Loading

இமைகளின் இடையில் நீ..6

 

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்

யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க

 

அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு

சந்தனப் பொட்டழகை சாஞ்ச நடையழகை

வெள்ளி வேட்டி கட்டியவனோ சொல்லு..

 

மேடையில் மணப்பெண்ணிற்கு அவளின் சொந்தங்கள் நலங்கு வைத்து கொண்டிருக்க, எழிலும், அவள் தோழிகளும் சேர்ந்து ஆடிப்பாடி அந்த இடத்தை கலகலப்பாக வைத்திருந்தனர் கொண்டிருந்தனர்..

 

 

அந்த இளம்பெண்களின் கூட்டத்தில் எழில் மட்டும் தனித்து தெரிந்தாள்.. அவளின் அழகு திருமணத்திற்கு வந்திருந்த காளையர்களை கவர்ந்திழுக்க, “இவங்க ரொம்ப அழகா இருக்காங்கள்ல.. இந்த அழகு மொத்தமும் யாருக்கு போக போகுதோ?.. அவர்களின் ஏக்க பெருமூச்சு அந்த மண்டபத்தில் போட்டிருந்த ஏசி காற்றையும் தாண்டி சிறு அனலை கொடுத்தது..

 

 

அனைத்து சடங்குகளை செய்து முடித்தவுடன் மணப்பெண்ணை அலங்கரிக்க அவளை மணமகள் அறைக்குள் அழைத்துச் செல்ல, எழிலும் அவர்களுடனே சென்றாள்.. “மேடம் உங்களுக்கு மேக்கப் தேவையில்லை. கண்களுக்கு மட்டும் கொஞ்சம் காஜல் போட்டுக்கோங்க இன்னும் அழகாக இருப்பிங்க..” மணப்பெண்ணை அலங்கரிக்க வந்திருந்த அழகு நிலையத்தில் இருந்து வந்திருந்த பெண் ஒருத்தி கருத்து கூற,

 

 

“அதான் எங்களுக்கு தெரியுமே எங்க எழில் ரொம்ப அழகு என்று.. இந்த அழகு சிலையை சிறையெடுக்க ஏற்கனவே ஆள் வந்திட்டாங்க.. இன்னும் பத்து நாள்ல இவளுக்கு மேரேஜ்..” என்று எழிலின் தோழி ஒருத்தி கூற, “வாவ் கங்ராட்ஸ் மேம்.. என்று வாழ்த்திவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள் அழகு நிலைய பெண்.. திருமண நல்லபடியாக நடந்து முடிய திருமண வேலைகளில் எழிலும் அவள் தோழிகளும், பங்கு கொண்டு அனைத்து வேலைகளையும் சிட்டெறும்பு போல் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்..

 

 

சிறகுகள் இல்லாத சிட்டு குருவிகளின் கூட்டத்தில், வண்ண மயிலாக தனித்து தெரிந்த எழிலை, அவளுக்கு தெரியாமல் இங்கு வந்திருந்த அஷ்வின் இமைக்க மறந்து ரசித்து பார்த்தான் என்றால், தங்கள் ஹோட்டல் வேலை செய்யும் மேனேஜர்  அவரின் மகன் திருமணத்திற்காக வந்திருந்த விஜய்யின் அன்னை சுமித்ரா தன் அருகில் அமர்ந்திருந்த கணவர் மணிகண்டனிடம், எழிலை காண்பித்து அன்று நகை கடையில் நடந்ததை கூறிவிட்டு, 

 

 

“இப்ப அந்த பெண்ணுக்கு வேற இடத்தில் மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிருச்சு போல.. அது மட்டும் இல்லாமல் இருந்தால் நிச்சயமாக நம்ம பையனுக்கு பேசியிருப்பேன்..” என்று உறுதியாக கூறிய மனைவியை வியப்பாக பார்த்து அப்ப இவனுக்காக காத்திருக்காளே உன் அண்ணன் பொண்ணு அவளை என்ன செய்வ என புன்னகையுடன் கேட்க,

 

 

அதான் இவனுக்கும் அவள பிடிக்கல என்கூட சின்ன வயசுல இருந்து வளர்ந்ததால தங்கச்சி மாதிரி சொல்லிட்டானே..” என்று சுமித்ரா என்று சலித்துக் கொள்ள, “சுமி இந்த காலத்து பசங்க எல்லாம் தெளிவாக தான் இருக்காங்க.. அவன் தான் லவ் மேரேஜ் தான் செய்வேன் என்று உறுதியாக இருக்கானே.. நீ இந்த பொண்ணை மட்டும் இல்லை நீ உலக அழகியவே கூட்டிட்டு வந்தாலும் அவன் திரும்பி பார்க்க மாட்டான்..”என்று மகனை பற்றி அறிந்த தந்தையாக கூற “உங்க பையனை பற்றி உங்களுக்கு தானே தெரியும்..” சுமித்ரா நொடித்துக் கொண்டு 

 

 

“அவன் எப்ப பாத்தாலும் வேலை வேலைன்னு இருக்கான்.. இவன் போய் ஒரு பொண்ண பாத்து, அது அவனுக்கு பிடிச்சு, அதுக்கப்புறம் நம்ம கிட்ட கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணி அப்பப்பா…”என்று மலைப்பாக கூற, “அதான் அவன் இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும் சொல்றானே விடு சுமி.. அதுக்குள்ள உன் பையனுக்கு பிடிச்ச பெண் அவன் கண்ணில் படாமலா போக போறா?..” என்று மணிகண்டன் மனைவியை சமாதானம் செய்ய, 

 

 

“என்னமோ தெரியலைப்பா இந்த பொண்ணு என் மனசுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. இந்த பொண்ணு மட்டும் நம்ம பையனுக்கு மனை..”

 

 

“சுமி..” கணவரின் அழுத்தமான கண்டன குரலில் தன் பேச்சை பாதியில் நிறுத்திய சுமித்ரா, அவரை கெஞ்சலாக பார்க்க, “இந்த பெண்ணுக்கு இன்னும் பத்து நாள்ல கல்யாணமாம்..  அவங்க ஃப்ரெண்ட்ஸ் பேசிட்டு போனாங்க.. இனி நீ அந்த பெண்ணை பற்றி பேசவே கூடாதும்மா..” என்று கண்டிப்பாக பேச, “என்னையறியாமல்  வந்திருச்சு..” என்று மன்னிப்பு கேட்க, அவர் தோளை ஆறுதலாக தட்டி கொடுத்தார்..

 

 

எழில் மிகுந்த மகிழ்ச்சியாக திருமண மண்டபத்தில் வலம் வந்து கொண்டிருந்தாள்.. இன்னும் பத்து நாட்களில் தனக்கும் இது போல் நடக்க போகிறது என்று தனக்குள் வெட்கியபடி, மாடியில் பொருட்கள் வைத்திருந்த அறையில் தாம்பாள தட்டை எடுத்து விட்டு திரும்பியவளை, இரு கரங்கள் அவளை இறுக அணைத்து கொண்டது..

 

 

அவள் பதறியடித்து விலக, “ஹேய் பேப் நான் தான்…” என்ற அஷ்வின் குரலில் பயம் விலகி இப்போது பதட்டம் வந்து ஒட்டிக் கொண்டது.. “அஷ்.. நீங்க எப்போ வந்திங்க?.. முதல்லே என்னை விடுங்க..” அவனிடமிருந்து திமிறி, “பேபி நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க.. இப்படி ஒரு அழகை பார்த்த பிறகு என்னால சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியல பேபி.. ஐ வாண்ட் எ கிஸ்..” என்று பிதற்றியபடி அவள் இதழ் நோக்கி குனிய 

 

 

“அஷ்ஷீ பிளீஸ் இது நம்ம இடம் இல்லை.. இங்க தாம்பள தட்டு கேட்டிருக்காங்க.. நான் எடுத்துட்டு போகணும் இல்லனா இங்க தேடி ஆள் வந்துருவாங்க.. யாராவது நம்மளை இப்படி பார்த்தால் ரொம்ப அவமானமாக போயிரும்.. ப்ளீஸ் அஷ்ஷீ விடுங்க..” என்று கெஞ்சிக் கொண்டு அவன் கைகளில் இருந்து விடுபட திமிரினாள்..

 

 

“நீ இவ்வளவு தூரம் என்கிட்ட போராடுவதற்கு ஒரு டூ மினிட்ஸ் ஒரே ஒரு முத்தம் கொடுத்துட்டு போயிட்டே இருக்கலாம் இல்ல.. நீ இப்படி மறுக்க மறுக்க இன்னும் உன் மேல ரொம்ப ரொம்ப ஆசை வருது.. இப்ப நீ எனக்கு முத்தம் மட்டும் தரலைன்னா நிச்சயமா நான் இந்த கல்யாணத்தை நிறுத்திடுவேன்.. அப்புறம் உன்னையும் இப்பவே நான் ஊருக்கு கூட்டிட்டு போயிருவேன்.. இன்னும் பத்து நாள் கழிச்சு நமக்கு நடக்க வேண்டிய கல்யாணத்தை நாளுக்கு நான் நடத்தி காட்டுவேன் இதெல்லாம் தேவையா சொல்லு..” என்று மிரட்டியவனை எழில் அதிர்ந்து பார்க்க

 

 

“ப்ளீஸ் பேபி இப்படி என்ன வில்லன் மாதிரி பார்க்காத.. நான் உன்னோட ஹீரோ.. எனக்கு ஒரே ஒரு முத்தம் தானே  கேட்கிறேன்.. இவ்வளவு கெஞ்ச விடுறியே..”  என்று முகத்தை பரிதாபமாக வைத்த படி அஷ்வின் ஆதங்கமாக கேட்க, “ப்ளீஸ் அஷ்ஷீ நான் தரேன்.. கண்டிப்பா தரேன் இப்ப விடுங்க.. யாராவது வந்துருவாங்க..” என்று வெகுவாக கெஞ்சி அவனை சமாதானம் செய்து அறைய விட்டு வெளியே வர,

 

 

இந்த மண்டபத்தை விட்டு போறதுக்குள்ள கண்டிப்பாக நீ முத்தம் தரணும் இல்லனா நான் நிச்சயமாக நாளைக்கே நம்ம மேரேஜ் வச்சிருவேன்..” என்று எச்சரித்தே எழிலை அனுப்பி வைத்தான்.. அங்கிருந்து வந்த பிறகு எழில் தன் உற்சாகம் தொலைத்து ஒரு இருக்கையில் அமைதியாக அமர்ந்து விட்டாள்.. 

 

 

இங்கு வந்ததில் இருந்து எழிலை கவனித்து கொண்டிருந்த சுமித்ராவிற்கு அவளின் இந்த அமைதி மனதை உறுத்த, என்னாச்சு இந்த பொண்ணுக்கு?.. இவ்வளவு நேரம் துருதுருன்னு இருந்தா இப்ப அமைதியாகிட்டாளே..” என்று யோசனை செய்து கொண்டிருக்க 

 

 

“என்னாச்சு சுமி அந்த பொண்ணையே பாத்துட்டு இருக்க?..” மணிகண்டன் விசாரிக்க “இல்லங்க இவ்வளவு நேரம் அந்த பொண்ணு நல்லா ஓடியாடி துறுதுறுன்னு இருந்தா ஆனா இப்ப பாருங்க ஒரு மாதிரி அமைதியா இருக்கா என்ன ஆச்சு தெரியலையே..” என்று கூற, “நீ வேணா என்னன்னு கேட்டுட்டு அந்த பிரச்சனையை தீர்த்து வச்சிட்டு வாயேன்..” என்ற மணிகண்டனின் குரலில் இருந்த கேள்வியை உணராமல் 

 

 

“நான் கேட்டுட்டு வரவா..?” என்றபடி அங்கிருந்து எழுந்தவரை, “ஹேய் சுமி!!..” என்று மணிகண்டன் தடுக்க, சரியாக அந்த நேரம் அவரின் செல்ஃபோன் சத்தமிட, சுமித்ரா யார் அழைப்பது என்று பார்க்க விஜய் தான் அழைத்து இருந்தான்..

 

 

“என்ன சுமி மேடம் என்ன பண்றீங்க?.. உங்கள் கணவர் என்ன பண்றார்?.. மேரேஜ் நல்லபடியா முடிஞ்சதா?..” என்று விசாரிக்க, “இங்க உன் ஆள தாண்டா பாத்துட்டு இருக்கேன்..” என்று தன்னை அறியாமல் வாயை விட்டவர் கணவரின் கண்டன பார்வையில் சொல்ல வந்ததை பாதியில் நிறுத்த, 

 

 

“என்ன சொல்றீங்க மா?..” அவர் பேசியது கேட்காமல், விஜய் மீண்டும் கேட்க, அதில் நிம்மதி பெருமூச்சுடன், “அது வந்து டா விஜி..” சுமித்ரா திக்கி திணற சுமித்ராவிடமிருந்து போனை வாங்கிய மணிகண்டன்,கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிருச்சுப்பா பொண்ணு மாப்பிள்ளைக்கு பரிசு கொடுத்துவிட்டு கிளம்பிடுவோம்..” என்று கூற

 

“அம்மா என்னவோ சொல்ல வந்தாங்களே என்னதுப்பா..?” என்று விஜய் கேட்க “அது ஒன்னும் இல்லப்பா.. உன் அம்மாவ பத்தி தான் உனக்கு தெரியுமே எந்த கல்யாணத்துக்கு போனாலும் உனக்கு தகுந்த மாதிரி பொண்ணு இருக்கான்னு தேடிகிட்டு இருப்பா இல்ல அதான் இங்கேயும் செஞ்சா..” என்று சமாளிக்க..

 

இந்த சுமிக்கு வேற வேலையே இல்ல நான் தான் ரெண்டு வருஷம் டைம் கேட்டிருக்கேன்ல அப்பறம் என்னவாம் உங்க மனைவிக்கு..?”என்று விஜய் கேட்டு கொண்டிருக்க அதற்குள் அவனுக்கு வேறு அழைப்பு வரவும், “அப்பா எனக்கு வேற கால் வருது நான் பேசிட்டு வரேன் நீங்க பார்த்து பத்திரமா வாங்க” என்றவன் அழைப்பை துண்டிக்க, அருகில் தன்னை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்த மனைவியை சிறு உழைப்புடன் பார்த்துவிட்டு செல்போனை அவரிடம் கொடுத்தார்..

 

 

கடத்தல் கும்பல் ஒன்று திருமணத்திற்கு வந்திருந்த மக்களிடையே கூட்டத்தோடு கூட்டமாக கலந்து எழிலை கடத்த திட்டமிட்டு இருந்தனர்.. எழிலை கடத்தி அவளை கொலை செய்ய திட்டமிட்டு இருக்க, அந்த கும்பல் தலைவனுக்கு எழிலின் அழகிய வதனம், அவனுக்கு சலனத்தை ஏற்படுத்த, அவன் மனதில் வேறு எண்ணம் தோன்றியது.. “நீ பூமிக்கு அடியில் போக வேண்டிய பொண்ணு இல்லை.. நீ போக வேண்டிய இடமே வேறு..” எழிலை பார்த்து வக்கிரமாக சிரித்தவன், எழில் தனியாக மாட்டும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தான்..

 

அஸ்வினை பார்த்ததும் தன் உற்சாகம், சந்தோஷம் எல்லாம் வடிந்து போய் அமைதியாக அமர்ந்திருந்த எழில் அருகில் வந்து அமர்ந்தான் அஷ்வின்.. அவன் அருகில் அமர்ந்ததும் தன்னைச் சுற்றி ஏதோ முள்வேலி அமைத்தது போல்  உணர்ந்த எழிலிற்கு இயல்பாக மூச்சு விடுவது கூட சிரமமாக இருந்தது..

 

 

தன்னை விட்டு பிரிந்து இருக்க முடியாமல் தன்னை தேடி இத்தனை தூரம் வந்த அஷ்வினை நினைத்து தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும்.. ஆனால் அதற்கு மாறாக தன் சுதந்திரம் பறிபோனது போல் உணர்வது எழிலிற்கு சற்று பயத்தை கொடுத்தது.. தன் மனம் என்ன நினைக்கிறது என்பது தெரியாமல் குழம்பி தவித்து இருந்தாள்..

 

 

எழில் தோழிகள் அவளை மேடைக்கு அழைக்க,  எழில் அவர்களுடன் செல்ல போக, அவள் கை பிடித்து தடுத்த அஷ்வின் அவளுடன் தானும் மேடை ஏறினான்.. திருமணம் நல்லபடியாக முடிய, மணமக்கள் கையில் தங்கள் பரிசுகளை கொடுத்து விட்டு சில நிமிடங்களில் எழிலை அழைத்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறி இருந்தான்..

 

“ஏங்க அந்த பொண்ணு கூட போறான்ல அந்த பையன் தான் அந்த பெண்ணை கட்டிக்க போற பையன் போல..” என்று சுமித்ரா கணவரிடம் கூற, “நீ விடவே மாட்ட..” என்று முறைத்தவரிடம், “அங்க பாருங்க கூட்டம் குறைஞ்சிடுச்சு நம்ம பரிசு கொடுத்திட்டு கிளம்பலாம்..” என்று அவசரமாக மேடை நோக்கி செல்ல, சிரித்தபடி அவரும் எழுந்து மனைவி பின்னே சென்றார்..

 

 

எழிலுடன் அஷ்வினை பார்த்த அடியாள் திகைத்து, இந்த தகவலை தன் மேலிடத்தில் கூற, “அவன் எப்படி அங்க வந்தான்..?” என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டு, இது தான் நல்ல வாய்ப்பு விடாதிங்க.. அவனுக்கு ரொம்ப அடி விழாம பார்த்துக்கோங்க..” என்றபடி இணைப்பை துண்டித்தது..

 

அஷ்வினும், எழிலும் கார் பார்க்கிங் வந்தனர்.., அவர்களை பின் தொடர்ந்து வந்த கும்பல், பார்க்கிங் ஏரியாவில் ஆள்  ஆள் நடமாட்டம் இல்லாதது கண்டு, மயக்க மருந்து அடங்கிய கைக்குட்டையை அஷ்வின் முகத்தில் வைத்து அழுத்தி அவனை மயக்கமடைய செய்து விட்டு, எழிலை கடத்தி சென்றனர்..

 

 

இமை சிமிட்டும்..

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்