இமை 54
அனைத்தும் சரியாகி இனி எல்லாம் சுபமே என்று சந்தோஷ வானில் பறந்து கொண்டிருந்த விஜய்யின் சிறகை சுமித்ரா தன் பேச்சால் வெட்டி இருந்தார்.. யாருமே அவரின் இந்த கோபத்தை எதிர்பார்க்கவில்லை..
அவரை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் அனைவரும் திகைத்து நிற்க போதாததற்கு எழில் வேறு, விஜய்யை விட்டு செல்வதாக கூறவும், விஜய் கோபத்தின் உச்சத்தில் எழிலிடம் கத்தி இருந்தான்.. விஜய்யின் கோபத்தில் அவனை எழில் மிரண்டு பார்த்து கொண்டு இருக்க,
கூடவே நேத்ராவும் அவனை மிரண்டு பார்க்கவும், மலரும், வெண்பாவும் நேத்ராவை தூக்கி கொண்டு வெளியே சென்றுவிட்டனர்.. அவர்களுக்கும் எழில் அவ்வாறு சொன்னது சிறிது மனத்தாங்கலை கொடுக்க மௌனமாக அங்கிருந்து வெளியேறினர்..
“என்ன நீ எதுக்கெடுத்தாலும் விட்டு போறேன்னு சொல்ற.. அப்படி விடவா உன்னை இவ்வளவு கஷ்டப்பட்டு சம்மதிக்க வச்சேன்.. என் அம்மாவை எப்படி சமாதானம் செய்வது என்று எனக்கு தெரியும்.. நீ எங்களுக்கு இடையே வராத அப்படியே வாயை மூடிட்டு இருக்கணும்..” என்று அதட்ட எழில் கண்களில் கண்ணீர்..
“அடேய் இப்போ எதுக்குடா என் மருமகளை திட்ற..? நான் தான் அவக்கிட் இப்படி பேச சொன்னேன்..” சுமித்ரா விஜய்யை அதட்ட
அவர் சொன்ன வார்த்தையை கவனியாமல் “பின்ன என்ன.. எப்ப பாரு விட்டுப் போறேன்.. விட்டு போறேன்னே சொல்லிட்டு இருக்கா..” என்று கோபமாக பேசிய விஜய் “இப்ப எதுக்கு அவளை மருமகளாக வர வேண்டாம்னு சொல்றீங்க.. அவ அன்னைக்கு ஹோட்டல்ல உங்க கிட்ட தானே எல்லாமே சொன்னா.. அவளை பத்தி தெரிஞ்சும் நீங்க இப்படி பேசறிங்களே..” என்று ஆதங்கமாக கேட்ட விஜய்
“என் மனசை பத்தியும் இதோ இவளை விட உங்களுக்கு நல்லா தெரியும் தானே..
அவளுக்காக நான் எந்த எல்லை வரை போவேன் என்றும் உங்களுக்கு தெரியும் தானே.. அப்பறம் ஏன்மா அப்படி சொல்றிங்க. அம்மா பிளீஸ்மா நான் உங்க கிட்ட சொல்லாம நாடகம் போட்டது தப்பு தான்.. ஆனால் அதுக்காக மதியை வேண்டாம் என்று சொல்லாதிங்கம்மா.. எனக்கு உங்க பேச்சை மீற முடியாது.. அதே சமயம் இவளை என்னால விடவும் முடியாது..
எனக்கு இந்த ராங்கியை தவிர வேறு யாரும் உங்களுக்கு மருமகளாக வர வேண்டாம்.. உங்க கோபம் போகிற வரைக்கும் நான் காத்திருக்கேன்..” சுமித்ரா பேசியதை சரியாக கவனிக்காமல் தன் போக்கில் விஜய் பேசிக்கொண்டு இருக்க
ஆனால் அங்கிருந்த மற்றவர்களுக்கு சுமித்ரா பேசியது புரிய அனைவரின் முகத்திலும் நிம்மதி கலந்த புன்னகை.. விஜய்யின் அருகில் வந்த ஷக்தி, “யப்பா ராசா நீ மூச்சை பிடித்து தம் கட்டி பேசினது எல்லாம் போதும்.. சில நிமிடங்களுக்கு முன்னாடி ஆண்ட்டி பேசினதை ரீவைண்ட் செஞ்சு பாரு..” என்று சொல்ல
“நான் எவ்வளவு சீரியஸ்ஸா பேசிட்டு இருக்கேன் இப்போ வந்து கேலி பண்ணிட்டு இ.ரு.க்..க? ஷக்தியிடம் சலிப்பாக சொல்லிக்கொண்டு இருந்த விஜய்க்கு அதன் பிறகு தான் “என் மருமகளை ஏன்டா திட்ற?.” என்ற அன்னையின் வார்த்தையை நினைத்து பார்த்தவன், “அம்மா எழிலை மருமகள் என்றா சொன்னாங்க..” நம்ப முடியாத திகைப்போடு சுமித்ராவை கேள்வியாக பார்க்க
“உனக்கு எவ்வளவு தைரியம்?. என் கண் முன்னால் என் மருமகளை திட்டுவ..” விஜய்யிடம் சண்டை போட்டவர் எழிலை அணைத்து கொள்ள பதிலுக்கு எழிலும் அவரை அணைத்து கொண்டாள்.. தன் கண் முன்னே நடப்பதை நம்ப முடியாமல் பார்த்து கொண்டு இருந்த விஜய்யிடம்,
“என்னடா நீங்க மட்டும் தான் நாடகம் போட்டு நடிப்பிங்களா?.. எங்களுக்கு எல்லாம் நடிப்பு வராதா என்ன?!” சுமித்ரா புருவங்களை உயர்த்தி கெத்தாக கேட்க, “அப்போ அத்தனையும் நடிப்பா சுமித்ரா?.! விஜய் இருவரையும் பார்த்து வியப்பும், கோபமுமாக கேட்க
“என் கோபம் உண்மை.. அந்த கோபத்தில் நான் உன்னை அடிச்சதும் உண்மை.. உன்னை அடிச்சதும் என் கோபம் எல்லாம் போய்டுச்சு.. மற்றபடி நானும் மதியும் பேசினது எல்லாம் நானும் என் மருமகளும் போட்ட பிளான்..” என்று சுமித்ரா குண்டை தூக்கிப் போட
“என்ன.. மதியும் இதில் உடந்தையா?!” அனைவரும் அதிர்ச்சியாக கேட்டு எழிலை ஆச்சரியமாக பார்க்க, “ஆமா அத்தை கேட்டாங்க என்னால மறுக்க முடியலை” என்று விஜய்யை கோபமாக பார்த்து கொண்டே சொல்ல
“நீ என் கூட கார்ல தானே வந்த அம்மா கிட்ட எப்போ அம்மாக்கிட்ட பேசின இதெல்லாம் எப்போ நடந்தது?..” விஜய் கேட்க,
“நான் உங்க கிட்ட பேச மாட்டேன்.. நீங்க என்னை திட்டினிங்க..” எழில் உதடு சுளித்து கோபமாக சொல்ல, “நான் எதுவும் சொல்ல மாட்டேன்..” என்ற எழிலை பார்த்து சிரிப்பு வந்தது அவனுக்கு..
“சரிடா சாரி நீ என்னை விட்டுப் போறேன்னு சொன்னதுல கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன்.. அதான் கோபத்தில் அப்படி பேசிட்டேன்.. நான் உன் தீரா தானே.. என்னை மன்னிக்க மாட்டியா லிட்டில் கேர்ள்..” என்று கொஞ்சலாக பேசியபடி எழில் அருகில் செல்ல போக,
“பப்ளிக்.. !! பப்ளிக்..!! ஷக்தியும், விதுரனும் வழக்கம் போல் தடை போட , இவனுங்க தொல்லை தாங்க முடியல கடவுளே..” என்று முணுமுணுத்த விஜயை பார்த்து எழிலிற்கு பாவமாகி போனது..
“சரி சொல்றேன்…”என்று மனம் இறங்கியவள், நம்ம கார்ல வரும் போது அத்தை தான் எனக்கு மெஸேஜ் போட்டாங்க.. அப்போ தான் தெரிஞ்சது அத்தைக்கும் எதுவும் தெரியாதுன்னு.. அப்பறம் நம்ம ஜூஸ் குடிக்க ஒரு கடையில் காரை நிறுத்திட்டு நீங்க ரெஸ்ட் ரூம் போனிங்கள்ல அந்த நேரத்தில் தான் நானும் அத்தையும் சேர்ந்து பிளான் போட்டோம்.. எப்படி இருந்தது எங்க நடிப்பு?..” என்று புருவம் உயர்த்தி கேட்க
“கொஞ்ச நேரத்தில் ரெண்டு பேரும் என்னை வச்சு செஞ்சிட்டிங்கள்ல..” இடுப்பில் கை வைத்தபடி இருவரையும் முறைத்து பார்த்தவன், “உனக்கு தனியாக மாட்டின இதுக்கு பனிஷ்மெண்ட் தர்றேன்டி என் ராங்கி..” எழில் காதில் முணுமுணுக்க இத்தனை பேர் வச்சிக்கிட்டு என்ன பேசறாங்க இந்த ஹோட்டல் கார்..” சலித்தபடி அவன் பேச்சில் சிவந்த முகத்தை மறைக்க பெரும்பாடு பட்டாள் ..
“சரி சரி இப்போ எல்லாம் சரியாகிருச்சுல்ல.. எல்லாரும் நடிச்சு ரொம்ப டயர்டா இருக்கோம்.. போய் ஸ்ட்ராங்கா காஃபி போட்டு கொடுங்க..” ஷக்தி சொல்ல மதியும் சிறு புன்னகையுடன் அனைவருக்கும் காஃபி போட சமையலறை செல்ல போக,
“ராங்கி நீ இரு நான் போறேன்..” என்ற விஜய் சமையலறைக்குள் சென்றவன், “லிட்டில் கேர்ள் சுகர் காஃபி பொடி எங்க இருக்கு என்று எனக்கு தெரியாது வந்து எடுத்து கொடு.. உள்ளே இருந்து குரல் கொடுக்க “இன்னைக்கு நம்ம காஃபி குடிச்ச மாதிரி தான்..” ஷக்தியும் விதுரனும் தங்களுக்குள் முணுமுணுக்க
“நீங்களும் இதை எல்லாம் கடந்து வந்திருக்கிங்க.. அண்ணனை கேலி செஞ்சிங்க உங்களுக்கு உப்பு காஃபி தான்.. மலர் மிரட்டிய பிறகு தான் இருவரும் அமைதியாகினர்..
அவர்கள் சொன்னது போலவே சமையலறையில் இருந்த இருவரும் வந்த வேலையை பார்க்காமல் வேறு வேலை செய்து கொண்டு இருந்தனர்.. உள்ளே வந்த எழிலை பின்னிருந்து அணைத்து கொண்ட விஜய்யிடமிருந்து எழில் திமிறி கொண்டு இருந்தாள்..
“காஃபி போட்றேன்னு சொல்லிட்டு என்ன செஞ்சிட்டு இருக்கிங்க விடுங்க.. எல்லாரும் வெளியே இருக்காங்க நீங்க என்ன செய்றிங்க.. விடுங்க..” என்று திமிறிய எழிலை எளிதாக தடுத்தபடி “நீ தனியா மாட்டினா உனக்கு பனிஷ்மெண்ட் தர்றேன்னு சொன்னேன்.. நான் வாக்கு தவற மாட்டேன்..” என்றபடி எழில் பின்னிருந்தபடியே அவளை குழந்தை போல் தலைக்கு மேலே தூக்கியவன், ஒரு சுழற்று சுழற்றி அவள் முகத்தோடு தன் முகத்தை மோத வைத்தவன், எழில் சுதாரிக்கும் முன் அவள் இதழ்களை முற்றுகை இட்டிருந்தான்..
தன் இடையில் பதிந்திருந்த விஜய்யின் கரங்கள் செய்த மாயத்திலும், அவன் உதடுகள் செய்த வித்தையிலும் தன்னை மறந்து அவன் கைகளுக்குள் அடங்க, “இனி விளையாட்டுக்கு கூட என்னை விட்டு போறேன்னு நீ சொல்ல கூடாது..” என்று அவள் இதழ்களுக்குள்ளே முணங்கினான்..
தன் விளையாட்டாக பேசிய பேச்சு விஜய் மனதை காய்ப்படுத்தி இருப்பதை உணர்ந்த எழில், “இனி எப்பவும் இப்படி பேச மாட்டேன்..” பதிலுக்கு தானும் அவன் உதடுகளுக்குள் பதில் கூறிய எழிலை தன்னோடு அணைத்துக் கொள்ள
“நாங்க நல்ல ஹோட்டல்ல போய் டீ குடிச்சிக்கிறோம்..” ஷக்தியின் குரல் வெளியே கேட்க பட்டென இருவரும் விலகி நின்றனர்.. “இவனுக்கு நான் ஃப்ளவரோட சேர எவ்வளவு உதவி செஞ்சேன்.. அதை எல்லாம் மறந்துட்டு என்னை உன்கிட்ட பேசவே விட மாட்டிகிறான் இந்த ஷக்தி.. இவனுக்கு மட்டும் கார காஃபி தான்..” மனதில் கறுவிய விஜய், அனைவருக்கும் காஃபி போட்டு எடுத்து செல்ல எழில் ஒரு ட்ரேயில் பிஸ்கட்டுகளை அடுக்கி எடுத்து விஜய் பின்னோடு சென்றாள்..
அனைவரும் சற்று இலகுவாக அமர்ந்து தேநீர் அருந்தியபடி கதை பேசி கொண்டு இருக்க, “இதெல்லாம் சரி உங்களுக்கு ட்ரீட்மெண்ட் பார்க்கிற மாதிரி நடிச்ச அந்த போலி டாக்டர் யாருன்னே சொல்லல நீங்க.. எனக்கு அவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.. பதட்டத்தில் நான் சரியாக கவனிக்கல.. யார் அவங்க?..” என்று எழில் கேட்க
“இவர் தான் அவர்..” ஷக்தி தன் அலைபேசியில் இருந்து ஒரு புகைப்படத்தை காண்பிக்க.. அதில் விபாகரன் அழகான புன்னகையுடன் காட்சியளித்து கொண்டிருந்தான்.. அந்த புகைப்படத்தை பார்த்த எழிலிற்கு வியப்பாக இருந்தது “இந்த சாரை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.. அஷ்வின் என்கிட்ட தப்பாக நடக்க முயற்சி செஞ்சப்ப இந்த சார் தான் அஷ்வினை அடிச்சு என்னை காப்பாத்தின்ங்க.. அப்பறம் தான் ஹோட்டல் காரை பார்த்தேன்.. எழில் கூற,
“தெரியும் மாமா சொன்னாங்க சிஸ்டர்.. உங்க ஃபோட்டோ பார்த்த பிறகு தான் டாக்டராக நடிக்கவே சம்மதிச்சாங்க..” என்று ஷக்தி சொல்ல, “இந்த சார் உங்க மாமாவா?!” எழில் ஆச்சரியமாக கேட்க ”ஆமா சிஸ்டர் இவர் என் அக்கா கணவர் விபாகரன்..” ஷக்தி சொல்ல எனக்காக நடிக்க வந்தாங்களா?..” எழில் வியப்பாக கேட்க
“ம் ஆமா சிஸ்டர்.. உங்க ஃபோட்டோ பார்த்தும் நடந்த விசயங்களை மாமா சொன்னாங்க எங்களோட நாடகத்தில் நடிக்க சம்மதிச்சாங்க..” என்று ஷக்தி கூற, “இந்த சார் இப்போ எங்க இருக்காங்க நான் பார்க்கலாமா?.. எழில் ஆர்வமாக கேட்க அவருக்கு ஒரு முக்கியமான வேலை.. உங்க கல்யாணத்துக்கு கண்டிப்பாக வருவாங்க..” ஷக்தி சொல்ல எழில் கேட்டு கொண்டாள்..
“லிட்டில் கேர்ள் அந்த அஷ்வின் எதுக்கு நேத்ரா பேபியை தேட்றான்..? விஜய் கேட்க
“அஷ்வினோட அப்பாக்கு அஷ்வினோட வாரிசு திவ்யா மூலமாக வர்றது பிடிக்கல அதனால திவ்யா இருக்கும் போதே அஸ்வினுக்கு ரெண்டாவது கல்யாணம்
பண்ணிக்கிட்டான்.. அந்த பொண்ணு அஷ்வினை விட இன்னும் வசதி.. இதுல திவ்யாக்கு தான் ரொம்ப சந்தோஷம் இனி அவன் தொல்லை தனக்கு இருக்காது என்று நினைக்க அப்போ தான் திவி கர்ப்பம் ஆகிருக்கா
திவ்யா வயித்துல அம்மு வளர்றது பிடிக்கல.. எனக்கு வாரிசுன்னா அது என் மனைவி ரம்யா மூலமாக தான் வரணும் என்று மிரட்டி அம்மு உருவான போதே அதை கலைக்க வர்புறுத்தினான்.. எந்த சோசியல் மீடியாவில் என் போட்டோ போட்டு அசிங்க படுத்துவேன்னு அந்த அஷ்வின் இவங்களை மிரட்டினானோ
அதே சோசியல் மீடியாவில் இந்த அஷ்வின் செய்ற கொடுமை எல்லாத்தையும் சொல்லி அவங்க முன்னாடியே நான் தற்கொலை செஞ்சிப்பேன்னு அஷ்வினை மிரட்டி திவ்யா அவனை சமாளித்து அம்முவை பெத்து எடுத்தா.. ஆனால் பிரசவத்தில் அதிக பிளீடிங ஆகி திவியை காப்பாத்த முடியல..
எங்கே நேத்ரா அவங்க வாரிசாக வந்து சொத்துக்கு பங்கு வருவாளோ நினைச்சு அம்முவை கொல்ல நினைச்சிருக்காங்க திவி தன் கடைசி நேரத்தில் என்னை கூப்பிட்டு இதை எல்லாம் சொல்லி அம்முவை அஷ்வின் கிட்ட கொடுக்க வேண்டாம் என்று திவி கேட்டுக்கிட்டா
திவி இறந்ததும் அவனுக்கு வசதியாக போச்சு.. அம்முவை அவனோட வாரிசு என்று சொல்ல ஆள் இல்லை என்று அசால்ட்டாக நினைத்து அவன் அம்முவை தேடாமல் விட்டுட்டான்.. ஆனால் அவங்க அப்பா அவன் கிட்ட அம்மு உயிரோட இருந்தால் அவனுக்கு என்றைக்காவது ஒரு நாள் அம்மு அவனோட வாரிசு என்று தெரிஞ்சு அது வில்லங்கம் வந்திடும் என்று ஏதேதோ சொல்லி
அவன் மனசை மாத்தி அம்முவை எப்படியாவது இந்த பூமியை விட்டு அனுப்ப வேண்டும் என்று சொல்லி இப்போ வரைக்கும் அவன் அம்முவை தேடிட்டு இருக்கான்.. நானும் இத்தனை வருஷமா அம்முவை அவனுக்கு தெரியாமல் வளர்த்துட்டேன்.. இனியும்”
“இனி அவனுக்கு தெரிஞ்சே வளர்க்கலாம்.. நேத்ரா பேபி நம்ம குழந்தை..” எழிலை இடைமறித்து அழுத்தமாக கூறிய விஜய்யை எழில் திகைப்பாக பார்த்து கொண்டு இருக்க..
“விஜிப்பாஆ..ஆ..” என்று கத்தியபடி விஜய்யிடம் ஓடி வந்த நேத்ரா அவனை தாவி அணைத்து இருந்தாள்..
திடீரென்று நேத்ரா விஜய்யை அப்பா என்று
அழைக்க காரணம் என்ன.. அடுத்த பதிவில் பார்ப்போம் நட்பூக்களே..
இமை சிமிட்டும்..