இமை 24
விஜய் ஹோட்டலில் அவன் அலுவலக அறையில், விதுரன், வெண்பா, ஷக்தி, மலர் நால்வரும் விஜய்யை முறைத்துப் பார்த்தபடி அமர்ந்திருக்க, விஜய் திருதிருவென முழித்தபடி அமர்ந்திருந்தான்..
“சொல்லு..!!”
“சொல்லு..!!”
“சொல்லுங்க!!”
“சொல்லுங்க!!!”
என்று நால்வரும் மாறி மாறி விஜய்யிடம் கேட்க,
“என்னங்கடா நாலு பேரும் மாறி மாறி சொல்லுங்க. சொல்லுங்க கேட்டுட்டே இருக்கீங்க.. என்னத்த சொல்ல..?” என்று ஏதும் அறியாதவன் போல் கேட்க
“ஓ உனக்கு நாங்க என்ன கேட்கிறோம் என்று தெரியல அப்படித்தானே..?” ஷக்தி கேட்க, விஜய் தோள் குலுக்கி அமைதியாக இருக்க
“உனக்கு லிட்டில் கேர்ளும் இந்த ராங்கியும் ஒண்ணு தான் என்று ஏற்கனவே தெரியுமா?..” ஷக்தி கேட்க “ ஆமா தெரியும்” என்ற விஜய்யை ஷக்தி முறைத்துப் பார்க்க மச்சி எனக்கு பழய ஞாபகம் திரும்பி வந்ததுல அங்க கன்னியாகுமரில நடந்த விசயம் மட்டும் நியாபகம் வராமல் இருக்குமா?..
அன்னைக்கு அங்க லிட்டில் கேர்ள் ஹாஸ்பிடல் சேர்த்ததே நான் தானே.. அப்போ அவளுக்கு முகம் அடிபட்டது எனக்கு தெரியும்.. ஆனால் பார்த்து அஞ்சு வருஷம் ஆகிருச்சுல அதனால் உடனே எனக்கு இந்த ராங்கி முகம் நினைவுக்கு வரல.. அதனால் தான் கன்னியாகுமரி போகலாம்னு முடிவு பண்ணினேன் ..
ஆனால் கிளம்புறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி தான் மின்னல் மாதிரி இந்த ராங்கி முகம் வந்து போச்சு அப்போதான் எனக்கும் ஸ்ட்ரைக் ஆச்சு.. இந்த லிட்டில் கேர்ளும், ராங்கியம் ஒரே ஆள் தான் என்று.. அதான் நேராக ராங்கி வீட்டுக்கு காரை விட்டுட்டேன்..” என்று விளக்கமாக கூற இந்த ராங்கி கண்ல அப்போ அப்போ எதையோ எதிர்பார்த்து ஏமாற்ற அடயற மாதிரி தோணும் அது ஏன் என்று இப்போது புரியுது.. அவ என்னை பார்க்கும் போது கோபம் தெரியும் அவளுக்கு என்னை நியாபகம் இருக்கு.. எனக்கு அவளை நியாபகம் இல்லை என்று வந்த கோபமாக இருக்கும்
“ஓ இதுல இவ்வளவு இருக்கா!?. என்றபடி, விஜய் கொடுத்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள், “நீ சொல்றதெல்லாம் சரிதான்.. ஆனால் அவகிட்ட வில்லன் மாதிரி ஏன் பேசிட்டு வந்த?.. இதுல உன்னை காதலிக்க வைக்கிறேன் என்று சவால் வேற விட்டுட்டு வந்து இருக்க..
ஏற்கனவே அவங்க உன்னை பிடிக்காமல் தான் இருக்காங்க.. இப்ப நீ வேற இப்படி பேசிட்டு வந்து இருக்கியே.. உன் மேல இருக்கிற வெறுப்பு இன்னும் அதிகமா ஆகாதா?..” ஷக்தி குழப்பமாக கேட்க விஜய் மர்மமாக புன்னகை செய்தான்..
“இவன் எழில் சிஸ்டரை தூண்டி விட்டுட்டு வந்து இருக்கான்..” என்று விதுரன் கூற “என்ன தூண்டி விட்டுட்டு வந்து இருக்கானா?.. மற்ற மூவரும் புரியாமல் கேட்க “ஆமா.. அவங்களை இவன் வழிக்கு கொண்டு வர அவங்களை தூண்டி விட்டு வந்திருக்கான்…” என்ற விதுரனிடம், “தெளிவாக சொல்லுடா எனக்கு புரியலை..” என்ற ஷக்தி சொல்ல
“ஆமா எங்களுக்கும் புரியல..” வெண்பாவும், மலரும் கூற, “நீங்க எல்லாரும் ரொம்ப அப்பாவி அதனால தான் உங்களுக்கு சில விஷயங்கள் புரியல.. காதல் வந்துட்டா கள்ளத்தனமும் வரும் இல்லையா..? இப்போ இவன் நேரா எழில் சிஸ்டர் கிட்ட போய் நான் உங்களை விரும்புகிறேன் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் அப்படின்னு சொன்னா என்ன சொல்லுவாங்க?..” என்று கேட்க
“அவங்க இறுக்கமாக இருக்கிறது வச்சு பார்த்தால் கண்டிப்பாக கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க என்று தான் தோணுது.. சோ மேரேஜ்க்கு மறுத்திருப்பாங்க..” ஷக்தி சொல்ல
“ம் ஆமா மறுத்திருப்பாங்க தான்.. ஆனால் அதோடு மட்டும் நிறுத்தி இருக்க மாட்டாங்க இப்ப இருக்கிற இறுக்கத்தை விட இன்னும் அதிகமா இறுக்கமாக இருந்து தனக்குள்ளேயே சுருண்டு கொள்வாங்க.. அந்த குட்டி பாப்பாவையும் தன்னோட வட்டத்துக்குள்ளேயே வச்சிப்பாங்க.. யாரிடமும் பேச அனுமதிக்க மாட்டாங்க.. அதனால் தான் இவன் அவங்க கோபத்தை தூண்டி விட்டுட்டு சவால் விட்டு வந்திருக்கான்..
அது மட்டும் இல்லாம அவன் மென்மையா பேசினால் தன்மேல் இரக்கப்பட்டு தான் இப்படி கேக்குறாங்கன்னு நினைச்சுப்பாங்க, அது இன்னும் மோசம்.. சார் எல்லாம் யோசிச்சு தான் சவால் விட்டு வந்திருக்கான்.. விஜய் எதிர்பார்த்தது போலவே அவங்களும் இவனோட சவால ஏத்துக்கிட்டாங்க..” என்று விதுரன் நீண்ட விளக்கம் அளிக்க, மூவரும் விஜய்யை வியப்பாக பார்த்தனர்..
“இந்த ஐடியா எப்போ தோணுச்சு?..” ஷக்தி விஜய்யிடம் கேட்க அடேங்கப்பா கிரிமினல் மைண்ட் மச்சி உனக்கு..” என்று ஷக்தி கேலியாக சிலாகித்து சொல்ல.. “எல்லாம் தங்கள் இருவரிடம் பயின்ற யானைப் பால் அமைச்சரே!!” என்று பதிலுக்கு விஜய்யும் கேலி பேச, சற்று நேரம் கலகலப்பாக பேசி கொண்டு இருந்தனர்..
விஜய் அலைபேசி அலாரம் அடிக்க நேரம் பார்த்தவன், “சரி ஃப்ரெண்ட்ஸ் சிஸ்டரஸ் ராங்கி ஸ்கூல் விட்ற நேரம் ஆச்சு நான் போய் பார்த்திட்டு வர்றேன்..” என்று அவர்கள் பதிலை எதிர்பார்க்காமல் வெளியே செல்ல, “நம்மள விட ஃபாஸ்ட்டா இருக்கானே..” என்று புன்னகையுடன் இரு ஹீரோக்களும் ஆச்சரியமாக கூறி கொண்டனர்..
மதிய உணவு இடைவேளையில் ஆசிரியர் ஓய்வறையில் எழிலும், சங்கவியும் உணவு உண்டு கொண்டு இருந்தனர்.. எழில் ஏதோ சிந்தனையில் உணவு உண்ணாமல், உணவை அளந்து கொண்டு இருக்க,
“என்னடி நானும் அப்போ இருந்து பார்க்கிறேன் நீ ஏதோ ஏதோ யோசிச்சுகிட்டே இருக்க.. நேத்து ஏன் வரல என்று அதை கேட்டாலும் பதில் சொல்ல மாட்டிகிற ஏன் அந்த ஹெட் மாஸ்டர் உன் வீட்டுக்கு வந்து பேசுனது உனக்கு ஒரு மாதிரி இருக்கா?..” என்று கேட்க
“இல்லை..” என்று எழில் மறுப்பாக தலையசைக்க, அப்பறம் என்ன யோசனை?.. வேறு யாராவது உனக்கு தொல்லை கொடுக்கிறாங்களா?..” என்று மீண்டும் கேட்க
“இல்லைடி இது வேறு.. வேலை முடிச்சிட்டு ஈவ்னிங் கிளம்பும்போது சொல்றேன்..” என்று சொல்ல, “என்னடி என்னாச்சு?..” சங்கவி சிறு பதட்டமாக கேட்க, “சொல்றேன் ஈவ்னிங் போகும் போது.. இப்போ வேறு எதையும் கேட்காத..” என்று அந்த பேச்சிற்கு முற்று புள்ளி வைத்து விட்டு எழில் உணவில் கவனத்தை செலுத்த
“ம் நல்லா சாப்பிடு.. வந்த நல்ல வாழ்க்கையை உதறி விட்டுக்கிட்டு இப்படி மாச சம்பளத்துக்கு கஷ்டப்படுவது உன் தலை எழுத்து இருந்தால் யாரால மாத்த முடியும்?..” என்று நக்கலாக கேட்டபடி அங்கு வந்தார் தலைமை ஆசிரியர்.. சங்கவி அவரை முறைத்துப் பார்க்க,
எழில் அவர் பேச்சை கண்டு கொள்ளாமல் அமைதியாக இருக்க “ஏம்மா சங்கவி நீ எழிலோட பிரண்டு தானே கொஞ்சம் எடுத்து சொல்ல கூடாதா?.. என்று சங்கவியிடம் தனக்கு பரிந்து பேச சொல்ல, “மேடம் நீங்க என்ன பேசறிங்க என்று எனக்கு புரியவே இல்லை..” சங்கவி சொல்ல
“நீயே சொல்லு இவ பேர் மட்டும் தான் எழில் ஆனா இவ முகம் எப்படி இருக்கு பாரு இந்த முகத்தை பார்த்து யார் கல்யாணம் செய்ய ஆசை படுவாங்க?.. ஆனா நான் நல்ல வாழ்க்கை வாழ வழிகாட்டுறேன்.. முட்டாள்தனமா அதை வேண்டாம் சொல்றா.. அதிர்ஷ்ட தேவதை எழில் வீட்டு வாசலை தட்டறா.. அதை எழில் காலால் எட்டி உதைக்கிறா..” என்று எழில் புகார் செய்ய
“வாவ் சூப்பர் எழிலுக்கு மாப்பிள்ளை பார்த்திங்களா மேடம். மாப்பிள்ளை யாரு..? என்ன வேலை பார்க்கிறாங்க?” என்று போலி ஆர்வமாக கேட்க, மாப்பிள்ளை பற்றி பேச ஒரு நொடி தயங்கிய தலைமை ஆசிரியர் மறு நொடி மாப்பிள்ளை வேற யாரும் இல்ல என் தம்பி தான்.. சொந்தமா கம்பெனி வச்சிருக்கான்..” என்று பேசிக்கொண்டே சென்றவரை இடைமறித்த சங்கவி
“உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு மேடம்.. நீங்க எப்படி இப்படி சுயநலமே இல்லாமல் இருக்கிங்க?.. இவ கிட்க்கிறா கிடச்ச வாழ்கையை காப்பாத்திக்க தெரியாதவ..” என்று எழிலை கிண்டல் செய்த சங்கவியை வியப்பாக பார்த்த தலைமை ஆசிரியர், “நீ சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை.. கொஞ்சம் எடுத்து சொல்லுமா!!” என்று கூற
“இவளை விடுங்க மேடம் இவ்ளோ தான் வேணான்னு சொல்லிட்டாளே வேணாம்னு சொல்றவளை எதுக்கு நம்ம வர்புறுத்தணும்?. பேசாம இந்த எழிலுக்கு நோஸ்கட் செய்றமாதிரி ஒரு விசயம் செய்யலாமா மேடம்..?. சங்கவி கேட்க
சங்கவியின் பேச்சு தலைமை ஆசிரியருக்கு ஆர்வம் தாங்கவில்லை ஒரு வேலை இந்த சங்கவி என் தம்பிக்கு பொண்ணா வரப்போறாளோ?..” என்று நினைத்து ஆர்வமாக சங்கவியை பார்க்க பேசாமல் உங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கா என்று சொல்லிருக்கிங்களே உங்க பெண்ணையே உங்க அன்பான தம்பிக்கு கல்யாணம் செஞ்சு வச்சிருங்களேன்..
“இந்த எழிலுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாழ்க்கை உங்க பொண்ணுக்கு கிடைக்கட்டும் உங்கள் அன்பான தம்பிக்கும் ஒரு நல்ல மனைவி கிடைப்பாங்க இல்ல..” என்று படு நக்கலாக சொல்ல, கேட்டுக் கொண்டிருந்த தலைமை ஆசிரியர் முகம் கருத்தது..
“ஹேய் யார்கிட்ட வந்து என்ன பேசற?..” அவர் கோபமாக கேட்க, “எதுக்கு மேடம் கோபப்படுறீங்க?.. எழிலுக்கு நீங்க ஒரு நல்ல வாழ்க்கைதானே அமைச்சு தரேன்னு சொன்னீங்க அந்த வாழ்க்கை உங்க பொண்ணுக்கு கொடுங்க என்று தானே சொல்றேன்.. இதுல என்ன கோவம் உங்களுக்கு..” என்று ஏதும் அறியதவள் போல் சொல்ல
“என் பொண்ணுக்கு என்ன தலையெழுத்து?.. வயசுக்கு வந்த பொண்ணுக்கு ஆயா வேலை பார்க்க வேண்டும் என்று..” என்று ஆவேசமாக கேட்க, “அதே தான் மேடம் நானும் கேட்கிறேன் என் பிரண்டுக்கு என்ன தலையெழுத்து?.. உங்க பொண்ணுக்கு வந்தால் ரத்தம் ஆயா வேலை..
ஆனால் என் பிரண்டுக்கு இது நல்ல வாழ்க்கையா?.. என்ன மேடம் அவளுக்கு கேட்க ஆள் இல்லை என்று நினைசாசிஙாகளோ.. நான் இருக்கேன் அவளுக்கு.. போங்க போய் உங்க தம்பிக்கு நல்ல ஆண்ட்டி யாரையாவது பாருங்க.. உங்க சோசியல் சர்வீஸ்க்கு என் ஃப்ரென்ட் சரிவர மாட்டா..” என்று அழுத்தமாக கூறிய சங்கவியை முறைத்து பார்த்த தலைமை ஆசிரியர்,
“இந்த முகத்துக்கு என் தம்பியே பெரிசு.. இன்று எழில் முகத்தை பார்த்து ஏளனமாக கூற முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் உணவு உண்பதில் கவனமாக இருக்க, சங்கவி தான் கோபமாக ஏதோ பேச வர, “விடு கவி..!! என்னை பத்தி எனக்கு தெரியும்.. அவங்க கிட்ட விளக்க வேண்டியது அவசியம் இல்லை.. நீ சாப்பிடு..” என்று எழில் அமைதியாக சொல்ல
“ஆமா உனக்கு என்ன கவலை?.. உனக்கு கல்யாணம் ஆகமலேயே புருஷன் சொல்றதுக்கு ஒருத்தன் இருக்கான் இல்ல.. அதனால நீ கண்டுக்காம தான் இருப்ப..” என்று தலைமை ஆசிரியர் தன் பதவியின் மகத்துவம் மறந்து எழிலை பார்த்து ஏளனமாக கூற,
மேடம் உங்க தம்பியை மறுத்தற்காக என் பிரண்ட வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசாதீங்க.. நிச்சயமா இதை நான் இதை மேலிடத்தில் கம்பளைண்ட் பண்ணுவேன்..” என்று சங்கவி எச்சரிக்க “நான் என்ன பொய்யா சொல்றேன்.. இது உண்மையா?! இல்லையா!? என்று உன் பிரண்டு கிட்டே கேட்டு சொல்லு.. நேத்து நான் எங்க வீட்டுக்கு போகும்போது அந்த பையனும் தான் இருந்தான் அவன் தான் சொன்னான்..” என அப்போதும் அவர் பேச.. இப்போது சங்கவி எழிலை திகைத்து பார்க்க
ஒரு பெருமூச்சுடன், நான் ஈவினிங் பேசுறேன்னு சொன்ன விஷயம் இதுதான் கவி..” என்று எழில் சொல்லி கொண்டு இருக்க, “மேடம் உங்களுக்கு பேக்ஸ் வந்திருக்கு..” என்று பியூன் வந்து சொல்ல, அதை எடுத்துட்டு வர மாட்டியா.. நான் இங்கே முக்கியமான விசயம் பேசிட்டு இருக்கேன்.. அதை எடுத்துட்டு வா..” என்று பியூனை அனுப்பி வைக்க..
அவரும் அதை எடுத்து வந்து கொடுக்க, அதை வாங்கி படித்து பார்த்தவர் அதிர்ந்து சிலையாக நின்றார்.. “என்னடி பேப்பர் பார்த்து இப்படி நிக்கிறாங்க..” என்று குழப்பமாக கேட்க
“இவங்களுக்கு வேலை போய்ருச்சு மேடம்.. இங்க சி சி டிவி கேமரா இருக்கிறதை மறந்திட்டு தன் பதவி பற்றியும் யோசிக்காமல் வாய்க்கு வந்தபடி பேசிருக்காங்க..” அதை சேர்மன் பார்த்திட்டு தான் ஸ்கூல் ரூல்ஸ் படி டிஸ்மிஸ் பண்ணிருக்காங்க.. அலுவலக உதவியாளர் வந்து கூற, “வாவ்..!!” இது சூப்பர் “ என்று சங்கவி உற்சாகம் பொங்க கூற எழில் அதிர்ந்து பார்த்து கொண்டு இருந்தாள்..
அன்று மாலை வேலை முடிந்து எழில் சங்கவியுடன் வெளியே வர, “ஹாய் ராங்கி..!!” என்று உற்சாகமாக அழைத்தபடி எழிலின் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த விஜய்யை பார்த்து அதிர்ந்தாள் என்றால், அவனுடன் முன் பக்கம் பேபி சீட்டர் எதுவும் இல்லாமல் அவன் மடியில் வாகாக அமர்ந்து இருந்த நேத்ராவை பார்த்து
பேரதிர்ச்சி அடைந்தாள்..
இமை சிமிட்டும்