இமை 12
சில வருடங்களுக்கு முன்பு சில மணி நேரங்கள் மட்டுமே பார்த்து, ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேசிய ஒருவரின் முகமும், குரலும் தன்னை இத்தனை தூரம் பாதிக்குமா?.. என்று வியப்பாக நினைத்தபடி நடந்து கொண்டிருந்த எழில் காதில்,
“ஏம்மா சிகப்பு சேலை உன்னை தான் நில்லு..” என்று அதட்டலான குரல் கேட்க, எழில் திரும்பி அவனை புருவம் உயர்த்தி என்ன என்று கேட்டவள், விஜய் தன் முகத்தை பார்த்ததும் அதிர்ந்து நின்ற தோற்றம் அவளுக்கு வலியை கொடுத்தது.. இது பல சம்பவங்களை கடந்து வந்தவள் தான் ஆனாலும் விஜய்யின் இந்த பார்வை அவள் மனதில் இருந்த காயத்தை மீண்டும் கீறி விட்டது போல வலியில் துடிக்க வைத்தது.. எப்போதும் போல தன் உணர்வுகளை முகத்தில் காட்டாமல், விஜய்யின் பேச்சை கவனியாமல் உள்ளே செல்ல,
விஜய்க்கு எழில் முகத்தில் இருந்த காயத்தை பார்த்ததும் அதிர்ந்து நின்றது சில நிமிடங்கள் மட்டுமே.. அடுத்த நொடி இந்த முகத்தை எங்கேயோ பார்த்தது போல் தோன்ற, தன் நினைவில் தேடி பார்த்தவன் அது நினைவிற்கு வராமல் போக, சரி அது யாராக இருந்தா எனக்கென்ன?.. என்று அவள் அலட்சியத்தால் சாதரணமாக எழிலை கடந்தவன், தன் கவனத்தைச் குழந்தை மீது செலுத்தினான்..
எக்ஸாம் ஹால் உள்ளே வந்த எழிலின் முகத்தை பார்த்து அதிர்ந்த மாணவர்கள் சிலர் முகம் சுளித்தபடி அவள் முகத்தில் இருந்து தங்கள் பார்வையை விலக்கி கொள்ள, சில மாணவர்கள் அவளை பரிதாபமாக பார்க்க, அத்தனையும் தன் ஓர விழியில் கவனித்து கொண்டிருந்த எழில் இதை அனைத்தையும் இயல்பாக கடந்து சென்றாள்.. முதல் முறை மட்டுமே இந்த பார்வைக்கும் பரிதாபத்திற்கும் கூனி குறுகி நின்றாள்.. இது ஆரம்பத்தில் அவளுக்கு மனதில் பெரும் வலியை கொடுத்தாலும் நாளாக அந்த வலி வடுக்களாக மாறி அந்த வடுக்களே அவளுக்கு கேடயமாக மாறி நின்றது.. எனவே இதை அசட்டையாக கடந்து வர பழகி கொண்டாள்..
தன் விழிகளால் ஹாலில் மாணவர்கள் அனைவரையும் ஒரு முறை சுற்றி பார்த்த எழில் பார்வை ஒரு இடத்தில் நொடிகளுக்கும் அதிகமான நேரம் சற்று நிலைத்து நின்றது.. காரணம் அங்கு வெண்பாவும், மலரும் இயல்பான சிறு புன்னகையுடன் எழிலை பார்த்து கொண்டு இருந்தனர், அவர்களின் இயல்பான பார்வையே, எழிலை அவர்களை கவனிக்க வைத்தது.. அவர்களின் முகத்தில் இருந்த புன்னகையை பார்த்த எழில் வதனத்திலும் சிறு புன்னகை அரும்பியது..
கேள்வி தாள் வரவும், அதை அனைவருக்கும் கொடுத்து விட்டு தன் இடத்திற்கு வந்து நின்ற எழில், “கொஸ்டின் பேப்பர் கொடுத்ததும் உடனே பிரிச்சுப் பார்த்திடாதீங்க.. உங்களுக்கு தெரியாத கேள்வி வந்திருந்தால் நீங்க பதட்டமாகிடுவிங்க.. அப்புறம் தெரிஞ்ச கொஸ்டின்ஸ்க்கு கூட உங்களுக்கு பதில் தெரியாம போய்விடும்.. சோ ஒரு ரெண்டு நிமிஷம் கண்ணை மூடி அமைதியா இருந்துட்டு அடுத்து நிதானமா பிரித்து படிங்க..” என்று அறிவுரை கூறிவிட்டு, மாணவர்களை கண்காணிக்க தொடங்கினாள்..
தேர்வு முடிந்து மாணவர்கள் அனைவரும் வெளியே வர, வினாத்தாள்கள் அனைத்தையும் சரிபார்த்து அடுக்கி வைத்து அலுவலக அறையில் கொடுத்து விட்டு வெளியே வந்த எழில் விழிகள் அவள் அறியாமல் விஜய் இருந்த இடத்தை பார்க்க அங்கு வெறுமையாக இருக்கவும், அந்த ஹோட்டல் காரருக்கு நிஜமாக என்ன அடையாளம் தெரியலையா?..”என்று வியப்பாக நினைத்த எழில்
“இத்தனை வருஷம் ஆகியும் எனக்கு அவங்க முகமும், குரலும் அடையாளம் தெரியுது. ஆனால் அவங்களுக்கு எப்படி என்னை தெரியாமல் போச்சு?.. என் முகத்தில் இருக்கும் இந்த காயத்தால் அவங்களுக்கு என்னை அடையாளம் தெரியாமல் செஞ்சிருச்சா?.. என்று வியப்பும் ஆதங்கமுமாக நினைத்தவள், அன்னைக்கு ஹோட்டல்ல அக்கறை காட்டுனது எல்லாம் பொய்யா?.. என்று தனக்குள் குழப்பமாக கேட்டு கொள்ள,
“இப்போ உனக்கு என்ன பிரச்சினை?.. அவருக்கு உன்ன அடையாளம் தெரியலை என்றா?.. என்ற மனதின் கேள்விக்கு அவள் ஆம் என்று பதில் சொல்ல, “அவர் உன்னை அடையாளம் கண்டு உனக்கு என்ன ஆக போகுது?.. முதல்ல அவர் யார் உனக்கு?..” மனசாட்சி குத்தலாக கேட்க ஓடி கொண்டிருந்த நதிக்கு அணை போட்டு தடுப்பது போல் நடந்து கொண்டிருந்த எழில் சட்டென்று அப்படியே நின்று விட்டாள்..
“ஆமா அவர் யார் எனக்கு அவருக்கு என்னை ஞாபகம் இருந்தால் எனக்கு என்ன?.. இல்லாமல் போனால் எனக்கு என்ன?.. அவரைப் பற்றி நான் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணும்?.. என்று சுய சிந்தனை செய்து கடைசியில், “ ம்கூம் இனி யாரை பற்றியும் நினைக்க கூடாது..
கடைசி வரை நம்ம கூட வரும் என்று ரொம்ப எதிர்பார்த்த உறவே விட்டு செல்லும் போதும் பார்த்த சில நிமிடங்களில் ஆன இவங்க மட்டும் நம்ம கூட வரவா போறாங்க.. ம்கூம் அவங்க வர கூடாது.. வரவும் வேண்டாம்.. எனக்கு நான் மட்டும் தான் என் வாழ்க்கையில்..” என்று உறுதியாக நினைத்து கொண்டு, எப்போதும் போல முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு முன்னே செல்ல, வேறு வகுப்பிற்கு சூப்பர்வைசராக சென்றிருந்த சங்கவியும் எழிலுடன் இணைந்து கொண்டாள்..
பேருந்தில் எழில் அருகில் அமர்ந்திருந்த சங்கவி, அடிக்கடி எழிலை பார்ப்பதும், பின் சாலையை பார்ப்பதுமாக இருக்க, “என்ன செய்ற சங்கவி?.. என் முகத்தில் என்ன எழுதி இருக்கு சும்மா சும்மா என் முகத்தையே பார்த்திட்டு இருக்க?..என கேட்க
“எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் கேட்டா நீ கோவிச்சுக்க மாட்டியே?.. என சங்கவி தயங்கி கேட்க “அது நீ கேட்கிறது பொருத்து..” பட்டென்று பதில் வந்தது எழிலிடம் இருந்து.. “உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கறதுக்குள்ள என்ன பாடுபட வேண்டியது இருக்கு இவக்கிட்ட..’ சங்கவி மனதில் ஆயாசமாக நினைத்தவள் “இது உன் முகத்துல இருக்க இந்த வடு என ஆரம்பிக்க எழிலின் கோப பார்வையில் தன் பேச்சை நிறுத்திய சங்கவி
ப்ளீஸ் எழில் நான் சொல்ல வர்றத கொஞ்சம் முழுசா கேட்டுட்டு அப்புறமா இந்த பார்வை பாரேன்..” என்ன கெஞ்சலாக கூற எழில் அமைதியாக மறுபுறம் திரும்பிக் கொண்டாள்.. அவளின் இந்த அமைதியே சங்கவிக்கு போதுமானதாக இருக்க “இந்த முகத்துல இருக்க காயத்தோட தழும்பு ட்ரீட்மென்ட் செஞ்சா மறைந்து போகுமே அப்புறம் ஏன் செய்யாம இருக்க?..” என்று குழப்பமாக கேட்க
“இந்த அசிங்கமான முகத்தால தான், பல மனுஷங்களோட உண்மையான குணம் தெரியுது.. இந்த முகம் இப்படியே இருந்துட்டு போகட்டுமே.. நான் இப்படி அசிங்கமான முகத்தோடு இருப்பதால் உனக்கு சங்கடமாக இருக்கா? அப்படி இருந்தால் என் கூட பேச வேண்டாம்.. நீயும் விலகி போ..” என்ற எழிலை கோபமாக முறைத்து பார்த்த சங்கவி, “அது எப்படிடி இப்படி சட்டுன்னு முகத்தில் அடிக்கிற மாதிரி பேசற?..” என்ற சங்கவியிடம், “பின்ன எல்லாரும் போல நீயும் என் முகத்தை பத்தி பேசினா கோபம் வராதா?..” என்று எழில் கோபம் குறையாமல் கேட்க
இங்க பாரு நான் உன் முகத்தை பத்தி குறைவாக எதுவும் பேசல அழகான ஒரு ஓவியத்தில் அதுக்கு கலர் மாத்தி கொடுத்து அந்த ஓவியத்தோட அழக கெடுத்த மாதிரி, உன்னோட முகத்தில் இந்த தழும்பு இருக்கு.. அதை மாற்ற வாய்ப்பு இருக்கும் போது ஏன் செய்ய கூடாது என்று தான் நான் கேட்டேனே தவிர, வேற எந்த எண்ணமும் இல்லை தாயே..!!
நீ என்னோட ஃப்ரெண்ட்!!. எப்படி இருந்தாலுமே நீ என்னோட ஃப்ரெண்ட்!.. உனக்கு நல்லது கெட்டது சொல்ற உரிமை எனக்கு இருக்கு.. எங்க உன் இடத்துல நான் இருந்தா நீ என்ன செஞ்சு இருப்ப அப்படியே என்னை விட்டுப் போய் இருப்பியா?.. என்று கோபமாக கேட்க
சில நொடிகள் அமைதியாக இருந்த எழில் “சாரிடி நீயும் எல்லாரும் மாதிரியும் என் முகத்தை பத்தி பேசவும் கொஞ்சம் கோபப்பட்டுட்டேன்.. சாரிடா” என்று மன்னிப்பு வேண்டிய எழில் எனக்கு என் அழகை பார்த்து வர நட்பு எதுவும் வேண்டாம்..
என் உண்மையான குணத்தை பார்த்து நீ வந்த.. எனக்கு நீ போதும்.. புதுசா எந்த உறவும் நட்பும் வேண்டாம் சங்கவி.. என்னால என் முகத்தை மாத்திக்க முடியாது.. இனி இத பத்தி எப்பவும் பேசாத ப்ளீஸ் சங்கவி என்று ஒரு வேண்டுதலோடு தன் பேச்சை நிறுத்திய எழிலை திகைத்துப் பார்த்த சங்கவி அப்படி இவ வாழ்க்கையில் என்னதான் நடந்திருக்கும்?.. என்று கேள்வி மனதில் தோன்ற
“நீ வேணும்னா அவ கிட்ட கேளேன்..” என சங்கவியின் மனம் சங்கவியை கேலி செய்ய, க்கும் கேட்டுட்டாலும் இப்ப சொல்லிட்டு தான் வேற வேலை பார்ப்பா..”இன்று நொடித்துக் கொள்ள அப்படியே இவ கூட சுத்திட்டு இருக்க இவன்தான் உம்முன்னு இருக்க எப்பதான் திட்டிக்கிட்டே இருக்காளே மீண்டும் மனம் கேள்வி கேட்க
“என்னமோ தெரியல இவளை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கே..” மனதின் கேள்விக்கு பதில் கூறிய சங்கவி தன் அருகில் அமர்ந்திருந்த எழிலை திரும்பி பார்க்க கொஞ்சமாவது சிரிக்கிறாளா பாரு என மனதில் முணுமுணுத்து கொண்டு தன் செல்போனை எடுத்து அதில் பாடலை ஒலிக்க விட்டு ஹெட்போனை எடுத்து எழில் காதில் ஒன்றை பொருத்தி விட்டு தானும் ஒன்றை காதில் மாட்டிக் கொள்ள இருவரும் பாடல் கேட்டபடி பயணம் செய்தனர்..
எழிலை பற்றி சிந்திப்பதை நிறுத்த தன் மனதிற்கு கட்டளையிட்டாலும், அது அவன் பேச்சை கேளாமல் கரையில் வந்து மோதி செல்லும் அலை போலே அவன் மனதில் அவள் நினைவு வந்து வந்து செல்ல தன்னை அலட்சியமாக கடந்து சென்ற அந்த திமிர் பார்வை வந்து போக முதலில் கோபமாக நினைத்து பார்த்த விஜய் விஜய், அடுத்து ரசனையாக நினைக்க தொடங்கினான்..
அவள் முகத்தில் இருந்த தழும்பை பார்த்து முதலில் திகைத்தாலும் ஏனோ அவள் முகத்தில் இருந்த தழும்பை பார்த்ததும், தாமரை இதழ் மீது யாரோ கறுப்பு மையால் கோடு கிழித்தது போல் தான் தோன்றியது அவனுக்கு.. அதுவும் கூட அழகாக தான் இருந்தது அவளுக்கு.. சில நொடிகள் ரசனையாக பார்த்தவன் அவள் சட்டென்று முகத்தை திருப்பவும் தான் தன்நிலை அடைந்தான்..
இந்த முகத்தை இதற்கு முன் எங்கேயோ பார்த்தது போல் தோன்ற எங்கே பார்த்தோம் எழிலை பற்றி சிந்தித்து கொண்டு இருந்தான்.. அவன் சிந்தனையை மேலும் தொடர விடாமல் அவன் அலைபேசி அழைப்பு வந்து அவன் கவனத்தை திசை திருப்ப, வேலை விஷயமாக அவசரமாக வெளியே செல்ல வேண்டி வந்ததால், நண்பன் விதுரனிடம் மலரையும் அழைத்து வர கூறிவிட்டு குழந்தையை தன்னோடு தூக்கி கொண்டு ஹோட்டல் சென்றான்..
ஒரு வாரமும் தேர்வு எழுதுவதற்கு விஜய், மலரை அழைத்துக் கொண்டு கல்லூரி வந்தவனின் கண்கள் அவன் அறியாமல் அன்று பார்த்த அந்த சிகப்பு சேலையை தேடியது.. அடேய் நேத்து செகப்பு சேலை கட்டி இருந்தால் இன்னைக்கும் சிவப்பு சேலையா கட்டியிருப்பாங்க வேறு சேலை கட்டியிருப்பாங்க.. அதனால் சிகப்பு சேலையை தேடாமல், சேலை கட்டிருக்க பெண்ணோட முகத்தை பாரு..” என்று அறிவுரை கூற
“நான் யாரையும் தேடல.. அதுவும் அந்த திமிர் பிடிச்ச ராங்கியை நான் தேடவே இல்லை..” என்று தனக்கு தானே கூற, நான் உனக்குள்ள இருக்கிறவன் என்னை நீ ஏமாற்ற முடியாது முருகேசா!!.. நீ அந்த சிகப்பு சேலையை தேடின எனக்கு தெரியும்..” என்று அவனின் மனசாட்சி உறுதியாக கூற, “நோ நெவர்.. நான் யாரையும் தேடல “ என்று விஜய் அவன் மனதிடம் மறுக்க,
விஜய் மனது மட்டும் இல்லை நானும் உன்னை கண்டு கொண்டேன்..” என்று அறிவிப்பது போல் விதுரனும் விஜயின் கண்களில் இருந்த தேடலை கண்டு என்னவென்று விசாரிக்க, ஒரு சூப்பர் ஃபிகர்டா இங்க வந்த முதல் நாள் பார்த்தேன்.. அப்புறம் பார்க்க முடியல பட்சி பறந்து போயிருச்சு என்று போலியாக வருந்த.. உனக்கு கிடைத்தது ஒரே ஒரு பிகரு அதையும் பறக்க விட்டுட்டியே பங்கு..” விதுரன் போலியாக வருத்தப்பட
“ம்கூம் நான் பருந்து மச்சி.. என் பட்சி எங்க இருந்தாலும் தேடி இழுத்திடுவேன்..” என்றவனின் குரலில் இருந்த தீவிரத்தை விதுரன் கவனித்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. நண்பனை பற்றி தான் அவனுக்கு தெரியுமே.. ஆனால் விஜய்யை பற்றி சரியாக தெரியாத எழில் இவர்கள் இருவரும் பேசுவதை கேட்டிருந்த எழில், விஜய் மீது இருந்த கொஞ்ச நல்ல எண்ணமும் விலகி, இனி இவன் இருக்கும் பக்கம் கூட திரும்ப கூடாது என்று உறுதியாக நினைத்தவள் அதன் பிறகு தான் முடிவெடுத்தது போல், இங்கு கல்லுரிக்கு வந்த நாட்கள் முழுவதும் அவன் பக்கம் திரும்பவே இல்லை..
இமை
சிமிட்டும்….