Loading

இமை 46

 

நாட்கள் அதன் போக்கில் நகர, எழில் வேலை பார்க்கும் பள்ளி ஆண்டு விழா வரா இறுதியில் நடக்கவிருப்பதால், பாடங்கள் எதுவும் இல்லாமல் மாணவர்களை சற்று சுதநாதிரமாக விட்டனர்.. சுமித்ரா ஆசிரியர்களை அழைத்து விழா சம்பந்தமாக அவர்களின் கருத்துக்களையும் கேட்டு அவர்களிடம் சில பொறுப்புகளை பிரித்து கொடுத்தார்.. அதில் எழிலிற்கும், சங்கவிக்கும்  நடனம் பயிற்றுவிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது..

 

 

 

சுமித்ரா எப்போதும் போல இயல்பாக தன்னிடம் பேசியதில் தங்களுக்குள் நடந்த விஷயங்களை விஜய் இன்னும் தன் அன்னையிடம் கூறவில்லை என்பதை உணர்ந்து கொண்டாள்.. ஆனால் விஜய் அப்படி கூறி இருந்தாலுமே சுமித்ராவிடம் எந்த மாற்றமும் இருக்காது என்பது எழிலிற்கு தெரியவில்லை..

 

 

 

பாடல்கள் தேர்ந்தெடுப்பதில் சங்கவிக்கு சந்தேகம் வர அதை பற்றி எழிலிடம் கேட்க கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி கொண்டு இருந்த எழிலை சந்தேகமாக பார்த்தாள்.. முன்பு இருந்ததை விட தனக்குள் இன்னும் இறுகி போயிருப்பது போல் தோன்றியது சங்கவிக்கு.. தன் உடம்பில் இருந்த உயிரை மட்டும் யாரோ தனியாக உருவி எடுத்தது போல.. உணர்வற்று நடமாடி கொண்டு இருந்த எழிலை  பார்த்த சங்கவிக்கு குழப்பமாக இருந்தது..

 

 

என்னாச்சு இவளுக்கு..? கொஞ்ச நாளா சரியாக தான இருந்தா.. இப்போ எதுக்கு இவ்வளவு இறுக்கமாக இருக்கா..?” என்று சிந்தித்த படி 

 

 

“என்ன ஆச்சு மதி உனக்கு..? ஏன் உம்முன்னே இருக்க” நேரடியாக எழிலிடமே விசாரிக்க 

 

 

“ஏன் எனக்கென்ன நல்லா தானே இருக்கேன்..” என்று அசட்டையாக பதில் சொன்ன எழிலை வியப்பாக பார்த்த சங்கவி.. “நீ பதில் சொல்ற தோரணையிலேயே தெரியுதே நீ சரியில்லேன்னு.. சொல்லு உனக்கு என்ன ஆச்சு.. உனக்கும் விஜய் சாருக்கும் மறுபடியும் எதாவது பிரச்சனையா..?” என்று கேட்க 

 

 

“அவங்களுக்கு எனக்கும் என்ன பிரச்சினை வர போகுது?.. முதல்ல பிரச்சினை வர அளவுக்கு எங்களுக்குள்ள என்ன இருக்கு.. அவர் யாரோ நான் யாரோ..? இனி அவரை பத்தி என்கிட்ட பேசாத..” என்று தன் குரலில் உணர்வுகளை காண்பிக்காமல் கூறிய எழிலை விசித்திரமாக பார்த்த சங்கவி..

 

 

 

“நீ என்ன நினைக்கிற என்று சத்தியமா தெரியல மதி. ஆனால் நீ தப்பு தப்பாக யோசிக்கிற என்று மட்டும் நல்லா தெரியுது.. நீ சொல்றது வச்சு பார்த்தால் உனக்கும் அவருக்கும் தான் ஏதோ பிரச்சினை என்று தோணுது.. விஜய் சார் பாவம்.. அவரை கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி செய்யேன் மதி.. 

 

 

 

இந்த காலத்தில் விஜய் சார் மாதிரி ஆண்களை பார்க்கிறது ரொம்ப அபூர்வம் மதி.. உனக்கு அவரை பிடிக்கலேன்னா கூட பரவாயில்லை.. உனக்கு அவரை பிடிச்சிருக்கு ஆனால் அதை ஒத்துக்க மாட்டிங்கிற…” என்ற சங்கவியை எழில் முறைத்து பார்க்க 

 

 

 

“நீ இப்படி பார்த்தாலும் நான் உண்மையை தான் சொல்லுவேன்.. உனக்கு அவரை பிடிச்சிருக்கு ஆனால் நீ ஒத்துக்க மாட்டிங்கிற.. உனக்கு ஏன் மதி இவ்வளவு பிடிவாதம்,  வீம்பு.. அவரா உன்னை தேடி வரதுனால அவரை வேற மாதிரி நினைச்சிட்டியோ.. நீ மட்டும் உன் மனசார உங்களுக்கு என்னை பிடிக்கல 

 

 

 

இனி என்னை தொல்லை செய்யாதிங்க என்று உண்மையாக அவர் கிட்ட சொல்லி பாரு அதுக்கு பிறகு அவர் உன் பக்கம் வரவே மாட்டார்.. அவரை பத்தி எனக்கு தெரிஞ்ச அளவு உனக்கு தெரியாமல் போச்சே..” என்று பேசிக்கொண்டே இருக்க

 

 

 

“போதும் நிறுத்துறியா?!” எழில் தன்னை மீறி கத்தி இருந்தாள்..

 

 

 

“மதி..!?” தோழியின் சத்தத்தில் சங்கவி திகைத்து அழைக்க “உனக்கு அவரை பத்தி எல்லாம் தெரியுமா?! என்னை விட உனக்கு தெரியுமா? அவரோட அன்பை அக்கறையை சில வருடங்களுக்கு முன்னே நான் அனுபவிச்சு இருக்கேன்.. அந்த அன்பு அக்கறையை மத்தவங்க கிட்ட தேடி ஏமாந்தும் போயிருக்கேன்..  ஒருத்தரை விட்டு விலகி போனால் அவங்க மேல கோபத்தினால் மட்டும் தான் விட்டு போவாங்களா..? அப்படி எதுவும் இல்லை.. அவங்க மேல அளவுக்கு அதிகமாக அன்பு வச்சிருந்தாலும் அவங்க சந்தோஷத்திற்காக விலகி போவாங்க.. நான் அப்படி தான் விலகி வந்தேன்..

 

 

 

“நான் அவங்களை நான் மறுத்து விலகி வந்ததுக்கு காரணம், அவங்களுக்கு நான் பொருத்தம் இல்லை கவி..  நாங்க எங்கேயாவது வெளிய போனால் அவ்வளவு அழகான மனுசனுக்கு இப்படி ஒரு மனைவியா என்று அவரை தான் பரிதாபமாக பார்ப்பாங்க.. என்னை கல்யாணம் செஞ்சிட்டு அவங்க ஏன் மத்தவங்க பார்வையில் பரிதாபமாக நிக்கணும்..? 

 

 

 

யாரோ செஞ்ச தப்புக்காக நான் தண்டனை அனுபவிக்கிறேன் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்களும் இந்த தண்டனையை அனுபவிக்கனுமா?..” என்ற எழில், “அவங்கள மறுக்க எனக்கு மட்டும் ஆசையா என்ன? அவங்க அக்கறை அன்பு எப்படி இருக்கும் தெரியுமா கவி.. ஒரு அம்மா அவங்க குழந்தையை எப்படி பார்ப்பாங்களோ அப்படி பார்த்துக்கிட்டாங்க.. இன்னும் நான் அவங்க கிட்ட கூட சொல்லாத உண்மையை உன்கிட்ட சொல்றேன் 

 

 

 

“எனக்கு அவங்களை பிடிக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும், அவங்க சின்னதாக முகம் சுளிச்சாலும் எனக்கு மனசு பதறும்.  ஆனால் இதெல்லாம் அவர்கிட்ட எப்படி சொல்ல முடியும்?.. என் முகம் பாரு எப்படி இருக்குன்னு.. நீயே உன் மனசை தொட்டு சொல்லு.. அவங்களுக்கு நான் பொருத்தமாக இருப்பேனா?” என்ற மதியிடம் 

 

 

“அழகுங்கிறது..” என்று ஏதோ கூற வந்த சங்கவியை இடைமறித்த எழில் 

 

 

 

“போதும்..! அழகு என்பது முகத்தில் இல்லை அது அகத்தில் இருக்கு என்று சொல்ல வர்ற.. இதெல்லாம் போஸ்டர்ல எழுதி ஒட்டினா படிக்க நல்லா இருக்கும்.. ஆனா பிரிக்கடிக்கல் லைஃப் இதெல்லாம் சரிவராது..  நான் அவங்களை ஒவ்வொரு முறையும் மறுக்கும் போது அவருக்கு வலிக்கிறதை விட எனக்கு பல மடங்கு வலிக்கும் கவி.. 

 

 

 

நானும் மனுஷி தானே எனக்கும் உணர்வுகள் இருக்கு தானே அதையும் மீறி அவங்களை நான் மறுக்கிறேன் என்றால் எனக்கு எவ்வளவு வலிக்கும்?. என்று மத்தவங்களுக்கு புரியாமல் போனாலும் என் ஃப்ரெண்ட் உனக்கும் என்னை புரியலேன்னு நினைக்கும் போது ரொம்ப வலிக்குது கவி..” எழில் தான் இதுவரை அடக்கி வைத்திருந்த மனக்குமுறல்களை எல்லாம் சங்கவியிடம் அழுதபடி கூற

 

 

 

எழில் மனதை நன்றாக புரிந்து கொண்ட சங்கவிக்கு அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாள்.. 

 

 

“மதி.. உனக்கு ரொம்ப தாழ்வு மனப்பான்மை இருக்கு.. இப்போ என்கிட்ட சொன்னதெல்லாம் நீ விஜய் சார்கிட்ட சொல்லேன்.. அவர் நிச்சயமாக உன்னை புரிஞ்சிக்கிட்டு உன்னோட மனசை நிச்சயம் மாத்துவார்.. உனக்காக இல்லேன்னாலும், எனக்காக அவர்கிட்ட பேசு மதி.. நீ உன் மனசுல இருக்கிறத விஜய் சார் கிட்ட சொன்னா கண்டிப்பா அவரே எல்லாமே பார்த்துப்பார்.. 

 

 

 

எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு ப்ளீஸ் டி அவர்கிட்ட பேசேன்..” என்று தோழியின் வாழ்விற்காக அவளிடமே சங்கவி கெஞ்ச, சொல்லொணா வேதனையோடு சங்கவியை பார்த்த எழில் “ம்கூம் எல்லாம் முடிச்சிருச்சு மதி.. நானே எல்லாத்தையும் மொத்தமா முடிச்சிட்டேன்.. இனி அவங்க என்னை தேடியும் வர மாட்டாங்க..”என்று கதறலாக கூறிய எழிலை சங்கவி புரியாமல் பார்க்க 

 

 

 

ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த விசயங்களை சங்கவியிடம் கூறிய எழிலை கோபமாக பார்த்த சங்கவி, நிஜமாகவே விஜய் சார்கிட்ட இப்படியே சொன்னியா?..” நம்பாமல் மீண்டும் கேட்க எழில் பதில் கூறாமல் மௌனமாக அழுது கொண்டு இருந்தாள்.. நீ சொன்னதை கேட்க எனக்கே கோபமா வருது.. 

 

 

உன் மேல உயிரையே வச்சிருக்க அவருக்கு எப்படி இருந்திருக்கும்?. உங்க கூட டைம் ஸ்பெண்ட் செய்து அவ்வளவு சந்தோசமா இருந்த மனுஷன் கிட்ட அப்படி பேசியிருக்கியே..” என்று கோபமும் , ஆதங்கமுமாக பேசிய சங்கவி

 

 

 

தோழி அழுவது பொறுக்காமல், “சரி விடு இதுக்கு முன்னாலையும் நீ விஜய் சார் கிட்ட நிறைய தடவை பார்க்க வர கூடாது என்று சொல்லி இருக்கேல்ல அப்பவும் அவர் வந்தது தான் இருந்தாரு அதே மாதிரி இப்பவும் வருவார் நீ கவலைப்படாத..” என சமாதானம் செய்ய மறுப்பாக தலையசைத்த எழில் “அவர் வரமாட்டார்.. நான் முதல் சொன்னது வேற ஆனால் இப்ப சொன்னது வேற.. இனி அவர் எப்பவும் என்னை வந்து பார்க்க மாட்டார் என்று வேதனையுடன் சொல்லி கொண்டு இருக்க,

 

 

 

எழில் சொல்வதை கேட்டு கொண்டு இருந்த சங்கவி முகம் மலர, “அவர் ஏன் வராமல் போக போறார் உன்னை பார்க்காமல் அவரால் இருக்க முடியாது என்று நான் சொன்னேன்ல அதோ விஜய் சாரே இங்க வராங்க பாரு.” என்று சந்தோஷமாக சொல்ல, 

 

 

 

சட்டென்று நிமிர்ந்து பார்த்த எழில் “எங்க..?! பெரும் ஆவலாக கேட்க, “அங்க வாசலை பாரு..” என்று எழில் கன்னத்தை பிடித்து பள்ளியின் வாசலை பார்க்க வைக்க, அங்கு வாசலில் இவர்களை சிறு புன்னகையுடன் பார்த்தபடி வந்து கொண்டிருந்த விஜய்யை இமைத்தால் எங்கே அவன் மறைந்து விடுவானோ என்று கண்களில் தேங்கி நிற்கும் கண்ணீரை துடைக்க கூட தோன்றாமல் விஜயையே பார்த்து கொண்டு இருந்தாள்.. 

 

 

 

அவனை பார்த்து முழுதாக ஒரு வாரம் கடந்து விட்டிருந்தது.. நேத்ராவை மட்டும் எப்படி பார்க்கிறான் என்று தெரியவில்லை.. நேத்ராவும் இவனை பற்றி பேசுவதும் இல்லை.. ஆக மொத்தம் விஜய் என்ற மனிதனை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் தவித்து கிடந்த எழிலிற்கு விஜய்யின் இந்த வருகை அவளை மீறி இதழ்களில் சிறு புன்னகையை தோற்றுவித்தது..

 

 

 

இருவரிடம் வந்த விஜய், “ஹாய் சங்கவி சிஸ்டர் எப்படி இருக்கிங்க?.. ஸ்கூல்ல ஏதோ ஃபங்சன் போல..” என்று எழிலை கண்டு கொள்ளாமல் சங்கவியிடம் பேசி கொண்டு இருக்க அதில் எழில் முகம் சுருங்கினாள்.. சில நிமிடங்கள் நின்று சங்கவியிடம் பேசி சென்ற விஜய் மறந்தும் எழிலிடம் பார்வையை திருப்பவில்லை..

 

 

“முதன் முறையாக விஜய்யின் அலட்சியம் எழில் மனதில் பெரும் வலியை கொடுத்தது.. ஒரு முறை அவன் அலட்சியம் தனக்கு இவ்வளவு வலி தருகிறதே.. பார்க்கும் போதெல்லாம் தான் அவனிடம் அலட்சியமாக நடந்ததற்கு அவனுக்கு எப்படி வலித்திருக்கும் என்று எண்ணி இப்போது நொந்து கொண்டாள் 

 

 

 

“என்னடி அதிசயம் விஜய் சார் உன்னை பார்க்காமல் போறாங்க.., சங்கவி ஆச்சரியமாக வினவ  “நான் சொன்னேன்ல அவங்க இனி என்னை பார்க்க மாட்டாங்க பேச மாட்டாங்கன்னு..” என்று வேதனையுடன் கூறிய எழில்.. அவர் இப்படியே இருக்கட்டும் கவி.. இன்னும் கொஞ்ச நாள்ல என்னை மறந்துட்டு வேற லைஃப் அமைச்சிக்குவார்.. 

 

 

 

எனக்கு அது போதும்..” என்று வலி நிறைந்த புன்னகையுடன் கூறிவிட்டு தன் வேலையை பார்க்க சென்ற எழிலை பார்க்க பார்க்க ஆதங்கமாக இருந்தது.. எழில் எத்தனை கோப பட்டாலும் அதை கடந்து அவள் வம்பிழுக்கும் விஜய்யும் இன்று எழிலை கண்டு கொள்ளாமல் செல்வதை கண்டு தோழியின் வாழ்வை நினைத்து சற்று பயமாக இருந்தது.. 

 

 

 

தன் அன்னையிடம் பேசிவிட்டு வெளியே வந்த விஜய், அங்கிருந்த சங்கவியிடம் தலையசைத்து செல்ல, கடவுளே இவங்க ரெண்டு பேரையும் எப்படியாவது சேர்த்து வச்சிடுங்க..” என்று வேண்ட 

 

 

 

“என்னால எதுவும் செய்ய முடியாதும்மா.. அவனோட ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் இருக்கானுங்களே அவனுங்களை அனுப்பி வைக்கிறேன்..” என்று கடவுள் சங்கவிக்கு பதில் கூறியது பாவம் அவளுக்கு கேட்கவில்லை..

 

 

விஜய் சென்ற ஒரு மணிநேரத்தில் சுமித்ரா அவசரமாக எங்கோ வெளியே செல்வதை பார்த்த எழில்.. “கவி மேடம் எங்கேயோ அவசரமாக போற மாதிரி இருக்கு  அவங்க ஏதோ பதட்டமாக இருக்க மாதிரி தெரியுது..” என்றபடி வேகமாக சுமித்ரா அருகில் வந்து, “மேடம் என்ன ஆச்சு?.. ஏன் பதட்டமாக இருக்கிங்க?..” என்று எழில் கேட்க 

 

 

“என் மகனுக்கு ஆக்சிடண்ட் ஆகிருச்சுமா.. முகத்தில் கண்ணாடி குத்தி..” 

 

 

அய்யோ..!” என்று கத்தி இருந்தாள் எழில் அதிர்ச்சியில் அவளுக்கு மயக்கம் வரும் போல இருந்தது முயன்று தன்னை தேற்றி கொண்டு ஆண்ட்டி நானும் உங்களோட வர்றேன் ஆண்ட்டி.. பிளீஸ் எனக்கு அவங்களை பார்க்கணும் என்று கெஞ்சி சுமித்ராவுடன் விஜய்யை அனுமதித்து இருந்த மருத்துவமனைக்கு சென்றவள் அங்கு முகத்தில் காயங்களுடன் படுத்திருந்த விஜய்யை பார்த்ததும் உயிர் துடிக்க சப்த நாடியும் ஒடுங்க 

 

 

“தீரா!!” என்று கதறி கொண்டு அவன் காலடியில் விழுந்தாள்.. அய்யோ இது என்ன விபரீதம்..” என்று கதறி அழ “லிட்டில் கேர்ள்.. வந்துட்டியா..  நீ வர மாட்ட என்று நினைச்சேன்.. உனக்கு தான் என்னை பிடிக்காதே..  என் முகத்திலும் அடி பட்டு நானும் என் அழகை எல்லாம் இழந்துட்டேன்..

 

 

உனக்கும் என்னை பிடிக்காது.. இனி யாருக்கும் என்னை பிடிக்காது.. யாரும் என்னை மேரேஜ் செய்வாங்க..” என்று திக்கி திணறி பேச 

 

 

“அய்யோ உங்களை பிடிக்காது என்று நான் எப்ப சொன்னேன் உங்களை பிடிச்சதால தான் நீங்கள் சந்தோஷமாக இருக்கணும் என்று நினச்சு உங்கள விட்டு விலகினேன்.. ஆனால் இப்படி ஆகும் என்று நான் நினைக்கவே இல்லையே..” என்று அழுத எழில் 

 

 

“எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் தீரா.. நானும் உங்கள விரும்பறேன்.. எனக்கு எந்த அழகும் வேண்டாம் எனக்கு நீங்க மட்டும் தான் வேணும்… நீங்க எப்படி இருந்தாலும் எனக்கு வேணும்.. உங்களுக்கு நான் இருக்கேன்.. பிளீஸ் மனச தளர விடாதிங்க..” என்று அழுதபடி கூறிய எழில் விஜய் முகத்தை பார்க்க அவன் சிறு புன்னகையுடன் எழிலை நோக்கி கை நீட்ட அந்த கரத்தை எழில் பிடிக்க போகும் முன் விஜய் கரம் சட்டென்று படுக்கையில் விழ எழில் அதிர்ந்து விஜய் முகத்தை பார்த்தாள்..

 

 

விஜய் விழிகள் மூடி இருந்தான்.. அய்யோ என்னாச்சு இவங்களுக்கு. என்று பதட்டமாக கேட்டபடி விஜய் மார்பில் தலை வைத்து அவன் இதய துடிப்பு கேட்க முயற்சிக்க ம் கூம் எந்த சப்தமும் கேட்கவில்லை 

 

 

“என்னங்க.. தீரா..” எழில் கதறலாக அழைக்க அவளின் அழைப்பிற்கு எந்த பலனும் இல்லை.. விஜய்யின் சுவாசம் எப்போதோ நின்று விட்டிருந்தது… நிலைத்த விழிகளுடன் எழில் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்..

 

 

இமை சிமிட்டும்*** 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்