இமை 25
தன் ராங்கியை பார்த்துவிட்டு வருவதாக நண்பர்களிடம் கூறிவிட்டு வந்த விஜய்க்கு நேத்ராவை பார்க்க வேண்டும் போல் தோன்ற, சரி முதல்ல குட்டி பேபியை பார்த்துட்டே அப்பறம் பெரிய பேபியை பார்ப்போம்..” என நினைத்து காரை எழில் வீட்டை நோக்கி செலுத்தினான்..
விஜய் எழில் வீட்டின் அருகே வரும் போது வேணி நேத்ராவை தூக்கி கொண்டு எங்கோ வெளியே செல்வதை பார்த்த விஜய் அவர்களை பின்தொடர்ந்தான்.. விஜய் இங்கு வரும் முன் சற்று நேரம் முன்பு
“வேணி ஆண்டி எனக்கு போர் அடிக்குது.. அன்னைக்கு அம்மா என்னை கூட்டிட்டு போன இடத்துக்கு கூட்டிட்டு போறீங்களா..? நேத்ரா ஆர்வமாக கேட்க, வேணி அது எந்த இடம் என்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்.. “எங்க பாப்பா இங்க பக்கத்தில் இருக்க கோவிலுக்கா?.” என கேட்க
“அய்யோ அங்க இல்லை ஆண்ட்டி. அது வேற இடம் அங்க என்ன மாதிரியே பேபிஸ் நிறைய பேர் இருக்காங்க.. அங்க நிறைய பால் இருக்கும் அதுல நிறைய பேபிஸ் விளையாடுவாங்க.. அந்த பேபிஸ் கூட அவங்க மம்மி அப்பறம் அவங்க கூட அங்கிள் எல்லாம் இருப்பாங்க..” என்று கண்கள் விரிய ஆர்வமாக கூற, வேணிக்கு ஆச்சரியமாக இருந்தது
“பாப்பா நிஜமாவா அம்மா உன்னை அங்க கூட்டிட்டு போனாங்க? என்று வேணி நம்ப முடியாமல் கேட்க
“ம்..ம்” என்று குழந்தை வேகமாக தலையசைத்தது.. “அம்மா உன்னை வெளியே கூட்டிட்டு போனாங்களா.. நம்பவே முடியல பாப்பா.. அம்மா உன்னை எங்கேயும் வெளியே கூட்டிட்டு போனதை நான் பார்த்ததே இல்லை.. என்னையும் உன்னை எங்கேயும் வெளியே கூட்டிட்டு போக கூடாது என்று என்கிட்ட ஸ்ட்ரிக்டா சொல்லிருக்காங்க..
ஆனால் உன்னை அவங்களே கூட்டிட்டு போனாங்க சொல்ற பாப்பா.” என்று ஆச்சரியமாக கூற, வேணி சொல்வது நேத்ராவிற்கு புரியவில்லை.. குழந்தை புரியாமல் விழிக்க
“எனக்கு அம்மா கூட்டிட்டு போற இடம் தெரியாது பாப்பா.. நாம இங்க பக்கத்தில் பூங்கா போகலாமா?..” என்று கேட்க, “அங்க அந்த அங்கிள் வரமாட்டாங்களே..!” குழந்தை ஏமாற்றமாக கூற, “ஆங்கிளா!?” என்ன ஆங்கிள் பாப்பா?..” என்று வேணி குழப்பமாக கேட்க
“அச்சோ அது ஆங்கிள் இல்லை ஆண்ட்டி அங்கிள்..” என்று திருத்திய நேத்ரா “அங்க நாங்க போன இடத்துக்கு ஒரு அங்கிள் வந்திருந்தாங்க..” என்று சொல்ல, “எனக்கு அதெல்லாம் தெரியாது பாப்பா இங்க பக்கத்தில் பூங்கா போகலாம்னா சொல்லு நான் கூட்டிட்டு போறேன்.. அதுக்கே அம்மா என்ன சொல்லுவாங்களோ தெரியல ஆனா உன்னையே வீட்டுக்குள்ளே இருக்கு அதனால தான் உன்னை இங்க பக்கத்துல பூங்காவுக்கு கூட்டிட்டு போகலாம்னு நினைக்கிறேன் போகலாமா பாப்பா..” என்ற வேணி
“ஒருவேளை நீ தேடுற ஆங்கிள் நான் அந்த பூங்காவுக்கு வந்தாலும் வரலாம்..” என்று சமாதானம் செய்து நேத்ராவை அருகில் உள்ள பூங்காவிற்கு அழைத்து சென்றார்.. முதலில் விருப்பம் இல்லாமல் இங்கு வந்த நேத்ரா, அங்கிருந்த ஊஞ்சல் சறுக்கு விளையாட்டு பார்த்து குதூகலம் அடைந்தாள்..
“ஆண்ட்டி..!! நான் ஊஞ்சல் உட்காரேன் என்னை ஆட்டி விடுங்க..” என்று உற்சாகமாக கூறியபடி ஊஞ்சல் அமர முயல குழந்தைக்கு கால் எட்டவில்லை.. வேணி நேத்ராவை தூக்கி அமர வைத்து ஊஞ்சலில் ஆட்டி விட, நேத்ராவிற்கு உற்சாகம் தாளவில்லை. அருகில் இருந்த மற்றோர் ஊஞ்சலில் இரு இளைஞர்கள் சற்று வேகமாக ஊஞ்சல் ஆடி கொண்டு இருக்க
அதை பார்த்த நேத்ராவும், “வேணி ஆண்ட்டி எனக்கும் இப்படி வேகமாக ஆட்டி விடுங்க..” என கேட்க “வேணாம் பாப்பா நீ கீழ விழுந்திடுவ..” வேணி மறுக்க, “அந்த அண்ணா ரெண்டு பேரும் வேகமாக ஆட்றாங்க அவங்க கீழ விழல.. ப்ளீஸ் ஆண்ட்டி ஒரே ஒரு தடவை..” என்று கண்கள் சுருக்கி தலை சரித்து சிட்டு குருவி போல் கெஞ்சி கேட்ட அழகில் குழந்தையிடம் வேணியால் மறுக்க முடியவில்லை..
“நான் அவங்க அளவுக்கு வேகமாக ஆட்டி விட மாட்டேன் கொஞ்சம் வேகமா ஆட்டி விட்றேன்..” என்றவாறு ஊஞ்சலை சிறிது வேகமாக ஆட்டிவிட, ம்கூம் இல்லை எனக்கு அவங்களை மாதிரி தான் வேணும்..” என்று முகம் சுருக்கி கூற, “என்ன பாப்பா பிடிவாதம் பிடிக்கிற கீழே விழுந்துட்டேனா அம்மாகிட்ட யாரும் திட்டு வாங்குறது வேணாம் பாப்பா..”என்று வேணி மறுத்து கொண்டிருக்கும்போதே
“நேத்ரா பேபி நான் ஆட்டி விடவா?..” என்று கேட்டு கொண்டே அங்கு நடந்து வந்து கொண்டிருந்த விஜய்யை பார்த்த குழந்தை, “அங்கிள்..!!” என்று கூவி அழைத்த படி ஆடிக்கொண்டு இருந்த ஊஞ்சலில் இருந்து இறங்க முற்பட “ஐயோ பாப்பா கீழ விழுந்திடுவ இறங்காத..” என்று வேணி கத்திக் கொண்டிருக்கும் பொழுது நேத்ரா ஊஞ்சலில் இருந்து இறங்கி கீழே விழப் போகும் நேரத்தில்
“ஹேய் நோ பேபி இறங்காத..” என்று கூறியபடியே வேகமாக வந்த விஜய் நேத்ராவை கீழே விழாமல் தாங்கி பிடித்தவன், நேத்ரா மீது போத வந்த ஊஞ்சலையும் தடுத்து பிடித்தபடி நேத்ராவை தூக்கி கொண்டான்..
“என்ன பேபி இப்படி குதிச்சிட்ட?.. அடிபட்ட என்னாகிறது என பதட்டமாக கேட்டுக் கொண்டு நேத்ராவிற்கு காயம் எதுவும் பட்டிருக்கிறதா என்று ஆராய, “ரொம்ப நன்றி சார்.. நல்ல வேளை பாப்பாவை கீழே விழாம பிடிச்சுட்டீங்க.. நான் பாப்பாவை இங்கே கூட்டிட்டு வந்தது அவங்க அம்மாவுக்கு தெரியாது.. இதுல கீழே விழுந்து அடிபட்டிருந்தா நான் என்ன பதில் சொல்லுவேன்.. என் வேலை அவ்வளவுதான்.. என்னை பயந்தபடி வேணி கூற
“அதான் அடிப்படையில விடுங்க ஏன் பதட்டப்படுறீங்க என அவரை சமாதானம் செய்த விஜய் நேத்ராவிடம் திரும்பி “பேபி நான் உன்ன பாக்க தானே வந்துட்டு இருக்கேன்.. அப்புறம் ஏன் அவசரமாக கீழே இறங்கின? கீழே விழுந்து அடிபட்டிருந்தா என்ன ஆகிருக்கும்?.. உனக்கு அடி பட்டிருந்தால் அம்மா வேணி ஆண்டியை திட்டிருப்பாங்க.. தப்பே செய்யாமல் வேணி ஆன்ட்டி திட்டு வாங்கலாமா..? அது தப்பு தானே..” என விஜய் கண்டிப்பாக கூற விஜய்
“சாரி அங்கிள் உங்களை பார்த்ததும் ஹேப்பி ஆச்சா அதான் இறங்கிட்டேன் சாரி அங்கிள்..” என்று மன்னிப்பு கேட்க, “என்கிட்ட சாரி கேட்க வேண்டாம் பேபி.. இந்த ஆண்ட்டிக்கிட்ட சாரி கேளு..” என்று சொல்ல சாரி வேணி ஆண்ட்டி.. இனி இப்படி செய்ய மாட்டேன்.. “ என்று தன் இரு காதுகளில் நுனியை பிடித்து வேனியிடம் மன்னிப்பு கேட்ட குழந்தையை “சோ க்யூட் பேபி!! என்ற தூக்கி கொண்ட விஜய் குழந்தையின் கன்னத்தில் இதழ் பதிக்க
“பாப்பா சொன்ன ஆங்கிள் நீங்க தானா?.. காலையில் இருந்து உங்க பேச்சு தான்..” என்று விஜய்யை பார்த்து சிறு புன்னகையுடன் கூறிய வேணியை தானும் சிநேகமாக பார்த்து புன்னகை செய்த விஜய், “குழந்தை உங்களைப் பார்த்துக்க சொல்லி தானே நம்பி விட்டுட்டு போனாங்க இப்படி அவங்களுக்கு தெரியாம வெளியே கூட்டிட்டு வர்றது தப்பு இல்லையா சிஸ்டர்?.. என்று கேட்க வேணி திகைத்து பார்க்க
“இல்ல சார் அது வந்து குழந்தை ஆசைப்பட்டா.. அதான்..”என்று வேணி தயங்கி கூற “வீட்டுக்குள்ளேயே இருக்கிற குழந்தை வெளிய வர ஆசைப்பட்டா அது தப்பு இல்ல.. நீங்க கூட்டிட்டு வந்ததும் தப்பு இல்லை.. ஆனா அவங்க அம்மா கிட்ட பர்மிஷன் கேட்டு கூட்டிட்டு வந்து இருக்கலாம் இல்ல சிஸ்டர் அட்லீஸ்ட் இன்ஃபார்மாவது செஞ்சிருக்கணும்..” என்று அவர் தவறை சுட்டிக் காட்டி கூற,
“இதெல்லாம் சொல்ல இவர் யாரு?..” என்று வேணி உள்ளுக்குள் பொருமிக் கொண்டு “சாரி சார் இனி இப்படி நடக்கிறது.. பாப்பாவை இனி நான் வெளியே கூப்பிட்டு வரமாட்டேன்..” என்று சொல்ல
“இனி கூட்டிட்டு வாங்க ராங்.. அது பேபியோட அம்மாக்கிட்ட நான் பெர்மிஷன் வாங்கி தர்றேன்.. ஆனால் நீங்க வரும் போது எனக்கோ இல்லன்னா பேபி அம்மாக்கிட்டயோ இன்ஃபார்ம் செஞ்சிருங்க..” என்று உத்தரவிட்ட விஜய்யை திகைப்பாக பார்த்த வேணி, “ஏனோ அவனிடம் மறுத்து பேச வாய் வராமல், சம்மதமாக தலையசைத்தாள்..
“பேபி அங்கிள் வெளியே போகணும் சோ அஞ்சு நிமிஷம் மட்டும் ஊஞ்சல் விளையாடலாம்.. அப்பறம் நாளைக்கு வந்து நாம விளையாடலாம்.. சரியா..” என்று கேட்டவாறே நேத்ராவை ஊஞ்சலில் அமர வைத்த விஜய், ஏதோ நினைத்து நேத்ராவை ஊஞ்சலில் இருந்து தூக்கிவிட்டு குழந்தையை தன் மடியில் அமர்த்தியவன், “இப்போ அந்த அண்ணா போல ஆடலாமா.?” என கேட்டவாறே சிஸ்டர் கொஞ்சம் தள்ளி நில்லுங்க..” என்று வேணியிடம் கூறிவிட்டு காலை தரையில் உந்தி தள்ள,
ஊஞ்சல் வேகமாக ஆடியது.. அங்கிள் சூப்பர் ஃபாஸ்ட்டா.. இன்னும் மேல..” என்று நேத்ரா உற்சாகமாக சொல்ல, குழந்தை கேட்டதற்கிணங்க ஊஞ்சலை இன்னும் வேகமாக ஆட்டினான்.. ஐந்து நிமிடம் என்பது பத்து நிமிடங்கள் தாண்டி இருக்க, பேபி போதும் டா நாளைக்கு சீக்கிரமே வந்து விளையாடலாம் என்று நேத்ராவை சமாதானம் செய்து வீட்டிற்கு இருவரையும் தன் காரில் அழைத்து வந்தான்..
இருவரையும் வீட்டில் இறக்கி விட்டு பேபியை பத்திரமாக பார்த்துக்கோங்க..” என்று வேணியிடம் கூறி விட்டு நேத்ராவிடம் திரும்பியவன், குழந்தைக்கு சாக்லேட்டை கொடுத்தவன் “பேபி சமத்தா இருங்க அங்கிள் நாளைக்கு வர்றேன்..” என்று நேத்ராவின் கன்னத்தில் முத்தம் கொடுத்து செல்ல,
“அங்கிள் நானும் உங்க கூட வரவா?..” என்று ஆர்வமாக கேட்க, “பாப்பா அப்படி எல்லாம் கேட்க கூடாது.. அம்மாக்கு தெரிஞ்சா உனக்கும் எனக்கும் சேர்த்து திட்டு விழும்..” என்று வேணி மறுக்க
நான் பார்க்க போறதே பேபியோட அம்மாவை பார்க்க தான்..” என்று வேணிக்கு அதிர்ச்சியை கொடுத்தவன், நேத்ராவிடம் மறுக்க போக குழந்தையின் கண்களில் இருந்த ஆர்வத்தில் மறுக்க மனம் வராமல், ஓ போகலாமே.! என்று இப்போ அம்மாவை பார்த்துட்டு வரலாமா?..” என கேட்ட விஜய்யை அதிர்ந்து பார்த்து வேணி, “என்ன சொல்றிங்க சார்?.. பாப்பாவை வெளியே கூட்டிட்டு போறிங்களா.. அதுவும் எழில் மேடம் ஸ்கூலுக்கா?!! “ என்று அதிர்ந்து கேட்க,
“ஏன் இவ்வளவு ஷாக்?..” விஜய் கேட்க
“சார் பாப்பாவை மேடம் எங்கேயும் வெளியே கூட்டிட்டு போக மாட்டாங்க… அதுவும் அவங்க வேலை பார்க்கிற ஸ்கூலுக்கு ம்கூம் கூட்டிட்டே போனது இல்லை.. அதோட நீங்க யார் என்றே தெரியல எனக்கு தெரியாத உங்க கூட பாப்பாவை அனுப்ப முடியாது..” என்று திட்டவட்டமாக வேணி மறுத்த வேணியை மெச்சுதலாக பார்த்த விஜய்,
“நான் கூட்டிட்டு போனால் அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்க.. அதையும் மீறி உங்களை எதாவது சொன்னா ம் கூம் சொல்ல மாட்டாங்க..” என்று உறுதி அளித்த விஜய்யை சங்கடத்துடன் வேணி பார்த்து கொண்டு இருக்க, வேணுமின்னா நீங்களும் எங்க கூட வாங்க..” என அழைக்க, அங்கிள் நாம அந்த வண்டில போகலாம் என்று எழில் இருசக்கர வாகனத்தை காட்ட ஏன் பேபி கார் வேண்டாமா?..” என்று ஆச்சரியமாக கேட்க
“ம் கூம் வேண்டாம் இந்த மாதிரி வண்டில தான் ஸ்வேதா ஒரு அங்கிள் கூட போவா.. அதனால் நானும் இந்த வண்டியில போகணும் ஆசையாக இருக்கு அங்கிள்..” நேத்ரா கூற, விஜய் வேணியை கேள்வியாக பார்க்க “அது ஸ்வேதா பக்கத்து வீட்டில் இருக்கிற குழந்தை அவங்க அப்பா கூட பைக்ல போவா அதை பார்த்திட்டு சொல்றா..” என்று சொல்ல
“ஓ அப்போ நேத்ரா பேபிக்கு பைக்ல போகணுமா.. வாங்க போவோம்..” என்று எழில் இருசக்கர வாகனத்தை எடுத்தவன் அதில் இருந்த பேபி சீட்டரை கழட்டி விட்டவன் வேணியிடம் திரும்பி “உங்களுக்கு ஒரு ஆட்டோ பிடிச்சு தர்றேன் நீங்க அதுல வந்திடுங்க..” என்று கூறி விட்டு வேணியின் மறுப்பை காதில் வாங்காமல் வாகனத்தை எடுத்து கொண்டு எழில் பள்ளியை நோக்கி செலுத்தினான்..
மாலை பள்ளி முடிந்து விட்டு எழிலும், சங்கவியும் வெளியே வர, “நம்ம ஸ்கூல் இவ்வளவு பெர்ஃபெக்டா எப்படிடி மாறுச்சு தப்பு செஞ்ச உடனே பனிஷ்மெண்ட் கிடைக்குது..” சங்கவி ஆச்சரியமாக சொல்ல, எழில் அவளை கேள்வியாக பார்க்க
“அதான் டி நம்ம ஹச் எம் டிஸ்மிஸ் செஞ்சாங்கள்ல அதை சொல்றேன்.. ஏன் நம்ம ஹெட்மாஸ்டரை உடனே வேலையை விட்டு தூக்கிட்டாங்களே.. அதை சொல்றேன்..” என்று விளக்கம் சொல்ல “ஓ அதை சொல்றியா?.. எனக்கும் கூட அது ஆச்சரியம் தான் கவி..” என்று எழிலும் வியப்பாக கூற
அந்த ஹெட்மாஸ்டர் இல்லை.. இப்ப புது ஹெட்மாஸ்டர் யாருடி வர போறா?..” சங்கவி யோசித்தபடி கேட்க, “யாருக்கு தெரியும்..? வரும் போது பார்த்துக்கலாம்..” என்று எழில் தோள் குலுக்கி சொல்ல”, “அதுவும் சரிதான் புது ஹெச் எம் வரும்போது பார்த்துக்கலாம் என்று தானும் கூறிவிட்டு அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த சங்கவி எழிலை பார்த்து கொண்டே நடக்க,
“என் முகத்தில் என்ன எழுதி இருக்கு என்னையவே பார்த்துட்டே வர, பாதையை பார்த்து நட..” என எழில் சொல்ல, ஈவினிங் ஏதோ ஒரு முக்கியமான விஷயம் சொல்றேன்னு சொன்னேன்ல அதை நீ எப்ப சொல்லுவேன்னு பார்த்தேன்..” என சங்கவி கிண்டலாக சொல்ல,
“அதை தான் எப்படி ஆரம்பிக்கிறது என்று யோசிக்கிறேன்..” என்று யோசனை செய்தபடி வர, “நீ கொடுக்கிற பில்டப்பை பார்த்தா பயங்கரமா இருக்கு என்னடி விஷயம் சொல்லேன்?..” என சங்கவி ஆர்வம் தாங்காமல் கேட்க, “நேத்து இந்த ஹெச் என் வீட்டுக்கு வந்தாங்க இல்ல.. அப்போ அங்க இன்னொரு விஷயமும் நடந்தது.. என எழில் தயங்கியபடி சொல்லி கொண்டிருக்கும் போதே
“ம்மஆ!!” என்ற நேத்ராவின் குரல் கேட்டு, திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்த எழில் அங்கு நேத்ராவுடன் நின்று இருந்த விஜய்யை பார்த்து அதிர்ந்தாள்.. நேத்ரா வெளியே சுற்றுவது அதிர்ச்சி என்றால் அது விஜய்யுடன் சுற்றுவது பேரதிர்ச்சி.. “என்னடி யாரோ ஒரு குழந்தை யாரையோ அம்மான்னு சொன்னா நீ ஏன் ஷாக் ஆகிற?. சங்கவி குழப்பமாக கேட்டுக் கொண்டிருக்கும் போதே சங்கவியை கடந்து சென்ற எழில்
“உங்களுக்கு எவ்வளவு தைரியம்.. ஸ்கூலுக்கு நீங்க வந்ததும் இல்லாமல் நேத்ராவையும் தூக்கிட்டு வந்திருக்கிங்க.. அவளுக்கு இருக்கிற ஆபத்து பத்தி எதாவது தெரியுமா? என்று எழில் கோபமாக கேட்க, “ என்னை மீறி பேபிக்கு என்ன ஆபத்து வரும்?..” என்று மீசையை முறுக்கியபடி கூறியவன் வீட்டுக்குள்ளேயே அடச்சு வைக்க பேபி என்ன கூண்டு கிளியா?.. அவ அழகான சிட்டு குருவி.. அவளை பறக்க விடணுமே தவிர பிடிச்சு டப்பாவில் அடைக்க கூடாது..” என்று விஜய் அழுத்தமாக கூற
“எதுக்கு மேல் பறக்கிற பருந்தோட கண்கள்ல பட்டு சிக்கி சீரழியவா?.. என் பொண்ணு வீட்டுக்குள்ளே இருந்தாலும் பத்திரமாக பாதுகாப்ப்பா இருப்பா.. இனி இது தான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங்.. நேத்ராவை எங்கேயும் வெளியே கூட்டிட்டு வர கூடாது” என்று விரல் நீட்டி எச்சரிக்க
“சிட்டு குருவியை பாதுகாக்க கருடன் எப்போதும் கூடவே இருக்கும் போது எந்த பருந்து வந்து என் சிட்டு குருவியை நெருங்கும்..” என்று வார்த்தையில் வாளின் கூர்மையோடு ஒலிக்க, “இல்லை நீங்க என்ன சொன்னாலும்..” என்று மறுத்து கூற வந்த எழிலை இடைமறித்து
” என்ன மேடம் ரூல்ஸ் மறந்துட்டிங்களா?.. சவால் மறந்துட்டிங்களா..? சவால்ல தோத்துட்டேன்னு சொல்லுங்க நான் இனி நேத்ரா பேபியை வெளியே கூட்டிட்டு வர மாட்டேன்..” என்று கண்சிமிட்டி கூற
“ரூல்ஸ்.. ரூல்ஸ்.. இதை ஒண்ண வச்சே என்னை ஆஃப் பண்றிங்கள்ல..” எழில் ஆதங்கமாக கேட்க நீ அக்சப்ட் செஞ்ச தான..” என்று விஜய் இலகுவாக கேட்க,
“போடா டேய்..” என்று கத்திய எழில் தன் இருசக்கர வாகனத்தில் தன் நேத்ராவை முன்னால் நிற்க வைத்தபடி அழைத்து கொண்டு பறந்து விட.. போகும் அவள் குறும்பு புன்னகையுடன் பார்த்து கொண்டே நிற்க
எழில் தோழி சங்கவியோ இங்கு நடந்ததை நம்ப முடியாமல் பார்த்தபடி அதிர்ந்து நின்று இருந்தாள்..
இமை சிமிட்டும்
இந்த ஹோட்டல்கார் அப்படி என்ன ரூல்ஸ் போட்டிருப்பான் அடுத்த பதிவில்..