை பேச சொல்லி தூண்டி விட்ட என்று ஒரு புகார்..” 

 

 

போலீஸ் ஆன் த வே வந்துகிட்டே இருக்கு உங்களை பிடிக்க.. உள்ள இருந்துட்டு வாங்க அதுக்குள்ளயும் நான் என் கல்யாணத்தை முடிச்சு ஹனிமூன் எல்லாம் போயிட்டு வந்திட்றேன்..” என்று சில மணி நேரங்களில் தங்கள் கஷ்டப்பட்டு கொண்டு வந்த அஸ்திவாரத்தை தரைமட்டம் ஆக்கிய விஜய்யை எதுவும் செய்ய இயலாமல் ஆத்திரத்தில் அஷ்வின் அங்கிருந்த பூ சாடியை எடுத்து அவன் மீது வீச வர 

 

 

அந்ந நேரத்தில் சரியாக காவல்துறையினர் அங்கு வந்து அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்..

 

 

“இதான் மச்சி அன்னிக்கு நடந்தது..” என்று சோகமாக கூறிய விஜய்யிடம் 

 

 

“அவர்களை அதோட விட்டிருக்க கூடாது.. இருந்தாலும் பரவாயில்லை.. எல்லாம் நல்லபடியாக தானே போயிருக்கு அப்புறம் எதுக்கு உன முகத்தில் சோகம் என விதுரன் குழப்பமாக கேட்க..

 

 

அதை ஏன் மச்சி கேட்கிற நானும் ஒரு பெரிசா சாதிச்ச ஃபீலிங்ஸ்ல சந்தோஷமா அந்த ராகி கிட்ட போய் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சு வா ராங்கி வீட்டுக்கு போகலாம்னு கூப்பிட்றேன்..” என்று விஜய் நிறுத்த 

 

 

“சரி கூப்பிட்ட  மதி என்ன சொன்னா?.. என்று ஷக்தி கேட்க 

 

“என்னைய வந்து கூட்டிட்டு போக உனக்கு இவ்வளவு நேரமா..? நீங்க கேட்ட கேள்விக்கு சரியா பதில் சொன்னேன் அதுக்கு ஒரு பார்வை கூட பார்க்காமல் அந்த பக்கமே திரும்பி நிக்கிறீங்க.. என்று கேட்டு கன்னத்துல விட்டா பாரு ஒரு அறை.. அன்னைல இருந்து நான் ஒரு பக்கமாக தான்டா சாப்பிட்றேன்..” என்று பரிதாபமாக விஜய் சொல்ல 

 

 

ஷக்தியும் விதுரனும் ஒருவரை ஒருவர் அதிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் வயிறு வலிக்க வாய்விட்டு சிரித்தனர் 

 

 

இருவரையும் முறைத்து கொண்டிருந்த விஜய்யை நெருங்கி மீண்டும் அவனை தூக்கி காரில் அமர வைக்க 

 

 

 

அதான் நான் தான் எல்லாமே சொல்லிட்டேன்ல இன்னும் எங்கடா என்னை கடத்திட்டு போறீங்க?.. இன்னைக்கு எனக்கு ஃபர்ஸ்ட் நைட்ரா நான் பாவம் என்னை விடுங்கடா?..” என்று கத்தி கொண்டு இருந்த விஜய்  தாங்கள் வந்த இடத்தை பார்த்து கேள்வியாக இருவரையும் பார்க்க 

 

 

“சிஸ்டர் ரொம்ப நேரமாக வெய்ட்டிங் ஓடு..” என்று இருவரும் சொல்லவும் விஜய் அந்த விமான நிலையத்தின் உள்ளே ஓடினான்..

 

 

இமை சிமிட்டும்

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்