இமை 61
விஜய் ஹோட்டலில் உள்ள அந்த பார்ட்டி ஹால் ஆட்களால் நிரம்பி இருந்தது.. ஷக்தியும், விதுரனும் வந்தவர்களை வரவேற்று அமர வைத்து கொண்டு இருக்க,
மலரும், வெண்பாவும் எழிலை தயார்படுத்திக் கொண்டிருந்தனர்.. “என்ன இந்த ட்ரஸ் இப்படி இருக்கு?. அழகா பட்டு சேரி எதாவது இருந்தா கொடுங்கப்பா இந்த ட்ரெஸ் ஒரு மாதிரி அன்கம்ஃபர்ட்பிளா இருக்கு..” என்று எழில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கதவை தட்டிக் கொண்டு விஜய் உள்ளே வந்தான்..
“என்ன அண்ணா உங்க ரூம் இது இல்லையே.. ரூம் மாத்தி வந்துட்டீங்களா?.. என மலர் கேலியாக கேட்க
“ஓய் பிளவர் உன் புருஷன் தான் என்னை ஏன் பொண்டாட்டி கூட பேச விடாம சதி செய்து சேட்டை பண்றான்னா.. நீயும் அப்படி இருக்கியே.. உன் அண்ணா பாவம் தானே?.” என விஜய் பரிதாபமாக முகத்தை வைத்தபடி அவர்களிடம் கேட்க,
“அதான் இனி வருஷம் முழுவதும் அண்ணி கூட தானே இருக்க போறீங்க.. இன்னும் ஒரு மணி நேரம் பொறுத்துக்க முடியாதா?!” வெண்பா போலியாக மிரட்ட விஜய் முகத்தை அப்பாவியா வைத்தபடி இருவரையும் பார்க்க அவன் பாவனை மலரும் வெண்பாவம் சிரித்துவிட்டு
“சரி சரி உங்களை பார்க்க பாவமாக இருக்கு பர்மிஷன் கிராண்ட் சரியா உங்களுக்கு பத்து நிமிஷம் தான் டைம். அதுக்குள்ளே நாங்க கதவை தட்டுவோம்.
நீங்க வெளியே வந்துடனும்..” என எச்சரித்துவிட்டு இருவரும் வெளியே செல்ல
“என் பொண்டாட்டி கிட்ட பேச எத்தனை தடைகள்?.. பத்து நிமிஷம் தான் டைம் தருவாங்களா?. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. ஒரு அண்ணன் என்ற மரியாதை இல்லை என்னையவே மிரட்டிட்டு போறாங்க..” விஜய் சத்தமிட
“என்ன சொன்னீங்க அண்ணா?!” கதவை திறந்து கொண்டு மலர் கேட்கவும் “இல்லமா சும்மா.. நானா ஒரு வசனம் பேசிட்டு இருந்தேன்.. என்று பின்வாங்கிய விஜய்யிடம் “அந்த பயம் இருக்கட்டும்..” என்றபடி மீண்டும் கதவை சாத்தி விட்டு செல்ல “ஷப்ப்பா என ஒரு நிம்மதியான பெருமூச்சுடன்.. வாசலை பார்த்தபடியே தன் ராங்கியிடம் திரும்பியவன்
சில நொடிகள் இமைக்க மறந்து எழிலையே பார்த்து கொண்டு இருந்தான்.. தன்னவன் பார்வையில் எழில் உடல் கூசி சிலிர்த்தது.. நிமிடங்கள் கரிந்தும் அவனிடம் பார்வையில் மாற்றம் இல்லாமல் இருக்க, சில நிமிடங்களுக்கு மேல் அந்தப் பார்வை வீச்சு தாழாமல் “பத்து நிமிஷத்தையும் இப்படி பார்த்தே கடக்க போறீங்களா?.” எழில் கேட்டு விட
அதில் தன் உணர்வு வந்த விஜய், “ஓ சும்மா பார்த்துட்டே இருக்காதடா வந்த வேலையை பாரு என்று சொல்லாமல் சொல்றியா ராங்கி..” எழில் காதருகில் அவன் மீசை முடி உரசியபடி மென்மையாக கேட்க
“நான் நீங்க நினைக்கிற மாதிரி அப்படி எதுவும் சொல்லலை..” எழில் அவசரமாக மறுக்க
“நான் என்ன நினைச்சேன் என்று உனக்கு எப்படி தெரியும் ராங்கி..? விஜய் புருவம் உயர்த்தி குறும்புடன் கேட்க
“அச்சோ நான் எதுவும் சொல்லலை.. போங்க..” எழில் முணுமுணுக்க
“ஃபிளவர் சொன்ன மாதிரி நான் ரூம் மாத்தி தான் வந்துட்டேன் போல சத்தமாக யோசித்தபடி கூறிய விஜய்யை எழில் நிமிர்ந்து பார்க்க
“ஆமா என்னோட ராங்கி இப்படி இவ்வளவு அமைதியாக இருக்க மாட்டா.. என்னை பார்த்ததும் பட பட பட்டாசு தான்.. ஆனா நீங்க அமைதியாக இருக்கிறைதை பார்த்தா நிச்சயம் நீங்க வேற யாரோ தான்.. ஆனால் நீங்களும் அழகா தான் இருக்கீங்க பேசாம என்கூட நீங்களே மேடையில என் பக்கத்தில் வந்து நில்லுங்களேன்..” என்று எழிலை வம்பு செய்ய
“ஓ உங்களுக்கு நான் பட பட பட்டாசா?..” கோபமாக கேட்ட எழில் அவன் முதுகில் மொத்தி எடுக்க, அதை சுகமாக வாங்கி கொண்ட விஜய் சில நிமிடங்களுக்கு பிறகு, “போதும் டா உனக்கு கை வலிக்கும்..” என்றபடி எழிலை தன்னோடு அணைத்துக் கொண்டான்..
“மை லிட்டில் கேர்ள் என்ன குழப்பம்?..” எழில் முதுகை வருடி கொடுத்தபடி கேட்ட விஜய்யை அதிர்ந்து பார்த்த எழில் அவனிடமிருந்து விலகி, “எனக்கென்ன குழப்பம்?.. அப்படி எதுவும் இல்லையே..” என்று அவசரமாக மறுக்க
விஜய் வேறு எதுவும் பேசவில்லை.. ஆனால் அவளிடமிருந்து தன் பார்வையையும் அகற்றவில்லை.. கைகளை மார்பின் குறுக்காக கட்டியபடி எழிலையே பார்த்துக் கொண்டிருக்க அவனின் கூர்ப்பார்வையில் அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் அவள் கண்களிலிருந்து இரண்டு துளி கண்ணீர் விழ
“ஷ்.. மை கேர்ள்.. என்னடா?!! எதுக்கு இந்த அழுகை?..” எழில் கண்ணீரை துடைத்து விட்டபடி விஜய் கனிவுடன் கேட்க, “நிஜமாகவே நான் உங்களுக்கு பொருத்தமாக இருக்கேனா?.. எழில் சந்தேகமாக கேட்க
“நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு லிட்டில் கேர்ள்..” விஜய் அதட்டலாக கூறி எழிலுக்கு நினைவுபடுத்த
“பார்த்திங்களா கோப பட்றிங்க இதுக்கு தான் நான் எதுவும் சொல்லலை..” எழில் விசும்பி கொண்டே சொல்ல
விஜய் மீண்டும் எழிலை தன் கை வளைவில் வைத்தபடி
நீ எதை நினைத்து உன் மனசை போட்டு குழம்பிட்டு இருக்க என்று எனக்கு தெரியுதுடா..” என்று சொல்லிக் கொண்டே எழிலை கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்திய விஜய் அவள் கன்னத்தில் இருந்த தழும்பை வருடியபடி “நாம இதை பத்தி நிறைய முறை பேசியாச்சு..” என்ற விஜய்யை இடைமறித்து
“நீங்க என் பக்கத்தில் இருந்து சொல்லும்போது எல்லாம் சரியாக இருக்கு.. அதனால் தான் அன்னைக்கு என்னை கேலி செய்த தயாளனுக்கு பதிலடி கொடுக்க முடிஞ்சது அப்போ நீங்க பக்கத்தில் இருந்திங்க.. ஆனால் நீங்க தள்ளி போனதும் மறுபடியும் இந்த தழும்பு நினச்சு மனம் குழம்புது நான் என்ன செய்ய..? பரிதாபமாக கேட்ட எழில் இதழில் முத்தமிட்ட விஜய்க்கு அவள் மனநிலை நன்றாக புரிந்தது..
ஆனால் இனி தான் சொல்லி அவள் மனம் மாறினால் அந்த மாற்றம் நிரந்தரமாக இருக்காது என்று உணர்ந்து கொண்டான்..
“சரி இப்போ அதுக்கு என்ன செய்யலாம்?.. காலையிலேயே இதை சொல்லி இருந்தால்..” என்று விஜய் பேச்சை நிறுத்த
“சொல்லி இருந்தா..” எழில் மீண்டும் கேட்க
“அந்த கூட்டத்தில் வேறு யாருக்காவது..” என்று விஜய் சொல்லி முடிக்கும் முன் அவன் முடியை பிடித்திருந்தாள் எழில்
“ஓ வேறு யாருக்காவது தாலி கட்டிருப்பிங்களா சார்..” ஆவேசமாக கேட்க
“நான் ஏன் அப்படி செய்ய போறேன்..? அந்த கூட்டத்தில் லவ் பண்ற யாருக்காவது கல்யாணம் செஞ்சு வச்சிருப்பேன்..” என்ற விஜய்யை அணைத்து கொள்ள
“ நான் தோத்துட்டேன் ராங்கி..” விஜய் வருத்தமாக சொல்ல
“என்ன சொல்றிங்க நீங்க தோற்று போனிங்களா?.. யார்கிட்ட?” எழில் புருவம் சுருக்கி கேட்க
உன் கிட்ட தான் நம்ம காதல் உன்னோட இந்த எண்ணத்தை மாற்றவே இல்லையா..? என்னையும் தாண்டி உனக்கு இந்த எதிர்மறை எண்ணம் வந்தால் நான் தோத்துட்டேன் என்று தானே அர்த்தம் ராங்கி..” என்ற விஜய்யின் உதட்டை தன் கைகொண்டு மூடிய எழில்
நீங்கள் தோற்கல.. நீங்க எப்பவும் தோற்க மாட்டீங்க.. நான் உங்களை தோற்கவும் விடமாட்டேன் தீரா.. நம்ம ஜெயிச்சோம் காதல் ஜெயிச்சது.. அதனால தான் நான் உங்களை பத்தி, உங்க சந்தோஷத்தை பற்றி நான் யோசித்து தான் இப்படி பேசிட்டேன்.. ஆனால் அந்த எண்ணம் தப்பு என்று இப்ப எனக்கு நல்லா புரியுது.. இனி இப்படி யோசிக்க மாட்டேன். இந்த தீரனுக்கு எப்பவும் இந்த ராங்கி தான்..” விஜய்யை அணைத்து அவன் மார்பில் முகம் புதைத்து கூறிய எழிலை தானும் இறுக அணைத்து கொண்ட விஜய்
“இனி இந்த எண்ணம் உனக்கு தோணுமா?..”என்று விஜய் அழுத்தமாக கேட்க “ம்கூம் ” என்று மறுப்பாக தலையசைத்த எழில் “காலையில் கல்யாணத்தப்போ அவ்வளவாக கூட்டம் இல்லை.. இப்போ ரிசப்ஷன்ல நிறைய கூட்டத்தை பார்த்து கொஞ்சம் குழம்பிட்டேன்.. இனி இப்படி ஆகாது ஒரு வேளை அப்படி வந்தாலும் என் தீரா அதை சரி பண்ணிடுவாங்க..” என்று நம்பிக்கையுடன் கூற
“வெரி குட் இந்த நம்பிக்கையோடு மேடைக்கு வா..” என்று எழில் இதழில் அழுந்த முத்தமிட்டு வெயில் தீண்டாத இடங்களை தன் கரங்களால் தீண்டி அவளை திணற வைத்த பிறகே அங்கிருந்து சென்றான்
விஜய் கோல்ட் அன்ட் பிரவுன் ஷெர்வாணி அணிந்து ஆணழகனாக விஜய் பார்ப்போரின் கண்ணை பறிக்க, அதே நிறத்தில் லெகங்கா அணிந்து அழகு தேவதையாக கண்களை நிறைத்தாள் எழில்.. அவள் முகத்தில் இருந்த அந்த வடு கூட இன்னும் தனி அழகை கொடுப்பது போல் இருந்தது..
முதலில் மேடைக்கு வந்த விஜய், நண்பர்களுடன் விழா ஏற்பாடுகளை பற்றி பேசி கொண்டு இருக்க..
“டேய் அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்.. நீ இன்னைக்கான சந்தோஷத்தை என்ஜாய் பண்ணு டா..” விதுரன் சொல்ல
“ஹ்க்கும் என் ராங்கி கூட கொஞ்ச நேரம் தனியாக இருக்க விடாத நீங்க அதை பத்தி பேசாதிங்கடா.. என் ராங்கி பக்கத்தில் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று எவ்வளவு ஆசையாக வந்தேன்.. விட்டானா இவன் இல்லையே.. அப்பறம் எப்படி நான் என்ஜாய் பண்ணுவேன்..” விஜய் ஷக்தியை முறைத்தபடி சொல்ல
ஷக்தி, யாரையோ சொல்வது போல் விஜய் பேசுவதை கண்டு கொள்ளாமல், சிரித்தபடியே நின்று கொண்டு இருக்கவும்.. கடுப்பானது விஜய்க்கு.. என்னை சைட் அடிச்சது போதும் அங்க பாரு சிஸ்டர் வராங்க.. அவங்களை சைட் அடிச்சிக்கோ..” என்று விஜய் கன்னம் பிடித்து வேறு பக்கம் திருப்ப
அசட்டையாக அந்த பக்கம் பார்வையை திருப்பிய விஜய் நின்ற இடத்தில் சிலையாக அசையாமல் நின்றுவிட அவன் பார்வையில் முகம் சிவக்க மேடையை நோக்கி மெல்ல அடி எடுத்து வைத்த எழிலை பார்த்த ஒரு பெண்மணி
“உங்க பையனுக்கு எதாவது குறையா?. இந்த பெண்ணை கட்டி வச்சிருக்கிங்க.. உங்களை விட அதிக சொத்து இருந்தாலும் பணத்துக்காக கல்யாணம் செஞ்சிருப்பிங்க என்று நினைக்கவும் வழி இல்லாமல்
வசதியில் உங்களுக்கு எத்தனை ஏணி வச்சாலும் பொருந்தாத ஒரு பெண்ணை எப்படி உங்க மகனுக்கு மேரேஜ் செய்ய ஒத்துக்கிட்டிங்க?. நீங்களே பாருங்க உங்க மகன் விஜய்யின் கம்பீரத்திற்கும், அழகிற்கும், அந்த பொண்ணு அவ முகத்தில் இருக்கும் அந்த தழும்பு இதை எல்லாம் பார்க்கும் போது
பட்டு துணியையும், அழுக்கு நிறைந்த கந்தல் துணியையும் ஒண்ணா இருக்கிற மாதிரி ரெண்டு பேருக்கும் கொஞ்சம் கூட பொருத்தமே இல்லை.. ஆனாலும் நீங்க ஏமாந்துட்டிங்க சுமித்ரா..” அவர்களின் உறவுக்கார பெண் ஒருவர் சுமித்ரா விடம் கூறி கொண்டு இருக்க
“ஆமா ஏமாந்துட்டோம். வேற வழி இல்லையே பொறுத்து தான் போகணும்.. என்னால எதுவுமே சொல்ல முடியல வேணுமின்னா நீங்களே வந்து என் மருமககிட்ட இதை சொல்லுங்க அண்ணி.. நான் இதோ வர்றேன்..” என்று சுமித்ரா அவ்விடம் விட்டு நகர, அந்த பெண்மடயோ எழிலை நோக்கி செல்ல இத்தனை நேரம் இவர்கள் பேசுவதை கேட்டு அதிர்ந்த சிவகாமி
“இதென்ன இப்படி பேசுறாங்க?.. மத்தவங்க என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்.. ஆனால் இவங்க சம்பந்தி எப்படி இப்படி பேசலாம்.. இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லன்னா முதல்லயே சொல்லியிருக்க வேண்டியது தான.. அவ்வளவு அன்பா பேசி பழகி இப்போ இப்படி யாரோ ஒருத்தர் கிட்ட தப்பாக பேசறாங்களே..” என்று ஆதங்கமாக புலம்பியவர்
“கடவுளே என் பொண்ணு இத்தனை வருஷம் கஷ்டத்தை அனுபவிச்சிட்டா.. இனியாவது அவ சந்தோஷமாக இருப்பா என்று நினைச்சேனே.. சம்பந்தி இப்படி பேசிட்டு போறாங்களே.. அய்யோ அந்த அம்மா என் பொண்ணுக்கிட்ட அவ மனசு கஷ்ட பட்ற மாதிரி எதாவது சொல்லிட போறாங்க.. அதுக்குள்ள நான் அவங்களை தடுக்கணும்..” என்று புலம்பியபடி சிவகாமியும் எழிலை நோக்கி சென்றார் ..
சிவகாமி அந்த பெண்மணியை தடுப்பாரா?.. அல்லது அந்த பெண்மணி எழிலிடம் தான் நினைத்ததை கூறுவாரா.. அப்படி கூறிவிட்டால் அதற்கு எழிலின் பதில் என்னவாக இருக்கும்..?
அடுத்த பதிவில்..
இமை சிமிட்டும்