இமை 52
விஜய் தன்னை முத்தமிட்டதும் முதலில் அதிர்ந்த எழில், அவனிடமிருந்து திமிறி விடுபட “ப்ளீஸ்டி ஐயம் பாவம் ஒரே ஒரு கிஸ் மட்டும்..” என்று எழிலின் இதழ்களுக்குள்ளே முணங்க, அந்த நிலையிலும் எழிலுக்கு சிரிப்பு வர அவள் கரங்கள் விஜய்யின் சட்டை காலரை இறுக பற்றி கொண்டது..
எழில் செயலில் உற்சாகம் அடைந்த விஜய் இன்னும் அழுத்தமாக எழில் இதழில் தன் உதட்டை கொண்டு ஓவியம் வரைய தொடங்கினான்.. சில நிமிடங்கள் நீடித்த இதழ் யுத்தம் முடிவுக்கு வர, விஜய்யின் முகத்தை பார்க்க கூச்சப்பட்டு அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டாள்..
“அப்பாடா..! ராங்கி, லிட்டில் கேர்ள் மோடுக்கு மாறிட்டா..” அவள் கன்னம் வருடி கண் சிமிட்டி கூறிய விஜய்யை நிமிர்ந்து பார்த்த எழில் “உங்களுக்கு என் முகத்தை பார்த்து கொஞ்சம் கூட அருவருப்பாக இல்லயா?. என்று வியப்பாக கேட்க
“இதுக்கான பதில் உன்கிட்டயே இருக்கு நீ அந்த தயாளன் கிட்ட சொன்னியே அதான் நானும் சொல்வேன்.. அழகு என்பது நம்ம பார்க்கிற பார்வையில் தான் இருக்கு உன்னை காலேஜ்ல பார்த்த போது உன்னோட முகத்தில் இருக்கும் வடுவை விட உண் கண்கள்ல தெரிஞ்ச அலட்சியம் தான் என்ன ஈர்த்தது.. அப்பறம் தான் உன் முகத்தில் இருக்கும் இந்த வடுவை கவனிச்சேன்.. இதை பார்த்ததும் தாமரை இதழ் மேல் கருப்பு மையில் ஓவியம் வரைந்த மாதிரி தான் ரசனையா பார்க்க தோணுச்சு”என்று அவள் கன்னம் வருடியவன்,
என்னோட அழகிடி நீ.. எப்பவும் அழகி தான் நீ.. அந்த தயாளன் கிட்ட எப்படி தலை நிமிர்ந்து பதில் சொன்னியோ.. அதே மாதிரி உன்னை யாரெல்லாம் அலட்சியமாக பரிதாபமாக பார்க்கிறாங்களோ அவங்ககிட்டயும் அப்படியே இருடி..” என்ற விஜய்யை எழில் முறைத்து பார்க்க
“இப்போ என்னத்துக்கு இப்படி பார்க்கிற?.” விஜய் புரியாமல் கேட்க
“இது தான் வாய்ப்புன்னு வாடி போடி சொல்றிங்க?.. என்று அதட்டலாக கேட்க, “அது ஒரு ஃப்ளோல வந்திருக்கும் கண்டுக்காத..” என்ற விஜய்யின் தோளில் அடித்த எழில், மீண்டும் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்..
“நடக்கிறது எல்லாம் கனவா நிஜமா என்று நம்பவே முடியலை..” என்று பிரமிப்பாக கூறி கொண்டு இருந்த எழில் அடுத்த நொடி விஜய்யின் இறுகிய அணைப்பில் இருந்தாள்..
“அவன் அணைப்பில் மூச்சு முட்ட, “ஹே இது என்..ன.. மூச்..சு..” பேச முடியாமல் திணற, “நீ தானே சொன்ன இது கனவா?. நினைவா தெரியலன்னு.. அதான் இது கனவு இல்லை நிஜம் என்று உன்னை நம்ப வைக்க இந்த ஹக்..” தன் அணைப்பை தளர்த்தியபடி கூறிய விஜய், “ஸ் ஆ!..” வலியில் முணங்கியபடி தன் கையை தேய்த்து விட்டபடி எழிலை முறைத்தவன், “இப்போ எதுக்குடி ராங்கி என்னை கிள்ளுன?..” விஜய் கேட்க
“ம் எங்களுக்கு இப்படி சந்தேகம் வந்தால் நான் இப்படி கிள்ளி தான் சந்தேகத்தை தீர்த்துக்குவேன்..” என்று உதடு சுளித்து கூறிய எழில் உதட்டை ரசனையுடன் பார்த்தவன், மீண்டும் அவள் உதட்டில் முத்தமிட்டு விலக, “நீங்க என் வாழ்க்கையில் வராமல் போய்ருந்தா என்ன ஆகியிருக்கும்.. நானும் அம்முவும் என்னவாகி இருந்திருப்போம்?..” அவள் விழிகள் இங்கும் அங்கும் அலைபாய சிறு தவிப்போடு கேட்டு கொண்டு இருந்த எழில் முகத்தை தன் கரங்களில் ஏந்தி கொண்ட விஜய்,
“மை லிட்டில் கேர்ள்.. என்னை பாரேன்..” கரகரப்பான குரலில் கூறியபடி விஜய், எழில் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டான்..
விஜய்யின் விழிகளோடு மோதிய நொடி அனைத்தும் ஸ்தம்பித்த நிலை.. இரும்பை ஈர்க்கும் காந்தம் போல் அவனின் பார்வை அவளை ஈர்க்க இங்கும் அங்கும் அலைபாய்ந்த அவள் கருவிழிகள் அசையாமல் சுற்றுப்புறம் எதுவும் உணராமல், விஜய்யின் கண்கள் மட்டும் அதன் ஈர்ப்பு விசையில் அவனை இமைக்காமல் பார்த்தாள்..
“நான் வராமல் போய்ருந்தால், உன்னை பார்க்காமல் போய்ருந்தால், இந்த கேள்வி நமக்குள் வரவே கூடாது.. எனக்கு நீ.. உனக்கு நான்.. நமக்கு நேத்ரா பேபி இது தான் நிஜம்.. நடக்காத ஒன்றை, இனி நடக்கவே வாய்ப்பில்லாத ஒன்றை, நீ நினைக்கவே கூடாது..” என்றவனின் குரல் அழுத்தமாக ஒலித்தாலும், விஜய் விரல்கள் எழில் கன்னத்தை மென்மையாக வருடிக் கொண்டிருந்தது..
தன் கன்னங்களை வருடி கொண்டிருந்த விஜய் கரத்தை எழில் தன் கன்னத்தோடு அழுத்தி கொள்ள, தன் மூச்சு காற்று அவள் முகத்தில் மோதும் படி தன் முகத்தை எழில் முகத்தோடு உரசியவன், அவள் கன்னத்தில் இருந்த வடுவில் அழுந்த முத்தமிட்டான்..
எழில் உடல் சிலிர்த்தது.. முத்தமிட்டதோடு மட்டும் நிறுத்தாமல் தன் உதட்டால் அந்த வடுவை மென்மையாக வருடிக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் “தீரா பிளீஸ்..” எழில் உணர்ச்சி பெருக்கில் குரல் நடுங்க கூற, அவள் நிலையை உணர்ந்த விஜய், எழில் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு சிறு புன்னகையுடன் அவளிடமிருந்து விலகி அமர்ந்தான்..
எழிலை தன் தோளில் சாய்த்து கொள்ள அவன் தோளில் சாய்ந்த எழில், “நான் உங்க மீது அவ்வளவு கோப போட்டிருக்கேன் அலட்சியமாக நடந்திருக்கேன் உங்களுக்கு என்மேல் கோபமே வரலயா?..” என்று வியப்பாக கேட்க, “இல்லயே..” என்று தோள் குலுக்கி கூறிய விஜய்யை எழில் வியப்பாக பார்க்க
“அப்படின்னு பொய் சொல்ல மாட்டேன்..” நீ என்னை மறுக்கும் போதெல்லாம் கொஞ்சம் கோபம் வரத்தான் செய்யும்..” என்று ஒத்துக் கொள்ள,
“அப்பறம் எப்படி கோபம் போச்சு..?” என்று எழில் ஆர்வமாக கேட்க,
“சொல்லுவேன் அப்பறம் நீ கோபபட கூடாது..” என்று பீடிகை போட
“அப்போ ஏதோ வில்லங்கமா நினச்சிருக்கிங்க அப்படி தான?..
“லைட்டா அப்படி தான்..” என்ற விஜய்யை எழில் முறைத்து பார்க்க
“ஹ.ஹ. எஸ் ராங்கி நீ என்னை மறுக்கும் போதெல்லாம் எனக்குள்ள இருக்கிற ஆண் என்ற ஈகோ வெளியே வரத்தான் செய்யும்.. என்னை வேண்டாம் சொல்ற உதட்டை இழுத்து வச்சு முத்தம் கொடுக்க தோணும்.. என்னை அலட்சியமாக பார்க்கிற இந்த கண்களுக்கு காதலாக பார்க்க வைக்கணும் என்று உள்ளுக்குள் வெறியே வரும்..” நான் நினைத்தது எல்லாம் இப்போ நடந்துட்டு இருக்கு..
எனக்கு எப்போது உன் மேல் காதல் வந்தது என்று சரியாக தெரியல லிட்டில் கேர்ள்.. உன்னை எப்போ காலேஜ்ல பார்தாதேனோ அன்றிலிருந்து உன் முகம் என் இமைகளுக்கு இடையே தோன்றி கொண்டே தான் இருந்தது.. என்னை தூங்க விடாமல் சுகமான தொல்லை தந்து கொண்டே இருந்தது..
ஆனால் இன்னொரு குரல் என் காதில் கேட்டு கொண்டே இருக்கும்.. கண்ணை மூடினாலும் அந்த குரலும் என்னை தூங்க விடாது.. அந்த குரலுக்கு சொந்தமான பெண்ணை தேடி சலித்த போது அந்த குரலுக்கு சொந்தமான பெண்ணும் நீ தான் என்று தெரிஞ்சதும் என் மனம் உறுதியாக சொன்னது எனக்கு நீ தான் என்று..
ஆனால் இப்போ நினச்சு பார்த்தால் உன்னை முதன் முதலில் பார்த்த அன்னிக்கே நீ என் மனசில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க.. அதான் உன்னை பார்த்ததும் நீ ஏதோ அன்கம்ஃபர்ட்பிளா ஃபீல் செய்ற என்று உணர்ந்து உன்கிட்ட வந்து பேசினேன்…
அப்பறம் கன்னியாகுமரில சில ரௌடிங்க உன்னை கடத்தினதாக அம்மா சொன்னதும் என்னால இங்க இருக்க முடியலை.. அதுவும் அங்க ஹாஸ்பிடல்ல நீ நிராதரவாக இருந்த தோற்றம் இப்போ நினைச்சாலும் எனக்கு தவிப்பாக தான் இருக்கும்..” என்றபடி எழிலை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்..
அவன் அணைப்பில் சுகமாக கட்டுண்டு அவன் மார்பில் சாய்ந்து கண்களை மூடிய எழில், விஜய்யின் இதயத்துடிப்பு துல்லியமாக கேட்க, தாயின் கருவறை இப்படி தான் இருக்குமோ என்று நினைக்க தோன்றியது எழிலுக்கு இதை விட பாதுகாப்பான இடம் வேறு இருக்கும் என்றும் தோன்றவில்லை அவளுக்கு.. அவனுங்களை பிடிச்சு தண்டனை கொடுத்த பிறகு தான் மனசு அமைதி ஆனது..” என்று விஜய் கூறி கொண்டு இருக்க
அவன் மார்பிலிருந்து விலுக்கென்று நிமிர்ந்த எழில், “அப்போ அன்னைக்கு என்னை கடத்தினது யார் தெரியுமா உங்களுக்கு?..” என்று வியப்பாக கேட்க, “ஆமா…” என்ற விஜய்யிடம்
“யார் அவனுங்க எதுக்காக என்னை கடத்தினாங்க.. எனக்கு இப்போ வரைக்கும் தெரியலை.. அவனுங்க மேல கோபமும் வருது.. நன்றி சொல்லவும் தோணுது..” என்ற எழிலை விஜய் புரியாமல் பார்க்க
“நாங்க பட்ட கஷ்டத்துக்கு மூல காரணம் இவங்க தான் நினைக்கும் போது ரொம்ப கோபமா வருது.. ஆனால் அவனுங்க அப்படி கடத்தினதால தான் அஷ்வின் பத்தி தெரிஞ்சது.. அதோட நீங்க மறுபடியும் என் லைஃப்ல வந்திருக்க மாட்டிங்கள்ல.. ஆனால் திவி..” என்று முகம் கசங்க கூறிய எழில்
“அந்த அஷ்வினை எதுவும் செய்ய முடியாதா?.. திவியோட இழப்புக்கு நியாயம் கிடைக்காதா?..” என்று எழில் இயலாமையோடு கேட்க
“கொஞ்சம் கஷ்டம் தான் லிட்டில் கேர்ள்.. அவனை எதுவும் செய்ய முடியாது.. உனக்கு அவனை என்ன செய்யணும் தோணுதோ அதை என்கிட்ட சொல்லி மனசை தேத்திக்கோ..” என்று சமாதானம் செய்த விஜய்யை முறைத்து பார்த்த எழில் “அப்போ அந்த தயாளன் கிட்ட பேசினது எல்லாம் சும்மாவா?.. ஒரு பேச்சுக்காவது, அவனை நான் சும்மா விட மாட்டேன் சொல்றிங்களா?..” என்ற எழிலிடம்
“ஒய் அது அந்த தயாளன் டயலாக்.. நான் ஓசில டயலாக் கடன் வாங்க மாட்டேன்..” என்று வீம்பு பேச, எழில் பார்த்த பார்வையில். சரி சரி சமாதானம்.. நீ சொல்லு அந்த அஷ்வினை என்ன செய்யணும் என்று உனக்கு தோணுது..” என்று மீண்டும் கேட்க
“அவனோட முகத்தில் செங்கல்லை வச்சு நல்லா தேய்க்கணும்.. எனக்கு வலிச்ச மாதிரி அவனுக்கு வலிக்கணும்.. எந்த சோசியல் மீடியாவை வச்சு திவியை மிரட்டி கல்யாணம் செஞ்சானோ அந்த சோசியல் மீடியாவில் அவன் போட்டோ வரணும்.. அதை பார்த்து அவன் வொய்ஃ அவனை விட்டு விலகணும்..
அவனுக்கு வாரிசு இருக்க கூடாது.. பெண்கள் இவனை பார்த்தாலே பயந்து ஓடணும்.. தான் ஏன் தான் வாழறோம் என்று ஒவ்வொரு நாளும் அவன் துடிக்கணும் என்று தீவிரமாக எழில் கூறி கொண்டு இருக்க.. “ராங்கி உனக்குள்ள இப்படி ஒரு வில்லி இருக்காளா?.. ஆத்தாடி ப்யூச்சர்ல உன்கிட்ட நான் கேர்புல்லா இருக்கணும் போலடா.. என்று கேலி பேசிய விஜய்
“சரி வா நம்ம இங்க வந்து ரொம்ப நேரம் ஆச்சு என் ஃப்ரெண்ட்ஸ்க்கு வீடியோ கால் போடலாம் ..” என்று சம்பந்தமே இல்லாமல் கூறிய விஜய்யிடம், “நான் என்ன பேசிட்டு இருக்கேன் நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கிங்க?.. என்று எழில் கோபமாக கேட்க “அடி ராங்கி நீ என்கிட்ட லவ் சொன்னதில் இருந்து இன்னும் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பேசவே இல்லை. பிகரை பார்த்ததும் ஃப்ரெண்ட் கழட்டி விடற பழக்கம் என்கிட்ட இல்லை அதனால்.. என்ற விஜய்யை பேச விடாமல் அவன் முதுகில் எழில் மொத்தி கொண்டு இருக்க
விஜய்யின் அலைபேசி சத்தமிட்டு தன் இருப்பை உணர்த்தி அவனை எழிலிடமிருந்து காப்பாற்ற, “அடி ராங்கி நோ வன்முறை. அவனுங்க தான் கூப்பிட்றானுங்க அவனுங்க கிட்ட பேசி முடிச்சிடறேன் அப்பறம் கன்ட்டினியூ செய்டி..” என்று சொல்ல
விஜய்யிடமிருந்து போனை வாங்கிய எழில் அதை உயிர்பிக்க மறுமுனையில் தெரிந்த அஷ்வின் முகத்தை பார்த்து ஒரு நொடி அதிர்ந்தவள் அடுத்த நொடி “லவ் யூ தீரா..!” என்று சந்தோஷ மிகுதியில் விஜய்யிடம் தன் காதலை கூறி அவனை தாவி அணைத்திருந்தாள் விஜய்யின் ராங்கி..
இமை சிமிட்டும்..