இமை 41
எழில் வீட்டில் அங்கு ஹால் சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த எழில் தங்கை திவ்யா புகைப்படத்திற்கு மாலை அணிவித்து இருந்ததை அதிர்ந்து பார்த்து கொண்டு இருந்த விஜய்யின் பின் பக்கம் சிவகாமி அழுகை சத்தம் கேட்க, விஜய் திரும்பி பார்த்தான்
சிவகாமியோடு அவர் கணவர் பரசுராமன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார்.. அவரின் வலது கால் முட்டி கீழே அகற்ற பட்டு இருந்தது.. விஜய் அவர்களை கேள்வியாக பார்க்க “ ஒரு ஆக்சிடெண்ட்ல என் கால் அடி பட்டிருச்சு..” என்று அவனுக்கு பதில் கூறிய பரசுராமன், “தம்பி அன்னைக்கு நீங்க தான் எங்க பொண்ணு ஹாஸ்பிட்டல் சேர்த்து அவ கூட துணையா இருந்தீங்களா..?” என்று பரசுராமன் கேட்க,
விஜய் ஆம் என்று சொல்லவும், “அவ்வளவு நேரம் இருந்த நீங்க அப்புறம் ஏன் தம்பி எங்க பொண்ணை விட்டுட்டு போனீங்க ஒரு வேளை நீங்க மட்டும் அங்க இருந்திருந்திங்கன்னா எங்களுக்கு இவ்வளவு கஷ்டம் வந்திருக்காது இல்ல..?” அவர் ஆதங்கமாக கேட்க, “நான் அங்க இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்..?” விஜய் புரியாமல் கேட்க
“ நீங்க காப்பாத்தின எங்க பொண்ணை அவன் காப்பாத்தினாதாக சொன்ன பொய்யை நாங்கள் நம்பி இருந்திருக்க மாட்டோமே.. எங்களுக்கு அந்த ஆளை பத்தி கொஞ்சமாவது சந்தேகம் வந்திருக்குமே.. நாங்க புரிஞ்சிருப்போமே.. நல்லது செஞ்சிட்டு அடையாளமே இல்லாமல் நீங்க கிளம்பிட்டிங்க, ஆனால் அவன் நல்லவன் மாதிரி நடிச்ச எங்க குடும்பத்துக்குள்ள வந்து கடைசியில் நல்ல பாம்பு மாதிரி விஷத்தை கக்கிட்டு போய்ட்டானே..” என்று அழுதவரை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் தடுமாறிய விஜய்
“அது அன்னிக்கு மதியை அந்த நிலைக்கு ஆளாக்கினவங்களை கண்டுபிடிச்சு அவங்களை போலிஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சிட்டு மதியை பார்க்க வந்தேன்.. அப்போ அஷ்வின் “உங்க பொண்ணு தான் என் வருங்கால மனைவி.. என்று உங்க கிட்ட சொல்லிட்டு இருந்ததை கேட்டேன் இனி நீங்க மதியை பத்தி கவலை இல்லை அவளை அஷ்வினும், நீங்களும் பார்த்துப்பிங்க என்று நினைச்சுட்டு நான் யாரையும் பார்க்காம வந்த உடனே கிளம்பிட்டேன்..” என்று விஜய் விளக்கம் அளிக்க
எழிலின் பெற்றோர் விஜய்யை திகைத்து பார்த்து கொண்டு இருந்தனர்.. திருமணம் செய்து கொள்கிறேன் என்று நம்பிக்கை அளித்தவன், தங்கள் மகள் அழகை இழந்ததும் அவளை விட்டு விலக, தங்களுக்கு அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் தங்கள் மகளின் துன்பத்திற்கு காரணமானவங்களை தண்டித்ததோடு மட்டும் இல்லாமல்
இத்தனை வருடங்கள் கழித்து அவளுக்காக தங்களிடம் வந்து அவள் துன்பத்தை நீக்க வழி தேடி கொண்டு இருக்கும் விஜய்யை ஆச்சரியமாக பார்த்து கொண்டு இருந்தவர்களுக்கு வியப்பாக இருந்தாலும் அஷ்வின் மூலமாக ஏற்பட்ட ஏமாற்றத்தின் காரணமாக விஜய்யை நம்பவும் தயக்கமாக இருந்தது.. அவர்கள் முகத்தை பாரத்தே அவர்களின் மனதை புரிந்தவன், அதற்காக வருத்த படாமல்
இந்த போட்டோல இருக்கிறது..?” என்று தயங்கி கேட்க
“செல்லம்மா வளர்த்த எங்க பொண்ணு தம்பி..” சிவகாமி அழுதபடி கூற, “மதி தங்கையா?. இப்..போ..” என்று முழுதாக கேட்க முடியாமல் தயங்கி நிறுத்த, அவ எங்களை எல்லாம் விட்டு போய்ட்டா.. அந்த ராட்சசன் என் பொண்ணை கொன்னுட்டான்.. அவங்க அக்காவை காப்பாத்த தன் வாழ்க்கையை பலி கொடுத்த எங்க குல சாமி.! தம்பி..” என்று அழுதவர்களை திகைத்து பார்த்தான்..
இந்த சிறு பெண் இந்த வயதிலேயே இறந்ததாக சொன்னதையே விஜய்யால் தாங்க முடியவில்லை.. அதுவும் மதிக்காக தன் வாழ்கையை பலி கொடுத்தாள் என அறிந்ததும் “நீங்க என்ன சொல்றீங்க?. இந்த சின்ன பொண்ணு எப்படி..?” என்று அதிர்ந்து கேட்க..
“மதி ஹாஸ்பிடல்ல சேர்த்த அன்னிக்கு மட்டும் தான் அவன் வந்தான்.. அதுக்கு பிறகு அவன் வரவே இல்லை.. மதி டிஸ்சார்ஜ் ஆன ஒரு வாரத்தில் எங்க வீட்டுக்கு வந்தான்.. அந்த அஷ்வின்.. அவன் வந்த போது மதியும், திவ்யாவும் பக்கத்தில் கோவிலுக்கு போய்ருந்தாங்க.. வந்ததும் உங்க ரெண்டாவது பெண் திவ்யாவை பிடிச்சிருக்கு அவளை கல்யாணம் செஞ்சு வைங்க என்று கேட்க.. எங்க எல்லாருக்கும் அதிர்ச்சி..
“என்ன மாப்பிள்ளை சொல்றிங்க?. அப்போ மதி?!! அவளுக்கு உங்களோட நிச்சயம் ஆகிடுச்சு..” என்று சிவகாமி அதிர்ச்சியாக கேட்க, “நான் மதியை கல்யாணம் பண்ண சம்மதித்ததே அவளோட அழகுக்காக தான்.. இப்ப அதுவே இல்லை என்ற போது அவளை நான் எப்படி கட்டிப்பேன்?..
என் அழகுக்கு அவ ஈடாக வருவாளா.. எதாவது ஒரு ஃபங்சன் வந்தால், அவளை எந்த முகத்தை வைத்து கூட்டிட்டு நான் வெளியே கூட்டிட்டு போவேன்.. எல்லாரும் என்னை பரிதாபமாக பார்ப்பாங்கள்ல..என அலட்சியமாக கூறிய அஸ்வினை எழில் பெற்றோர் அதிர்ந்து பார்த்து
“மாப்பிள்ளை அப்போ அன்னைக்கு ஹாஸ்பிடல்ல வச்சு உங்க பொண்ணு தான் என்னோட வருங்கால மனைவி என்று வாக்குறுதி எல்லாம் கொடுத்தீங்களே..” ஒரு வேளை அஷ்வின் தங்களிடம் விளையாடுகிறானோ என நினைத்தபடி மீண்டும் அவன் சொல்வதை நம்பாமல் சிறு நம்பிக்கையோடு கேட்க
“ஆமா உங்க பொண்ணு தான் எனக்கு வருங்கால மனைவி சொன்னேன் ஆனா அது யாருன்னு சொல்லலையே உங்க ரெண்டாவது பொண்ணு தான் என்னோட வருங்கால மனைவி..” என்று அறிவித்து அவர்கள் நம்பிக்கையில் ஒரு கூடை மண்ணை அள்ளி போட்ட அஷ்வினை நம்ப முடியாமல் பார்த்து
“மாப்பிள்ளை அவ சின்ன பொண்ணு இப்போ தான் ஸ்கூல் படிக்கிறா.. அவளை போய் இப்படி நினைக்கிறிங்க?.. உங்க மனசில் இப்படி ஒரு எண்ணம் எப்படி வந்துச்சு..? மதியை நீங்க கல்யாணம் செய்யலேனாலும் பரவாயில்லை ஆனால் திவ்யாவை நாங்க உங்களுக்கு கல்யாணம் செஞ்சு தர மாட்டோம்.. எல்லாத்தையும் இதோட நிறுத்திக்கலாம்..” என்று பரசுராமன் அறிவிக்க
“ஹ..ஹ. என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?.. நீ சொன்னதும் நான் அப்படியே கேட்பேன்னு எப்படி நினைச்ச?..” என்று சட்டென்று ஒருமைக்கு தாவிய அஸ்வினின் இந்த பேச்சு அவர்களுக்கு மனதில் சற்று பயத்தை கொடுக்க
“தம்பி நீங்க பேசறது எதுவும் சரியில்லை நாங்க உங்கள எவ்வளவு நம்பினோம்.. இப்போ இப்படி பேசறது நியாயமே இல்லை..” என்ற பரசுராமனை அலட்சியமாக பார்த்து, “உன்கிட்ட சரி தப்பு எதுவும் நான் கேட்கல எனக்கு உன் இரண்டாவது பொண்ணு திவ்யா வேணும் அவ்வளவுதான் இல்ல நீங்க கொடுக்க மறுத்தீங்கன்னா இதோட பின்விளைவுகள் ரொம்ப விபரீதமா இருக்கும்…” என்று மிரட்டிய அஷ்வினை அவர்கள் திகைத்து பார்க்க
“என்ன ரெண்டு பேரும் அப்படி பார்க்கிறிங்க..? ஊர்ல எவ்வளவோ அழகான பொண்ணுங்க இருந்தும் உன் பொண்ணு ஏன் கேக்குறீங்கன்னு பாக்குறியா?. எனக்கு தேவை ஃபேமிலி பேக் ரவுண்ட் சரியாக இல்லாத ஒரு ஃபேமிலியில் இருந்து ஒரு அழகான மனைவி தான் வேண்டும் நான் என்ன செஞ்சாலும் அதை தடுக்காத மனைவி வேணும்..
இப்போ எனக்கு கோபம் வருதுன்னு வச்சிக்கோங்க அந்த கோபத்தை என்னால் வெளியே எங்கேயும் காட்ட முடியாது.. அதை என் மனைவி கிட்ட தான் காட்டுவேன்.. இதே ஒரு பணக்கார பெண்ணை கல்யாணம் செஞ்சா அவ மேல ஒரு தூசி பட்டாலும் அவங்க ஃபேமிலி என்னை சும்மா விடுவாங்களா?.. அதுக்கு தான் நான் உங்க குடும்பத்தை தேர்ந்தெடுத்தேன்.. இனி புதுசாக நான் எந்த குடும்பதை போய் தேட?. எழிலை மேரேஜ் செய்யறதுக்கு என் அப்பா கிட்ட இந்த காரணம் சொல்லி தானே சம்மதம் வாங்கினேன்..
அதனால் முரண்டு பிடிக்காமல் உங்க ரெண்டாவது பொண்ணை கொடுங்க..” என்று அதிகாரம் செய்தவனை ஸ்தம்பித்து பார்த்து நின்றனர்.. நாங்க மறுத்தா என்ன செய்விங்க?..” பரசுராமன் கோபமாக கேட்க,
“ஹ..ஹ. குட் ஜோக்..” என்று நக்கல் பேசிய அஷ்வின் “மறுக்கிற நிலையில் நீங்கள் இல்லை.. அப்படி மறுத்தால், என்று ஒரு நொடி தன் பேச்சை நிறுத்தியவன், உங்க பெரிய பொண்ணு எழில் போன மதி.. அவளும் நானும் ஒரே படுக்கையில் ஒண்ணா இருந்த மாதிரி ஒரு போட்டோ இருக்கு பார்க்கிறிங்களா?..” என்று கோணல் சிரிப்போடு கேட்க பரசுராமனும், சிவகாமியும் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தனர்..
“இல்லை என் பொண்ணு அப்படி தப்பு செய்ய மாட்டா..’ என்று அவர்கள் நம்ப மறுக்க, “உங்க பொண்ணு தப்பு செஞ்சா என்று நான் எப்ப சொன்னேன்..?” என்ற அஷ்வினை அவர்கள் புரியாமல் பார்க்க, ”இது நான் தான் எடிட்டிங் செஞ்சு வச்சிருக்கேன்.. திவ்யாவை எனக்கு மேரேஜ் பண்ணி வைக்கல இந்த போட்டோ எல்லாம் எல்லா பேப்பர்லயும் வரும்..
அதுவும் உங்க பொண்ணு போட்டோ மட்டும் பெரிசா வச்சு வரும்.. என்று மிரட்டியவனை பேச்சு வராமல் அதிர்ந்து பார்த்து கொண்டு இருக்க
கோவிலுக்கு சென்றிருந்த இரு பெண்களும் வீட்டிற்கு வர, பரசுராமனும் சிவகாமியும் தங்கள் மேத்திருந்த தங்கள் முகத்தை அவசரமாக தொலைத்த படி முகத்தில் சிறு புன்னகையுடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர் உள்ளே வந்த எழில் முகம் வாடி இருக்க என்னாச்சு மதி..? என சிவகாமி எழில் அருகில் வந்து அவள் தலையை தடவி கேட்க,
“அது.. கோவில்ல ஒரு பாப்பா அக்காவை பார்த்து பயந்துட்டா.. அதான் அக்கா இப்படி இருக்கா..” என்று திவ்யா வருத்தமாக சொல்ல, “நான் சொன்னது சரி தான..? என்று நக்கல் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்த எழில் அஷ்வினை பார்த்தாள்.. மருத்துவமனையில் பார்த்த பிறகு இன்று தான் அவனை பார்க்க எழில் முகம் மலர்ந்து, “அஷ்ஷி..!!” என்று உற்சாகமாக அழைத்தபடி அவன் கையை பிடிக்க வர,
எழிலிடம் இருந்து சற்று விலகி நின்ற அஷ்வின், அவள் பெற்றோரை பார்த்து. இன்னும் ரெண்டு நாள்ல வருவேன் நல்ல பதிலை சொல்லுங்க..” என்றபடி வீட்டை விட்டு வெளியேறிய அஷ்வினை பெண்கள் இருவரும் குழப்பமாக பார்த்து கொண்டு இருக்க.. எழிலிற்கு அஸ்வினின் இந்த பாராமுகம் குழப்பத்தை கொடுக்க,
“என்னாச்சு அஷ்வின் சரியாக பேசாமல் போறாங்க?.. சிவகாமியிடம் கேட்க அவங்க வேலையில் ஏதோ பிரச்சினை போல அதான் போறாங்க.. நீங்க உங்க ரூமுக்கு போங்க நான் காபி கொண்டு வர்றேன்..” என்று அவர்களை அறைக்கு அனுப்பி வைத்தார்..
எழில் மனம் அன்று மருத்துவமனையில் தன்னை அக்கறையாக பார்த்து கொண்ட அந்த அஸ்வினை தேடியது.. இந்த அஷ்வினுக்கும், அன்று தன்னிடம் அக்கறை காட்டிய அஷ்வினுக்கும் மலைக்கும், மடுவிற்குமான வித்தியாசத்தை உணர்ந்தாள்..
எழிலுக்கு முகத்தில் இன்னும் காயம் இருப்பதால் மருந்து மாத்திரைகள் உபயோகித்து கொண்டு இருந்தாள்.. அதனால் விரைவில் உறங்கி விடுவாள்.. பிள்ளைகள் உறங்குவதை பார்த்து கொண்டு இருந்த பெற்றவர்களுக்கு மனம் பரிதவித்தது.. அஸ்வினை நினைத்து பயமாகவும் இருந்தது
“எனங்க இப்படி ஆகிடுச்சு..? இந்த அஷ்வின் நல்லவன்னு நம்பி நம்ம பொண்ண கொடுக்க சம்மதிச்சா இவன் இவ்வளவு கேடுகெட்டவனா இருக்கானே.. ஒரு பொண்ணு தப்பிச்சிட்டா நினைச்சு மனசு நிம்மதி அடைஞ்சா இன்னொரு பொண்ணை அந்த நெருப்புக்குள்ள எப்படி தள்ள விட சொல்றானே.. அய்யோ என்னால திவியை அப்படி கற்பனை கூட செய்ய முடியலை.. “ என்று சிவகாமி அரற்ற கொண்டு இருக்க
“இனி நம்ம இந்த ஊர்ல இருக்க வேண்டாம் சிவா.. அஷ்வினை பத்தி போலிஸ்ல புகார் கொடுக்க முடியாது அப்படி கொடுத்தாலும் அவங்க பெரிய ஆளுங்க அவங்க பேச்சு தான் எடுபடும். நம்ம பொண்ணு மானம் தான் போகும்.. இது எதுவும் நமக்கு வேண்டாம் நாம ஊர விட்டு போய்டலாம்..” என்று பரசுராமன் சொல்லி கொண்டு இருக்க
“அப்பா, ம்மா…” என்று அழைத்த படி திவ்யா உள்ளே வந்தாள்..திவ்யாவை பார்த்ததும் சிவகாமி அவசரமாக தன் கண்களை துடைத்துக் கொண்டு, “திவிம்மா என்னடா தூங்கலயா?” என்று கேட்க, திவ்யா இல்லை என்று மறுப்பாக தலையசைத்தாள்.. அவள் முகத்தில் இருந்த தயக்கத்தை பார்த்து
“என்னடா எங்க கிட்ட எதாவது சொல்லணுமா?..” பரசுராமன் வாஞ்சையுடன் வினவ, “அப்பா இந்த அஷ்வின் மாமா இப்போ எல்லாம் சரியே இல்லை.. அவர்.. அவர்..” என்று திவ்யா சொல்ல முடியாமல் தடுமாற, “என்னடா என்ன சொல்ற அவன் என்ன செஞ்சான்..? சிவகாமி பதட்டமாக கேட்க
“இப்போ எல்லாம் அவர் என்னை தொட்டு தொட்டு பேசுறாங்க.. எனக்கு அது பிடிக்கவே இல்லை..” என்று முகம் சுளித்து கூற, பெற்றவர்களுக்கு திக் என்று இருந்தது.. இதற்கு மேல் இதை வளர விட கூடாது என்று நினைத்த பரசுராமன், இன்னும் ஒரு வாரத்துக்குள்ள இங்க இருக்கிற எல்ல வேலையும் முடிச்சுட்டு வேற ஊருக்கு போயே ஆகணும்..” என்று மனதில் உறுதியாக முடிவு எடுத்த பரசுராமன்,
“ஒண்ணும் இல்லைடா நீ சின்ன பொண்ணுல்ல உன்கிட்ட சும்மா விளையாடி இருப்பாங்க இனி அப்படி செய்யாதிங்க என்று நான் அவர்கிட்ட சொல்றேன் சரியாடா..” பரசுராமன் மகளை சமாதானம் செய்ய அதில் முகம் தெளிந்த திவ்யா கண்டிப்பா சொல்லுங்கப்பா..
“எனக்கு அவங்க அஷ்வின் மாமா தொட்டால் ஏதோ அருவருப்பாக இருக்கு.. அப்பறம் இதை நான் சொன்னேன்னு அக்கா கிட்ட சொல்லிடாதிங்க அக்கா வருத்தப்படுவா.. என்று கூறிவிட்டு வெளியே சென்ற தங்கள் இளைய மகளை பார்த்து, கடவுளே அந்த அஷ்வின் நினைக்கிறது எதுவும் நடந்திட கூடாது..” என்று வேண்டுதலுடன் உறங்க செல்ல
மறு நாளே.. “அப்பா எனக்கு அஷ்வின் மாமாவை பிடிச்சிருக்கு.. அவங்கள எனக்கு கல்யாணம் செஞ்சு வைங்க..” என்று கூறிய திவ்யா அனைவரின் தலையில்
பெரிய கல்லை தூக்கி வைத்திருந்தாள்..
இமை சிமிட்டும்..