இமை 59
நடந்து முடிந்த விசயங்கள் அனைத்தையும் பிரம்மிப்பாக பார்த்து கொண்டு இருந்த ஹோட்டல் மேனேஜர், உட்கார்ந்து இருந்த இடத்தில் இருந்தே அனைத்து பிரச்சினைகளை சரிசெய்த விஜய்யை வியப்பாக பார்த்து கொண்டு இருந்தார்..
“அதிலும் ரெய்டு என்று சொன்னதுமே யாரோ இங்கு பொய்யாக புகார் செய்திருக்கிறார்கள் இந்த ஹோட்டலுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே இந்த புகார் என்று புரிந்தாலும், அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் விஜய்க்கு அழைத்தார்.. ஆனால் அவன் வந்ததும் அனைத்தும் தலைகீழாக மாறி போன விந்தையை எண்ணி வியந்தார்.. அதனால் தான் இவர் முதலாளி நான் மேனேஜர்..” என்று நினைத்தபடி
“சார் எனக்கு ஒரு சந்தேகம்?.. என்ற மேனேஜரை நிமிர்ந்து பார்த்த விஜய்யிடம்
“இது அந்த தயாளன் சார் தான் செஞ்சாங்க என்று எப்படி தெரியும்? அந்த வீடியோ எப்படி எடுத்திங்க?..” என்று ஆர்வமாக கேட்க
கண்டிப்பாக தெரிஞ்சிக்கணுமா…?” விஜய் கேட்க
“ஒரு கியூரியாசிட்டி சார்..” மேனேஜர் சொல்ல
“ஓ சொல்லலாமே பெரிசா எதுவும் இல்லை.. நம்ம ஆளுங்க கிட்ட தயாளனை ஃபாலோ பண்ண சொல்லியிருந்தேன்.. அப்பறம் இங்க ரெய்டு வந்த ஆட்கள்ள நம்ம ஆளும் ஒருத்தர்..” என்றவனை நம்ப முடியாத திகைப்போடு பார்க்க
“ஏன் அப்படி பார்க்கிற இங்க?.. கெட்டதுக்கு துணைபோற ஆளுங்க இருக்கும் போது நல்லதுக்கு துணை செய்ய ஆளுங்க கிடைக்க மாட்டாங்களா என்ன?!. அந்த தயாளன் எப்படி ஒரு ஆளை செட் செஞ்சு ஹோட்டல் ரெய்டு வந்தாங்களோ.. நானும் அவங்கள்ல ஒரு ஆளை செட் பண்ணி இதை எனக்கு சாதகமாக ஆக்கிட்டேன்.. அவர் தான் இந்த வீடியோ எடுத்து கொடுத்தது.. இங்க ரெய்டு வர்றது உங்களுக்கு முன்னாடியே எனக்கு தெரியும்.. இங்க வந்து அந்த ஆள் அனுப்பி வைத்த அந்த ஜோடிகளை மிரட்டி எச்சரித்து அனுப்பினேன்.” என்ற விஜய்யை மேனேஜர் திகைத்து பார்க்க
அவர் பார்வை புரிந்து சிறு புன்னகையுடன்.. தொழில் நடத்துவது அவ்வளவு ஈசி இல்லை.. ஆனால் இதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கு.. தொழில்ல போட்டி பொறாமை இல்லைன்னா அதில என்ன சுவாரஸ்யம் இருக்க போகுது..? அந்த தயாளன் நம்ம ஹோட்டலுக்கு ஃப்ரீ பப்ளிசிட்டி செஞ்சு கொடுத்திருக்கிறார்.. ஒரு பிரச்சினை வந்தால் அதிலேயே உழன்று கொண்டு இருக்காமல் அதுல இருந்து வெளியே வர முயற்சி செய்யணும்..
அந்த பிரச்சினையில் நமக்கு எதாவது ஆதாயம் கிடைக்குதா என்றும் பார்க்கணும்..” என்ற விஜய்யை பிரம்மிப்பாக பார்த்த மேனேஜர் “உங்கிட்ட வேலை பார்க்கிறது எனக்கு பெருமையாக இருக்கு சார்..” பெருமையாக பாராட்டி சொல்ல சிறு புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டவன், “சரி போய் வேலையை பாருங்க..” அவரை அனுப்பி விட்டு
தயாளனை என்ன செய்யலாம் என்று யோசித்தவன், அதை அப்பறம் பார்ப்போம்” அந்த யோசனைகளை ஒதுக்கி வைத்தவன், தானும் ஒரு முறை தன் ஹோட்டலை சோதனை செய்து அனைத்தும் சரி பார்த்த பின்னே அவனின் ராங்கிக்கு அழைத்தான்..
ஆனால் திரையில் அஷ்வின் தெரியவும், ஒரு நொடி குழம்பியவன், அடுத்த நொடி என்ன நடந்திருக்கும் என்று யூகித்தான்.. ஆனால் தன் பதட்டத்தை முகத்தில் காண்பிக்காமல்.. நிதானமாக அஷ்வினை பார்த்து
“இந்த திருட்டு பழக்கம் உனக்கு எப்படா வந்தது?.. இதையும் விட்டு வைக்கலயா நீ?. என படு நக்கலாக கேட்க விஜய் சொல்வது புரியாமல் ஒரு நொடி குழம்பிய அஸ்வின் “என்னடா சொல்ற?.. நான் என்னத்தடா திருடினேன்?. என கோபமாக கேட்க
“ப்பா.. முகத்தை பக்கத்துல கட்டாத எனக்கே பயமா இருக்கு..” என்று மீண்டும் நக்கலாக பேசிய விஜய், “ஆமாடா நீ திருடன் தான் என் லிட்டில் கேர்ள் ஃபோனை நீ வச்சிருக்கியே… அவ கண்டிப்பா உன்கிட்ட தந்திருக்க மாட்டா அவ கிட்ட இருந்து நீ எடுத்திருப்ப அதை திருட்டு என்று சொல்லாமல் வேற எப்படி சொல்வாங்க..?” என ஏளனமாக கேட்கவும்
“அடேய் உன் லிட்டில் கேர்ள் போன் என்கிட்ட இருக்கே எப்படி வந்தது என்று கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா?..” அஷ்வின் கோபமாக கேட்க “அட லூசு பயலே இப்போ தானே சொன்னேன் நீ என் லிட்டில் கேர்ள் ஃபோனை திருடிட்டு வந்த என்று.. அப்பறம் என்னத்துக்கு யோசிக்க.. போ நீயே அந்த அந்த போன வச்சுக்க நான் என் லிட்டில் கேர்ளுக்கு வேற நியூ மாடல் போன் வாங்கி தரேன்.. பாய் என போனை வைக்க போக விஜய்யின் செயலில் ஒரு நொடி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த அஷ்வின்
“உன் ஆசை லிட்டில் கேர்ள் போன் மட்டும் எடுக்கல.. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளையே எடுத்துக்க போறேன்..” அஷ்வின் எகத்தாளமாக சொல்ல, விஜய் எதுவும் சொல்லாமல் அமைதியாக அஷ்வினை பார்த்து கொண்டு இருக்க என்ன நான் சொல்றது உனக்கு புரியலையா?.. உன் லிட்டில் கேர்ள், உன் பேபி ரெண்டு பேரையும் கடத்தி வச்சிருக்கேன்டா..
அவ என்ன கல்லா மண்ணா எடுத்துட்டு போக.. அதோட நீ அதுக்கெல்லாம் சரிபட்டு வர மாட்ட.. நீ என்னை ஏமாத்திற?..” நம்ப மறுத்த கூறிய விஜய்யை “நீ நம்பலயா இதோ பாரு..”அஷ்வின் ஒரு அறையில் மயக்கத்தில் இருந்த எழிலையும் நேத்ராவையும் காண்பிக்க இருவரையும் பார்த்த விஜய்க்கு மனம் பதறினாலும் அவனிடம் காண்பிக்காமல் அமைதியாக இருவரையும் பார்த்து கொண்டே இருந்தவன் அந்த இடத்தை ஆராய்ந்து பார்க்க
“ என்னடா நம்ம அவ்வளவு பாதுகாப்பு போட்டு வச்சும் அதை எல்லாம் மீறி கடத்தியது உனக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும்.. ஆனால் நீ நம்பி தான் ஆகணும். உன் ஹோட்டல் ரெய்டு வந்ததே உன் கவனத்தை திசை திருப்ப தான்.. நாங்க நினைச்ச மாதிரியே எல்லாம் நடந்திருச்சு.. நீ அமைதியாக எல்லாம் கேட்டுட்டு இருக்கும் போதே நீ இந்த இடத்தை ஆராய்ந்து கொண்டு இருக்க என்று தெரியுது..
ஆனால் இனி என்ன செஞ்சாலும் உன்னால இவங்களை காப்பாத்த முடியாது.. எனிவே உன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.. நான் ஃபோனை வைக்கிறேன்..” என்ற அஷ்வின் இணைப்பை துண்டிக்க, விஜய் பரபரவென அடுத்த அடுத்த போன் கால் பேசியபடி “நான் சீக்கிரம் வந்திடுவேன் அதுவரை தைரியமாக இருக்கணும்..” மானசீகமாக எழிலுடன் பேசியபடி தன் காரை விரைவாக செலுத்தினான்..
மயக்கத்தில் இருந்து விழித்த எழிலிற்கு தலையில் யாரோ சுத்தியல் கொண்டு அடித்தது போல் தலை வலிக்கவும், தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தாள் முதலில் தான் எங்கிருக்கிறோம் என்று தெரியாமல் குழம்பி சுற்றும் முற்றும் பார்க்க தான் ஒரு இருட்டு அறையில் இருப்பதை உணர்ந்தாள்..
நல்ல வேளையாக கை கால்களை கட்டவில்லை என்பதில் சிறு நிம்மதியாக உணர்ந்து, நான் இங்கே எப்படி.. என்று யோசித்தவளுக்கு, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ஸில் ஆட்டோவில் ஏறியதும் மயங்கியது நினைவிற்கு வர தான் கடத்தப்பட்டிருப்பது புரிந்த நொடியில் தன்னுடன் நேத்ராவும் வந்தது நினைவில் வரவும் “ஐயோ என் அம்மு..!! என் கூட தானே வந்தா.. அவ எங்க இருக்கா தெரிலயே..” தவிப்புடன் சொல்லி கொண்டே
“அம்மு எங்கடா இருக்க?..” பரிதவிப்புடன் சத்தமாக அழைத்தபடி தேட அவள் காலில் ஏதோ தட்டுப்பட குணிந்து இருட்டில் தடவி பார்க்க நேத்ரா தான் மயக்கத்தில் இருந்தாள்..
“அம்மு.. அம்மு உனக்கு என்ன ஆச்சு டா எழுந்திருடா..” மயக்கத்தில் இருந்த நேத்ராவை எழுப்ப நேத்ரா அசையாமல் இருக்கவும் மனதில் பயம் கவ்வி கொண்டது.. வேகமாக எழுந்து அங்கு லைட் ஸ்விட்ச் எதாவது இருக்கிறதா சுவற்றில் என்று ஆராய்ந்து தோற்று போய்
யாராவது இருக்கிங்ளா?. பிளீஸ் ஹெல்ப்..” கதறலுடன் அழைக்க, அந்த அழைப்பிற்கு செவிசாய்ப்பது போல் அந்த இருட்டு அறையில் வெளிச்சம் பரவியது.. “நீ இப்படி கதறுவதை கேட்க சந்தோஷமாக இருக்கு..” என்று வன்மமாக கூறியபடி உள்ளே வந்து கொண்டிருந்தான் அஷ்வின்..
அவனை பார்த்ததும் உச்சபட்ச அதிர்ச்சியில் திகைத்து பார்த்து, “நீயா?! நீ எப்படி இங்க?.. அதிர்ந்து கேட்க.. “உன் கேள்வியே தப்பு டியர்.. நான் இங்கே வரல நீ தான் என் இடத்துக்கு வந்திருக்க.. இனி நீ இங்க இருந்து போக முடியாது.. நீ மட்டும் இல்லை.. இத்தனை நாள் நீ யாரை என் கண்ணில் இருந்து மறைச்சு வச்சியோ அந்த குட்டி சாத்தான் யார் என்று தெரிச்சிடுச்சு..
“நான் பெத்த குழந்தைக்கு அவன் இனிஷியல் கொடுக்க போறானா?.. ஏன் அவனால ஒரு குழந்தை பெத்துக்க முடியாதா?. அதனால் தான் ஊரான் வீட்டு குழந்தைக்கு இனிஷியல் கொடுக்கிறேன்னு அலையறானோ..” என்று ஏளனமாக கேட்ட அஷ்வினை பார்வையால் எரித்தவள்
“அவரை பத்தி பேச கூட உனக்கு தகுதி இல்லடா.. சொந்த குழந்தையை பாரமாக நினைச்சு அழிக்க துடிக்கிற நீ எங்கே? அந்த குழந்தையை உயிராக தாங்கிற என் தீரா அவர் எங்கே.. ஒழுங்கா எங்களை எங்க தூக்கினியோ அங்கேயே எங்களை இறக்கி விட்ரு.. உன் நல்லதுக்காக சொல்றேன் அஷ்வின்..” எழில் அவனை எச்சரிக்க
“ஆஹன் உன்னை அப்படியே தூக்கி கொடுக்கவா இவ்வளவு கஷ்டப்பட்டோம் நானும், அப்பாவும்..” என்று எகத்தாளமாக கேட்ட அஷ்வினை எழில் இகழ்சியாக பார்த்து கொண்டு இருக்க
“அது என்ன இவ்வளவு நாள் அருவருப்பாக தெரிந்த உன் முகம் இன்னைக்கு அழகா தெரியுது..?!” என்று பார்வையில் வக்கிரத்தோடு எழிலை தொட வர சட்டென்று விலகி நின்ற எழில்.. நீ உன் எல்லை தாண்டி போற அஷ்வின்.. நீ நிச்சயமாக இதுக்காக வருத்தப்படுவ..” என்று எச்சரிக்க
“ஹ..ஹ.அந்த நிலை எல்லாம் தாண்டியாச்சு இனி எனக்கு என்ன நடந்தாலும் கவலை இல்லை.. எனக்கு நீ வேணும்.. அவன் கூட அதான் அந்த விஜய் நீ சந்தோஷமாக இருக்க கூடாது.. இன்னும் கொஞ்ச நேரம் தான் அப்பறம் நீ எனக்கு சொந்தமாகிடுவ.. இனி நீ காலம் பூராவும் என் காலடி தான் விழுந்து கிடப்ப..’
“இதோ இந்த குட்டி சாத்தானை கொல்ல தான் நினைச்சேன்.. ஆனால் எப்போ இது எனக்கு பொறந்ததாக போய்டுச்சே இனி என் வீட்டில் வேலைகாரியா வளரட்டும்..” அஷ்வின் இளக்காரமாக சொல்ல,
“நீ நல்லா கனவு கோட்டை கட்டிட்டே இருடா பொறுக்கி.. இன்னும் கொஞ்ச நேரம் தான் அப்பறம் இருக்கு உனக்கு..” மிரட்டிய எழிலை அலட்சியமாக பார்த்த அஷ்வின்..
“அவன் முட்டாள் உன்னை கடத்திட்டேன்னு சொல்றேன் கொஞ்சம் கூட பதட்டமே இல்லாமல் இருக்கான் இவனா உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறான்.. ஹ..ஹ.. இல்லவே இல்லை..” என்று எகத்தாளமாக சொல்லி கொண்டு இருக்க
எழிலின் அலைபேசி சத்தமிட,
“இதோ அவன் தான் கூப்பிடறான்..” என்று கேலியாக சொன்னபடி அழைப்பை உயிர்ப்பிக்க
“அஷ்வின் பிளீஸ்.. பிளீஸ் டா அவங்களை எதுவும் செஞ்சிடாத.. அவங்க தான் என் உயிர்.. உன்னை கெஞ்சி கேட்கிறேன்.. என் சொத்தெல்லாம் உன் பேருக்கு மாத்தி தந்திட்றேன்.. அவங்களை விட்டிடு..”என்று கெஞ்சி கொண்டு இருப்பதை அஷ்வின் கர்வமாக சிரித்தபடி பார்த்து கொண்டு இருக்க
எழில் கோபமாக பார்த்து கொண்டு இருந்தாள்..
இமை சிமிட்டும்..