Loading

இமை 18

 

நேத்ராவை கிட்ஸ் பிளே ஸ்டேஷன் விளையாட வைத்த எழில், தான் சொன்னது போல கைதட்டியபடி குழந்தையை உற்சாக படுத்த, நேத்ராவும் மற்ற குழந்தைகளோடு உற்சாகமாக விளையாட தொடங்கினாள்.. நேத்ராவின் உற்சாகத்தை ரசித்தபடி நின்றிருந்த எழில் அவளின் அலைபேசி சத்தமிட்டு தன் இருப்பை உணர்த்த, 

 

 

அவள் தோழி சங்கவி தான் அழைத்திருந்தாள்.. அங்கு சத்தத்தில் அவள் பேசுவது கேட்காமல், நேத்ராவை தன் கண்பார்வையில் வைத்தபடி சற்று தள்ளி நின்று பேசிக் கொண்டு இருந்தாள்.. பார்வையை சற்று சுழற்றி திரும்பி பார்க்க அவள் பார்வை வட்டத்தில் வந்து விழுந்தான் அஷ்வின் அவன் புது மனைவியோடு..

 

 

“கடவுளே இவனா?!!..” என்று அவனை பார்த்ததும் திகைத்த எழில் அவன் பார்வையில் விழாதவாறு சட்டென்று மறைந்து நின்று கொண்டாள்.. அவனும் அவன் மனைவியும் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை காண்பித்து ஏதோ கூறி கொண்டு இருக்க, “இவன் எங்க இங்க வந்தான்?.. இந்த ராட்சன் கண்ணுல படாமல் எப்படியாவது  தப்பிக்கணுமே.. முருகா!! இவன் கண்ணில் என் குழந்தையை இவன் கண்ணில் காட்டிடாதிங்க..” என்று மனதில் வேண்டிக் கொண்டு பதட்டமாக நின்றிருந்தாள்..

 

 

உற்சாகமாக விளையாடி கொண்டு இருந்த நேத்ரா.. விளையாட்டின் ஊடே தன் அன்னையை பார்க்க, அவள் நின்றிருந்த இடம் வெற்றிடமாக இருக்கவும் பயந்து போன குழந்தை விளையாடுவதை விட்டு எழிலை தேட தொடங்கினாள்.. நேத்ரா அழுதுகொண்டே தன்னை தேடுவதை பார்க்க எழிலிற்கு மனம் பரிதவித்தது.. “பாப்பா அம்மா இங்க இருக்கேன் டா.. இதோ வந்திட்றேன் டா..” மனதில் தவிப்போடு கூறி கொண்டு இருக்க..

 

 

அஷ்வின் அங்கு அழுது கொண்டு இருந்த நேத்ராவை பார்த்தவன், “ஏய் எதுக்கு இவ்வளவு சத்தமா அழற?..  சத்தம் போடாதே.. தலையில் கொட்டிருவேன்” என்று அதட்ட, நேத்ராவின் கண்களில் பயம் வந்து உடல் நடுங்க நின்றிருக்க.. அஷ்வின் அந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி வந்து நின்றான்.. ராட்சசன் ஒரு சின்ன குழந்தைகிட்ட எப்படி பேசணும்னு கூட தெரியல.. அதுவும் அழுதுட்டு இருக்குற குழந்தையை சமாதானம் கூட செய்யாமல் திட்ற இவனுக்கு எல்லாம் குழந்தை வேணுமா?. 

 

 

“உனக்கு நேத்ரா குட்டி மட்டும் இல்லை வேறு எந்த குழந்தையும் உனக்கு கிடைக்காதுடா.. அழுகி போன அஷ்வின்..” என்று மனதில் அவனை திட்டியபடி “இப்போ என்ன செய்ய கடவுளே.. நான் அங்க போனா நேத்ரா யார் என்று அவனுக்கு தெரிஞ்சிடுமே.. பாப்பா அழறதையும் பார்க்க முடியல..”என்று பதட்டமும், தவிப்புமாக செய்வதறியாமல் எழில் திணறி கொண்டிருந்த வேளையில், 

 

 

“பாப்பா ஏன்டா அழறிங்க?.” என்று கம்பீரமான குரல் ஒன்று அக்கறையாக கேட்க, எழில் திகைத்து அந்த குரல் சொந்தக்காரனை நிமிர்ந்து பார்த்தவள், அங்கு நின்றிருந்த விஜய்யை பார்த்ததும் மனம் அவள் அறியாமல் நிம்மதி அடைந்தது.. “ஹோட்டல்கார்!!” அவள் மனம் அனிச்சையாக அவனுக்கு பெயர்சூட்டி கொண்டது..

 

 

அவன் நேத்ராவின் கண்களை துடைத்துக் விட்டு சமாதானம் செய்வதை தள்ளி நின்று இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அஷ்வின் இன்னும் அங்கிருந்து நகராமல் நின்றிருக்க, விஜய் அஷ்வினை கவனிக்கவில்லை.. அவன் கவனம் எல்லாம் அழுது கொண்டிருக்கும் குழந்தையை சமாதானம் செய்வதிலேயே இருக்க, தன் மனைவியை கொஞ்சி கொண்டு இருந்த அஸ்வினும் விஜய்யை கவனிக்கவில்லை.. அஷ்வின் திரும்பி பார்ப்பதற்குள் விஜய் நேத்ராவை தூக்கி கொண்டு வேறுபக்கம் வந்து விட்டிருந்தான்.. 

 

 

அதில் எழில் ஆசுவாசமாக  மூச்சு விட்டாள்.. அஷ்வின் இன்னும் அங்கேயே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க.. அங்க இருந்து நகர்ந்து போறானா இந்த அஷ்வின்.. எருமை மாட்டு மேல மழை பொழியற மாதிரி அங்கேயே நிக்கிறான்..” என்று மனதில் பொருமிக் கொண்டு, விஜய்யையும் நேந்ராவையும் பார்த்து கொண்டு இருந்தாள்.. விஜய் குழந்தையை சமாதானம் செய்தபடி குழந்தையிடம் விசாரிப்பது வியப்பாக பார்த்து கொண்டிருந்த எழில், சற்று முன் அஷ்வின் நேத்ராவிடம் கோபமாக பேசியதை நினைத்து பார்த்தாள்..

 

 

அஷ்வின் அந்த பக்கம் திரும்பவும், ஒரே பாய்ச்சலாக இவர்கள் அருகில் வந்த எழில் அனிச்சையாக விஜய்யின் கையை பற்றி கொண்டு தங்களை இங்கே இருந்து வெளியே அழைத்து செல்லுமாறு கூற, நேத்ராவிடம் தந்தை பற்றி கேட்டுக் கொண்டு இருந்த விஜய் அதற்கு நேத்ரா கூறிய பதிலை கேட்டு திகைத்துப் பார்த்து கொண்டு இருந்தவன் தன் கையை யாரோ பற்றவும், யார் என்று முகம் பார்த்தவன், எழிலை பார்த்ததும் “ராங்கி!! என்று தன்னை மீறி அழைத்திருந்தான்..

 

 

 

எழிலை பார்த்ததும் நடந்து கொண்டிருந்த விஜய் சட்டென்று நடையை நிறுத்த, “பிளீஸ் ப்ளீஸ் நிக்காதிங்க.. நடந்துக்கிட்டே எதுவாக இருந்தாலும் பேசுங்க..” என்று சிறு பதட்டமாக கூற, இந்த குரல் கனவில் கேட்ட குரல் மாதிரி இருக்கே என்று குழப்பமாக யோசித்தவனை  “அம்மாஆஆ!!” என்று அழைத்தபடி நேத்ரா அவன் சிந்தனையை தடை செய்தவள் எழிலிடம் தாவ, “என்ன அம்மாவா?!!. என்று விஜய் எழிலை பார்த்து அதிர்ந்து கேட்க,

 

 

“ஏன் நான் அம்மாவாக இருக்க கூடாதா?.. என்று கேட்ட எழில் “இப்ப எனக்கு உங்க கூட பேச நேரமில்லை.. ப்ளீஸ் அப்படியே எங்களை மறைத்த மாதிரி மால்லை விட்டு வெளியே கூட்டிட்டு போங்க..” என்று அவன் விரிந்த தோள்களில் தங்களை மறைத்து கொண்டு மன்றாலுடன் பதட்டமாக கேட்க, “அடேங்கப்பா ராங்கிக்கு பதட்டமெல்லாம் வருதா..” என்று கேலியாக கேட்ட விஜய் 

 

 

எழில் முகத்தில் இருந்த பதட்டத்தை கண்டு துணுக்குற்றவன் “யாரை பார்த்து பயப்படுற?.. யாராவது உன்னை எதாவது வம்பிழுத்தாங்களா?..” என்று கோபமாக கேட்டவன் சுற்றும் முற்றும் பார்த்தவன், அஷ்வின் நின்றிருந்த பக்கம் பார்வையை திருப்ப

 

 

“ஐயோ அந்த பக்கம் திரும்பாதீங்க என்று வேகமாக கூறியவள், அவன் முகத்தை பற்றி தங்கள் பக்கம் திரும்ப வைக்க, அதில் எழிலை திகைத்து பார்த்த விஜய்க்கு அவள் அதை உணர்ந்து செய்யவில்லை என்றும், ஏதோ பதட்டத்தில் தன்னையறியாமல் செய்த செயல் என்று உணர்ந்து கொண்டவன், இவ யாரை பார்த்து பயப்படறா?..” என்று மனதில் குழப்பமாக கேட்டு கொண்டவன், 

 

 

“இப்ப இவ பயத்தை போக்குவது தான் முதல் வேலை என நினைத்து, “சரி பதட்டப்படாத நான் கூட்டிட்டு போறேன் என்று சமாதானம் செய்தவனின் போன் சத்தம் கேட்க, அதை எடுத்து பார்த்தவன், சற்று முன் இவனை பார்க்க நேரம் கேட்டிருந்த கிளையண்ட் தான் அழைத்திருந்தார்.. அதை உயிர்ப்பித்து காதில் வைக்க, “நான் இந்த ஷாப்பிங் மால் வந்திட்டேன்..” அவர் கூற

 

 

“கொஞ்ச நேரம் வெய்ட் செய்ங்க மதிவாணன் நான் வந்திட்றேன்.. அவருக்கு பதில் கூறிவிட்டு இணைப்பை துண்டிக்க, “என்ன அரைமணி நேரம் தான் இங்க இருப்பேன் சொன்னார்.. அரைமணி நேரம் தாண்டி பத்து நிமிஷம் ஆச்சே என்று பதட்டத்தில் கூப்பிட்டா இவர் நார்மலாக பேசறாரே..” என்று வியந்தபடி அந்த கிளையண்ட் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டார்

 

 

விஜய் எழிலை அழைத்து கொண்டு வெளியே செல்ல, எழில் நேத்ராவை தூக்கி கொண்டு நடக்க சிரமப்படுவதை பார்த்த விஜய், “பாப்பாவை கொடு நான் தூக்கிக்கிறேன்.. என்று குழந்தைக்காக கை நீட்ட, சில நொடிகள் தயங்கிய எழில் “ஒருவேளை அஸ்வின் தன்னை பார்த்து விட்டாலும், தன்னுடன் நேத்ரா இருப்பது பாதுகாப்பு இல்லை.. இந்த மால்லை விட்டு வெளியே போகிற வரைக்கும் பாப்பா இந்த ஹோட்டல்கார் கையிலேயே இருக்கட்டும்” என நினைத்து நேத்ராவை விஜயிடம் கொடுத்தாள்..

 

 

எங்கே தன் அன்னை மீண்டும் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்ற பயந்த நேத்ரா விஜய்யிடம் போக மறுக்க, “நீ மறுபடியும் பாப்பாவ விட்டுட்டு போயிடுவேன்னு பயப்பட்றா அதுக்காக..” என்று ஒரு நொடி பேச்சை நிறுத்தியவனை எழில் கேள்வியாக பாரத்து கொண்டு இருக்கும் போதே பாப்பா அம்மா உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டாங்க நான் அவங்களை இறுக்க பிடிச்சிக்கிறேன் இங்க வாங்க எழில் தோள் மீது கை போட்டவாறே மீண்டும் நேத்ராவை தன்னிடம் அழைக்க, 

 

 

இப்போது குழந்தை மறுக்காமல் விஜய்யிடம் சென்றது.. தன்னை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த எழிலை பார்த்தவன் பாப்பா வரணும்னா இப்படி தான் இருக்கணும் ரெண்டு நிமிஷம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..” என்று கூற, எழில் அவனிடமிருந்து திமிறி விலக, விஜய் அவளை அதற்கு மேல் வர்புறுத்தாமல் விட்ட நொடி, 

 

 

மூவரும் அந்த மால்லை விட்டு வெளியே வந்திருந்தனர்.. நீங்க கேட்ட மாதிரி உங்களை, நீங்க பார்து பயந்தவங்க கண்ணில் படாமல் கூட்டிட்டு வந்துட்டேன்..” என்று கூற “உங்கள் உதவிக்கு மிக்க நன்றி..” என்று அவனுக்கு நன்றி கூறிவிட்டு தன் இருசக்கர வாகனத்தை நோக்கி நடந்தவளை

 

 

“ஹேய் ராங்கி!!. ஒரு நிமிஷம் நில்லு. அதட்டலாக அழைத்து அவளை நிறுத்தியவனை, எழில் கோபமாக அவனை முறைத்துப் பார்க்க, “இந்தக் கோபமான பார்வையில என்கிட்ட மட்டும் தான் என மனதில் முணுமுணுத்த படி “இப்படி நீ எத்தனை நாள் ஒருத்தவங்களுக்கு பயந்துட்டு போவ?.. தைரியமா எதிர்த்து நிற்க வேண்டாமா? உன்னோட பயம் தான் உன்னோட எதிரிக்கு பலவீனம்..” என்று அறிவுரை கூற,

 

“பயப்பட வேண்டிய நேரத்தில் பயந்து தான் ஆகணும்.. அதுவும் நமக்கு பிடிச்சவங்களுக்கு அவங்களால் ஆபத்து வருதுன்னா பயந்து தான் ஆகணும்.. இப்போ நான் மட்டும் தனியாக இங்க வந்திருந்தால் அவன் முன்னாடியே போய் வம்பிழுத்திட்டு வர்ற அளவுக்கு எனக்கு தைரியம் இருக்கு.. ஆனால் இப்போ இங்கே பாப்பா இருக்கா..” என்ற எழிலை குழப்பமாக பார்த்த விஜய் 

 

 

“அப்போ அந்த ஆளால பாப்பாவுக்கு எதுவும் ஆபத்தா?. ஆள யாருன்னு என்கிட்ட காட்டு நான் பாத்துக்குறேன்..” என கையை முறுக்கி கொண்டு கூறியவனிடம், அது என் பிரச்சனை நான் பார்த்துக்குறேன் எங்களால உங்களுக்கு எதுக்கு சிரமம்.. இதுவரைக்கும் செஞ்ச உதவிக்கு மிக்க நன்றி.. உங்களுக்கு நிறைய வேலை இருக்கும் அதை போய் பாருங்க என்று அலட்சியமாக கூறியவளை இப்பொழுது முறைத்து பார்த்த விஜய், 

 

 

“அதை நீங்க சொல்லத் தேவையில்லை.. என்னோட வேலையை பார்த்துக்க எனக்கு தெரியும் என்று அவளுக்கு பதில் கூறியவன், “ஆனால் ரொம்ப நேரமா அது அங்க ஒருத்தன் உன்னை பார்த்துட்டே இருக்கானே..” என்று குறும்பாக கூறி முடித்த நொடி, எழில் நேத்ராவை இழுத்து கொண்டு விஜய் முதுகில் பின் மறைந்து கொள்ள, இவ்வளவு நேரம் வாயடித்த ஜான்சி ராணி எங்க போனாங்க என்று கேலி செய்தவனை தீயாக உறுத்து விழித்த எழில் கோபமாக அங்கிருந்து செல்ல

 

 

“ஹேய் ராங்கி.. ஒரு நிமிஷம் நில்லு..” என்று நிறுத்திய விஜய்க்கு அவர்களை அப்படியே விட மனமில்லை.. அவள் தன்னை அலட்சியம் செய்தாலும்  அவர்கள் பாதுகாப்பு முக்கியமாக பட, “நீ எங்கே போகணும் சொல்லு நான் ட்ராப் பண்றேன்..” என்று கேட்க, “இல்லை வேண்டாம்  நானே டூ வீலர் ல வந்திருக்கேன்.. நாங்க அதுல போறோம்.. என்ற எழிலை மீண்டும் நிறுத்தியவன், 

 

 

“அவர்கள் அருகில் வந்து “ நேத்ரா பேபி இது உனக்கு..” என்று சாக்லேட் பார் ஒன்றை கொடுக்க நேத்ரா அதை ஆர்வமாக பார்த்தாலும், தன் அன்னையை பார்த்து தயங்க, “வாங்கிக்கோ..” என்று அனுமதி கொடுக்க, முகம் மலர அதை வாங்கிக் கொண்ட நேத்ரா அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.. 

 

 

விஜய் உடல் சிலிர்க்க முத்தத்தை வாங்கியவன், குழந்தையை புன்னகையுடன் பார்க்க “அம்மா எனக்கு சாக்லேட் கொடுக்கும் போது முத்தம் கேட்பாங்க.. அதான் உங்களுக்கும் கொடுத்தேன்..” என்று விளக்கம் கூறிய குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு, ‘கியூட் பேபி’ என்று கொஞ்சியவன், எழிலிடம் திரும்பி

 

“நாம இதுக்கு முன்னாடி எங்கேயாவது பார்த்திருக்கோம்?..” என்று வினவ, எழில் அவனை புரியாமல் பார்த்தாள்.. அதான் ஸ்கூல்ல” என்ற எழிலை இடைமறித்து ம்கூம் இல்லை அதுக்கு முன்னாடி நாம எங்கேயாவது பார்த்திருக்கோமா என்று கேட்டேன்..” என்ற விஜய்யை ஏன் கேட்கிறிங்க?..” அவன் கேள்விக்கு நேரடியாக பதில் கூறாமல் வேறு கேள்வி கேட்க

 

 

“உனக்கு நான் கேட்கிற கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல தெரியாதா ராங்கி.. நான் எதுக்காக கேட்கிறேன் என்று புரியாமல் எதுக்கெடுத்தாலும் அலட்சியமாக பதில் சொல்லாதே..” என்றவன், “சரி பார்த்து போங்க..” என்று எச்சரித்து விட்டு அதற்கு மேல் அங்கு நிற்காமல் மால் உள்ளே சென்றுவிட, “நான் மட்டும் உங்களை ஞாபகம் வச்சிருக்கேன்.. 

 

 

உங்களுக்கு என்னை ஞாபகம் இல்லையா?.. நீங்க எப்படி கேட்டாலும் நான் சொல்ல மாட்டேன்.. உங்களுக்கு என்னை தெரியாமலே போகட்டும்..” என்று காரணமே இல்லாமல் விஜய் மீது கோபம் கொண்ட எழில் தன்  வாகனத்தில் நேத்ராவை அமர வைத்து இரு சக்கர வாகனத்தை வீட்டை நோக்கி செலுத்தினாள்..

 

“ராங்கி, திமிர் பிடிச்சவ, கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்றாளா பாரு..” என்று மனதில் புலம்பி கொண்டு மால் உள்ளே வந்த விஜய் தான் கன்னியாகுமரி செல்ல வேண்டும் என்பதையே மறந்து போயிருந்தான்..

 

தனக்குள் முணங்கி கொண்டே உள்ளே வந்த விஜய் யார் மீதோ மோதி விட, “சாரி பாஸ்..” என்றவன் அவனை கடந்து செல்ல,”ஹலோ கண்ணு தெரியாதா?.. இப்படி தான் வந்து இடிப்பிங்களா?..” என்று அதட்டலான குரல் கேட்க, “ஹேய் அதான் மன்னிப்பு கேட்டேன்ல அப்பறம் என்ன..” என்று அலட்சியமாக கேட்டபடி அந்த உருவத்தை பார்த்தவன் அங்கு இவனை முறைத்துப் பார்த்து கொண்டிருந்த அஷ்வினை  யோசனையோடு பார்த்து கொண்டு நின்றிருந்தான்..

 

 

 

இமை சிமிட்டும்

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்