Loading

இமை 55

 

 

விஜய் நேத்ரா தன் மகள் என்று கூறிய அடுத்த நொடி நேத்ராவும் விஜய்யை ‘அப்பா’ என்று அழைத்த படி  அவனை அணைத்துக் கொள்ளவும்.. இன்பமாக அதிர்ந்தான் விஜய்.. குழந்தையின் அழைப்பில் விஜய்க்கு ஒரு நொடி உடல் சிலிர்த்து அடங்கியது..

 

 

“பேபி நான் அப்பாவா?!”  நேத்ராவை அணைத்தவன் நம்ப முடியாத திகைப்போடு புன்னகையுடன் கேட்க, ஒரு வேகத்தில் ஆர்வத்தில், ஆசையில் விஜய்யை அப்பா என்று அழைத்த நேத்ரா, தான் அப்படி அழைத்ததில் சாக்லேட் அங்கிள் கோபம் கொண்டிருப்பாங்களோ என்று பயத்தோடு விஜய்யை பார்த்து கொண்டு இருந்தாள் குழந்தை, 

 

 

 

ஆனால் அவள் பயந்தது போல் இல்லாமல் விஜய் கோபம் கொள்ளாமல் தன்னை பார்த்து சிரித்ததும் ஆச்சரியம் அடைந்த நேத்ரா “நான் உங்களை அப்பா என்று கூப்பிட்டதுல உங்களுக்கு கோபம் இல்லையா?! என ஆச்சரியமாக கேட்க, “கோபமா?! எனக்கா?! இல்லவே இல்லை.. உனக்கு ஒரு விசயம் தெரியுமா பேபி நீ என்னை அப்பா என்று கூப்பிட தான் நான் இத்தனை நாள் வெய்ட் செஞ்சிட்டு இருந்தேன்..இப்போ நீ இப்படி கூப்பிடவும், ஐ யம் சோ ஹேப்பி டா.. தேங்ஸ்.. தேங்க்ஸ் லாட் பேபி..” உணர்ச்சி மிகுதியால் விஜய்யின் குரல் சற்று கரகரப்பாக ஒலிக்க 

 

 

 

“அப்போ இனி நான் உங்களை எப்பவும் அப்பான்னே கூப்பிடவா?.. நேத்ரா கண்கள் மின்ன ஆர்வமாக கேட்க, நேத்ராவின் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பும் கலந்த முகத்தை பார்த்த விஜய்க்கு மனம் தாளவில்லை.. குழந்தைக்கு தந்தை பற்றி எவ்வளவு ஏக்கம் இருந்திருந்தால் இப்படி ஒரு கேள்வியை தன்னிடம் கேட்டிருப்பாள்?.. குழந்தையின் ஏக்கத்தை கூட புரிந்து கொள்ளாமல் இத்தனை நாள் முட்டாள் மாதிரி இருந்திருக்கிறேனே..” விஜய் தன்னையே நொந்து கொண்டவன் 

 

 

 

“நான் உன் அப்பா தான் பேபி?.. என்னை அப்பா என்று கூப்பிட உனக்கு பிடிக்காது நினைச்சேன்.. ஆனால் நான் தான் தப்பு பண்ணிட்டேன்..” தாயை தேடிய மழலை போல் நேத்ராவை அணைத்து கொண்டான்.. 

 

 

தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா

என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…

வா வா என் தேவதையே

பொன் வாய் பேசும் தாரகையே

பொய் வாழ்வின் பூரணமே

பெண் பூவே வா….

 

 

உணர்ச்சி பெருக்கில் குரல் கரகரப்பாக பேசிக் கொண்டு இருந்த விஜய்யை அனைவரும் நெகிழ்ந்து பார்த்து கொண்டு இருக்க 

 

 

 

“அடேய் அந்த குழந்தை உன்னை அப்பான்னு கூப்பிடவா கேட்டா நீ அதுக்கு பதில் சொல்லாமல் வேறு என்னமோ பேசி குழந்தையை பயமுறுத்திட்டு இருக்க..” ஷக்தி அந்த சூழ்நிலையை இலகுவாக்க  கேலி போல் பேச, “அடேய் என்னடா உனக்கு பிரச்சினை?. கொஞ்சம் எமோஷனல் ஆக கூட விட மாட்டியா?” விஜய் கடுப்பாக கேட்க 

 

 

 

“பார்க்கிற என் பால்கோவா கண் வேர்க்குதுல்ல அவளை அழ விட மாட்டேன் என்று என் அப்பாக்கு நான் பிராமிஸ் செஞ்சிருக்கேன்.. அதை காப்பாத்தணும்ல..” என்ற ஷக்தியை விஜய்  பார்த்த பார்வையில்,

 

 

 

“சரி சரி என்னை முறைச்சு பார்த்தது போதும்.. நீ நேத்ரா பாப்பாக்கு பதில் சொல்..” ஷக்தி அவன் கவனத்தை திசை திருப்ப, அப்போது தான் நேத்ரா தன்னையே எதிர்பார்ப்போடு பார்த்து கொண்டு இருப்பதை உணர்ந்து,

 

 

 

“உனக்கு என்னை அப்பா என்று கூப்பிட பிடிக்குமா பேபி இல்ல வேற யாராவது என்னை அப்பானு கூப்பிட சொல்லி சொன்னாங்களா? என விஜய் விசாரிக்க.. நொடிக்கும் குறைவான நேரத்தில் நேத்ராவின் பார்வை சக்தியை தழுவிக் கொண்டு சென்றது..

 

 

விஜய் அதை கவனித்தாலும் ஏனோ அதை கவனத்தில் கொள்ளாமல் நேத்ராவை பார்த்துக் கொண்டிருக்க, “எனக்கும் ஸ்வேதா அவ அப்பாவை அப்பான்னு கூப்பிடும் போதெல்லாம் எனக்கு அப்படி கூப்பிட யாரும் இல்லைன்னு அழுகையாக வரும், ஆனால் அந்த அங்கிள் பேட்..‌அதனால ஐ ஹேட் அப்பா..

 

 

 

ஆனால் நீங்க வந்திங்க.. என் கிட்ட பாசமா இருந்திங்க ஸ்வேதா அப்பாவை விட நீங்க தான் பெஸ்ட்.. ஆனாலும் எனக்கு அப்பாவை விட சாக்லேட் அங்கிள் தான் ரொம்ப பிடிக்கும்.. ஆனால் இப்போ அப்பான்னா யார்?.. அவங்க எவ்வளவு நல்லவங்க.. அவங்களுக்கு அவங்க பேபியை எவ்வளவு பிடிக்கும் என்று எல்லாம் தெரியும் அதான் எனக்கும் உங்களை அப்பான்னு கூப்பிட ரொம்ப ஆசையா இருக்கு.. கூப்பிடவா?” பெரிய விளக்கமாக கூறி விட்டு நேத்ரா மீண்டும் விஜய்யை பார்த்து ஏக்கமாக கேட்க 

 

 

 

“நீ அப்படி கூப்பிட்டா நானும் நேத்ரா பேபி மாதிரி ஹேப்பி ஆகிடுவேன்.. இனி என்னை அப்பா என்று தான் கூப்பிடணும் பேபி..” விஜய் சந்தோஷமாக சம்மதம் சொல்ல  எழில் கண்களில் கண்ணீரோடும் அதற்கு மாறாக உதட்டில் புன்னகயோடும் இருவரையும் நெகிழ்ந்து பார்த்து கொண்டு இருக்க விஜய் சம்மதம் சொன்னதில்  உற்சாகமான நேத்ரா..

 

 

 

“அங்கிள் இங்க பாருங்க விஜி அப்பா அவங்களை அப்பான்னு கூப்பிட ஓ கே சொல்லிட்டாங்க.. உங்க பேபி உங்களை அப்பான்னு கூப்பிட்ட மாதிரி இனி நானும் விஜி அப்பாவை அப்பா கூப்பிடுவேனே..” நேத்ரா ஷக்தியை பார்த்து உற்சாகமாக சொல்ல அனைவரும் ஷக்தியை கேள்வியாக பார்த்தனர்.. 

 

 

 

“அச்சோ போட்டு கொடுத்துட்டியே பேபி?. முணுமுணுத்த ஷக்தி அழைப்பு வராத தன் ஃபோனே எடுத்து கொண்டு, “ஹலோ.. ஹலோ இங்க வாஸ்து சரியில்லை நான் வெளியே வர்றேன்..” அனைவரின் பார்வையை கண்டு கொள்ளாமல் வெளியே செல்ல போன ஷக்தியின் பின் சட்டையை பிடித்து இழுத்த விஜய் “அடேய்  பேபி கிட்ட என்னமோ சொல்லி இருக்க.. என்னடா சொன்ன?..” விஜய் ஷக்தி கழுத்தை வளைத்தபடி கேட்க 

 

 

 

“சொல்ல மாட்டேன்.. அது எனக்கும் நேத்ரா பேபிக்கும் உள்ள ரகசியம்.. நீ ஆசைப்பட்டது நடந்திருச்சுல்ல.. அவ்வளவு தான்.. ஆசைப்பட்ட ஒரு விசயம் நடந்துச்சின்னா அதை அனுபவிக்கணும் ஆராய கூடாது..” விஜய்யிடம் இருந்து தன்னை விடுவித்தபடி ஷக்தி சொல்ல 

 

 

 

“அப்பா நான் உங்களை அப்பான்னு கூப்பிட பயந்தப்போ அந்த அங்கிள் தான் உங்களை அப்பா கூப்பிட சொன்னாங்க..” என்று அவன் குட்டை போட்டு உடைக்க.. “இது எப்போடா நடந்தது? நாங்க எல்லாம் உன் கூட தானே இருந்தோம்.?” விதுரன் வியப்பாக.  கேட்க 

 

 

 

“அது இவங்க ரெண்டு பேரும் காஃபி போட போறேன் சொல்லிட்டு போய் அரைமணி நேரம் கழித்து வந்தாங்கள்ல அந்த கேப்ல நடந்தது..” என்று கண் சிமிட்டிய ஷக்தி விஜய்யிடம் திரும்பி 

 

 

 

“நீ கோபத்தில் மதி சிஸ்டரை திட்டும் போது நேத்ரா உன்னை பார்த்து பயந்தா.. நீ அதை கவனிக்கவில்லை..‌ஆனால் நான் கவனிச்சேன்.. உன் மேல நேத்ரா பேபிக்கு பயம் வருவது சரியில்லை.. அது உங்க ரெண்டு பேருக்கும் நல்லதில்லை என்று தோணுச்சு.. அதான் என்ன செய்யலாம் என்று யோசிச்சிட்டு இருந்தேன்.. அப்போ தான் என் பசங்க எனக்கு கால் செஞ்சாங்க.. அப்போ..” ஷக்தி பேச்சை நிறுத்தி விட்டத்தை பார்த்தான்..

 

 

 

“ஓ..? ஃப்ளாஷ்பேக்கா?..” என்றபடி ஷக்தியோடு சேர்ந்து அனைவரும் இப்போது விட்டத்தை  பார்த்து கொண்டு இருந்தனர்..  அதில் கடுப்பான விஜய் என்னால எல்லாம் விட்டத்தை பார்க்க முடியாது.. ஒழுங்கா சொல்ல போறியா இல்லையா..? கடுப்புடன் கேட்க “நான் சொல்றேன் பா..” நேத்ரா சொல்ல, 

 

 

 

“அப்பா அந்த அங்கிள் போன் வந்துச்சா.. அப்போ அந்த அங்கிளை அவங்க பேபி கிட்ட கொஞ்சி பேசிட்டு இருந்தாங்களா.. அவங்களை விட்டுட்டு இங்க வந்ததுக்கு சாரி கேட்டுட்டு இருந்தாங்களா அதை பார்க்கும் போது நீங்களும் என்னை இப்படி தானே கொஞ்சி பேசுவிங்க. அப்பறம் என்னை பார்க்க வராமல் இருக்கும் போது கூட என்கிட்டயும் சாரி கேட்பிங்கள்ல அப்படியே இந்த அங்கிளும் அவங்க பேபி கிட்ட பேசிட்டு இருந்தாங்க.. 

 

 

 

“ஆனால் அந்த பேபி இந்த அங்கிளை அப்பான்னு கூப்பிட்றாங்க.. நான் மட்டும் ஏன் உங்களை அங்கிள் கூப்பிட்றேன் தோணுச்சு.. நான் இந்த அங்கிள் பேசறதையே பார்த்திட்டு இருந்தேனா.. அப்போ இந்த அங்கிள் வந்து 

 

 

“என்ன பேபி?.. எதுக்கு என்னையே பார்த்திட்டு இருக்க என்று கேட்டாங்க” 

 

 

“அப்பான்னா யார்?. அவங்க இப்படி தான் கொஞ்சி அவங்க பேபிக்கிட்ட பேசுவாங்களா?.. கேட்டேனா”

 

 

நேத்ராவின் கேள்விக்கு சில நொடிகள் பதில் சொல்ல முடியாமல் திணறிய ஷக்தி “அப்பான்னா அம்மாவோட ஆண் வடிவம்..” என்ற ஷக்தியை நேத்ரா புரியாமல் பார்க்க 

 

 

“அப்பான்னா அவங்க பேபியை ஏஞ்சல் மாதிரி பார்த்துப்பாங்க.. பேபி கேட்டதெல்லாம் வாங்கி தருவாங்க.. அப்பா பக்கத்தில் இருந்தா அந்த பேபிக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கும்.. அப்பறம் அந்த பேபிக்கு பயமே இருக்காது..” ஷக்தியை இடைமறித்து 

 

 

“சாக்லேட் அங்கிளும் நீங்க சொல்ற எல்லாமே செய்வாங்களே.. அவங்க தான் ஸ்வேதா அப்பாவை மிரட்டினாங்க எனக்கு பிடிச்ச சாக்லேட் எல்லாம் வாங்கி தருவாங்க.. என்னை இப்படி தான் கொஞ்சுவாங்க.. அப்போ சாக்லேட் அங்கிள் எனக்கு”  நேத்ரா அடுத்து பேச தெரியாமல் முழிக்க அவள் பாவனையில் நேத்ரா கன்னம் கிள்ளி கொஞ்சிய ஷக்தி 

 

 

 

“எல்லா அப்பாக்களும் அவங்க பேபியை இப்படி தான் கொஞ்சுவாங்க.. உன் சாக்லேட் அங்கிளும் உன்னை அப்படி பார்த்துக்கிட்டாங்கன்னா நீயும் அவனோட பேபி தான்டா அதான் உன்னை செல்லம் கொஞ்சறான்..” 

 

 

“அப்போ சாக்லேட் அங்கிள் எனக்கு அப்பாவா?!” கோலி குண்டு கண்களை விரித்து தலைசாய்த்து நேத்ரா கேட்ட விதம் ஷக்தி மனதை கவர,  புன்னகையுடன் நேத்ராவை பார்த்தபடி 

 

 

“உனக்கு அப்படி தோணுதா?.! ஷக்தி கேட்க 

 

 

“ஆமா.. இப்போ உங்க பேபி உங்க கிட்ட எவ்வளவு ஜாலியா பேசினாங்க.. அது மாதிரி சாக்லேட் அங்கிள் கிட்டேயும் நான் ஜாலியாக பேசணும்.. எப்பவும் அங்கிள் எங்க கூடவே இருக்கணும்.. அம்மா எனக்கு கதை சொல்ற மாதிரி சாக்லேட் அங்கிளும் கதை சொல்லணும்.. இப்படி நிறைய இருக்கே..” ஆர்வமாக சொல்லி கொண்டு இருந்த நேத்ரா 

 

 

“அப்போ இனி நான் சாக்லேட் அங்கிளை அப்பா என்று சொல்ல போறேன்?.. என்று உற்சாகமாக அறிவித்த நேத்ரா அடுத்த நொடி முகம் வாடி நிற்க, 

 

 

“என்னாச்சு பேபி வொய் சேட்..?” ஷக்தி கேட்க, “நான் அப்பா என்று அங்கிளை கூப்பிட்டா சாக்லேட் அங்கிளுக்கு பிடிக்குமா என்று தெரியலயே..” பிஞ்சு கரங்களை விரித்து பரிதாபமாக சொல்ல, 

 

 

“இந்த சிறு வயதில் தன் விருப்பத்தை பற்றி மட்டும் யோசிக்காமல் அடுத்தவரின்  விருப்பத்தை பற்றியும்  யோசித்த. நேத்ராவை ஒரு கணம் வியந்து பார்த்த ஷக்தி, நேத்ராவை சீண்டி விடும் பொருட்டு 

 

 

“அநேகமாக பிடிக்காது நினைக்கிறேன்..” தாடையை தடவியபடி யோசித்தவாறே சொன்ன ஷக்தியை உதடு பிதுங்க பார்த்த நேத்ரா 

 

 

“ஏன் அப்படி சொல்றிங்க அங்கிள்?..” 

 

 

“உன்னை உன் சாக்லேட் அங்கிளுக்கு பிடிக்காது நினைக்கிறேன்..” ஷக்தி நேத்ராவை தூண்டி விடுவது போல பேச “இல்லை.. இல்லை சாக்லேட் அங்கிளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்..‌ என்னை மட்டும் தான் ரொம்ப பிடிக்கும்..” நேத்ரா ரோசத்தோடு சொல்ல 

 

 

“இல்லையே இப்போ தான் நீ அவனை அப்பா என்று கூப்பிட்டா உன் அங்கிளுக்கு பிடிக்காதுன்னு சொன்ன..

 

 

“இல்லை பிடிக்கும் அங்கிளுக்கு ரொம்ப பிடிக்கும்.. இதோ இப்போவே நான் கூப்பிட்றேன் என்று உள்ளே செல்ல போன நேத்ராவை தடுத்த ஷக்தி.. இப்ப வேண்டாம் பேபி நான் ரெடி ஜூட் சொல்வேன் அப்போ வந்து சொல்லு அப்போ தான் உன் சாக்லேட் அங்கிளுக்கு உன்னை பிடிக்கும் என்று நான் நம்புவேன்..” என்று சொல்லி சென்ற ஷக்தி 

 

 

 

சில நிமிடங்களில் நேத்ராவை பார்த்து கண் அசைக்க நேத்ராவும் விஜய்யை அப்பா என்று அழைத்து செல்லம் கொஞ்ச.. நடந்ததை எல்லாம் நானும் சொல்ல, நீங்க அதை கேட்க அப்பறம்ம்..” நேத்ரா சொல்லி கொண்டு இருந்த ஃபிளாஷ் பேக்கை இடையிட்டு கூறி முடிக்கும் முன்பே ஷக்தியை விஜய் இறுக அணைத்து கொண்டான்..

 

 

இமை சிமிட்டும் 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்