Loading

இமை 45

 

 

இரவு வெகுநேரம் காரை ஓட்டிக் கொண்டு இருந்த விஜய்க்கு இந்த தனிமையை இழக்க மனம் வரவில்லை.. நாளை பள்ளி விடுமுறை என்பதால் எங்கேயாவது வெளிய தங்கலாம் என்று முடிவு செய்த விஜய், அருகில் உள்ள ரிசர்ட்டிற்கு தன் காரை செலுத்தினான்..

 

 

காரில் உறங்கி கொண்டு இருந்த இருவரையும் ஒரு நொடி பார்த்தவன், அவர்களை தனியே விட்டு செல்ல மனமில்லாமல், தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்து பேச அடுத்த சில நொடிகளில் அந்த ஹோட்டலின் மேனேஜர்  வேகமாக வெளியே வந்து விஜய் கார் அருகில் வந்து “மிஸ்டர் விஜயேந்திரன் சார்..?” என்று பணிவுடன் கேட்க நிற்க 

 

 

“ம் எஸ்.. இந்த நேரத்தில் டிஸ்டர்ப் செஞ்சிட்டேன்.. என்னால இவங்களை விட்டு வர முடியல..” என்று தன் செயலுக்கு விளக்கம் கூறிவிட்டு, தனக்கு ஒரு அறை வேண்டும் என்று கேட்க, சில நிமிடங்களில் அவர்களுக்கு அறை தாயாராக இருந்தது..

 

 

எழிலை எழுப்பிய விஜய் அவள் எழாமல் அயர்ந்து உறங்குவதை கண்டு, “என்ன மேடம் நல்லா தூங்கறாங்க… எழுப்ப மனசு வர மாட்டிங்குதே.. இப்போ என்ன செய்யலாம்” என்று யோசித்து கொண்டு இருக்க

 

 

“அங்கிள்..” உறக்கத்தில் இருந்த நேத்ரா அவனை அழைக்க, “பேபி முழிச்சிட்டிங்களா?.” என்று கேட்டபடி விஜய் நேத்ராவை தூக்க, நேத்ரா அவன் தோளில் சாய்ந்து தன் தூக்கத்தை தொடர்ந்தாள்.. “சார் நான் பாப்பாவை தூக்கவா? மேனேஜர் கேட்க 

 

 

 

“இருக்கட்டும்..‌” என்றவன் மீண்டும் எழிலை எழுப்ப, “அம்முவ மட்டும் தான் தூக்குவிங்களா?! என்னையும் தூக்குங்க.. என்று உறக்க கலக்கத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் தன் ஆழ்மனதின் ஏக்கத்தை உறக்கத்தில் உளறி கொண்டு இருந்த எழிலை  வியப்பாக பார்த்த விஜய் 

 

 

 

“அடியே ராங்கி இவ்வளவு ஆசை மனசில வச்சிட்டு தான் என்னைய இப்படி அலைய விட்றியா.. இருக்குடி உனக்கு..” என்று மனதில் கறுவிக் கொண்டு,  நேத்ராவை ஒரு தோளில் தூக்கிக் கொண்டு மறு தோளில் எழிலை தூக்கி கொண்டான்.. உதவிக்கு வந்த மேனேஜர் பார்வையில் தடுத்து நிறுத்தி விட்டு 

 

 

 

தன் சுகமான சுமைகளை தங்கள் அறைக்கு தூக்கி சென்று படுக்க வைத்து விட்டு தங்கள் உடைமைகளை எடுக்க வெளியே வர,  அதற்குள் மேனேஜரே அவன் உடைமைகளை எடுத்து கொண்டு வந்தார்.. அவருக்கு நன்றி கூறிவிட்டு கதவை அடைத்து விட்டு உள்ளே வந்த விஜய்க்கு படுக்கையில் உறங்கி கொண்டு இருந்த சின்ன குழந்தையையும், பெரிய குழந்தையையும் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.. 

 

 

 

எத்தனை நாள் ஏக்கம் இன்று நிறைவேற இந்த சந்தோஷத்தை தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் தோன்ற உடனே அழைத்து விட்டான் அவர்களுக்கு..

 

 

“ஹலோ யாருங்க?..” நல்ல உறக்கத்தில் இருந்த ஷக்தியும், விதுரனும் உறக்கம் கலைந்த எரிச்சல் பேச, 

 

 

“காய்ஸ் இங்க பாருங்க என் பக்கத்தில் யார் இருக்காங்க?..” என்று உற்சாகமாக கூறிய விஜய் உறங்கி கொண்டு இருந்த எழிலையும் நேத்ராவையும் தன் அலைபேசியில் காண்பிக்க, உறக்க கலக்கத்தில் விஜய் பேசுவதை அசுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்த இருவரும், நேத்ராவையும் எழிலையும் பார்த்து திகைத்து மங்கலாக தெரிந்த கண்களை நன்றாக தேய்த்துக் கொண்டு 

 

 

 

“இதென்னடா அதிசயம்?!  நீ எப்படா கல்யாணம் பண்ண? எங்களுக்கே தெரியாம சிஸ்டரை மேரேஜ் பண்ணிட்டியா?.” என விதுரன் சிறு கோபத்துடன் கேட்க “அவ்வளவு சீக்கிரம் எழில் சிஸ்டர் மனசு மாறிட்டாங்களா?.. இதெல்லாம் தப்பாச்சே.. காலையில் எழில் சிஸ்டர் கிட்ட பேசி இன்னும் கொஞ்ச நாள் உன்னை சுத்த விட சொல்லணுமே..” என்று ஷக்தியும் கேலி பேச 

 

 

 

இருவரையும் முறைத்துப் பார்த்த விஜய் நீங்க தான் டா உயிர் நண்பர்கள்.. ஒரு சந்தோஷமான விசயத்தை உங்க கிட்ட ஷேர் செய்ய வந்தால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கலாய்க்கிறிங்கள்ல.. போங்கடா நான் போறேன்.. என்று முறுக்கி கொண்ட விஜய்யிடம் 

 

 

 

“சரிடா மச்சி கோச்சுக்காத.. நல்ல தூக்கத்தில் இருந்து எங்களை எழுப்பினேல்ல அதான் சின்ன கலாய்ப்பு..” விஜய்யை சமாதானம் செய்த இருவரும், விஜய்யின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்து இருவருக்கும் சந்தோஷமாக இருந்தது.. “இது எப்படி சாத்தியம் ஆச்சு?.” என்று வியப்பாக கேட்க 

 

 

 

“அதுவா..?” என்ற விஜய் நடந்ததை சொல்ல, “அடப்பாவி அப்போ நீ இங்க கூட்டிட்டு வந்தது எழில் சிஸ்டருக்கு தெரியாதா?” கேட்ட ஷக்தியிடம் இல்லை என்று தலையசைத்த விஜய், “இன்னிக்கு என்னமோ மேடம் நல்ல மூட்ல இருந்தாங்க போலடா அதான் இன்னிக்கு நான் வெளியே போகலாம் சொன்னதும் எந்த மறுப்பும் சொல்லாமல் வந்துட்டா..” என்று நம்ப முடியாமல் சந்தோசத்துடன் கூறிய விஜய்யை இருவரும் புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தனர்..

 

 

 

“சரி மச்சி எங்க கூட பேசிட்டே இருந்து இந்த தருணத்தை இழக்காத என்ஜாய் திஸ் மொமெண்ட்..  இன்று வந்த இந்த ஒரு நாள், இனி உன் லைஃப்ல தொடர்ந்து வரும் என்று நாங்க விஷ் பண்றோம் சீக்கிரமே எழில் சிஸ்டர் மனசு மாறி உன்னை மேரேஜ் பண்ணிப்பாங்க.. அந்த நாள் ரொம்ப தூரம் இல்லை.. ஆல் த பெஸ்ட் டா.. மச்சி” என விதுரனும் சக்தியும் விஜய்க்கு வாழ்த்திவிட்டு தங்கள் இணைப்பை துண்டித்தனர்..

 

 

 

நண்பர்களுடன் பேசிவிட்டு படுக்க வந்த விஜய் இருவருக்கும் இடையே படுக்க மனம் உந்த.. ம் கூம் வேண்டாம் இப்போ தான் இந்த ராங்கி கோவப்படாம பேச ஆரம்பிச்சிருக்கா.. நம்ம ஓவரா அட்வான்டேஜ் எடுத்தா மறுபடியும் முறுக்கி கொள்வா.. சோ நான் என் பேபி பக்கத்துலயே படுத்துகிறேன்..” முடிவெடுத்து நேத்ராவின் அருகில் படுத்து கொண்டான்..

 

 

அதிகாலை பறவைகள் சத்தம் கேட்டு கண்விழித்தாள் எழில்.. இப்படி சொல்ல தான் ஆசை ஆனால் விடிந்தும் இன்னும் உறக்கம் கலையாமல் உறங்கி கொண்டிருந்தாள் எழில்.. இரண்டு நாட்கள் உறங்காமல் இருந்ததற்கு இன்று சேர்த்து உறங்கி கொண்டு இருந்தாள்.. 

 

 

உடற்பயிற்சி செய்வதற்காக சற்று அதிகாலை இல்லை எழுந்து பழக்கம் கொண்ட விஜய்க்கு இன்றும் அதிகாலையில் முழிப்பு வரவும் எழ முயற்சி செய்தவன் மார்பில் ஏதோ கனமாக இருக்க சட்டென்று கண் திறந்து பார்த்தான்.. பார்த்தவன் இனிமையாக அதிர்ந்தான்..

 

 

 

உறக்கத்தில் நேத்ரா உருண்டு வந்து விஜய் மேல் ஏறி படுத்திருக்க.. மை ஸ்வீட் பேபி..” என்று கொஞ்சிக் கொண்டு நேத்ராவின் தலையை தடவ தன் கையை உயர்த்த அதை அசைக்க முடியாமல் போகவும் வலது பக்கம் திரும்பிப் பார்த்தவன் மீண்டும் இனிமையாக அதிர்ந்தான்.. அவன் கையை தலையனாயாக வைத்து எழில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்..

 

 

 

தன் வாழ்நாளில் இந்த விடியல் மட்டும் தான் இத்தனை அழகாக தோன்றியது அவனுக்கு.. இருவரின் உறக்கம் கலையாமல் மேசை மீது இருந்த தன் அலைபேசியை எடுத்த விஜய் தங்கள் மூவரையும் அதில் புகைப்படமாக எடுத்து கொண்டான்.. படுக்கையில் இருந்து எழ மனம் வராமல் மீண்டும் படுத்து கொண்டு இந்த நிமிடங்களை கண்மூடி ரசித்துக் கொண்டு இருந்தான்..

 

 

 

சற்று நேரம் கழித்து கண் விழித்த எழிலுக்கு முதலில் தான் எங்கிருக்கிறோம் என்று தெரியாமல் சற்று குழப்பத்துடன் தான் இருக்கும் இடத்தை சுற்றி பார்த்து கொண்டு இருக்க அவளின் பார்வை வட்டத்தில் உறங்கி கொண்டு இருந்த விஜய் விழ.. நேத்து இவங்க கூட கார்ல தானே வந்திட்டு இருந்தோம்… இங்க எப்படி வந்தோம்.. நடந்த எதுவும் தெரியாமல் அப்படியா தூங்கினேன்.. என்று குழப்பத்துடனே விஜய்யை மீண்டும் பார்த்தாள்..

 

 

 

தன் மேல் படுத்திருந்த நேத்ராவை ஒரு கையால் அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தவனை சில நொடிகள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த எழில் அவள் அறியாமல் அவளின் கரம் மேலே எழுந்து விஜய் கன்னத்தை வருட போன நொடியில் நேத்ரா புரண்டு படுக்க அப்போது தான் தான் செய்ய போன செயலை உணர்ந்து விதிர்த்து விலகியவள் தன் தலை விஜய்யின் கரத்தில் இருப்பதை உணர்ந்து.. மின்சாரம் தாக்கியது போல சட்டென்று எழுந்து அமர்ந்தாள்…

 

 

 

யாரை கேட்டு இவங்க எங்களை இங்க கூட்டிட்டு வந்தாங்க?.. என்று நினைத்தபடி விஜய்யை முறைத்து பார்க்க, எழில் விழித்ததில் இருந்து அத்தனை நேரம் உறங்குவது போல் நடித்து கொண்டு இருந்த விஜய் எழில் தன்னை முறைக்க தொடங்கவும், ஆஹா ராங்கி மோடுக்கு வர்றா அலார்ட் ஆகிக்கோடா விஜய்..” என்று விஜய் மனம் எச்சரிக்க.. அப்போது தான் விழிப்பு வந்தது போல் விஜய் கண்விழிக்க..

 

 

ஏனோ எழிலுக்கு இப்போது விஜய்யை நேரடியாக பார்க்க தயக்கமாக இருக்க, அவன் கண்விழிக்கும் நொடியில் வேகமாக குளியலறை சென்று மறைந்தாள்.. நேத்து என்ன ஆச்சு எனக்கு?.. கார்ல வரும் போது தூங்கினது தான் ஞாபகம் இருக்கு. அதுக்கு பிறகு என்ன நடந்தது ஞாபகம் இல்லையே… 

 

 

 

சின்ன பல்லி சத்தம் கேட்டால் கூட தூக்கத்தில் இருந்து விழிக்கும் எனக்கு நேத்து நடந்தது எதுவும் தெரியாமல் அப்படியா தூங்கினேன்..? என்று தன்னை எண்ணி வியந்த எழில்  அப்போ என்னை இந்த ரூமிற்கு தூக்கிட்டு வந்ததும் ஹோட்டல் கார் தானா அய்யோ இப்ப நான் எப்படி ஹோட்டல் கார் முகத்தில் முழிப்பேன்..” என்று தவிப்பாக நினைத்தபடி எழில் குளியலறையில் நின்றிருக்க, 

 

 

கதவு தட்டும் சத்தம் கேட்டு தன் சிந்தனை கலைந்த எழிலிற்கு கதவை திறக்க தயக்கமாக இருக்க, எவ்வளவு நேரம் அங்கேயே இருப்ப ராங்கி பிரஷ் பண்ண வேண்டாமா?.. குளிக்க வேண்டாமா?..” விஜய்யின் குரல் வெளியே கேட்க, எதுவும் எடுக்காமல் வந்த தன் மடத்தனத்தை எண்ணி தன் நெற்றியில் தட்டி கொண்ட எழிலுக்கு.. விஜய்யின் குரலில் கேலி இருப்பது போல் தோன்றியது..

 

 

இன்னிக்கு முழுவதும் அங்கேயே நிக்க போறியா லிட்டில் கேர்ள்..?” விஜய் கேட்க மெதுவாக கதவைத் திறந்தாள் எழில் அங்கு மாற்று உடையுடனும், பேஸ்ட் பிரஷ் சகிதமாக நின்றிருந்த விஜய்யிடம் அதை வாங்கி கொண்டு, நேத்து கார் ஓட்டும் போது, எந்த ஐடியாவும் இல்லை என்று சொல்லிட்டு, இப்போ எல்லாம் எடுத்திட்டு வந்திருக்காங்க.. என்று தனக்குள் தோன்றிய கேள்வியை ஒதுக்கி வைத்து விட்டு குளித்து  வர, அவளுக்கு முன்பே நேத்ராவும், விஜய்யும் குளித்து தயாராகி இருந்தனர்..

 

 

 

“அம்மா இங்க பாருங்க புது ட்ரெஸ்.. அங்கிள் வாங்கி கொடுத்தாங்க..” நேத்ரா தான் அணிந்திருந்த புது உடையை காண்பித்து சந்தோஷமாக சொல்ல, “சூப்பரா இருக்கு அம்மு..” என்று பாராட்டிய எழில் விஜய்யிடம் திரும்பி 

 

 

 

“வீட்டுக்கு போகாமல் இங்க ஏன் வந்திங்க?.. என்று கேட்கும் முன் அவள் முகத்தை பார்த்தே அவள் கேட்க போகும் கேள்வியை உணர்ந்து, “சரி சரி நேரம் ஆச்சு வாங்க சாப்பிட போகலாம்..” என்று எழிலை பேசவிடாமல் நேத்ராவை தூக்கி கொண்டு முன்னே செல்ல.. 

 

 

விஜய்யின் செயல் எழிலுக்கு சிரிப்பை வரவழைத்தது  நேத்ராவின் மலர்ந்த முகத்தை பார்த்து அம்முக்காவாவது நான் சந்தோஷமாக இருக்கணும்.. என்று தன் மாற்றத்தில் தனக்கு தானே சமாதானம் செய்து கொண்ட சிறு புன்னகையுடன் அவர்களை பின் தொடர்ந்தாள் எழில்..

 

 

 

மூவரும் உணவருந்தும் இடத்திற்கு செல்ல நேத்ராவை தன் கரங்களில் தூக்கி கொண்டு கம்பீரமாக நடந்து சென்ற விஜய்யை அங்கிருந்த பெண்களில் சிலர்  ரசனையுடன் பார்த்துவிட்டு அவன் அருகில் இருந்த எழிலை அவனுக்கு திருஷ்டி பொம்மையாக நினைத்து முகம் சுளித்து பார்த்தனர்.. 

 

 

“அங்க பாரேன் அவர் எவ்வளவு ஹேண்ட்சம்மா அழகா இருக்கார்.. அவர் பக்கத்தில் வர்ற பெண்ணை பாரேன்.. அவருக்கு போய் இப்படி ஒரு வொய்ஃபா?..” என்று ஏளனமாக எழில் காதில் விழும்படி சொல்ல அத்தனை நேரம் முகம் மலர்ந்து விஜய்யுடன் சென்ற எழில், இவர்களின் பேச்சில் முகம் கன்ற அந்த இடத்தில் வேரோடி நின்றாள்..

 

 

 

நேத்ராவுடன் பேசி கொண்டு சென்றதால் இவர்களின் பேச்சு விஜய்யின் காதில் விழவில்லை.. அதுமட்டுமல்ல எழில் சிரித்த முகத்துடன் தன்னோடு வருவதால் சுற்றுப்புறம் எதையும் கருத்தில் கொள்ளாமல் தங்கள் மூவர் மட்டுமே இவ்வுலகில் இருப்பதாக நினைத்து கொண்டான்..

 

 

“அங்கிள் அம்மா வரலை..” நேத்ரா கூறிய பிறகே நின்று திரும்பி பார்த்த விஜய் எழில் தங்களோடு வராமல் அங்கேயே நின்று கொண்டு இருப்பதை கண்டு, “என்னாச்சு லிட்டில் கேர்ள் ஏன் அங்கேயே நிக்கிற?..” என்று வினவ

 

 

“இல்லை நான் வரலை நான் வீட்டுக்கு போறேன்.. நீங்க அம்முவோட கொஞ்ச நேரம் இருந்துட்டு வாங்க..” என்று விஜய்யின் பதிலை எதிர்பார்க்காமல் வந்த வழியே திரும்பி சென்ற எழிலை, “இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்தா இப்போ என்ன ஆச்சு..” என்று குழப்பத்துடன் 

 

 

 

“ஹெய் ராங்கி!! நில்லு என்ன ஆச்சு ஏன் போற?! என்று கேட்டபடி அவள் பின்னே சென்ற விஜய்யிடம் திரும்பி, என் மேலே சத்தியம் இனி நீங்க என்னை பார்க்க கூடாது பேச கூடாது.. நீங்க அழகா கம்பீரமாக இருக்கிங்க ஆனால் நான்?.. என்று தன் முகத்தை காண்பித்து கூறிய எழிலிடம் விஜய் ஏதோ சொல்ல வர 

 

 

 

“நீங்க எதுவம் பேச வேண்டாம்.. நான் உங்களுக்கு எப்பவும் பொருந்த மாட்டேன்.. இனி நாம பார்க்கவே கூடாது.. என் வார்த்தையை மீறினால் நிச்சயமாக நான் செத்துருவேன்..” என்று முகம் இறுக, கண்கள் சிவக்க கூறிய எழிலை, அதிர்ந்து பார்த்து கொண்டு இருந்த விஜய்

 

 

 

ஒரு பெரு மூச்சுடன், இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்த இப்போ என்ன ஆச்சு என்று தெரியல.. பிரச்சினை வெளியே இருந்தால் என்னால் சரி செய்ய முடியும்.. ஆனால் அது உனக்குள்ள இருக்கு.. தூங்கறவங்கள எழுப்பலாம்.. ஆனால் தூங்கற மாதிரி நடிக்கிறவங்களை நிச்சயம் எழுப்ப முடியாது.. 

 

 

 

நான் மனசால டையர்ட் ஆகிட்டேன்.. இனி என்னால் முடியாது.. நீ சந்தோஷமாக இருந்தால் போதும்.. என் பேபி மேல சத்தியம் இனி நான் எப்பவும் உன்னை தேடி வர மாட்டேன்..” என்று எழில் கண்களை பார்த்து வேதனையுடன் கூறிய விஜய், “பேபி அங்கிளுக்கு ஒரு முக்கியமான வேலை வந்திருச்சு டா அதனால் நாம இன்னொரு நாள் இங்க வருவோம்..” என்று நேத்ராவை சமாதானம் செய்தவன் 

 

 

“உங்களுக்கு கார் வரும் நீங்க வீட்டுக்கு போகலாம்..” என்றபடி நேத்ராவை எழிலிடம் விட்டவன், 

 

 

“சந்தோசத்தின் உச்சிக்கு கூட்டிட்டு போய் அங்க இருந்து என்னை கீழ தள்ளி விட்டுட்ட மதி.. நீ ஜெயிச்சிட்ட லிட்டில் கேர்ள்.. நான் தோத்துட்டேன்?!!” சந்தோஷமாக இரு.”. கலங்கி விட்ட கண்களோடு எழிலிடம் வேதனையோடு கூறிய விஜய் 

 

 

 

“உங்களுக்கு கார் வர வரைக்கும் உங்களுக்கு துணையாக நான் இருக்கேன்..” என்று அங்கிருந்த இருக்கையில் தலையை பிடித்து அமர்ந்து கொண்டான்..

 

 

 

விஜய்யின் கார் வரவும், அவர்களை அதில் ஏற்றி விட்டு தன் காரை நோக்கி சென்ற விஜய்யை மனதில் பெரும் வலியுடன் பார்த்து கொண்டு இருந்தாள் எழில்.. சற்று முன் வரை அத்தனை சந்தோஷமாக இருந்தவனை தானே அவனின் வேதனைக்கு காரணமானதை எண்ணி அவள் மனம் கதறியது.‌ 

 

 

அவர்கள் அந்த ஹோட்டலில் இருந்து வந்த ஒரு வாரத்தில், “அய்யோ நான் உங்களை என் உயிராக நேசிக்கிறேன் தீரா..” என்று

எழில் விஜய்யின் கால் பிடித்து கதறி கொண்டிருந்தாள்..

 

 

இமை சிமிட்டும் 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்