Loading

இமை 48

 

மருத்துவமனையில் விஜய்யிடம் உருகி உருகி தன் காதலை கூறிய எழில் படுத்திருந்வன் மார்பில் சாய்ந்து அழுது கொண்டு இருக்க அந்த நேரத்தில் பரபரப்பாக விஜய்யை எழுப்பி அவன் உடம்பில் மாட்டி இருந்த வயர்களை கழட்டுவதை பார்த்த எழில் 

 

 

“அய்யோ என்ன பண்றிங்க?.. அவங்களுக்கு முடியலை.. அவரை விடுங்க.. என்று அந்த பணியாளரிடம் கத்தி கொண்டு இருக்க அதே நேரத்தில் மருத்துவரும் அந்த அறைக்குள் வந்து சத்தம் போடவும், அத்தனை நேரம் உணர்வற்று கிடந்த விஜய் எழுந்து அந்த மருத்துவருக்கு பதில் கூறவும் எழில் விழிகள் விரிய ஸ்தம்பித்து நின்று விட்டாள்..

 

 

“இது என்ன ஏமாற்று வேலை?. இதுக்கு யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது?..” என்று அந்த மருத்துவர் கோபமாக கேட்க, “என்ன சார் நீங்க இப்படி கோபபட்றிங்க?..  உங்க கிட்ட கேட்டு தான ஹாஸ்பிடல் ரூம் ஒரு நாள் வாடகைக்கு எடுத்தோம்..” என்று விஜய் சொல்ல 

 

 

“வாட் நான்சென்ஸ் நான் ரூம் வாடகைக்கு விட்றேனா இது என்ன உளறல்?. இது ஹாஸ்பிட்டலா?. இல்லை ஹோட்டல் ரூமா?! வாடகைக்கு விட?.” என்று மருத்துவர் எரிச்சலாக கேட்க, “ஹலோ என்ன ஓவரா பேசறிங்க?.. உங்க பர்மிஷன் வாங்கி தான் இந்த ரூம் வாடகைக்கு எடுத்ததா என் ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க.. அவங்க பொய் சொல்ல மாட்டாங்க..” பதிலுக்கு விஜய் கோபமாக பேச

 

 

“யார் உங்க ஃப்ரெண்ட் காட்டுங்க பார்ப்போம்..” என்று கேட்க “அதோ அங்க வெளியே நிக்கிறாங்க பாருங்க என் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்..” என்று விரல் நீட்டி வெளியே பெருமையாக காண்பித்த விஜய் அங்கு யாரும் இல்லாததை கண்டு திகைத்தான்.. இங்க தானே இருந்தானுங்க..” என்று யோசனையோடு வெளியே பார்க்க, “சார் இந்த லெட்டரை ஒரு அண்ணா உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க..” ஒரு சிறு பெண் விஜய்யிடம் கடிதம் ஒன்றை கொடுக்க

 

 

 

“என்ன லெட்டர் இது?” என்று தனக்கு தானே கேட்டபடி அந்த கடிதத்தை படித்த விஜய் திருதிருவென விழித்தவன், இப்படி தனியாக மாட்டி விட்டுட்டிங்களே உங்களை நம்பினதுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்..” என்று மனதுக்குள் புலம்பி கொண்டு மீண்டும் கடிதத்தை படித்தான்..

 

 

“நாங்க வந்த வேலை சிறப்பா முடிஞ்சது.. பிளான் போட்றது மட்டும் தான் எங்க வேலை.. அதோட பின்விளைவுகள் சந்திக்கிறது உன் வேலை.. சிஸ்டரை எப்படியாவது சமாதானம் செஞ்சிடு..‌ இதுக்கும் எதாவது ஐடியா எங்க கிட்ட கேட்ட மவனே நாங்க உன்னை டிவோர்ஸ் செஞ்சிடுவோம்.. கூடவ எழில் சிஸ்டரையும டிவோர்ஸ் செஞ்சு விட்ருவோம்..‌ 

 

 

 

அப்பறம் இன்னொரு விசயம் ஹாஸ்பிடல் பில் கட்ட மறந்துட்டோம் நீயே கட்டிடு.. பக்கத்துல இருக்குற ஹோட்டல் உன் பேரை சொல்லி தான் சாப்பிட்டோம்.. சோ அதுக்கும் பில் கட்டிடு.. எப்படி மச்சி எங்களோட ஹெல்ப்?.. சரி ரொம்ப நேரம் லெட்டர் படிக்கிற மாதிரியே பாவனை காட்டு..” என்று எழுதியிருக்க 

 

“எதுக்கு படிக்கிற மாதிரி பாவனை காட்டணும்?” மனதுக்குள் நினைத்தபடி அடுத்த வரியை படிக்க 

 

 

“கொஞ்சம் அக்கட சூடு..? என்று எழுதி இருக்க “என்ன என் மைண்ட் வாய்ஸ் எல்லாம் லெட்டர்ல கேட்ச் பண்ணிருக்கானுங்க.. என்று நினைத்தபடி 

 

 

“எக்கட சூடட்டும்? என்று மனதில் கேட்டு கொள்ள 

 

 

சிஸ்டர் உன்னை பார்வையில் பஸ்பமாக்கிற மாதிரி பார்க்கிறாங்க..” என்று நேரில் பார்ப்பதை போல அந்த கடிதத்தில் எழுதி இருக்க.. அப்போது தான் தன் அருகில் இருந்த எழிலின் ஞாபகம் வந்தது விஜய்க்கு.. முதுகில் சூடான மூச்சு காற்று அவனை சுட, தன் அருகில் அழகான பேய் நின்று இருப்பது போல் மிக மெதுவாக எழிலை திரும்பி பார்த்தான்.. 

 

 

 

கடிதத்தில் கூறியது போல எழில் விஜய்யை பார்வையால் பஸ்பமாக்கி கொண்டிருந்தாள்.. “இப்படி பார்க்காத ராங்கி.. ஏற்கனவே எனக்கு அடி பட்டிருக்கு நீயும் என்னை இப்படி பார்க்கிற? என்று பாவம் போல் கேட்க, சார் நீங்க நடிச்சது மேடத்துக்கு தெரிஞ்சிருச்சு என்று பணியாள் சொல்ல.. 

 

 

 

கொஞ்சம் பெர்பாமன்ஸ் செய்ய விட்றிங்களாடா என்று மனதில் சலித்தபடி நீங்க போங்க இன்னும் பத்து நிமிசத்தில இங்க இருந்து நாங்க கிளம்பிடுவோம்..” என்று மருத்துவரையும் பணியாளையும் அனுப்ப விஜய்யின் குரலில் இருந்த அழுத்தத்தில் மருத்துவர் அந்த பணியாளை முறைத்து விட்டு செல்ல சார் சீக்கிரம் கிளம்பிடுங்க சார்..” என்று கெஞ்சலாக கேட்டபடியே அந்த பணியாளும் அவருடன் சென்றுவிட 

 

 

தன்னை முறைத்து கொண்டிருந்த எழிலிடம் வந்த விஜய் அது வந்து ராங்கி நீ என்னை பார்க்க கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டியா நானும் ரோசமாக உன்னை பார்க்க மாட்டேன் சொன்னேனா..  வீராப்பாக ஒரு வாரம் கூட என்னால் இருக்க முடியல.. உன்னை பார்க்காமல் என்னால இருக்க முடியலையா.. 

 

 

 

இதை என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட புலம்பிட்டு இருந்தேனா.. அவனுங்க தான் இந்த மட்டமான ஐடியா கொடுத்தானுங்க..‌ எல்லாத்துக்கும் அவனுங்க தான் காரணம்..” என்று பழி முழுவதும் நண்பர்கள் மேல் சுமத்திய விஜய்யின் அருகில் வந்த எழில் 

 

 

 

நான் அவ்வளவு நேரம் அப்படி கதறி அழுதேனே அப்ப கூட உங்களுக்கு எழுந்து என்னை இதெல்லாம் நடிப்பு என்று சொல்லி என்னை சமாதானம் செய்ய தோணலயா?.. எழில் எரிமலையாக பொங்கிய கோபத்தை அடக்கிய குரலில் கேட்க,

 

 

 

“அது வந்து ராங்கி காதலி கண்ணீர் விடுவது காதலனுக்கு பிடிக்காது தான்..‌ ஆனால் அந்த கண்ணீர் தனக்காக என்று வரும்போது அதை ரசிக்க தான் தோன்றும்.. அதான் நான் ரசிச்சேன்..” என்றவனை, அம்மிக்கல்லில் வைத்து அரைக்க வேண்டும் போல் ஆத்திரமாக வர, அந்த கோபத்தை எல்லாம் முகத்தில் தேக்கி

 

 

 

“இப்போ சொல்றேன் இனி நீங்க என்.ம்ம்..”  எழில் கூற வந்த வார்த்தை விஜய் உதட்டுக்குள் மறைந்து போனது.. ஆம் விஜய் எழிலின் இதழ் மீது தன் உதட்டை அழுத்தி இருந்தான்.. முதல் முத்தம் எழில் இதயத்தில் பிரளயமே நடந்து கொண்டிருந்தது.. அவனிடம் இருந்து விடுபட முடியாமல் எழில் திமிறி கொண்டு இருக்க 

 

 

 

அவள் இதழ்களில் என்ன ருசியை உணர்ந்தானோ எழில் இதழை விட மனமே இல்லாமல் ஜெல்லி மிட்டாய் போல் மிக மென்மையாக மென்றான் அவள் இதழ்களை.. சில நிமிடங்களில் நீடித்த முத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த விஜய், இனி உன் உதட்டில் இனி என்று வார்த்தை வந்தச்சுன்னா இனிப்பாக இருக்கும் இந்த உதட்டை கடிச்சிடுவேன்.. என்று முகம் சிவக்க நின்றபடி தன்னை முறைத்து பார்த்து கொண்டு இருந்த எழிலை எச்சிரிக்க.. 

 

 

 

அவன் மிரட்டலிலி எழில் முகம் சிவந்தாள் அது வெட்கத்தினாலா அல்லது கோபத்தினாலா என்பது எழில் மட்டுமே அறிந்த உண்மை..

 

 

 

இவர்கள் இங்கு காதல் கசிந்துருகி நின்று கொண்டு இருந்ததை இரு விழிகள் குரோதத்துடன் பார்த்து சென்றது..

 

 

*நாம யார் வம்பு தும்புக்கும் போறதில்லை நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருப்போம்..”  காரில் சினிமா வசனம் கேட்டு கொண்டு இருக்க ஸ்டேரிங் வீலில் தாளம் தட்டியபடி காரை ஓட்டிக் கொண்டு இருந்த ஷக்தியின் தலையில் வலிக்காமல் கொட்டிய மலரை பின்னால் திரும்பி முறைத்து பார்த்தான்.. மற்றவர்களுக்கு அது முறைப்பது போல் தோன்றினாலும், அவன் பார்வையின் பொருள் உணர்ந்த மலருக்கு கோபமும், வெட்கமும் ஒருங்கே வர

 

 

 

“விஜி அண்ணா பாவம்.. அண்ணியை அண்ணா கூட பேச வைக்கிறேன்னு சொல்லிட்டு இப்படி அவரை அம்போன்னு பாதியில் விட்டுட்டு வந்துட்டீங்க.. அதுவும் அண்ணா கிட்ட சொல்லாம வந்துட்டோம் அண்ணா நம்மள பத்தி என்ன நினைப்பாங்க?..  என மலர் ஆதங்கப்பட

 

 

“சொல்லிட்டு வந்தால் அது நல்ல நட்பு சொல்லாமல் வந்தால் அது உயிர் நட்பு..” நாங்க உயிர் நட்பு என்று வசனம் பேசிய ஷக்தியின் தலையில் மீண்டும் ஒரு கொட்டு வைத்த மலரை தடுத்து 

 

 

“சும்மா எதுக்கு புள்ள அண்ணாவை அடிச்சிட்டே இருக்க?.. அதான் அவங்க சேர்ந்துட்டாங்கள்ல மலரு அப்பறம் ஏன் கவலைப் பட்ற?” என கேட்க, அது அண்ணனுக்கு அடி பட்டிருச்சு என்று அண்ணி ரொம்ப அழுதாங்கள்ல.. ஆனால் அது எல்லாம் நடிப்பு என்று தெரிஞ்ச பிறகு அந்த ஏமாற்றம் எப்படி இருக்கும் தெரியுமா?..” என்று ஷக்தியை முறைத்தபடி கூறிய மலரை தோளோடு அணைத்த வெண்பா, 

 

 

 

எல்லாம் விஜி அண்ணாவும் மதி அண்ணியும் சேரணும் தானே இப்படி செஞ்சாங்க புள்ள.. அதுக்கு அண்ணா மேல என்னத்துக்கு கோவப்படற?.” வெண்பா கேட்க “உங்க மலரு புள்ளைக்கு மலரும் நினைவுகள் வந்திருச்சு.. கிட்டத்தட்ட நானும், இப்படி செஞ்சு தான் இந்த மலரோட மனதை(ணத்)தை வாங்கினேன்..” என்று ஷக்தி புன்னகையுடன் சொல்ல 

 

 

 

“அப்போ உனக்கே இது முடிவு தெரியும் தானே தென் வொய் சேட்?..” விதுரன் கேட்க, “சேட் இல்லை பிளான் போட்டுக் கொடுத்திங்க அந்த பிளான் எந்த அளவுக்கு சக்சஸ் ஆகியிருக்கு என்று பார்க்க வேண்டாமா? உங்களுக்கு எல்லாம் அந்த கியூரியாசிட்டி இல்லையா?.” என்று கேட்க, 

 

 

 

“அட ஆமால்ல இது நமக்கு தோணல பாரேன்.. அந்த விஜய் பையன் மதி சிஸ்டரை எப்படி சமாதானம் செய்யறான்னு பார்க்காம வந்துட்டோமே..” என்று வெண்பா வருத்தப்பட்டு “ஷக்தி அண்ணே காரை ஹாஸ்பிடலுக்கு விடுங்க..” வெண்பா சொல்ல,

 

 

 

“ஹ்க்கும்  மலர் அவன் தலையில் எப்ப கொட்டு வைத்தாளோ அப்போவே அவன் காரை ஹாஸ்பிடலுக்கு தான் ஓட்டிட்டு இருக்கான்..” என்று விதுரன் சொல்ல அப்போது தான் கார் செல்லும் திசையை இரு பெண்களும் கவனித்தனர்.. “ஆனாலும் அண்ணாவை நீ இப்படி ஆட்டுவிக்க கூடாது மலரு.. உன் ஒரு கொட்டுக்கு பயந்து காரை வந்த வழியே திருப்பிட்டாங்களே..” வெண்பா கேலி பேச, விதுரன் ஷக்தியை நக்கலாக பார்த்து கொண்டு இருக்க 

 

 

 

“ஹ்க்கும் நானாவது கொட்டு வச்சு அவங்களை அடக்கிறேன்.. ஆனால் நீ, ஒரு பார்வை பார்த்தாலே அண்ணா அடங்கிட்றாரே..” என்று பதிலுக்கு மலரும் வெண்பாவை வாரி விட  இப்போது ஷக்தி விதுரனை படு நக்கலாக பார்த்து வைத்தான்..

 

 

அதே மருத்துவமனையில் முகத்தில் காயத்துடன் படுத்திருந்த உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவனை நான் சும்மா விட மாட்டேன்.. என்று சங்கல்பம் எடுத்து கொண்டு கோபமாக நின்றது ஒரு உருவம்

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்